Sunday, August 28, 2016

இசையும் நானும் (131)

இசையும் நானும் (131)

இசையும் நானும் (131)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய    131வது  காணொளி 


மவுத்தார்கன் இசைTAMIL SUPERHIT SONG

திரைப்படம்-  வானம்பாடி 

 பாடல்-
கங்கை கரை தோட்டம்


கங்கை கரை தோட்டம்
கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.ஓ.ஓ.
கண்ணன் நடுவினிலே


காலை இளம் காற்று
பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓ ஓ.ஓ
எதிலும் அவன் குரலே
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா (காலை) (கங்கை)

கண்ணன் முகம் தோற்றம் கண்டேன்

கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே .ஓ ஓ
கண்ணீர் பெருகியதே (கங்கை)

கண்ணன் என்னை கண்டுகொண்டான் 
கை இரண்டில் அள்ளி கொண்டான் (கண்ணன்)
பொன்னழகுமேனி என்றான் 
பூச்சரங்கள் சூடி தந்தான் (பொன்னழகுமேனி)
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை 
கண்ணீர் பெருகியதே .ஓ ஓ
கண்ணீர் பெருகியதே
அன்று வந்த கண்ணன் இன்று வரவில்லை
என்றோ அவன் வருவான்.ஓ.ஓ.ஓ.

கண்ணன் முகம் கண்ட  கண்கள் 
மன்னர் முகம்  காண்பதில்லை( கண்ணன்)
கண்ணனுக்கு தந்த உள்ளம் 
இன்னொருவர் கொள்வதில்லை (கண்ணனுக்கு)

கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓ.ஓ.ஓ.
காற்றில் மறைவேனோ ஓ.ஓ.ஓ.
நாடி வரும் கண்ணன் 
கோல  மணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன் 
ஓ.ஓ.ஓ.நானே தவழ்ந்திருப்பேன் 

கண்ணா ...கண்ணா .கண்ணா 
கங்கை கரை தோட்டம்
கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.ஓ.ஓ.
கண்ணன் நடுவினிலே

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/runxNx8x1fw" frameborder="0" allowfullscreen></iframe> https://youtu.be/runxNx8x1fw

https://www.youtube.com/watch?v=runxNx8x1fw&feature=youtu.be
Song : Gangai Karai Thottam
Movie : Vaanambadi (1963)
Singers : P. Susheela
Music : K.V.Mahadevan


Saturday, August 27, 2016

முகம் தெரியா பகைவர்கள்

முகம் தெரியா பகைவர்கள் 
                              ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


முருகா !
உன்னை நான்
நினைக்க மறந்த போது
நடந்துவிட்ட விபரீதத்தை
கேளாய்

முகம் தெரியா பகைவர்கள்
ஆறு பேர்கள் முக்காடு
போட்டுக்கொண்டு என்
மனதினில் புகுந்து கொண்டார்கள்.

ஒளியாய்  இருந்த என் உள்ளம்
இருள் மண்டி போனது
தலைவன் இல்லா மாளிகையானது
தறுதலைகள்ஆ ட்டம் போடும்
கூடாரமாகியது

ஒவ்வொருவனும் என்னை படுத்தும்
பாட்டை என்னவென்று நான்
சொல்லுவேன்?

அவர்கள் படுத்தும் பாட்டினிடையே
எவ்வாறு உன் நாமத்தை பாடுவேன்?

ஒருவன் இறைவனே இல்லை என்று
எந்நேரமும் ஓயாமல் கூக்குரலிட்டுக் கொண்டு
திரிகிறான்

இன்னொருவன் எல்லாம் உனதென்று இருக்க
எல்லாம் தனதென்று எண்ணிக்கொண்டு
பேயாய் அலைகிறான்

மற்றவனோ அவனையும் என்னையும்
படைத்துக் காக்கும் உன்னை மறந்து
தானே அனைத்திற்கும் தலைவன்
என்று அகந்தை கொண்டு என்னை
நம்ப வைத்து நட்டாற்றில் தள்ளிக்
கொண்டிருக்கிறான்

இன்னொருவனோ பிறர் உயர்வு கண்டு
மகிழாமல் பொறாமை என்னும் தீயை மூட்டி
அதில் குளிர் காய்ந்து  கொண்டிருக்கின்றான்.

இப்படி எண்ணிலடங்கா தொல்லைகள் !

