Friday, May 17, 2013

இராம நாம மிட்டாயி


இராம நாம மிட்டாயி 






மிட்டாயி மிட்டாயி
இராம நாம மிட்டாயி
எட்டாள் பலம் கொடுக்கும்
பட்டாபிராம மிட்டாயி  (மி )

எட்டெழுத்து மந்திரமும்
ஐந்தெழுத்து மந்திரமும்  சேர்த்து உண்டான
சத்தான மிட்டாயி  இராம நாம மிட்டாயி   (மி )

எட்டாத பொருளை
எட்ட வைக்கும் மிட்டாயி
அரிதான  வீடுபேற்றை எளிதாக
கிட்ட வைக்கும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி   (மி )

நாவிலே அடக்கி கொண்டால் போதும்
மனதில் தோன்றும் நய வஞ்சக
எண்ணத்தை எல்லாம்
நசிக்க செய்யும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி   (மி )

அடங்கா திரியும் ஐம்புலன்களின்
ஆட்டத்தை அடக்கி ஒடுக்கும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி   (மி )

தீராத வினைகளை
தீர்த்து வைக்கும் மிட்டாயி
நெஞ்சில் ஆறாத ரணங்களை
ஆற்றிவிடும் மிட்டாயி   (மி )

பகைவரில்லா வாழ்வு தரும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி   (மி )

பிறவி பிணி தீர்க்கும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி (மி)

மீண்டும் பிறவா வரமருளும்
இராம நாம மிட்டாயி (மி )

வாழ்வில் அமைதியும்
ஆனந்தமும் வற்றாது
தந்தருளும் மிட்டாயி
இராம நாம மிட்டாயி   (மி )

இக பர சுகம் அடைய
நாத் தழும்பேற ஒவ்வொரு கணமும்
சொல்லுவோம் ராம நாமம்
நிலையான பதத்தினை
அடைந்து இன்புறுவோம்.   (மி )

Pic.courtesy-google-images

6 comments:

  1. ரசமான இனிமையான இராம நாம மிட்டாயி
    வழங்கியதற்கு இனிய நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. தின்ன திகட்டாத ராம நாம மிட்டாயை
      சுவைத்து இன்புறுங்கள்.
      உங்களுக்கு தெரிந்த
      எல்லோரையும் சுவைக்க செய்யுங்கள்.

      Delete
    2. //மிட்டாயி மிட்டாயி
      இராம நாம மிட்டாயி
      எட்டாள் பலம் கொடுக்கும்
      பட்டாபிராம மிட்டாயி (மி )//

      மிட்டாயி நல்ல இனிப்போ இனிப்பு.

      பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

      Delete
    3. பணம் காசு செலவில்லாத மிட்டாயி
      நன்றாக சுவையுங்கள்
      சுகம்பெறுங்கள்

      Delete
  2. சுவையான மிட்டாயி... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. காசு செலவில்லாத மிட்டாயி
      நன்றாக சுவையுங்கள்
      சுகம்பெறுங்கள்

      Delete