Tuesday, October 27, 2015

இசையும் நானும் (71)

இசையும் நானும் (71)

இசையும் நானும் (71)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 71 வது காணொளி 

மவுதார்கன் இசை 
தமிழ் பாடல்- படம்- ஆடிபெருக்கு- 
பாடல்- காவேரி ஓரம் கவி சொன்ன காதல் 
அருமையான பாடல்.  வரிகள் -கண்ணதாசன்-இசை எ எம் ராஜா Image result for adiperukku tamil movie


காவேரி ஓரம் கவி சொன்ன காதல் 
கதை சொல்லி நான் பாடவா -உள்ளம் 
அலை மோதும் நிலை கூறவா 

அந்த கனிவான பாடல் 
முடிவாகும் முன்னே 
கனவான கதை கூறவா -பொங்கும் 
விழி நீரை அணை  போடவா 

பொருளோடு வாழ்வு 
உருவாகும் போது 
புகழ் பாட பலர் கூடுவார் 
அந்த புகழ் போதையாலே 
எளியோரின் வாழ்வை 
மதியாமல் உரையாடுவார் 

ஏழை விதியோடு விளையாடுவார் 
அன்பை மலிவாக எடை போடுவார் 
இந்த கனிவான காதல் 
முடிவாகும் முன்னே 
கனவான கதை கூறவா -பொங்கும் 
விழி நீரை அணை போடவா

அழியாத காதல்  நிலையானதென்று 
அழகான கவி பாடுவார்
வாழ்வில் வளமான மங்கை
பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் 

கொஞ்சும் மொழி பேசி வலை வீசுவார் 
பெண்ணை எளிதாக விலை பேசுவார் 
என்ற கனிவான காதல் 
முடிவாகும் முன்னே 
கனவான கதை கூறவா -பொங்கும் 
விழி நீரை அணை போடவா

மணவாழ்வு மலராத மலராகுமா 
மனதாசை விளையாத பயிராகுமா 
உருவான உயிர் அன்பு பறி போகுமா 
உயிர் வாழ்வு புவி மீது சுமை யாகுமா 
சுமையாகுமா .. 

காணொளி இணைப்பு 
Thursday, October 22, 2015

இசையும் நானும் (70)

இசையும் நானும் (70)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 
70 வது காணொளி. 

மவுதார்கன் இசை. 

தமிழ் பாடல்:கருணை தெய்வமே கற்பகமே என்னும் 
அருமையான பாடல்.

Image result for mylai karpagambal temple


தாளம் ஆதி 
இயற்றியவர்: மதுரை ஸ்ரீனிவாசன் 

பல்லவி 


கருணை தெய்வமே கற்பகமே 
காண வேண்டும் உன் பொற்பதமே (என் )

அனுபல்லவி 
உறுதுணையாகவென்  உள்ளத்தில் அமர்ந்தாய் 
உனை யன்றி வேறாரோ என் தாய்

சரணம் 
ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும் 

அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும் 
நாளும்  உன்னை தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல்  வேண்டும் 


காணொளி இணைப்பு:

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/SsORgAL3Co8" frameborder="0" allowfullscreen></iframe>https://www.youtube.com/watch?v=SsORgAL3Co8&feature=youtu.be


Wednesday, October 21, 2015

கருணை உள்ளம் கொண்டவரே !

கருணை உள்ளம் கொண்டவரே                                                               ஓவியம் -தி.ஆர்.பட்டாபிராமன் 


கருணை உள்ளம் கொண்டவரே
மனித தெய்வம் காஞ்சி மாமுனி

தன் காலில் விழுந்தவர்களை
கை தூக்கி விடுவதே
அவர் கொண்ட பணி (கருணை )

உயர்ந்தவர்  தாழ்ந்தவர்
என்ற பேதம் அவருக்கில்லை

ஒன்றும் கூறாமலே
குறைகளை தீர்த்து வைப்பதில்
இவ்வுலகத்தில் அவருக்கு
ஈடு இணை எவரும் இல்லை (கருணை )

அரக்கன் கவர்ந்து சென்ற
வேதங்களை மீட்டுக்
கொடுத்தான் அரங்கன் அன்று

கலியின்  கொடுமையால்
மறைந்து போன வேதங்களை
போற்றி உயிர் கொடுத்தான்
இந்த காவியணிந்த
காஞ்சி மாமுனி இன்று (கருணை )