முகத்தை மறைத்துக்கொண்டு என்
நெஞ்சகத்தில் இருந்துகொண்டு
வஞ்சகமாக என்னை வதைக்கும் பாவிகள்
எதிரிகளை துரத்த அப்பாவியாகிய நான்
என்ன செய்வேன் ?

ஆறு முகம் கொண்ட  ஆறுமுகனே
ஆறுபடை வீடு கொண்ட வேல்முருகனே
காம க்ரோதாதி அசுரக்கூட்டம் என் உள்ளத்தில்
படை அமைத்து தங்கி என்னை வதைப்பதை
கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் எனோ?

இனியும் தாளேன் இவர்கள் இழைக்கும்
கொடுமைதன்னை

இக்கணமே என் இதயத்துள்ளிருந்து
வெளிப்பட்டு அந்த முகம்

 தெரியா எதிரிகளை
முற்றிலுமாய் விரட்டிடுவாய்
 "குகனே"குமரகுருபரனே !

Thursday, August 25, 2016

என்ன தவம் செய்தேனோ !


என்ன தவம் செய்தேனோ !

என்ன தவம் செய்தேனோ 
ராம பக்தனாய் பிறப்பதற்கு !

என்ன புண்ணியம் செய்தேனோ 
எந்நேரமும் உன்னை நினைப்பதற்கு !

உருவமற்ற பரம்பொருளாய்
அண்டமெங்கும் நிறைந்தவனே!

உத்தம பக்தருக்காய் உருவெடுத்து
காண்போர் உளம் மகிழ
காட்சி தந்த  அழகு சுந்தரனே !

கானகத்தில் உன்னை நினைந்து
கடும் தவம் செய்யும் தவசிகள்
அரக்கர்களால் அடைந்த இன்னல்
போக்கி  இன்பம் அளித்தாய் !

வானகத்தில் வாழும் தேவர்களின்
இடர் தீர்த்து இதமளித்தாய் !

வடிவம் இழந்த அரக்கர் கூட்டம்
விருப்பு வெறுப்பு என்னும்  வடிவம் எடுத்து
அகந்தை என்பவனை தலைவனாய்க் கொண்டு
மாந்தர் தம் மனதில் புகுந்துகொண்டு
மாளாத துயரத்தில்தள்ளிவிட்டு
அல்லல்படுத்துவதை நீ அறியாயோ?
நீ அறியாயோ?

பணியின்  சுமையால் தத்தளிக்கும்  மாந்தர் ஒருபுறம்
பிணியின் தாக்குதல் கண்டு பரிதவிக்கும் மாந்தர் ஒருபுறம்
ஆசை என்னும் பேய்கள் விரிக்கும் வலையில்
சிக்கி தாபத் தீயில் விழுந்து மாய்வது மறுபுறம்
என்று நீள்கிறது உலக வாழ்வு

விடுதலை வேண்டும் என்று விழைகிறது மனம்
அதை அடையும் வழி அறியாது இங்குமங்கும்
அலைகிறது தினம் .

உன் திருவடியில்அமர்ந்து
பூஜை  செய்ய உடலில் சக்தியில்லை
சிதறுண்ட மனதினால் உன்னை ஒருமனதாக
பக்தியுடன்  நினைத்து வணங்க இயலவில்லை.

எந்நேரமும் எளிதில் நினைத்து பக்தி செய்து
அனைத்தையும் அளிக்கும் கற்பக விருட்ஷம் போல்  
உன் "ராம " நாமம் இருக்க அதை நாடாது இந்த உலக
மாந்தர் அற்ப பொருளுக்காக யார் யாரையோ நாடி
ஓடி திரிந்து ஆயுளை வீணாக்குகின்றனரே !

அல்லல்கள்  நிறைந்த வாழ்வில் அல்லும்  பகலும்
ராம நாமம் உரைத்ததினால் அலை பாயும் மனம்
அடங்கிவிட்டது .

அனைத்தும் உன் செயல்
என்ற எண்ணம் வந்துவிட்டது.

ஆனாலும் அகந்தை பிசாசு மட்டும் தன் இடத்தை
உனக்கு விட்டுத் தர  மறுக்கிறது

என் செய்வேன் !
உத்தமான உன் மற்ற பக்தர்களை போல்
இவன் பக்தி  இல்லை என்று தள்ளிவிடாதே
இவனை தவிக்க விட்டுவிடாதே!


                                                        ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்இதயத்தில் உன் திருவடிவத்தை நிறுத்தி வைத்தே
பல கோடி முறை ஜெபித்தேன் உன் நாமமதை
இன்னும் தொடர  அருள் செய்வாய் உன்
இன்னருள்  இவனுக்கு கிட்டும் வரை !

