Monday, April 22, 2019

இசையும் நானும் (356 ) திரைப்படம்- மாயா பஜார் (1957)பாடல்- ஆஹா இன்ப நிலாவினிலே




இசையும் நானும் (356 ) திரைப்படம்- மாயா 

பஜார் (1957)பாடல்- ஆஹா இன்ப நிலாவினிலே




HeroGeminiganesan
Music DirectorGhandasala
LyricistThanjai Ramaiya Dass
SingersJikki,Gandasaala
Year1957

MOUTHORGAN VEDIO-358


ஆஹா இன்ப நிலாவினிலே, ஓஹோ ஜகமே ஆடிடுதே(G) ஆடிடுதே விளையாடிடுதே ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே(S) ஆடிடுதே விளையாடிடுதே  ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ(G/s) தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே  தவழும் நிலவின் அலை தனிலே (S)சுவை தனிலே(G தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே  தவழும் நிலவின் அலை தனிலே  தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை  தென்றல் பாடுது தாலேலோ(G) ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே(S) ஆடிடுதே விளையாடிடுதே (G) ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ அலையின் அசைவிலே ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே(G) காலத்திலே(S) அலையின் அசைவிலே ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே கலை வான் மதி போல் காதல் படகிலே காணும் இன்ப அனுராகத்திலே(S) ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே  ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ
Show less

Thursday, April 11, 2019

மரம் சாய்ந்து போனால் ?

மரம் சாய்ந்து போனால் ?






மரம் சாய்ந்து போனால் ?

மலை சாய்ந்து போனால்
சிலையாகலாம்
என்று ஒரு திரைப்பட பாடல்
ஒன்று உண்டு.

ஆனால் மரம் சாய்ந்து போனால்
அது என்ன ஆகும் ?

பொதுவாக மண்ணோடு
மக்கிமண்ணாகத்தான் போகும்.


ஆனால் ஒரு கலைஞன்
அதை சிற்பமாக வடித்துள்ளார்.

கண்டு மகிழுங்கள்.










Pic. courtesy from-https://dailylolpics.com/random-pictures-of-the-day-36-pics-23

Wednesday, April 10, 2019

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(3)




மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(3)

மருத்துவ மனையில் கிடைத்த 
சிறிய துண்டு காகிதங்களில் 
பால் பாயிண்ட் பேனா மூலம் 
சில படங்களை வரைந்தேன். 

அவற்றில் சில. இதோ. 


மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(2)

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(2)

பல ஆண்டுகளுக்கு முன்பு உணவு பொருட்கள் 
மந்தார இலை அல்லது வாழை இலைகளில் தான் 
வைத்து பொட்டலமாக கட்டி பயன்படுத்தப்பட்டது.அந்த உணவு அதை இலையின் நறுமணத்துடன் அமிர்தமாக இருந்தது. 

பிளாஸ்டிக் கலாச்சாரம் வந்தபிறகு டீ ,காப்பி முதற்கொண்டு 
பிளாட்டிக் பைகளில் வழங்கப்பட்டு மக்களுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்று தெருக்கொரு புற்றுநோய் /நீரிழிவு/சிறுநீரக நோயாளிகள் /வயிறு உபாதைகள் நோயாளிகள் உருவாகிவிட்டனர் 
தற்போது பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு விட்டதால் எல்லா உணவுகளும் அலுமினிய தாள்கள் ஒட்டப்பட்ட காகிதங்களில், அலுமினிய டப்பாக்களில் 
வைத்து வழங்கப்படுகிறது. அலுமினியம் கூட முதல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் என்ன நோய்  வரும் என்று 
தெரியவில்லை. 

இதனால் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான அலுமினியம் உலோகம் வீணாக குப்பை  தொட்டியில் போடப்படுகிறது .அதை பார்த்து வயிறு எரிகிறது. அதை என்ன செய்யப்போகிறார்களோ  தெரிய போவதில்லை அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். நம் தலையெழுத்து முட்டாள்களைநாம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நாசமாய் போய்க்கொண்டிருக்கிறோம். 

நான் 40 ஆண்டுகளாக டின்/அலுமினிய மெல்லிய தகடுகளைக் கொண்டு 
புடைப்பு சிற்பங்களை செய்து வருவதை என்னுடைய பொழுது போக்காக கொண்டுள்ளேன்.

மருத்துவ மனைகளில் கிடைத்த சிலதகடுகளை வைத்து சில உருவங்களை உருவாக்கினேன். அவற்றில் ஒன்று இதோ. வெள்ளை நிற தகடு கணினி உதவியுடன் தங்க நிறமாக மாற்றப்பட்டது. 


Tuesday, April 9, 2019

மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(1)


மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(1)

கடந்த 7 மாதங்களாக மனைவியின் உடல்நிலை
சரியில்லாமையால் காலம் மருத்துவ மனைகளில்
கழிந்து கொண்டிருக்கிறது.



தற்காலிக தீர்வுகள் மட்டுமே.

நிலையான தீர்விற்கு உத்தரவாதம் இல்லை
என்ற நிலையில்  வாழ்நாள் போய்க்கொண்டிருக்கிறது.

இடை இடையே கிடைத்த ஓய்வான நேரங்களில் அங்கிருக்கும்
பொருட்களைக் கொண்டே என்னோடு ஒன்றிவிட்ட கலை  படைப்புகளை
உருவாக்கினேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

அங்கு ஏராளமாக கிடைக்கும் அலுமினிய தகடுகளை வைத்து சில புடைப்பு சிற்பங்களை உருவாக்கினேன்.

அவற்றில் சில  இதோ.