Wednesday, July 30, 2014

திரு ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்

திரு ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள் 



திரு ஆடிப்பூரத்தில் அவதரித்தவளே
ஆன்மா கடைத்தேற வழி காட்டும்
திருப்பாவை பாடல்களைத்  தந்தவளே

பேதையாய் வந்தாய்  பெருமானின்
புகழ்  பாடி கோதையாய்   ஆனாய்
மாந்தர்களின் வேதை தீர நல்லதோர்
பாதையை அமைத்துத் தந்தாய்

மானிடராய் பிறந்து மாலவனின்
புகழ் பாடி மணம் வீசி மாயவனுடன்
கலந்துவிட்ட மாதரசியே

அறியாமை என்னும் உறக்கத்தில்
உழலும் மாந்தரை தட்டி எழுப்பி
ஓங்கி உலகளந்த உத்தமனின்
புகழை  பாட வைத்த  அன்னையே



என்றும் நீங்காத நிலைத்த
புகழடைந்தாய் .இந்நாளில் உன்
புகழ் பாடி ஆயர்பாடியில் வந்துதித்த
கண்ணனின் திருவடிகளை வணங்குவோம்.

Monday, July 28, 2014

படித்தது போதும் .பாதையை தேர்ந்தெடுப்பீர் !

படித்தது போதும் .பாதையை தேர்ந்தெடுப்பீர் !

உலக வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள்
எதையாவது புதிது புதிதாக
படித்துக்கொண்டிருப்பார்கள்.

எல்லாம் மற்றவர்களுடைய
வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவங்கள்.
மற்றும் அவர்களுடைய கற்பனைகள்.
அவ்வளவுதான்

இதனால் தனக்கு என்ன பயன்
என்று யாரும் சிந்திப்பது கிடையாது.

எதுவாக இருந்தாலும் அது
அவர்களுடைய உள்ளத்தில்
புகுந்து வேலை செய்யுமா
என்பதும்  கேள்விக்குறி.

படித்தவற்றை பற்றி அவர்கள் எழுதுவதும்,
மற்றவர்களோடு விவாதிப்பதிலும்
அவர்கள் வாழ்வு ஓடிவிடும். அவர்களும்
இந்த உலகை விட்டு ஓடிவிடுவார்கள்.

அதே போக்குதான் ஆன்மீக வாழ்க்கையிலும் இன்று
நடந்துகொண்டிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான் நூல்கள்.
அதற்கு வானம் போல் அகண்ட விரிவுரைகள்.

ஒவ்வொன்றும் ஒரு வழியைக் காட்டுகின்றன.
ஒவ்வொருவர் அவரவர் புரிந்துகொண்ட வகையில்
அவரவர் கருத்துக்களை மக்கள் மீது திணிக்கிறார்கள்.
பலர் அவர்கள் சொல்வதுதான் சரி என்கிறார்கள்.
மற்றவைகள் கவைக்குதவாது என்று கூறுகிறார்கள்.

ஒன்றும் படிக்காதவன்
நம்பிக்கையோடு இருக்கிறான்.

படித்தவன் குழப்பத்தில் கிடக்கிறான்.
அவனால் எதையும் முழுவதுமாக கொள்ளவும்  முடியவில்லை.
ஒதுக்கி தள்ளவும் முடியவில்லை. முறையாக அனுசரிக்கவும் முடியவில்லை.அவன் வாழ்க்கை  போலியாக இருக்கிறது.

காட்டில் படிப்பறியா வேடன் ஒரே நாளில் அனைத்தையும் மறந்து, ஊண் உறக்கத்தை விடுத்து  லக்ஷ்மி நரசிம்ம பெருமானை தேடி பிடித்துக்
காட்டுக்கொடியில்  கட்டி கொண்டு வந்து அங்கு தவம்  செய்யும் முனிவரிடம் கொண்டு நிறுத்தினான். எப்படி? அதுதான் நம்பிக்கை.

