Saturday, November 30, 2013

இன்று யோகி ராம்சூரத்குமார் அவதார தினம்

இன்று  யோகி  ராம்சூரத்குமார்  
அவதார  தினம்  (1.12.2013)






அவனியில்  ஆன்மீக  ஞானிகள்
தோன்றும்  புண்ணிய  பூமி  பாரதமே

இந்த  மண்ணில்தான்  தெய்வங்களும் ,
தெய்வீக  புருஷர்களும் தோன்றி
மக்களிடையே  நடமாடி   இறைவனை
 அடையும்  மார்க்கத்தை
காட்டியுள்ளனர் ,
வழிகாட்டியும்  வருகின்றனர் .

அப்படி  தோன்றிய
எண்ணற்ற  மகான்களுள்
யோகி  ராம்  சூரத்குமாரும்   ஒருவர் .

அவர்  பாவங்களைப்  போக்கும்  
பாகீரதி நதியாம்    கங்கை
 நதிக்   கரையில்
முளைத்தெழுந்த  ஜோதி





அங்கிருந்து வந்து அருணையில்
வாசம்  செய்து
அருணாச்சல  ஜோதியிலே
கலந்துவிட்ட   தெய்வீக  யோகி

மனிதராய்ப்   பிறந்தவன்  ராம  நாம
ஜபத்தினால்  தெய்வத்தின்  நிலைக்கு
உயரலாம்  என்று  உலகுக்கு  காட்டிய  ஞானி

எளிமையாய்  வாழ்ந்து  கட்டினார்
ஏற்றம் பெறும் வழியை  போதித்தார்
தன்னை  அண்டி  வந்த  அனைவருக்கும் .

மனித  நேயம்   கொண்டவர்கள்
அவர்  மாண்பினை  அறிந்துகொண்டனர்
நலம்  பெற்றனர்

மனித  நேயம்  அற்ற
மாக்களோ  இரக்கமின்றி  துன்புறுத்தினர்
அவர்களையும் அன்புடன் ஏற்றுக்கொண்டார் அவர்

அனைத்தையும் பொறுமையோடு
இறைவனின்  பிரசாதமாக
ஏற்றுக்கொண்டார் .
அவர்களிடமும்  அன்பைப்  பொழிந்தார்

ஜோதி  சுடராய்  விளங்கியவர்
ஜோதியில்  கலந்தவர்
இன்றும்   வழிகாட்டுகிறார்
அல்லலுறும் மாந்தர்களுக்கு

அவர்  காட்டிய   எளிமையான  வழி
ராம  நாமம்  ஜெபிப்பதுதான்

நாமும்  சொல்லுவோம்
நாளும் சொல்வோம் .

ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்   ஜெய்  ஜெய்  ராம்

யோகிராம்  சூரத்குமார் யோகிராம்  சூரத்குமார்
யோகிராம்  சூரத்குமார்  ஜெயகுருராயா


Friday, November 29, 2013

எளிதான மார்க்கம்

எளிதான மார்க்கம்  

இறைவா நீ
வெட்ட வெளியாய் இருக்கிறாய்

வெட்ட வெளியில்
இருக்கும் அனைத்தும்
உன்னிலிருந்து தோன்றியவைதான்

அண்டங்களும் அதில் வசிக்கும்
எம்மைப் போன்ற
பிண்டங்களுக்கும் உள்ளிருந்து
அசையவைப்பதும் நீதான்

இருளாய் இருப்பவனும் நீதான்
அந்த இருள் நடுவே
ஒளியாய் தோன்றுவதும் நீதான்

ஆசைகளை தூண்டி விட்டு
அதில் சிக்க வைக்கும்
சூத்திரதாரியும் நீதான்

வலையில்  சிக்கிகொண்ட
மீன்கள்  போல ,
வேடன் விரித்த பொறியில்
சிக்கிகொண்ட  மான்  போல
சம்சாரம்  என்னும்  பொறியில்  எங்களை
எளிதாக  சிக்க வைத்து  விடுகிறாய்

மற்ற  உயிரினங்கள்   வலையில்  சிக்கி
மாண்டு  போகும்  காப்பாற்ற  நீ இருக்கிறாய்
என்பதை  அறியாது (கஜேந்திரன்  என்னும்
யானை  மட்டும்  விதிவிலக்கு ) .