Wednesday, August 24, 2016

நாம சங்கீர்த்தனம் -ஏன் உயர்ந்தது?

நாம சங்கீர்த்தனம் -ஏன் உயர்ந்தது?

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


பகவானை அடைய ,உணர, அனுபவிக்க,தன்னை மறக்க
பக்தி உதவுகிறது

ஒன்பது விதமான பக்தி மார்க்கங்கள் இருக்கின்றன

அவரவர் வாழ்க்கை  முறை, மன  நிலை ஆகியவற்றைப் பொறுத்து
அது மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் எல்லோரையும் ஈர்க்கக்கூடியது நாம் சங்கீர்த்தனம்  ஒன்றுதான்.

அதற்கு  மட்டும் ஏன் அவ்வளவு சக்தி?

Image result for sangu

பிரமத்தை உருவமற்ற பரம்பொருளாக காணும் அத்வைத
சித்தாந்தத்தை உண்டாக்கிய ஆதி  சங்கரரும்  எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு பாப மூட்டையை தொலைக்க முடிவாக "கோவிந்த " நாமத்தை பாட சொல்லிவிட்டதிலிருந்தே நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை புரிந்து கொள்ளலாம்

எல்லாம் நம்மை கடைத்தேற்ற ஸ்ரீமன் நாராயணனின் பண்ணிய  கைங்கர்யம்தாம்
Image result for sangu
நாதம் எதிலிருந்து வருகிறது?

சங்கிலிருந்து நாதம் வருகிறது.

அதற்கு  "சங்க நாதம் "என்று பெயர்.

சங்கு யார் கையில் உள்ளது?

சாஷாத் நாராயணின் நாராயணன் கரத்தில்உள்ளது

சங்கு எங்கு பிறந்தது ?

பரந்தாமன் பள்ளி கொண்டுள்ள பாற்கடலில் பிறந்தது

Image result for panjajanyam sangu

அவன்அ திருக்கரத்தில் ஏந்தியுள்ள "பாஞ்ச ஜன்யம்"என்ற பெயர் கொண்ட அந்த சங்கிலிருந்து  எழுந்த  நாதம் பாரத போரில் எதிரிகளை அழித்தது .

சங்கு வெண்மை நிறம்.
நம் உள்ளமும் பால் போல் வெண்மையாக இருக்க வேண்டும்.

சங்கினால்தான் பிறந்த குழந்தைக்கு அந்நாளில் தெய்வ பக்தியுடன்  பால் புகட்டுவார்கள்.அவர்கள் நல்ல சம்காரங்களுடன் வளர்ந்தார்கள்.

இன்றோ  எல்லாம் மாவு  மயம் !
உட்கொள்ளுவதற்கும் (கொல்வதற்கும் )
வெளிப்  பூச்சுகளுக்கும்   பலவிதமான மாவுகள்.

பகவானுக்கு சங்காபிஷேகம் செய்வது எல்லா ஆலயங்களிலும் நடைமுறையில் உள்ளது.

Image result for sangu

பகவான் கையில் ஏந்தியுள்ள சங்கின் அம்சம்தான் நம் நெஞ்சுக்  குழியில் ஓசை இழுப்பும் கருவியாக அமைந்துள்ளது.

அதைக் கொண்டு அவன் புகழை பாட வேண்டும். அதனால்தான் நாம சங்கீர்த்தனத்திற்கு இவ்வளவு ஏற்றம்.அந்த கருவியை பயன்படுத்தி அவன் நாமத்தை திரும்ப  திரும்ப நாவு  தழும்பேற சொல்லி  சொல்லி நான் என்னும்  அகந்தையை  அழிக்க பயன்படுத்தி உய்யும் வழியை தேட வேண்டும்.

மாறாக நம் அகந்தையை தூண்டி நம்மை அழிவு பாதைக்கு கொண்டு சொல்லும் மற்ற சொற்களை முற்றிலும் தவிக்கவேண்டும்.

