Sunday, February 22, 2015

என்றும் விடமாட்டேன்

என்றும் விடமாட்டேன் 





ஓவியம். தி.ரா. பட்டாபிராமன் 

என்றும்  நிலைத்து நின்று ஒளி வீசும்
சூரிய குல தோன்றலே ஸ்ரீ ரகுவரா

உன்னைத் தவிர என்னை
காப்பாற்றுபவர் யார்?

என்னை மட்டுமல்ல
சம்சார சாகரத்தில் சிக்கி
மாயையில் உழன்று மூழ்கிக் கொண்டிருக்கும்
அனைவரையும் காப்பாற்ற உன்னைத் தவிர
வேறு யார் உளர்?

எல்லா தெய்வங்களும் கேட்கும்  சில வரங்களையும்
கேளாமலேயே பல வரங்களையும் தந்துவிட்டு
மீண்டும் மீண்டும் எங்களை இந்த சம்சாரக் குழியில்
தள்ளுவதிலேயே குறியாக இருக்கின்றன.

ஆனால் நீ மட்டும் மானிடர்களை  அனைத்து
இடர்களினின்றும் காப்பாற்றி அணைத்து
காப்பாற்றும் தயாபரன் அல்லவோ?

ராம பக்தனான தியாகராஜரை போன்றவர்கள்
நிதியும் பொன்னும் வந்து குவிந்த போதும்
அதை வெறுத்து நிலைத்த அழியாத பதம் தரும்
உன் திருவடியையே நினைக்க வைத்து
அருள் செய்தாயே ,இது ஒன்றே போதாதா ,நீ
உன் உண்மையான பக்தர்களை காத்து
ரட்சிக்கும் காருண்யத்தை
நாங்கள் அறிந்துகொள்ள ?


கருணையே வடிவெடுத்து இப்பூவுலகிர்க்கு
வந்து கால் கடுக்க நடந்து உன் பக்தர்களை
அவரவர் இருப்பிடம் தேடி சென்று காத்த
உன் தாமரைப் பொற்பாதங்களை
நான் விடுவேனோ?

விடமாட்டேன் .
கிடைத்த இந்த அரிய
வாய்ப்பை விட்டுவிட்டு
மீண்டும் பிறவிக் குழியில்
விழமாட்டேன்.

இன்னும் வரும்