ஆனால்   மனிதராய்   பிறந்த   எங்களுக்கு
நீதான் புகலிடம்  என்று  தெரிந்திருந்தும்
அதை  உணரா மூடராய் வீணே காலத்தை
 காசு தேடுவதிலும் சேர்த்து வைத்த
பொருட்களின் மீது சேர்ந்துவிட்ட
தூசைத் தட்டி வைப்பதிலும் கழித்து
வெட்டியாய் பொழுது போக்கி
முடிவில் வெட்டியான்
கையால் தீக்கு இரையாகும்
மனிதர்களைப் பார்க்கும்போது
வேதனையே மிஞ்சுகிறது. என்று
ஞானிகள் பலர் காப்பாற்ற வந்து
முடியாமல் போய்விட்டனரே!

உறவுகளோடு சேர்வதால்
இன்பமும் பிரிவதால் வரும் துன்பமும்
எத்தனை காலத்திற்குதான் அல்லல்படுவது?

உன்னை அடையும்
மார்க்கமோ கோடி கோடி

அதில்   அனைவருக்கும் எளிதான மார்க்கம்
எது  என்று தேடி கண்டுகொண்டேன்


செப்புகின்றேன் அனைவருக்கும்

எளிதான மார்க்கம் அவன் நாமத்தை
சொல்வதுதான் அல்லும் பகலும்
என்றுணர்ந்தேன்

சொல்லிக்கொண்டிருக்கிறேன்
ராம நாமம். அனைவரும்
சொல்லுங்கள் நம்பிக்கையோடு

நாம் வாழும் உடலில் உறைபவன்
உயிருக்கு உயிராய் இருப்பவன்
உற்றபோது துணை நிற்ப்பவன்
பதறும்போது  சிதறாமல் காப்பவன்
அந்த இராமபிரானே.  

பிறவிப் பிணிக்கு இதுதான் வைத்தியம்

 பிறவிப்  பிணிக்கு
 இதுதான் வைத்தியம்

விதைக்கும் எல்லா விதைகளும்
முளைப்பதில்லை

முளைத்த எல்லா விதைகளும்
கதிராகும் வரை நிலைப்பதில்லை.

கதிர் வந்தாலும் அதில் முழுவதும்
தானிய மணிகள்    இருப்பதில்லை

மணிகள் இருந்தாலும்  அனைத்தும்
சந்தைக்கு  வருவதில்லை

சந்தைக்கு வந்தாலும்
அனைத்தும் விற்ப்பதில்லை. .

விற்பதனைத்தும் மனிதனின்
வயிற்ருக்குள் போவதில்லை

இப்படியாக போய்கொண்டிருக்கும் ஒரு
விதையின்   பயணமே
 நிச்சயமற்ற  நிலையில்  உள்ளது

இத்தனைக்கும் ஒரு விதை முளைப்பதிலிருந்து மீண்டும் மண்ணுக்குள் செல்லும் வரை அது  செய்யவேண்டியதனைத்தும் அதில் ஏற்கெனவே இறைவனால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல்தான் ஒவ்வொரு உயிரின் வாழ்க்கையும் இறைவனால் ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்டு  .இவ்வுலகத்திற்கு அனுப்பப்படுகிறது.

நம்முடைய அறிவையும் ஆசைகளையும் கொண்டு அதை மாற்றியமைத்தாலும் முடிவில்  இறைவன் திட்டமிட்டபடிதான் நடக்கிறது. .

இந்த உடலில் நடக்கும் ஆச்சரியங்களை நம்மால் அறிய வெளிப்புற கருவிகளை நாம் நாட வேண்டியிருகிறது.
அதனால் முழுமையாக எதையும்
அறிய இயலாது என்பதே உண்மை.
இன்னும் அறியவேண்டியவை
ஆயிரமாயிரம் உள்ளது.