சாத்திரங்களின் பெருமையை
மீட்டுக் கொடுத்தவன்

சகல கலைகளும் மீண்டும்
தலையெடுக்க வழி கோலியவன்

அனைவரும் தத்தம்
ஸ்வ தர்மங்களை அனுசரித்து
நல்லதோர் கதியை 
அடைய வழி காட்டியவன்

தர்ம வழி நின்று தன்  ஊனினை  ஒடுக்கி
உள்ளொளி பெருக்கி இந்த
வையகம் உய்ய தவமியற்றியவன்

அந்த சந்திர சேகரனே
நம் கண்முன் சந்திரசேகர
சரஸ்வதியாக   நம் கண் முன் காட்சி
தந்து நம்மையெல்லாம்
கடைதேற்ற வந்தவன் (கருணை )

காலடியில் அவதரித்த
ஆதி சங்கரனே இவனன்றோ!

ஷண்மத  ஸ்தாபனம் செய்தவனும்
இவனன்றி  வேறு யார்?

அன்று விண்ணும்மண்ணையும்
அளந்த பிரானின்   அம்சமாக
இப்புவியில் தன்  பாதம் நோக நடந்து
அனைத்து ஜீவன்களின்
தாபம் தீர்த்த வள்ளல்
இவனன்றி  வேறு யார் உளர்?(கருணை )


Tuesday, October 20, 2015

இசையும் நானும் (69)

இசையும் நானும் (69)

இசையு நானும் என்னும் தொடரில் என்னுடைய
69 வது காணொளி

மவுத்தார்கன் இசை. 

மகா பெரியவா துதி 


"பஜரே குருநாதம்-மானச பஜரே குருநாதம்"

காணொளி இணைப்பு 
https://www.youtube.com/watch?v=A_S6YnLIoTsSunday, October 18, 2015

உலகை ஆளும் உத்தமனே!


உலகை ஆளும் உத்தமனே !

உலகை ஆளும் உத்தமனே 
உலகளந்த பெருமாளே 
உந்தன் பாதம் சரணடைந்தோம் 
உலகில் அமைதியை தந்தருள்வாய் (உலகை)தர்ம வழி நடந்து நாம் அதைகாத்து வந்தால் 
அந்த தர்மமே நம்மையெல்லாம் காக்கும் 
என்று உணர்த்த ராமனாக அவதாரம் 
செய்த தெய்வம்  நீயல்லவோ ! 
அவரவருக்குரிய கடமைதனை 
தவறாது செய்து தன்னை நினைப்பவர்தம் 
வாழ்வை வளமாக்குவது தன் கடமையென்று 
கண்ணனாய் அவதரித்து காட்டி தந்தவனும் 
நீயேயன்றோ.! (உலகை)
அரக்க குணம் கொண்டோர் மிகுந்து விட்ட 
இவ்வுலகில் அடியவர்கள் படும் துன்பம் 
மிகுந்துவிட்டதைக்  கண்டும் அரங்கா !
நீ இன்னும் கொடுமைகளைக் களைய 
மனம் கொள்ளாதிருப்பது முறையோ?

பக்தர்களின் குறைகளைக் கண்டும் 
காணாதிருப்பது சரியோ? 
பாதகர்களை அடக்கி ஒடுக்க 
காலம் தாழ்த்துவது தர்மமாகுமோ? (உலகை)

நன்றி மறவா குணமும் அனைவரின் 
நலம் நாடும் எண்ணமும் 
நாரணா !உந்தன் பெருமையை எந்நேரமும் 
எண்ணி மகிழும் வாழ்க்கையும் 
தந்தருள் செய்திடுவாய் (உலகை)

இசையும் நானும் (68)


இசையும் நானும் (68)

இசையும் நானும்  தொடரில் என்னுடைய 68  வது காணொளி

மவுத்தார்கன் இசை 

தமிழ் படம்-மணியோசை
பாடல்-தேவன் கோவில் மணியோசை
சீர்காழி கோவிந்தராஜன் பாடியது.

காணொளி இணைப்பு.

இசையும் நானும் (6 8)

இசையும் நானும் (6 8)

இசையும் நானும் (6 8)

இசையும் நானும்  தொடரில் என்னுடைய 68  வது காணொளி

மவுத்தார்கன் இசை 

தமிழ் படம்-மணியோசை
பாடல்-தேவன் கோவில் மணியோசை
சீர்காழி கோவிந்தராஜன் பாடியது.

