Tuesday, May 14, 2013
தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்.(44)
தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்.(44)
இராமா என்னை காக்க நீ
என்ன யோசனை செய்கிறாய்?
கீர்த்தனை-(126)-ராகம்-கிரணாவளி (மேள-21)-தாளம்-தேசாதி
நீ என்னயோசனை செய்கிறாய் ?
நீ என்னை காக்க விரும்பினால்
உனக்கு எதிராக பேசுபவர் யாருமில்லை .
நீ கொடுத்த வாக்கைதவற விடக் கூடாது
கோடி தெய்வங்களுள் உயர்ந்தவன் நீ
சுத்த வீரர்களுள் பின் வாங்காதவனென்றும்,
இரண்டு விதமாக பேசுபவனல்லன்னென்றும்,
அண்டங்களனைத்தையும் பாலிப்பவனென்றும்
மகா முனிவர்கள் உன்னை வருணித்துள்ளனர்
இந்த கீர்த்தனையில் ஸ்வாமிகள்
ஒரு பக்தனுக்கு இறைவனின் அருளை
பெற தாமதம் ஏற்பட்டால் ஏற்படும்
தாபத்தை விளக்குகிறார்.
இராமபிரானை, விபீஷணன் தன்னுடைய
மூத்த சகோதரனான இராவணன் செய்த
அடாத செயலை பொறுக்காமல் அவனிடமிருந்து
விலகி வந்து அடைக்கலம் கேட்ட போது
அங்கிருந்த அனைவரும் அவனுக்கு அடைக்கலம்
தரக்கூடாது என்று கூறினர்.
அப்போது இராமபிரான் தன்னிடம்
அடைக்கலம் தேடி வந்தவர் யாராயினும்
அடைக்கலம் தருவது தன்னுடைய தீர்மானமுடிவு
என்று கூறி அடைக்கலம் தந்தருளினான்.
ஆனால் தனக்கு அடைக்கலம் தர எதிர்ப்பு
யாரிடமிருந்தும் இல்லை .
இந்நிலையில் தன்னை காப்பாற்றுவேன்
என்று வாக்களித்த இராமபிரான்.சொன்ன
சொல்லை தவறக்கூடாது என்று
ஸ்வாமிகள் கூறுகிறார்.
ஏனென்றால் இராமபிரானை குறிப்பிடும்போது
அவனை ஒரு சொல்.ஒரு வில். ஒரு. இல்
என்றே வர்ணிப்பது வழக்கம்
ஒரு பக்தன் சுவாமிகளை போன்று
இறைவனிடம் உறுதியான அசையமுடியாத
நம்பிக்கை கொள்ளவேண்டும்
அப்போதுதான் அவன் அருள் கிடைக்கும் என்பது
இந்த கீர்த்தனையின் கருத்தாக கொள்ளலாம்
Subscribe to:
Post Comments (Atom)
//இராமபிரான் தன்னிடம் அடைக்கலம் தேடி வந்தவர் யாராயினும் அடைக்கலம் தருவது தன்னுடைய தீர்மானமுடிவு என்று கூறி அடைக்கலம் தந்தருளினான்.//
ReplyDeleteநாமும் ஸ்ரீ இராமரிடமே அடைக்கலம் ஆவோம்.
நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள். நன்றிகள்.
ஆம் இராமபிரானின்
Deleteதிருவடிகளில்
அடைக்கலம் புகுவோம்
வேறு வழியில்லை
நம்மை சுற்றி நடக்கும்
சம்பவங்களை கண்டும்
நாம் நம்முடைய
நிலையாமையை
உணராமல்
உலக போகங்களிலும்
மோகங்களிலும் மூழ்கி
இறைவனை மறந்திருப்பதைபோல்
மூடத்தனம் வேறெதுவுமில்லை
/// இரண்டு விதமாக பேசுபவனல்லன்னென்றும் ///
ReplyDeleteமிகவும் முக்கியமானது...
நன்றி ஐயா...
நன்றி DD
ReplyDelete