அனைத்தும் கடவுளின்  செயல்

இருந்தும் அகந்தையினால்
இதை மனிதர்கள்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

மனிதனின் வாழ்க்கையும் இப்படித்தான்
எதுவும் அவன் கையில் இல்லை

மருத்துவத்திற்கு பல லட்சம் செலவு செய்து
படிக்கிறான்.
முடிவில் நாடகத்தில் நடிக்க வந்துவிடுகிறான்

பல்லாயிரம் பெண்கள் பல லட்சங்களை
கொட்டி படிக்கிறார்கள். முடிவில்
திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில்
மூழ்கிவிடுகிறார்கள்.

இப்படிதான் ஒவ்வொருவரும்
நினைப்பது ஒன்று
சொல்வது ஒன்று
செய்வது ஒன்று என்று இருக்கிறார்கள்.

இப்படித்தான் வாழ்நாள் முழுவதும்
உடலைக் கவனிக்காது குடலை நிரப்புகிறார்கள்.
சுடலைக்குப் போகும்வரை
நோயினால்துன்புற்று மடிகிறார்கள்.

சிலர் ஏமாற்றியே  பிழைக்கிறார்கள்
பலர் ஏமாறியே  வாழ்க்கை
முழுவதும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

பலர் பிறருக்காக உழைத்தே
ஒன்றுக்கும் உதவாமல்
முதுமையில் தவிக்கிறார்கள்.

சிலர் பேசியே பிழைப்பை நடத்துகிறார்கள்.

சிலர் பேசினாலே நாடு இரண்டாகிறது.
வீடு ரெண்டாகிறது.நாசம் விளைகிறது.

பலர் பணம் பணம் என்று
பிணமாகும்வரை.  அலைகிறார்கள்.

இரு நாட்டின் தலைவர்களின்
தனிப்பட்ட விரோதம் போராக மாறி
கோடிக்கணக்கான மனிதர்கள் போரிட்டு
வீணே மாள்கின்றனர்.

ஒரு    சிலர் கடவுள் இல்லை
என்று பிதற்றித் திரிகிறார்கள்

சிலர் கடவுள்  இருக்கிறார்
என்று அரற்றி திரிகிறார்கள் .

கடவுளைக் காணாதவர்கள்
அவனை கண்டவர்கள்போல் புளுகியே
ஒருகூட்டதைத் சேர்த்துக்கொண்டு
அங்கும் இங்கும் திரிகிறார்கள்.

கடவுளைகல்லில்  தேடுகிறார்கள்.
மலையில் தேடுகிறார்கள்
மனிதர்களிடம்   தேடுகிறார்கள்
மதங்களிடம் தேடுகிறார்கள்.

ஆனால் அவன் அவ்வளவு எளிதாக
 யாருக்கும் கிடைப்பதில்லை.

அவன் தேடுபவர்களின் உள்ளத்தில்
ஒளிந்துகொண்டுவிட்டான்.

அவன் நாமத்தை இடைவிடாது


சொல்லிவந்தால்  மட்டும்தான்  அகப்படுவான் .
என்பதை  புரிந்துகொள்ளுங்கள் .

சொல்லுங்கள்  ராம நாமம் .

இப்பிறவியில்  இல்லாவிட்டாலும்
என்றாவது  ஒரு  பிறவியில்
அவனை அடைந்துவிடலாம் .

இது  சத்தியம்  நித்தியம்
பிறவிப்  பிணிக்கு  இதுதான் வைத்தியம்.
என்று சொல்கிறது
ஒரு  ராம நாம பயித்தியம். 

Thursday, November 28, 2013

எதற்காகப் பிறந்தேன்?


எதற்காகப் பிறந்தேன்?

எதற்காகப் பிறந்தேன்?

இவ்வுலகில் கணக்கற்ற கோடி
ஜீவராசிகள் இருக்கமுற்பிறவியில் 
செய்த புண்ணியங்களின் பயனாய்  
மனிதப் பிறவி  இறைவன்
எதற்காக அளித்தான்?


சுவர்க்கத்தில்  தேவர்களாய் பிறந்து
சுக போகத்தில் உழன்று  இறைவா !
உன்னை  மறந்து  பாழாகாமல்
எதற்காகப்  பிறந்தேன் மானிடனாய் ?