காணொளி இணைப்பு.

Friday, October 16, 2015

இருப்பதைக் கொண்டு .......

இருப்பதைக் கொண்டு .......


இருப்பதைக் கொண்டு .......


இருப்பதைக் கொண்டு சிறப்புடன் 
வாழும் இலக்கணம் வேண்டும் .

அதுதான் மன அமைதிக்கும் 
மகிழ்ச்சிக்கும் அடிகோலும். 

கீழே  கண்ட படத்தைப் பாருங்கள்.

இளநீரைக் குடித்து விட்டு வீசிஎறிந்த

தேங்காயை தன் குடியிருப்பாக

மாற்றிக்கொண்டு ஆனந்தமாய்

வாழும் இந்த கிளியிடம் நாம்

பாடம் கற்க வேண்டும்.

இன்று உலகில் மனிதர்கள் எல்லாம் இருந்தும்
அதை அனுபவிக்காமல் மலருக்கு மலர் தாவும் வண்டுபோல்
பொருட்கள் மீது மோகம் கொண்டு கை காசை ஒழித்து கொண்டு வருவது
ஒரு மன வியாதியாகி போய்விட்டது.படம் நன்றி -முகநூல் பக்கம் 

Thursday, October 15, 2015

இசையும் நானும் (67)

இசையும் நானும் (67)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய
67 வது காணொளி.

மவுதார்கன் இசை. 

நவராத்ரி ஸ்பெஷல் 


ஓவியம்- தி.ஆர்.பட்டாபிராமன் 

தமிழ் பாடல். பாடியவர் .பி. சுசீலா

"கலைவாணி நின் கருணை தேன்  மழையே 
விளையாடும் என் நாவில் செந்தமிழே." 

காணொளி இணைப்பு.

https://youtu.be/ywhFpxy3NAU
Tuesday, October 13, 2015

நவராத்ரி வாழ்த்துக்கள்

நவராத்ரி வாழ்த்துக்கள் 


இந்த உலகில் நாம் மட்டும் பிறக்கவில்லை
நம்மோடு கணக்கற்ற உயிரினங்களும் 
இறைவனால் படைக்கப்பட்டு நம்மோடு இணைந்து 
அன்போடு நமக்கு உதவி செய்து வாழ்கின்றன
என்பதை நாம் உணர்ந்து கொள்ளும்முகத்தான்
நம்முடைய முன்னோர்கள்.நவராத்திரி விழாக் காலத்தில் 
பொம்மைக் கொலு வைக்கும் முறையை ஏற்படுத்தி வைத்தார்கள். 

அதுமட்டுமல்லாமல் அனைவரும் 
ஒருவரோடு கலந்து பழகி புரிந்துகொண்டு  அன்பு செலுத்தவும், 
நட்புறவை பலப்படுத்தவும், கலைஞர்களின் வாழ்வை மேம்பவுத்தவும், கலைகளை வளர்க்கவும், இறை வழிபாட்டை மனிதர்களிடையே ஊக்குவிக்கவும். வாழ்வில் ஏற்படும் இடர்களை மறந்து மன மகிழ்ச்சியுடன்  நம்மை மேம்படுத்தி கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும் இந்த விழாக் காலம் அனைவருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் நலமும் ,பெற்று மகிழ அன்னை பராசக்தியை வேண்டுவோமாக. Friday, October 9, 2015

இசையும் நானும் (66)

இசையும் நானும் (66)

இசையும் நானும் (66)

இசையும் நானும் (66)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய

66 வது காணொளி

மவுதார்கன் இசை.  

மாதா அம்ருதானந்தமயி பஜன்.