மதுராவில் உபன்யாசகர் திருடனிருந்து   தப்பிக்க ஏராளமான நகைகள் பூண்ட  கண்ணனை பற்றி அவனிடம்  வர்ணிக்க அவன் அதை உண்மை என நம்பி அவரிடம் கண்ணனை பிடித்துக் கொண்டு நிறுத்தினான்? எப்படி ?அதுதான் நம்பிக்கை.

நம்முடைய பூஜைகள் எல்லாம் பலன்களை 
எதிர்பார்த்து செய்யப்படுவது மட்டுமே 

ஆனால் ஒரு பக்தனின் இலக்கு 
இறைவனை அடைவது ஒன்று மட்டும்தான். 

அதனால்தான் அவர்கள் இறைவனை அடைந்தார்கள்.




அதற்கு எளிதான செலவில்லாத ,நம்பிக்கையான் வழி ராம நாமத்தை சொல்வதுதான் அல்லும் பகலும். சொல்லுவோம் மாயையை வெல்லுவோம்.








Sunday, July 27, 2014

உள்ளத்தில் கள்ளம் புகலாமோ ? உமா காந்தனை மறக்கலாமோ?

உள்ளத்தில் கள்ளம் புகலாமோ ?
உமா காந்தனை மறக்கலாமோ? 

உள்ளமே கோயில்
ஊனுடம்பே ஆலயம்
என்றார் ஒரு சித்தர்



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

கோயிலில் இறைவன்
அல்லவோ இருப்பான்?

அதுவும் அவனை உளமார
நினைப்பவர்களின் உள்ளம் கவர் கள்வன்
அல்லவோ அவன் ?

அவன் சிவபெருமானன்றி
வேறு யாராக இருக்க முடியும்?

ஆனால் நம் உள்ளத்தில் யார் யாரோ
பெயர் தெரியாத பேய்களுக்கெல்லாம்
இடம் கொடுத்திருக்கிறோமே
அது எப்படி சரியாகும்?

பேய்களை கணங்களாக சிவபெருமான்
வைத்திருக்கலாம். ஆனால் அது
அவனுக்கு சாத்தியப்படும்.ஆனால் நமக்கு?

பேய்களை அவன் ஆட்டி வைப்பான்.
ஆனால் அது நம்மால் அது முடியுமோ?
நிச்சயம் முடியாது.

அவைகள் அல்லவோ நம்மை ஆட்டிப்
படைத்து நம்மைப் படைத்தவனையே
மறக்கச் செய்து மாறா துன்பத்தில்
நம்மை ஆழ்த்தி விடுகின்றனவே?

ஜீவன் சவமாவதற்குள்  சிவா சிவா
என்று அவன் நாமம் பாடுவோம்.

இல்லையேல் குவா குவா என்று
அடுத்த பிறவிக்கு தயாராவதை தவிர
வேறு ஏது  கதி?

ஆனால் அது மனித பிறவி கிடைத்தால்
மட்டுமே கூடும். ஆனால் நமக்கு மரப்பொந்தில் வாழும்
பறவையோ அல்லது பூச்சியோ அல்லது
குகையில் வாழும் விலங்கோ கிடைத்தால்
அதற்கும் வழியில்லை.

நேரம் போனால் வராது .அதுபோல் அரிதாய்
கிடைத்த இப்பிறவி போனாலும் மீண்டும்
கிடைக்காது. இக்கணமே ஹரி நாமம் 
சொல்லுவோம். அவன் நாமத்தால் நம்
உள்ளத்தை  நிரப்புவோம்.



நாம் எதெல்லாம் நம்முடையது
என்று எண்ணும்  அனைத்தும் நம்மை
விட்டு விலகி செல்வதற்கு முன்.


Saturday, July 26, 2014

தில்லையில் ஆடும் கூத்தனே

தில்லையில் ஆடும் கூத்தனே






தில்லையில் ஆடும் கூத்தனே
எல்லையில்லா பெருமை கொண்டோனே

கயிலையில் உறைபவனே
ஆடல் கலையில் வல்லவனே

மயிலையில் கபாலீஸ்வரனாய்
காட்சி அளிப்பவனே

கல்லாய் இருக்கும் என் மனதில்
களி நடனம் புரிந்திடுவாய்

என் கரும வினைகள் தீர்ந்து
உன் அருட்காட்சி காண

Friday, July 25, 2014

நலம் தரும் சொல்.