ஆன்மீக  ஞானமில்லாத 
காட்டுமிராண்டிகள் 
வாழும்  நாட்டில்  பிறக்காமல்  
ஆன்மீகமே உயிர்  மூச்சாய்க்  கொண்டு  
வாழும்  புனிதர்கள் வாசம் செய்யும்.
புண்ணிய பூமியாம் பாரதத்தில் 
எதற்காகப் பிறந்தேன்? 

தெய்வங்கள் போட்டி போட்டுக் கொண்டு
இப்புனித மண்ணில்
அவதாரம் செய்து ஞானத்தை
போதித்த மண்ணில்
நான் எதற்காகப் பிறந்தேன் ?

இவ்வுலக மாயையில் சிக்கி மூழ்கி
தன்னை மறந்து ,தான் யார்
என்பதையே  அறியாது
அலையும்  மூடர்களுடம்  கூடி
அரிதாய் கிடைத்த
பிறவியை  வீணடிப்பதற்கா
இவ்வுலகில் பிறந்தேன்?

எண்ணற்ற பிறவிகளை
எடுத்து ஓய்ந்து விட்டேன்

இனி வரும் பிறவியிலாவது
என்னை படைத்து  காக்கும்
எம்பெருமானை
எண்ணி எண்ணி மகிழ்ந்து
அவன் பெருமை பேசி
கிடைக்கும் பிறவியை
புனிதமாகி கொள்ள
விழைந்தேன்

ஆனால் 
அந்தோ பரிதாபம்!

இவ்வுலகில் பிறந்தவுடன்
சுற்றோரும் மற்றோரும்
உன்னை சிந்திக்க விடாமல்
செய்து விட்டனரே!

இவ்வுலக சுற்றமும், 
சேர்க்கும் பொருட்களும், 
வந்து போகும் இன்பமும் துன்பமும் 
இகழும் புகழும் நிலையில்லாதவை
என்பதை அறிந்துகொண்டேன்.

இனியும் தாமதித்தால்
இவ்வாழ்வு  முடிந்துவிடும்
மாளா   இருள்  சூழ்ந்துவிடும்
என்பதை உணர்ந்தேன்

உன்  நாமம் சொல்லத்
தொடங்கிவிட்டேன்





ராமா !   ராமா! 
இனி என் சிந்தையெல்லாம் 
நீதான் இருப்பாய் 

நான் நன்றாய் அறிந்துகொண்டேன்
புரிந்துகொண்டேன்,தெளிவுபெற்றேன்

ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்.

Wednesday, November 27, 2013

யார் உண்மைக் கண்ணா ?

யார் உண்மைக் கண்ணா ?





விவரங்களுக்கு கீழ்கண்ட இணைப்பைக் காணுங்கள் 


பத்மாவதி தாயே சரணம்

பத்மாவதி   தாயே   சரணம்  

ஹரியின்  இதயத்திற்கு  
அருகில் வாசம் செய்யும்   ஹரிணியே

அடியவர்களின்   கூக்குரலை
அக்கறையோடு  கேட்டு
ஆவன  செய்யும்  நாரணியே

இல்லற   வாழ்வில்  இல்லை
என்ற சொல்லை இல்லாது செய்து
இனிய அறம் வளர்க்க உதவும்  இலக்குமியே

இல்லத்தில் அஷ்ட லக்ஷ்மியாய்
வந்தமர்ந்து  இணையில்லா  நலன்களை  தந்து
இன்ப வாழ்வைத் தரும் ஈடு  இணையில்லா
கற்பகத்தருவே  

ஏற்றிய   தீபத்தில்  சுடராய்  ஒளி
வீசி  அஞ்ஞான   இருளை
ஓட்டும் தீப லக்ஷ்மியே

அறிவாய்  நிறைந்து  தெளிவாய்
சிந்தித்து   வெற்றியுடன்
செயல்பட  வைக்கும்  வித்யா லக்ஷ்மியே

பயம் போக்கி அபயம் தந்து
அமைதியும் ஆனந்தமும்
தரும் வீர லக்ஷ்மியே

எட்டெழுத்து  மந்திரத்தை  கொண்டு
எட்டா  பொருளையும்
எட்டும்படி  செய்பவளே

எண்ணமெல்லாம்  நிறைந்து
வண்ணம்போல்  வளமான
வாழ்வு  அருளுபவளே .