Images courtesy-google 

சரணமும் ஸ்மரணமும்

சரணமும் 
ஸ்மரணமும் 


உப்பை தின்றால்
தண்ணி குடிக்க வேண்டும்

தப்பை செய்தால்
தண்டனை அனுபவிக்க வேண்டும்

 புரவி மீது அமர்ந்தால்
அது உடனே ஒடத்  தொடங்கிவிடும்

அதுபோல் பிறவி எடுத்தால் அது
மரணத்தை நோக்கி பயணத்தை தொடங்கிவிடும்

மரணம் என்னும் குழிக்குள் உடல்
விழுவதற்குள் அதிலிருந்து தப்பிக்கும்
வழியை நாடவேண்டும்

அதற்கு  ஒரே வழி சரணமும்
ஸ்மரணமும்தான்

ஆம் கண்ணணின் திருவடிகளை சரணடைவதும்
அவன் நாமத்தை இடைவிடாது ஸ்மரிப்பதும்தான் 

அதான் எனக்கு தெரியுமே!

அதான் எனக்கு தெரியுமே!அதான் எனக்கு தெரியுமே!

உடலை விட்டு உயிர் போன பின் 
உயிர் மீண்டும் உன் உடலில் புகாது 

அதான் எனக்கு தெரியுமே!

மரத்தில் இருந்து உதிர்ந்த இலை
மீண்டும் மரத்தில் இணைய முடியாது

அதான் எனக்கு தெரியுமே!

மனம் ஒருமைப்படாவிடில் இறைவனின்
மலரடியை நினைக்க முடியாது

அதான் எனக்கு தெரியுமே!
பேயாய்  நாள் முழுவதும் அலைந்து திரிந்து
நாய் போல் ஊளையிட்டு கோடி கோடியாய்
சேர்த்த பொருளில் ஒரு துரும்பு கூட
உன்னோடு வராது

அதான் எனக்கு தெரியுமே!

ஆராய்ந்தறியாமல் ஆத்திரப்பட்டு அனைவரிடமும்
அன்பில்லாமல்அ கந்தையுடன் நடந்துகொண்டால்
இழந்த நல்வாழ்வு மீண்டும் வராது

அதான் எனக்கு தெரியுமே!

உன் உடலில் வெளியே சென்ற மூச்சுக்  காற்று
மீண்டும் உள்ளே வராவிடில் பேச்சே இல்லாது
நீ வெறும் சடலம் ஆகிவிடுவாய்

அதான் எனக்கு தெரியுமே!

உடலில் உயிர்  இருக்கும்  வரைதான் எல்லாம்
மனதில் நினைவு இருக்கும் வரைதான் எல்லாம்
அதற்குள் நம்மை படைத்து  காக்கும் கண்ணனை
நினைக்காவிடில் எடுத்த பிறவி வீணாகி
மண்ணுக்குள் போய்விடுவாய்

அதான் எனக்கு தெரியுமே!

தெரிந்தும் ஏன்  ஒவ்வொருகணத்தையும்
கண்ணனை நினைந்து கடைத்தேற எண்ணாமல்
காலத்தை வீணாக்கி கொண்டிருக்கிறாய்?

அதுதான் எனக்கு தெரியவில்லை 

Tuesday, August 23, 2016

கோவிந்தம் பரமானந்தம்

கோவிந்தம் பரமானந்தம் 

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


கோவிந்தம் பரமானந்தம்
கோவிந்தம் பரமானந்தம்
உன்னை நினைக்கையிலே
உள்ளத்தில் ஊற்றெடுக்குதே
சுகந்தமான வசந்தம்

இருள்  கவ்விய   என் மனம்
ஒளி வெள்ளத்தால் நிறைந்தது
மாதவா கேசவா கோபாலா
என்றழைத்தபொழுதிலே (கோவிந்தம்)

நீயின்றி இவ்வுலகில்லை
இவ்வுலக இயக்கமும் இல்லை
எம் போன்றோரின் மன  மயக்கம் தீர்க்க
உந்தன் சரணத்தை  விட்டால்
வேறு வழியில்லை  (கோவிந்தம்)

அழியும் பொருளுக்காக ஏங்கி
அலையும் திரியும் மனம்
பிறந்து மடியும் உயிர்களின் மீது
பாசம் கொண்டு தவிக்கும் மனித இனம்
பிறர் உயர்வு கண்டு பொறுக்காது
தாப தீயினால் வெந்து மாளும் குணம்
நீங்க நல்வழி காண வேண்டாமோ ?(கோவிந்தம்)

பாவம்  போக்கி ஆன்மாவை பரிசுத்தமாக்கி
பரமபதம் அளிக்கும் உன் பாவன  நாமம்
கைக்கொள்ளவேண்டும் ஜென்மம் கடைத்தேற (கோவிந்தம்)