"பந்தம் உண்டு சொந்தமுண்டு"

பந்தமுண்டு சொந்தமுண்டு கண்டுகொண்டேன் நான்-அம்மா
என்றழைக்கும்போது  வரும் பந்தம் நிலைதான் (பந்தமுண்டு)

மணம் வீசும் மலர் நுகர்ந்து உன்னை நினைந்தேன் -மனதில்
அர்ச்சனைகள் செய்து நானும் என்னை மறந்தேன்
தேனும் பாலும் அபிஷேகம் செய்து மகிழ்ந்தேன்
அந்த காட்சி கண்டு எந்தன் உள்ளம் பூரித்திருந்தேன் (பந்தமுண்டு)

தாயாகி தந்தையுமாய் குருவுமான தேவி  இங்கே
நிர்குணமாய் தோன்றுவதைக் கண்டு வியந்தேன்
வழியறியாப் பேதையாக கண்ணீரோடு நின்றேன்
அந்த சங்கரி அழைக்க பிறவி பயனை அடைந்தேன் (பந்தமுண்டு)

அறியாமை இருள் சூழ உழன்று நானும் இருந்தேன்
அன்னை உந்தன் அருளால் கருணைக்கடலில் மிதந்தேன்
அங்கம் அங்கமாக என்னை அர்ப்பணம் செய்தேன்
தாயே நீ ஆள  வேண்டும் தயவைக் காத்திருந்தேன் (பந்தமுண்டு)

காணொளி இணைப்பு 


https://www.youtube.com/watch?v=LzTeBfuiswI&feature=youtu.beThursday, October 8, 2015

இசையும் நானும் (65)

இசையும் நானும் (65)

இசையும் நானும் (65)

இசையும் நானும் என்னும்

தொடரில் என்னுடைய

65 வது காணொளி
மவுதார்கன் இசை.

தமிழ் பாடல். :படம் நானும் ஒரு பெண்.

பாடல்: கண்ணா கருமை நிறக் கண்ணா..
உன்னை காணாத கண்ணில்லையே.

காணொளி இணைப்பு. 

Monday, October 5, 2015

இசையும் நானும் (63)

இசையும் நானும் (63)

இசையும் நானும் (63)

இசையும் நானும் தொடரில் என்னுடைய
63 வது காணொளி

மவுதார்கன் இசை.  


ஹிந்தி பாடல் : படம் : பந்தினி

பாடல் : ஒ ஜானேவாலே ...

பாடியவர் "முகேஷ்


காணொளி இணைப்பு

Sunday, October 4, 2015

மனித குலத்து எதிரிகள்

மனித குலத்து எதிரிகள் 


மத வெறியும் இன வெறியும்  
மனித குலத்து எதிரிகள் 

இவ்வுலக மாந்தர்களின் 
இன்ப வாழ்வை சிதைக்க 
வந்த கிருமிகள். 

ஒருவருக்கொருவர் உதவி 
வாழும் உயர்ந்த குணம் 
மனித மனங்களில் 
வளர வேண்டும் 

ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கு 
மதிப்பளித்து இசைந்து போகும் 
இனிய பண்பு மலர வேண்டும் 

குறை காணும் போக்கொழிந்தால் 
காண்பதெல்லாம் நிறைவாகும் 

விருப்பும் வெறுப்பும் நம்மை 
விட்டொழிந்தால் போதும் 
அனைவரின் வாழ்வும் 
இன்ப மயமாகும் 

பிரிவினை பேசி பிதற்றி திரியும் 
கேடர்களை விட்டு விலகிடுவோம் 

பகைமை என்னும் தீயை மூட்டி  
அன்பு மனங்களில் நச்சு  விதையை
விதைக்கும் நய வஞ்சகர்களின் 
உளறல்களுக்கு செவி சாயோம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே 
ஒற்றுமை   நீங்கிடில் நம் அனைவர்க்கும் 
தாழ்வே என்ற பாரதி சிந்தனையை 
மனதில் கொண்டு நலம் பெறுவோம். 

இசையும் நானும்(62)

இசையும் நானும்(62)


இசையும் நானும் ( 62)

இசையும் நானும் தொடரில் 
என்னுடைய 62 வது காணொளி 

மவுதார்கன் இசை,

படம் -குழந்தையும் தெய்வமும் பட பாடல் 
அன்புள்ள மான்விழியே 
ஆசையில் ஓர் கடிதம் - நான் 
எழுதுவதென்னவென்றால் - உயிர்க் 
காதலில் ஓர் கவிதை 

அன்புள்ள மன்னவனே 
ஆசையில் ஓர் கடிதம் - அதைக் 
கைகளில் எழுதவில்லை - இரு 
கண்களில் எழுதி வந்தேன் 

நலம் நலம்தானா முல்லை மலரே 
சுகம் சுகம்தானா முத்து சுடரே ( 2 )
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ 
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ 
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ 
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ 
(அன்புள்ள )