திருவேங்கடத்தில்  நின்றருளும்
வெங்கடேசனின்  திருவடியில்
கோயில்  கொண்டு  வந்து
வணங்கும் அடியவர்களுக்கு
கேட்ட  வரங்களையெல்லாம்
தந்து வாழ்விப்பவளே

விண்ணுக்கும்  மண்ணுக்கும்
பாலமாய்  இருப்பவளே

நீயே  கதி  என்று
சரணடைவோருக்கு  
பலமாய்   விளங்குபவளே   .

பத்மாவதி   தாயே   சரணம்


 


மதியிலே உன்னை நினைந்து
 மலரிட்டு  வணங்கினேன்  .

அவனியில் அனைத்து  உயிர்களும்
துன்பமின்றி இன்பமாக வாழ
அருள் செய்வாயே.  

Tuesday, November 26, 2013

தண்டமும் கோதண்டமும்

தண்டமும் கோதண்டமும் 

தண்டம்  என்ற சொல்லை
ஒருவரை மட்டம் தட்டுவதற்கு
அனைவரும்
பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் உண்மையில்  தண்டம்
என்ற சொல் நம்மை ஒரு
உயர்ந்த நிலைக்கு இட்டு செல்லும்
சாதனம் ஆகும் என்பதை
யாரும் அறிந்துகொள்ள வில்லை

முருகன் கையில் தண்டத்தைதான்
ஏந்தி அருள் செய்கின்றான்






அதனால் தண்டாயுதபாணி
என்றழைக்கப் படுகின்றான்

ஸ்ரீராமனோ கோ(கோக்களை -
ஜீவாத்மாக்களை காப்பதற்காக )
கோதண்டத்தை ஏந்தியுள்ளான்
அதனால் கோதண்டபாணி
என்று   அழைக்கப்படுகிறான்



பலுகெ பங்காரமயனா கோதண்டபாணி
என்று அன்போடு இராமனை
ராமதாசர்  அழைக்கின்றார்

சக்திகளைப் பெறவும் சித்திகளைப் பெறவும்
பிறவி பிணி நீங்கி மரணமில்லா வாழ்வு பெற
தவம் செய்யவும் தண்டகாரண்யம்
சென்றனர் அந்நாளில்

தண்டம் என்பது
ஒரு காக்கும்  கருவி
காக்கும் உபாயம் தேடும் இடம்

பல  தெய்வங்கள்  அதை
கையில் ஏந்திக்கொண்டு
வணங்கும் பக்தர்களுக்கு வரும்
துன்பங்களையும்
எதிரிகளையும் துவம்சம் செய்கின்றன



 ரிஷிகளும் முனிவர்களும் தண்டம் எனும்
கருவியை தாங்கிகொண்டுதான்
தவம் இயற்றுகிறார்கள்.




அவர்களுடனேயே அதை   கையில் ஏந்திக்கொண்டு
அவர்களை வணங்குபவர்களுக்கு
அருளாசி வழங்குகிறார்கள்.



இறைவனை சரணாகதி செய்யும் போது
ஒரு கோல்   தரையில்
கிடப்பதுபோல்  தரையில்
விழுந்து  வணங்கவேண்டும் .

எப்படி  ஒரு கோல்  யார்  உதவியும்  இன்றி
 நகராமல்  கிடப்பதுபோல்
நாமும்  நம்  அகந்தையை  முற்றிலும்
ஒழிக்கும்விதமாக  சாஷ்டாங்கமாக
நமஸ்காரம்  இறைவனுக்கு  செய்யவேண்டும்
என்பதை உணர்ந்து  இனிமேலாவது
 யாரையும்  தண்டம்  என்று
ஏளனம்   செய்வதை  அனைவரும்
தவிர்க்கவேண்டும்

இதைப்போல்தான்
குருவையும்  வணங்கவேண்டும்

ஏனென்றால்   சத்குருவின்
வடிவில்தான்  இறைவன்
அருள் செய்கின்றான்.



