தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள் (52)
மனமே நீ துர்புத்தியை விட்டுவிடு.
(கீர்த்தனை-செடே புத்தி மாநுரா-(325)
ராகம்-அடாண-தாளம்-ஆதி
மனமே நீ துர்புத்தியை விட்டுவிடு
சாஸ்வதமான பலனளிக்கக்கூடிய
தகுந்த பாத்திரம் (தெய்வம்)
யாரென்பதை அறிந்துகொள்
இப்பூவுலகில் பிறந்தவனுக்கு பழவினைப்படி
தகுந்த பயன் கிடைக்குமென்று
பெரியோர்கள் கூறி நீ கேட்டதில்லையா?
இவ்வனைத்தும் "ஸ்ரீ வாசுதேவனே "
என்று சிந்தனை செய்வாயாக .
ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும்
இடையில் திரைபோல் இருப்பது மனம்தான்
சூரியனை காணவொட்டாமல் தடுக்கும் மேகம்போல
மேகம் விலகியதும் சூரியனை
நாம் காண்பதுபோல்
இறைவனை நாம் தரிசிக்கலாம்.
மனம்தான் பந்தத்தை ஏற்படுத்துகிறது.
அதே மனம்தான் இறைவனிடம்
நாட்டம் கொண்டபின்
நம்மை பந்தத்திலிருந்து
விடுதலை செய்ய உதவுகிறது.
மனதை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி
நம் புத்திக்கு இருக்கிறது.
யானையை எப்படி அங்குசத்தை கொண்டு
நாம் அடக்கிஅதை நம் வழிக்கு கொண்டுவருகிறோமோ
அதைபோல் நம் மனதிற்கும்
நல்ல உபதேசங்களை செய்து
நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும்.
அப்போதுதான் நாம் ஆன்ம விழிப்பு பெற இயலும்.
இல்லையேல் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நம் பயணம் புறப்பட்ட
இடத்திலேயே நின்றுகொண்டிருக்கும்.
நம் வாழ்வும் முடிந்துவிடும்.
அதனால்தான் ஸ்வாமிகள் மனதிற்கு
உபதேசம் செய்யும் வகையில்
பல கீர்த்தனைகளை
இயற்றியுள்ளார் நமக்காக.
உபதேசங்களை மனதில் கொள்ளுவோம்
நம்முள்ளே உறையும் ராம தத்துவத்தை
உணர்ந்து உய்வோம்.
pic.courtesy-google images
/// மனதை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி நம் புத்திக்கு இருக்கிறது... ///
ReplyDeleteபயன்படுத்த வேண்டும்...
நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...
//ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையில் திரைபோல் இருப்பது மனம் தான் .... சூரியனை காணவொட்டாமல் தடுக்கும் மேகம்போல//
ReplyDeleteஆஹா, அருமையோ அருமை அண்ணா. பாராட்டுக்கள் அண்ணா.
இன்றைய ரஸம் சூப்பரோ சூப்பர். ருசியோ ருசி.
உண்மையான ராம ரசம் பருகவேண்டுமென்றால்
Deleteஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜயஜயராம் என்று 13 கோடி முறை ஜபம் செய்யவும்.
உபதேசங்களை மனதில் கொள்ளுவோம்
ReplyDeleteநம்முள்ளே உறையும் ராம தத்துவத்தை
உணர்ந்து உய்வோம்.
சிந்தை கவரும்
சிந்தனைகள்..பாராட்டுக்கள்..
பாராட்டுக்கு நன்றி
Delete