நலம் தரும் சொல்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
சொல்லும் எழுத்தும் இன்றியமையாதது

ஒருவன் சொல்லும் சொல்தான் அவனை
வாழ்வின் உச்சிக்கு கொண்டுசெல்லும்

அதே நேரத்தில் ஒரு தவறாக பொருள் கொண்ட
சொல் அவனை பாதாளத்தில் தள்ளிவிடும்.

ஒரு முறை தவறிவிட்டாலும் போதும்
மீண்டும் மீள்வது கடினம்.

சொல்தான் வாழ்வின் ஒளி  எண்ணற்ற சொற்கள் இருந்தாலும்
ஒரு சொல்லுக்கு மட்டும்தான் தீமையை அழித்து நன்மைகளை
அள்ளித் தரும் ஆற்றல் உண்டு.

அது என்ன சொல்?

அந்த நலம் தரும் சொல் எது?

அதனால் என்ன பயன்கள், பலன்கள் விளையும். ?

அந்த ரகசியத்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு
சொல்லிவிட்டார் திருமங்கையாழ்வார். ஒரு பாடல் மூலம்.

ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த அந்த சொல்லை அனைவரும்
அறிந்து உய்ய வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். திருபெரும்புதூர்
ஞான வள்ளல் ஸ்ரீ ராமானுஜர்.

அவருக்கு முன்பே பக்த பிரஹலாதன் அந்த சொல்லின்
மகிமையை தன்  வாழ்வில் அனுசரித்து அதன் மகிமையை
உலகிற்கு காட்டிவிட்டான்

சிறுவனாயினும் சிந்தை  கலங்காது அந்த சொல்லை
உச்சரித்தால் அந்த சொல்லுக்குறியவனை   நேரே கண்டு
இன்புறலாம் என்று  அன்றே நமக்கு  நிரூபித்துவிட்டான்.

எவ்வளவோ பக்தர்கள் அந்த சொல்லை சொல்லி
மேன்மையடைந்தார்கள்.

அறிவில்லா மனிதரெல்லாம் அரங்கமேன்று அழைப்பாராகில் "
என்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

நாமெல்லாம் ஆறறிவு படைத்தவர்கள்   ஆயிற்றே. ?
நம்மை படைத்தவனை மறந்து நாமேதான் எல்லாம் என்ற
எண்ணம் உடையவர்கள் அல்லவா !

தீர்க்க இயலா பிறவிப் பிணிக்கு மருந்து கிடைத்தும்  அதை
உட்கொள்ளாமல் இருந்தால் வியாதி எப்படி தீரும்?

அந்த நலம் தரும் சொல்லை சொல்லி உய்ய வேண்டாமோ?

அந்த நலம் தரும் சொல் "நாராயணா என்னும் நாமம்தான்"



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

நம்மை மேல் நிலைக்கு கொண்டு செல்லும்
அந்த பாசுரம் கீழே.



பாடலின் ஒலி அலைகள்;-இணைப்பு

http://gaana.com/song/kulam-tharum-selvam-tandidum-virutham-narayana-divyanaamam

Sunday, July 20, 2014

ஆடிக்கிருத்திகை

ஆடிக்கிருத்திகை 






குப்பையைக் கிளறிப் புழு ,பூச்சிகளை
பிடித்து தின்னும் சேவலுக்கு தன்னுடைய
கொடியில் இடம் கொடுத்தான் குமரன் 

ஒயிலாய் ஆடும் மயிலை தன்
வாகனமாய் ஆக்கிக்கொண்டான்

விண்ணில் உதித்த  விடிவெள்ளியாம்
தெய்வ யானையையும் . மண்ணில்
தோன்றிய குலக்கொடியாம் குறவள்ளியை
தன்னிடம் சேர்த்துக்கொண்டான் .