Monday, November 25, 2013

காஞ்சி வரதப்பன்

காஞ்சி வரதப்பன் 




பக்தர்களை  வா வா என்றழைத்து
வரம்பின்றி வரங்களை
அள்ளித் தரும் வள்ளல் அவன்

அத்திகிரி மலைமேல்
நின்றுகொண்டு ஆண்டாண்டு காலமாய்
அடியவர்களை அன்போடு காத்து வரும்
நேயன் அவன்

தன்னை படைத்த நாரணனுக்கு
படைப்பு தொழிலை செய்யும் பிரம்மன்
வேள்வி செய்து கிடைத்த
அழகு மூர்த்தி அவன் .

ஆண்டு முழுவதும் அழகாக
அலங்காரம் கொண்டு பவனி வருவான்
பக்தியோடு பணிவோரின் அகங்காரம் அகற்றிடுவான்

யார் அவன்?
அவன்தான் காஞ்சியிலே
குடி கொண்டிருக்கும்
தேவாதிராஜன், அத்திகிரி  அருளாளன்.
பிரம்மனும் ஆராதித்த பேரருளாளன்.
அடியவர்களோடு நேரில் உரையாடிய
வரதராஜபெருமான்


"மாதவா! மதுசூதனா!":


"மாதவா! மதுசூதனா!": 






கரந்தை ஜெயக்குமார் has left a new comment on your post "மாதவா! மதுசூதனா!": 

நிலையில்லா
இவ்வுடலின்
உள்ளத்தால்தானே
உலகில்
எங்கெங்கும் பிரச்சனைகள்
நன்றி ஐயா


உள்ளத்தில் உள்ளே
கள்ளம் புகுவதை
தடுத்தால் போதும்

உள்ளதைக் கொண்டு
களித்து  வாழும் மனம் கொள்ள
கற்றுக் கொண்டால் போதும்

அனைத்து உயிர்களிடமும்
அன்பு செய்ய
பழகிக் கொண்டால் போதும்

எல்லாமும் தனக்கென்று எண்ணி
வாழாமல் இருப்பதும் இருப்பதை
அனைவரிடமும் பகிர்ந்துகொண்டு
வாழ தெரிந்துகொண்டால் போதும்

இவ்வுலகமே
உன்னைப் போற்றும்.

உன் இதயத்தில் அமைதி
ஆட்சி  செய்யும்

அமைதியை தேடி
எங்கும் அலைய வேண்டாம்

பிறரின் அமைதியைக் கெடுக்காமல்
இருந்தால் போதும் .உன் உள்ளத்தில்
ஆழத்தில் உள்ள  அமைதி
மண்ணில் உள்ள  நீரூற்றுப்போல்
தானே சுரந்து பெருகி வரும்.
 

இந்த உலக வாழ்வு
இனிக்க இவை போதுமையா
கரந்தையாரே!

மாதவா! மதுசூதனா!

மாதவா!
மதுசூதனா!




யார் மா தவம்
செய்தார்கள்?

நீ யாதவனாய்
இப்பூமியில் அவதரிக்க

அவருக்கு அனந்த
கோடி வணக்கங்கள்

ஆயிரமாயிரம் ஆண்டுகள்
கடந்தபின்னும்
இன்னும் உன் சரிதம்
தெவிட்டாத தேனமுதாய்
இனிக்கிறதே!

உன் லீலைகள் உள்ளத்தில்
இன்பத் தேனைக் சுரக்கிறதே?

அடியவர்களைக்  கண்ணிமைபோல்
காப்பதனால்  கண்ணன்
என்று  பேர்  பெற்றாயோ ?

அலைபாயும்  மனதை  அடக்கும்
உபாயம்  சிலை  வடிவாய்  நீ நிற்கும்
மோகன  வடிவத்தை வணங்குவதே!

உன்னை அடையும் வழியை
எளிதாக்கி தந்தாய் கீதை வடிவிலே!

பக்தி வசப்பட்டு உன்னிடம் தன்னை
இழந்த கோபியரை இவ்வுலகோர்
குறை காணிடினும் குறை காணாது
நிறைவான வாழ்வு அளித்தவனே!

