Monday, June 29, 2015

குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா


குறை ஒன்றுமில்லை 
மறைமூர்த்தி கண்ணா 


மனமிருந்தால் மார்க்கமுண்டு 

உலகில் குறை இல்லாதவர்கள் எவருமில்லை 

ஆனால் குறைகளை பொருட்படுத்தாது 
தீவிர முயற்சியாலும் ஆர்வத்தாலும் உழைப்பாலும். 
இந்த  உலகில் மாற்று திறனாளிகள்   பலர்  சாதனைகளை படைத்து சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை 



கண்ணிருந்தும் குருடராய் 
முயற்சியின்றி எல்லாவற்றிற்கும் 
பிறரைக் குறை கூறி சோம்பி திரியும் 
மனிதர்களே இந்த கானோளியைக்  
கண்ட பிறகாவது உங்கள் எண்ணத்தை 
மாற்றிக்  கொண்டு இறைவன் அளித்த 
பிறவியை செம்மையாகப் பயன்படுத்தி 
வாழ்வில் வெற்றியைக் காணுங்கள். 

இணைப்பில் கண்டுள்ள கானோளியைக் கண்டு இன்புறுங்கள்.

இந்த நாட்டிய நிகழ்ச்சியை வழங்குபவர்கள் அனைவரும் 
கண் பார்வையற்றவர்கள். அவர்கள் அழகாக ஆடும் இந்த நாட்டியத்தை கண்டு இன்புற இயலாதவர்கள். 

கண் படைத்த நாம் கண்டுஇன்புற அவர்கள் நமக்கு அளிக்கும்  பரிசு. 

https://www.facebook.com/DrFabioAugusto/videos/vb.260897517292495/773778789337696/?type=2&theater

Sunday, June 28, 2015

இசையும் நானும் (21)

இசையும் நானும் (21)

என்னுடைய இசை பயணத்தில் 21 வது பாடல். 

மவுதார்கன் இசையில் 

திருப்பாவை பாசுரம். 

ஒருத்தி மகனாய் பிறந்து 
ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து  வளர 
தரிக்கிலானாகி தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து 
கஞ்சன் வயிற்றில் நின்ற நெடுமாலே 
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் 
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி 
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ  ரெம்பாவாய்


வீடியோ இணைப்பு கீழே 


https://youtu.be/4rhLDh0BUHo

இசையும் நானும் (20) விமரிசனம்

இசையும் நானும் (20) விமரிசனம் 

அனைத்தையும் அவனிடம் விட்டுவிடு என்ற பாடலை 
செவி மடுத்து "அருமை" என்று கருத்து  தெரிவித்தமைக்கு 
முதற்க்கண்  நன்றி. 


என்னுடைய பாடல் உங்கள் ஆய்வுக்கூடத்தில் 
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சில ஆலோசனைகளை 
தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். 


பாடலைக் கேட்கும்போது எனக்குத் தோன்றிய சில யோசனைகள் :

//உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு //

இந்த வரி சற்றே நீளமாக இருக்கிறது.

எனக்கு எதுகை மோனை இலக்கணம் தெரியாது 
5 ஆண்டுகளுக்கு  முன் எழுதிய கவிதை இது. அதை எங்கோ வைத்துவிட்டேன். நேற்று மதியம் இந்த பாடலின் 4 வரிகள் நினைவில் வந்தது. முயற்சி செய்து  மற்ற வரிகளை பூர்த்தி  செய்து பாடி 10 முறை  எடிட் செய்து  பதிவு செய்து நேற்று இரவு 11 மணிக்கு வெளியிட்டேன். 

//பசித்தோர்க்கு உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்//

பசித்தோர்க்கு உணவிட்டால் மகிழ்ந்திடுவான் -அவன்
பசித்தோர்க்கு உணவிட்டால் மகிழ்ந்திடுவான்

என்று பிரித்துப் பாடலாம்!

அதே போல

//அதை சரியாக செய்வோர்க்கு கண்ணன் அருளுண்டு//

இந்த வரியிலும்

அதை சரியாக செய்வோர்க்கு அருளுண்டு
கண்ணன் அருளுண்டு..

என்று பாடலாம்

இதெல்லாம் எனக்குத் தோன்றியது. டோசனைதான்.. அதிகப் பிரசங்கித்தனம் என்றால் மன்னிக்கவும். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

தங்கள் யோசனை (டோசனைதான்) கருத்தில் கொள்ளப்பட்டு இதே பாடலை மவுதார்கனில் வாசிக்கும்போது முயற்சி செய்கிறேன். 