சிலையாய் நிற்கின்றான் மலைமேலே
அடியவர்களுக்கு அலையாய் வரும்  துன்பங்களை
அகற்றவே காத்திருக்கின்றான்

அற்ப பொருட்களை அல்லும் பகலும்
நாடி அங்குமிங்கும் ஆடி ஓடும் மனதை
அசையாமல் ஆடல்வல்லானின்
அருங் குமரனின் பாதங்களில் நிறுத்தி
முருக முருகா என்று அவன் நாமம்
சொல்லுவோம்.

முடிவில்லாப் பிறவிகளுக்கு
முற்றுப்புள்ளி வைப்போம்
முழுமையான இன்பத்தை பெறுவோம்.


ஆடிகிருத்திகையாம்  இந்நாளில் மட்டுமல்லாது
எப்போதுமே.


ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம் தனை
சதா ஜபி என் நாவே என்ற பாடலை கேட்டு மகிழ்வும்
இணைப்பு கீழே. 


https://www.youtube.com/watch?v=bp-i4twUXUE&list=RDbp-i4twUXUE

Thursday, July 17, 2014

எல்லா பிணிகளுக்கும் ஒரே மருந்து?

எல்லா பிணிகளுக்கும் ஒரே மருந்து?





நாம் இந்த உலகில் ஒரு உடலில்
பிறந்துவிட்டோமே
அதுவே ஒரு பிணி

அதுதான் பிறவிப்பிணி

அதனுடன் இந்த உடலில் கூடவே ஒட்டிக்கொண்டு
இந்த உடலை விட்டு உயிர் நீங்கும்வரை
தங்கி நம்மை துன்புறுத்துவது பசிப்பிணி

இந்த பிறவிப்பிணியும் பசிப்பிணியும் நமக்கு
அற்பமான சில இன்பங்களை தருவதுபோல் போக்கு காட்டி
வாழ்வில் பெரும்பகுதியை நம்முடைய உழைப்பையும் சக்தியையும்
உறிஞ்சுவதோடு நம்மை மீளாத துன்பத்திலேயே எப்போதும் வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை

இதைத் தவிர நம்மை எப்போதும் தன் கட்டுப்பாட்டிலேயே
வைத்துக்கொண்டு அதன் போக்கில்
ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும்
மனதை பற்றிக்கொண்ட பிணிகள் வேறு.

அதை எத்தனை பிணிகள் பற்றிக்கொண்டிருக்கின்றன என்று
நம்மை படைத்த ப்ரம்மாவிர்க்கே தெரியாது
.

அவரே  இந்த புவியில் பலமுறை வந்து தவம் செய்து பிணிகள்
நீங்கப்பெற்று பல திருக்கோயில்களை அமைத்து
தெய்வங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். என்பது
அனைவருக்கும் தெரியும்.

இந்த உடல்தான் எல்லாம் என்று  நினைத்துக்கொண்டு
அதன் மீது பற்றுக்கொண்டு அதை பராமரிக்கும் நாம்
அதில் உண்டாகும் ஏராளமான
பிணிகளுக்கு வைத்தியம் செய்வதிலேயே
ஆயுள் கழிந்துவிடுகிறது

அப்படியும் அந்த உடல் இவ்வுலகில் தங்குவதுமில்லை.
நோயின்றி முழுவதுமாக குணமடைவதும் இல்லை.

பல பிணிகளுக்கு மருந்தே இல்லை .
பலருக்கு என்ன பிணிகள் என்று கண்டு அறிவதே
பெரும் சிக்கலாகி விடுகிறது.

கணக்கற்ற பிணிகள் ,கணக்கற்ற வைத்தியர்கள்
முடிவில் உடலில் நோய் என்ற நிலை  மாறி உடலே
நோயாகிவிடுகிறது.

எனவே எல்லாப் பிணிகளுக்கும்
ஒரே மருந்து ராம நாமம்தான்


அதை ஓதினால் போதும்
எல்லாப் பிணிகளும் ஓடிவிடும்.