காண்பவை யாவினும் உன்னோடு
தொடர்புடையவை
அன்றோ இவ்வுலகில்

என்றென்றும் உன் நாமம்
என் நினைவில்
நிலைத்து நிற்கட்டும்.

நிலையில்லா இவ்வுடலின்
உள்ளத்தில் உன் திருவடிவம்
ஒளியாய் நின்று
அருள் செய்யட்டும்.

ராதே கிருஷ்ணா!

Sunday, November 24, 2013

எங்கும் பசுமை

எங்கும்  பசுமை 

எங்கும்  பசுமை
இயற்கையோடு இயைந்த வாழ்வு



அதன் நடுவே
குழலூதும் கண்ணன்

ஆநினம் அமைதியாய்
படுத்து கிடக்கிறது
கோகுல கண்ணனின் குழலின்
நாத இனிமையில்  லயித்து

நாரைகளும், மயில்களும்
நளினத்தோடு நடை பயில்கின்றன

மான்கள் மயங்கி நிற்கின்றன
சிலைபோல  இசை வரும்
திசையை நோக்கி

கண்களுக்கு
இனிமையான காட்சி.

நம் எண்ணமெல்லாம்
கண்ணன் நாமத்தால்
நிறையட்டும்.

அனைவரின் வாழ்விலும்
இன்பம் பெருகட்டும். 

Saturday, November 23, 2013

அழகிய சிங்கனே அருள் தந்திடுவாய்

அழகிய சிங்கனே அருள் தந்திடுவாய் 







நலம் தரும் சொல் நாராயணா
என்று அறிந்துகொண்டான்
ஒரு சிறுவன்

அதுவே அனைவரையும் காக்கும்
என்று தன் தந்தைக்கு உபதேசம்
செய்தான்.

பிரணவ மந்திரத்தை தன்  தந்தை
பரமசிவனுக்கு உபதேசம் செய்த
சுவாமிநாதனைப்   போல்.

ஆதிசிவனோ அகந்தையற்றவன்
அன்பு   நிறைந்தவன்
ஏற்றுக்கொண்டான்

ஆனால்  இவன்  தந்தையோ
ஆணவம்  மிகுந்தவன்

அதனால்  எதையும்  ஆராய்ந்து
உண்மையை உணரும் தன்மையற்றவன்

வெகுண்டெழுந்து  தன்  மகன்  எனவும்  பாராது
கொல்ல   துணிந்தான் பல முறை

காக்கும் திருமால் காத்து நின்றான்
ஒவ்வொரு முறையும் இவன் திருந்துவான்
தன் அடாத செயலுக்கு வருந்துவான்
என்று எண்ணியே

முடிவில் அவன் விருப்பப் படியே
அவன் காட்டிய தூணிலேயே  தோன்றினான்
சிங்கமுகமும் மனித   உடலும்   கொண்டு

மனித  உடல்  கொண்டு  விலங்கு  போல்
நடந்துகொண்ட  அரக்கனை  அழித்தொழித்தான்

அழகிய சிங்கனை
அனுதினமும் பணிவோம்

அகமும் முகமும் மலர
மலர்கொண்டு பூசிப்போம்

ஆனந்த வாழ்வும்
அழியா பதமும் பெறுவோம்.

அழகிய சிங்கனே
அருள் தந்திடுவாய் 

Thursday, November 21, 2013

குயிலே குயிலே நீ யாரோ?

குயிலே குயிலே நீ யாரோ?


நீதானோ அந்தக் குயில்?




இசைக் குயில், ஞானக் குயில், மோனக் குயில்,
கானக்  குயில் என்று பல இனிமைகளை
குயிலோடு தொடர்பு படுத்தி பேசுவது தமிழ் மரபு.

குயிலோசையை வெல்லும்
கண்ணனின் குழலோசை என்ற பாடல் பிரசித்தம்

சோகத்தையும் மகிழ்ச்சியையும்
வெளிப்படுத்தும் குயிலின் குரல்
வெளிப்படாத திரைப்படபாடல்கள்
இல்லை எனலாம்.

குயிலின் வடிவமும் அழகு
அதன்   குரலும்   அழகு

அதிகாலையில்  அது  க்ரீசிட்டுக்   கொண்டு
பறந்து  சென்று  அனைவரையும் துயிலெழுப்புவது அழகு.