உங்கள்   கருத்துக்களை தாரளமாக  தெரிவியுங்கள். வரவேற்கிறேன் 

என்னுடைய "பாவயாமி கோபால  பாலம்"வீடியோ  பார்க்கவில்லையா?

அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். உங்கள் கருத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். 






Saturday, June 27, 2015

இசையும் நானும் (20)

இசையும் நானும் (20)

என்னுடைய இசைப் பயணத்தில் 
நானே இயற்றி பாடிய தமிழ் பாடல் ;

இதோ அந்த பாடல்.

அனைத்தையும்  அவனிடம் விட்டுவிடு
உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு . (அ )

ஒன்றை ஆக்குவதும்  அழிப்பதும் அவன் லீலை
அது ஏன் என்று ஆராய்வது வீண் வேலை. (அ )

பசித்தோர்க்கு  உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்
பரிவோடு அருகில் வந்து உன்னைக் காப்பான் (அ )

உழைக்காமல் உண்பது மடமையடா
பிறர் உழைப்பை சுரண்டி வாழ்பவன் மிருகமடா

கடமையை தவறாமல் செய்வது தருமமடா
அதை செய்யாமல் விடுவது கருமமடா  (அ )

கடமையைக் காலத்தில் செய்தால் பலனுண்டு
அதை சரியாக செய்வோர்க்கு கண்ணன் அருளுண்டு

இதை நீ  என்றும் நினைவில் கொண்டு
வாழ்க வளமுடன் பல்லாண்டு  (அ)


பாடலின் இணைப்பு கீழே;
https://youtu.be/bmVemsz64sg

Thursday, June 25, 2015

இசையும் நானும்(19)

இசையும் நானும்(19)

என்னுடைய மவுதார்கன் இசை பயணத்தில்

அடுத்த  வீடியோ ஒரு தெலுங்கு  கீர்த்தனை


"பாவயாமி  கோபால பாலம்" 






இயற்றியவர்; திருவேங்கட கவி அன்னமாச்சார்யா.




மவுத்தார்கன் இசையில் உங்களுக்காக. 

இணைப்பு. கீழே.

https://youtu.be/0R2JIBg-fOg

Sunday, June 21, 2015

இசையும் நானும்(18)

இசையும் நானும்(18)

என்னுடைய இசைப்பயணத்தில் அடுத்ததாக
மவுத்தார்கன் இசையில் ஒரு ஆங்கில பாடல்.




உலக அமைதிக்காக . என்னால் இயற்றி
பாடப்பட்டது.

விரும்புவோர் கேட்டு மகிழ .

இணைப்பு கீழே

https://youtu.be/-be3j6DvX1M

Friday, June 19, 2015

இசையும் நானும் (17)

இசையும் நானும் (17)

என்னுடைய மவுத்தார்கனின் இசைப் பயணத்தில் 
17 வது பாடல். 

எனக்கு திரு உன்னிகிருஷ்ணனின் 
இனிமையான குரல் மிகவும் பிடிக்கும். 

அப்படி அவர் பாடிய பாடல்களில் ஒன்று 
பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய 

உன்னை துதிக்க அருள்தா என்ற பாடலை 
மிக அருமையாக உன்னி கிருஷ்ணன் பாடியுள்ளார்.

 அதை கேட்ட பின் ஏன் 
இந்த பாடலை மவுத்தார்கனில் இசைக்கலாமே என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. 3 மாதங்கள் பயிற்சி செய்தேன். நன்றாக வந்துள்ளது. 

உங்களுக்கும் பிடிக்கும். 
I dedicate this song to Melody King.Unnikrishnan. Sir. 

பாடலின் வீடியோ இணைப்பு கீழே.

https://www.youtube.com/watch?v=Pc02_VoQJEA&feature=em-upload_owner


Wednesday, June 17, 2015

இசையும் நானும்(16)


இசையும் நானும்(16)



A SONG FOR WORLD PEACE 

என்று ஒரு ஆங்கில பாடலை இயற்றி
அதை பாடி பார்த்தேன் .

எனக்கு பிடித்தது (ஏனெனில் காக்கைக்கு
தன்  குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். )

உங்களுக்கும் பிடிக்கும்
என்று நினைக்கிறேன்.