நலம் நலம்தானே நீ இருந்தால் 
சுகம் சுகம் தானே நினைவிருந்தால் 
இடை மெலிந்து இயற்கையல்லவா 
நடை தளர்ந்து நாணம் அல்லவா 
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாழ வைத்ததும் உண்மை அல்லவா 
(அன்புள்ள )

எனக்கொரு பாடம் சொன்னவரே 
எனக்கொரு பாடம் கேட்டுக்கொண்டேன் 
பருவம் என்பதே பாடம் அல்லவா 
பார்வை என்பதே பள்ளி அல்லவா 
ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும் 
இரவு வந்தது நிலவும் வந்தது 
(அன்புள்ள )

காணொளி இணைப்பு 

Saturday, October 3, 2015

இசையும் நானும் (61)


இசையும் நானும் (61) 

இசையும்  நானும் என்னும் தொடரில்

என்னுடைய 61 வது காணொளி

மவுதார்கன் இசை

தமிழ் திரைப்பட பாடல்

படம்-படகோட்டி- நானொரு குழந்தை நீயொரு குழந்தை..
அருமையான ,இனிமையான பாடல்.

நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி (நான் ஒரு குழந்தை)

நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது (நேற்றொரு)

தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது

பவளக்கொடியே வா சிந்தாமணியே வா
மணிமேகலையே வா மங்கம்மாவே வா (நான் ஒரு குழந்தை)


ஊரறியாமல் உறவறியாமல்
யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே

ஓடிய கால்களை  ஓடவிடாமல்
யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே 

ஆவி துடித்தது நானுமழைத்தேன்
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே (ஆவி)


பவளக்கொடியே வா சிந்தாமணியே வா
மணிமேகலையே வா மங்கம்மாவே வா (நான் ஒரு குழந்தை)


காணொளி இணைப்பு.

Friday, October 2, 2015

இசையும் நானும் (60)

இசையும் நானும் (60)

இசையும் நானும் தொடரில் 60 வது காணொளி

மவுத்தார்கன் இசை.

ஆங்கில பாடல். நானே இயற்றி பாடியது. 

Chant the dive name "Hey Ram"
Save the humanity from harm (chant)

Love  and affection only remained in words
Lies and lust are ruling the world

Hatred and hypocrisy have
become the religion of masses

People are fighting for
silly causes

killing each other has
become the way of life

The world must live in peace
wars and poverty must cease

The heart is the abode of devine
Be tuned with music of boundless love
Enjoy this worldly life full of harmony
with eternal joy of divine company  (Chant)

காணொளி இணைப்பு 


https://www.youtube.com/watch?v=38_sZD-43O4&feature=youtu.be

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/38_sZD-43O4" frameborder="0" allowfullscreen></iframe>

இசையும் நானும் (59)

இசையும் நானும் (59)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 59 வது காணொளி.

மவுத்தார்கன் இசை 

தமிழ் பாடல் 
இயற்றியவர். திரு. சேதுமாதவ ராவ் 

"சாந்தி நிலவ வேண்டும்" என்ற பிரபலமான
எழுச்சி மிக்க பாடல்மகாத்மா காந்திஜியின்
பிறந்த தினத்தை முன்னிட்டு

சாந்தி நிலவ வேண்டும்
எங்கும் சாந்தி நிலவ வேண்டும்
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்
ஆத்ம சக்தி ஒங்க வேண்டும்.

காந்தி மகாத்மா கட்டளை அதுவே
கருணை, ஒற்றுமை,கதிரொளி பரவி (சாந்தி)

கொடுமை செய் தீயோர்
மனமது திருந்த நற் குணமது புகட்டிடுவோம் (கொடுமை)

மடமை ,அச்சம்,அறுப்போம்
மக்களின் மாசில்லா நல்லொழுக்கம் வளர்ப்போம்

திடம் தரும் அஹிம்சா யோகி நம் தந்தை
ஆத்மானந்தம் பெறவே

கடமை மறவோம் அவர் கடன் தீர்ப்போம்
களங்கமில் அறம் வளர்ப்போம் .(சாந்தி)

எங்கும் சாந்தி!எங்கும் சாந்தி! எங்கும் சாந்தி

காணொளி இணைப்பு.

https://youtu.be/VwOCEeUFQfM