இந்த மனம்  மற்றும் உடல்மீது உள்ள
பற்றுக்கள் அனைத்தும்  அற்றுப்போய்விடும்.

பல கோடி பிறவிகளில் நாம் சேர்த்து வைத்த பாவ மூட்டைகள் தீயில்
விழுந்த பஞ்சுப்பொதிகள் போல் எரிந்து சாம்பலாகிவிடும்.

நம்பிக்கையோடு சொல்லுங்கள் ராம நாமம்
நலம் பெறுங்கள்.

உங்களை கவசம் போல் காக்கும்
ராம நாமத்தின் மகிமை உணர்ந்தவன்
என்ற முறையில் மீண்டும் சொல்கின்றேன்.

ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயராம் எப்போதும்,எந்நேரமும் 

Friday, July 11, 2014

பிறவி எதற்காக?

பிறவி எதற்காக?

இந்த புவியில் பிறவி எடுப்பது எதற்காக ?

மீண்டும் இப்புவியில் பிறக்காமல் இருக்கும்
வழியை தேடுவதற்காக

ஆனால் அந்த புண்ணிய காரியத்தை
நாம் செய்கிறோமோ ?

ஏதோ கோடியில் ஒருவர்தான் அதற்கு
முயற்சிக்கிறார் .அதில் வெற்றி பெறுபவர்கள்
மிகவும் குறைவு.

அப்படி வெற்றி பெற்றவர்களை நாம்மகானாக
கொண்டாடுகிறோம்.

பல பிறவிகளில் நாம் செய்த கர்மங்களின்
விளைவுகளை அனுபவிக்கவே ,அவைகள் தீரும்வரை
தொடர்ந்து பிறந்து இன்ப துன்பங்களை அடைகிறோம்.

கர்மங்களை அனுபவித்துதான் தீரவேண்டும் என்பது விதி.
அதை தள்ளிப்போடுவதோ அதை அனுபவிக்காமல்
ஏமாற்றுவதோ வீண் வேலை.

தான் என்ற அகந்தையினாலும் , சுயநல எண்ணங்களினாலும்
பிறர் பொருட்களை அபகரித்ததினாலும், பிற உயிர்களுக்கு தீங்கு
விளைவித்ததாலும் அந்த உயிர்கள் அடைந்த இன்னல்களை நாம்
அனுபவிக்கிறோம்.

அவ்வாறு அனுபவிக்கும்போது மனம் திருந்தி, மனம் வருந்தி மீண்டும்
நாம் அதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்று மனதில்
உறுதி கொண்டு அவைகளை தவிர்த்தோமானால் நமக்கு மீண்டும் துன்பங்களும் வராது. பிறவிகளும் வராது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

செய்த தவறுகளையே ஒவ்வொரு பிறவிகளிலும் கூடுதலாக செய்து
பிறவிகளை  கூட்டி கொள்கிறோம்.

ஒரு மரம் போல் தன்னிடம் உள்ள அனைத்தையும் மற்றவர்களுக்கு
கொடுக்கும் தியாக உள்ளம் நமக்கு வரவேண்டும்

யாரையும் பழிக்கவேண்டாம்.
நாமும் பழிக்கு ஆளாகவேண்டாம்

பெரும்பொருட் செலவில்
செய்யப்படும் யாகங்களை விட
அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சிறு சிறு தியாகங்கள் நம்மை இறைவனிடம் எளிதாக கொண்டு சேர்க்கும்.

வில்லிலிருந்து புறப்படும் அம்பு
 உடனே உயிரைக் கொன்றுவிடும்.

நம் வாயிலிருந்து புறப்படும் சொல்லம்போ  மாறாத காயத்தை உள்ளத்தில் ஏற்படுத்தும். அவர் நம்மை  மன்னித்தால்தான் நாம் அதன்  விளைவிலிருந்து விடுபடமுடியும். 

பிறருக்கு விளைவிக்கும் துன்பங்களின் விளைவுகள் .பல பிறவிகள் நம்மை தொடரும்.