Wednesday, May 1, 2013
ஏமாந்துபோகாதீர்கள் எச்சரிக்கை எச்சரிக்கை.
ஏமாந்துபோகாதீர்கள்
எச்சரிக்கை எச்சரிக்கை.
The chances are remote!
இந்த remote என்ற சொல்லை
இன்று உச்சரிக்காதவர்கள்
இல்லை எனலாம்.
அந்த அளவிற்கு இந்த சொல்
மனிதர்களிடம்
ஆதிக்கம் செலுத்துகிறது.
மிக்க படித்தவர்களிடம் யாராவது
ஒரு செயலை சொன்னால் அவர்கள்
உடனே சொல்வார்கள்
,நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது
The chances are very remote என்பார்கள்
ஆனால் அது நடந்துவிட்டால்
This is one in a million .This is a rare happening
என்று சொல்லி நழுவி விடுவார்கள்
அதைப்போல் இன்று அனைவரின்
கையிலும் கர்ணனின்
கவச குண்டலங்கள்போல்
ஒட்டிக்கொண்டு கிடப்பது
கைபேசியும் remoteடும்தான்
அந்த கைபேசி அனைவரையும்
படுத்தும் பாடு சொல்லத்தரமன்று
அதை வைத்துக்கொண்டு
எதை வேண்டுமானாலும் செய்யலாம்
என்ற நிலைமை வந்துவிட்டது.
தீவிரவாதி அதைவைத்து குண்டை வெடிக்க
செய்து அப்பாவி மக்களை கொன்று மகிழ்கிறான்.
காதலனும் காதலியும் கடற்கரையில்
உட்கார்ந்துகொண்டு கடலை சுண்டலை
தின்றுகொண்டே கடலை போடுகிறார்கள்.
உறங்கும் நேரம் தவிர
விழித்திருக்கும் நேரம் முழுவதும்
வீண்கதைகளை கைபேசி மூலம்
பேசியே காசையும்
நேரத்தையும் வீணாக்குகின்றனர்
காலத்தின்மகிமையை அறியாத
இந்த மூடர்கள்.
மேலும் கைபேசி ,மற்றும் ஒலி,ஒளி
ஊடகங்கள் மூலம் கையில் இருக்கும்
அனைத்தையும் ஏமாற்றி கொள்ளைஅடிக்கும்
கும்பல்களும் பெருகிவிட்டன இக்காலத்தில்
நமக்கு எல்லையில்லா தொல்லைகளை
தரும் தொல்லைகாட்சிகளையும்,
வன்முறைகளையும், ஆபாசங்களையும்
தூண்டும் வலைத்தளத்தையும்
கைபேசியிலேயே கண்டு காலத்தை
விரயம் விரயம் செய்வதுடன்
கற்க வேண்டியதை கற்காமல்
காமத்திற்கும்,மோகத்திற்கும் அடிமையாகி
பாவசெயல்களில் ஈடுபட்டு இந்த
உலகிலேயே நரக வாழ்க்கை வாழ்கின்றனர்
வளர்ந்தவர்களும் வளரும் பருவத்தினரும்
remote ஐ கையில் வைத்துக்கொண்டு
அலைவரிசைகளை மாற்றி மாற்றி
பார்த்துக்கொண்டு வேலைகள்
எதுவும் செய்யாமல் உள்ளம் கெட்டு
உடல்பெருத்து மன நோயாளிகளாகவும்
உடல்நோயாளிகளாகவும்
உலவுபவர்கள் கோடி கோடி இந்த உலகில்
இதுமட்டுமல்ல குழந்தைகள் தாயின்
வயிற்றில் வளரும்போதே கைபேசி,
தொலைகாட்சி வலைதளங்களின்
அசிங்கமான சமாச்சாரங்களையும்
தங்கள் பெற்றோரிடமே பெற்றுக்கொண்டு
இந்த உலகிற்கு வருகின்றனர்.
இதை தவிர நாமே அறியாது
நம்மை கண்காணிக்கும்
remote camera,remote sensingசெயற்கைக்கோள்
என்று ஏராளமான கருவிகள் வேறு
ஆனால் ஒன்றை மட்டும்
நினைவில் வையுங்கள்
இவை அனைத்தும் நம்முடைய
உயிரின் remote ஐ
தன் கையில் வைத்திருக்கும் பகவானின்
ஆணைப்படிதான் இயங்குகிறது
என்பதை மறவாதீர்கள்.
அவன் அதை நிறுத்திவிட்டால்
நம் கதை எல்லாம் அம்போ!
அப்புறம் நாம் சம்போ சிவ சம்போ
என்று சொல்லமுடியாது.
ராம ராம என்று உச்சரிக்கமுடியாது.
எனவே விழித்துக்கொள்ளுங்கள்
ராம நாமத்தை சதா ஜபம் செய்யுங்கள்.
எந்த வேலை செய்தாலும் இடை இடையே.
.
Subscribe to:
Post Comments (Atom)
உண்மை ... உண்மை ...
ReplyDeleteஇன்றைக்கு நடக்கும் நிலை வரிகளில்...
அம்போ விளக்கம் அருமை ஐயா...
நன்றி...