அதன் இணைப்பு கீழே


https://youtu.be/dpltriq89Tk

Monday, June 15, 2015

A SONG FOR WORLD PEACE


 A SONG  FOR WORLD PEACE 



Chant the 
divine name 'Hey Ram"

Save the
humanity from harm                      (chant)


Image result for globe



Love and affection remained
only in words 

Lies and lust are ruling
the world                                       (chant)

Hatred and hipocracy have become 
the religion of the masses 

People are fighting 
for silly  causes

Killing each other 
has become their  fashion                 (chant)

The world must live in peace
war and poverty must cease 

Likes and dislikes 
are your enemies 

Llust and anger gives you
endless mental agony                        (chant)


The heart is the abode of Devine 
Be  tuned with music of boundless  love


Enjoy this worldly life full of harmony 
with eternal joy of devine company       (chant)




Saturday, June 13, 2015

உத்தமன் ஒருவன் உன்னுள்ளே இருக்கின்றான்

உத்தமன் ஒருவன் 
உன்னுள்ளே இருக்கின்றான் 


உத்தமன் ஒருவன்
உன்னுள்ளே இருக்கின்றான்
என்பதை அறியாது
உலகத்தில் உழலும்
மானிடரே

உங்களுக்கு ஓர் உண்மை சொல்வேன்
உள்ளத்தில் கொண்டு உய்வீரே

குடலை நிரப்பவும் உடலை வளர்க்கவும்
விலங்குகள் போல் சுற்றி திரிந்து
மடியவும் இவ்வுலகிற்கு நாம் வரவில்லை
என்பதை உணர்வீரே உணர்ந்து தெளிவீரே

காலைமுதல்  மாலைவரை
கடுமையாய் உழைத்து கல்லையும்
பொன்னையும் சேர்த்து வைத்து
அழகு பார்த்துக் கருமியாய்
வாழ்வதில் பயன் இல்லை

காலன் வரும் நேரத்தில் நம்முடன்
அனைத்தையும் கையுடன்
கொண்டுசெல்ல  இயலாத அவற்றால்
ஏதும்  நன்மை இல்லை

இல்லைஎன்று உன்னை
நாடி வருவோர்க்குஇயன்ற   அளவில்
உதவி செய்தால் போதுமே

பிறர்  மனம் வாட செயல்கள்
செய்யாமலிருந்தாலே நம் வாழ்வு
நல்லவிதமாய் அமையுமே

கடமையை தவறாது செய்பவனும்
கடுஞ்சொல் கூறாதிருப்பவனும்
பிறர் பொருளை அபகரியாதிருப்பவனும்
சத்தியத்தையே பேசுபவனும்
அகிலத்தை  காக்கும் கடவுளை
மறவாதிருப்பவனும் நிலையான
அமைதியும் ஆனந்தமும் வாழ்வில்
பெற்று மகிழ்வது திண்ணமே.









Friday, June 12, 2015

இசையும் நானும் (13)

இசையும் நானும் (13)

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இவனுக்கு

"உத்தமன் ராமனை என்ற பாடலைக் கொடுத்தான்

அதை மவுதார்கன் இசையில் ஒலிக்க  வைத்தான்

இப்போது அடுத்த பாடலை இவன் நெஞ்சில்

பதித்துவிட்டான். அந்த பாடல் இதோ.







ராமா ராமா என்று
சொன்னால் போதுமே (ராமா)

வாழ்வில் வளமும் நலமும் 

தன்னால் வந்து சேருமே.  (ராமா)

அபாயம் நிறைந்த இவ்வுலகில் 

அபயம் அளிப்பது  அவன் நாமமே . (ராமா)

 காணும் உயிர்கள் யாவுமாய் 

கண்முன் தோன்றும் இறைவனே 

கல்லில் பதித்தாலும் நெஞ்சில் துதித்தாலும் 

கருணையோடு அருள் செய்யும் தெய்வமே (ராமா)

பாடலின்  இணைப்பு. கீழே 


https://youtu.be/yEGyq8ENQxs

Wednesday, June 10, 2015

இசையும் நானும் (12)

இசையும் நானும் (12)

இசையும் நானும் (12)

இசையும் நானும் (12)

மவுதார்கனில் என்னுடைய அடுத்த பாடல் 

ராமபிரான் மீது நான் இயற்றிய பாடலுக்கு 
இசை அமைத்துள்ளேன். 

அந்த பாடல் இதோ.

உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில் 
உள்ளத்தில் நினைவாய் மனமே 
அனுதினமே (உத்தமன்)

தர்மத்தை நிலைநாட்ட தரணிக்கு வந்தவன் 
தந்தை சொல் காக்கவே அரியணை விடுத்து 
ஆரண்யகம் சென்றவன்  (உத்தவன்)

காண்போர் அனைவரையும் அன்பால் தன்வசம் ஈர்த்தவன் 
கல்லாய் கிடந்த அகலிகைக்கு கருணை காட்டி உயிர் கொடுத்தவன் (அந்த உத்தமன்)

அன்னை சீதையுடன் அருள் வடிவாய் காட்சி தருபவன் 
அடியவன் அனுமனின் இதயத்தில் என்றும் உறைபவன் (அந்த உத்தமன்)

அகிலத்து மாந்தர் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் என்றும் நிலைத்திட 
இன்னலும் தீமையும் இவ்வுலகை விட்டு அகன்றிட (அந்த உத்தமன்)

வீடியோ இணைப்பு இதோ. 
https://www.youtube.com/watch?v=D5eLTTsXQ9Y&feature=youtu.be

Friday, June 5, 2015

இன்பம் எங்கே இருக்கிறது ?

இன்பம் எங்கே இருக்கிறது?

இன்பம் எங்கே இருக்கிறது ?

ஒவ்வொருவரும்  அவரவர் அனுபவங்களுக்கு
ஏற்ப இன்பம் எதில் உள்ளது என்பதை கூறுவார்கள்.

ஒருவருக்கு இன்பமாக இருப்பது
மற்றவர்க்கு துன்பமாக தெரியும்.

ஒரு கால கட்டத்தில் அதே மனிதருக்கு
இன்பத்தை தரும் ஒரு பொருளோ
அல்லது அனுபவமோ ஏற்கெனவே
அனுபவித்த இன்பத்தை
தரும் என்று கூற இயலாது

இன்பம் எங்கே இருக்கிறது?

இன்பம் துன்பத்தின் பின்னால் 
ஒளிந்துகொண்டிருக்கிறது. 

வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி
வந்து போய்க்கொண்டிருக்கின்றன.
ஆற்றினிலே நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும்
தண்ணீர் போல

எனவே அது நிலையில்லாது என்கிறார்கள்
ஞானிகள்.

நாம் ஆற்றில் நீரை ஓட விடாமல் அங்கங்கே பள்ளங்கள் தோண்டி
தேக்கி  ஆற்று நீரை கடலில் கலக்காமல் தடுத்துவிடுகிறோம்.

தேங்கிய நீரில் புழுக்களும் பூச்சிகளும்
பெருகி நாற்றமடிக்கின்றன. நம் மனமும் அப்படியே!

எந்த அனுபவம் ஏற்ப்பட்டாலும் அதிலேயே நம்மை
மூழ்கடித்துக் கொள்ளாமல் அதை விட்டு அடுத்த
அனுபவத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

இன்பத்தை வேண்டி பெறுவதுபோல்
அனைத்து  மனிதர்களும் துன்பத்தையும்
இன்பமாக அனுபவிக்கிறார்கள் என்பதை
நாம் அனுதினம் நம் வாழ்வில் பார்க்கின்றோம்.

பத்து  மாதம் தன் வயிற்றில் சுமந்த தன் குழந்தையை
கண்டு கொஞ்சி  மகிழ பிரசவ வலியைசகித்துக்கொள் கிறாள்.

வாழ்வில் முன்னேற நினைப்பவர்கள் அனைவரும்
பலவிதமான, இழப்புகளையும், அசௌகர்யங்களையும்
அவமானங்களையும் மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றனர்.

துன்பப்படாமல் இன்பம் இல்லை.
இன்பம் வேண்டுமென்றால் துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளும்
பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிறு தீக் காயத்தை தாங்க முடியாத மனிதர்கள்
பக்தியின் காரணமாக தீ மூட்டி தணலின் மேல்
நடக்கின்றனர்.

இன்பமும் துன்பமும் எல்லாம் மனதில்தான் உள்ளது.
எதற்கெடுத்தாலும் மனதில் உள்ள உருப்பெருக்கியை
ஒவ்வொரு செயலுக்கும் பயன்படுத்தாமல் இருந்தாலே போதும்.

இன்பமும் துன்பமும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காமல்
வாழ்வில் வெற்றி நடை போடலாம்.