மார்கழி மாத பனி சூழ்ந்த இரவில்
அது எழுப்பும் இனிமையும் சோகமும் கலந்த
 அந்த குரல் கேட்பவர் மனங்களை பாதிக்காமல் விடாது.

குயிலைப்பாடாத பற்றி பாடாத
கவிஞர்களே கிடையாது. பாரதியார் குயில் பாட்டு
என்று ஒரு அத்தியாயமே பாடி விட்டார்.

ஆண் குயிலும் பெண் குயிலும் மாறி மாறி இனிமையாக
குரல் எழுப்பி அங்குமிங்கும் பாடிக்கொண்டு
பறந்து செல்வதை காண்பது
இனிமையான அனுபவம்.

காகங்களுக்கும் குயில்களுக்கும்  என்றும் பகை .
காகம் குயிலை விரட்டுவதும் அது லாவகமாக
தப்பி மரக் கிளைகளுக்கும் புகுந்து கொள்வதும்
பார்ப்பதற்கு அருமையாக  இருக்கும்

இவ்வளவு அருமையாக குரலை  தனக்குள் வைத்திருக்கும்
குயிலுக்கு இருக்க கூடு கிடையாது.

அது தன் முட்டைகளை காகத்தின் கூட்டில் இட்டுவிடும்.
 காகம் அதை குஞ்சு பொரித்து விடும்.

இறைவனின் அற்புதம் பாருங்கள் !
அந்த குஞ்சுகள் தனக்கு பறக்கும் சக்தி வரும் வரைக்கும்
வாய் திறந்து குரல் எழுப்பாது.

 பறந்து  வெளி வரும்போதுதான்
குயில்போல்  ஒலிழுப்பும். .

அப்போதும் அந்த காகத்திற்கு
அது குயில் என்று தெரியாமல்
அதக்கு கா கா என்றுகூவப்பயிற்சி  கொடுக்கும்.
அந்த காட்சி பார்ப்பதற்கு  அழகாக  இருக்கும் .

கு  என்றால்  குமரன் ,குயிலி,
குருவாயூரப்பன் என்று இறைவன் பெயர்களை குறிக்கும்

ல் என்றால் இறைவன் இருக்கும் இடம் வீடு

குயிலின் உள்  இறைவன் இருக்கின்றான் ,

அதனால்தான் இருளில் ஒளி  வடிவான
இறைவன் வெளிப்படுவதைப் போல்.
கருமையான குயிலின் வாயிலிருந்து
இனிமையாக குரலாய் இறைவன் ஒலிக்கின்றான்.

இவன் வீட்டெதிரே குயில் ஒன்று
ஒய்யாரமாக அமர்ந்திருந்தது.
 படம் பிடித்தேன்.

ஒரு குயில் மற்றொரு குயிலுக்கு 
மந்திர   உபதேசம்  செய்கிறது .

என்ன  மந்திரம் ?

ராம மந்திரம்தான்.

அதுதானே நம்மையெல்லாம்
கடைதேற்றும்  மந்திரம். 

Sunday, November 17, 2013

Sunday, November 10, 2013

குருவாயூர் , குருவாயூரப்பன் தத்துவம்

குருவாயூர் ,
குருவாயூரப்பன்  தத்துவம் 


அப்பன் யார்?

அப்பன் என்றால்
இறைவன்தான்
அப்பனும் அவன்தான்
அம்மையும் அவன்தான்
அதனால் அவன் அம்மையப்பன்
என்றழைக்கப்படுகிறான்.





அப்பன் என்றால்
குருவாயூரப்பன் தான்

ஏன் அவனுக்கு குருவாயூரப்பன்
என்று பெயர் வந்தது?

அந்த கோயிலில் நின்ற
கோலத்தில் அருள்பவன்
கண்ணன் என்னும்
கருந்தெய்வம்

குழந்தையாய்
வேணுகோபாலனாய்
காட்சி தருகிறான்.

கண்ணன் அவதாரம்
நிறைவு பெற்றதும்  
த்வாரகை கடலில் மூழ்கியது.

அங்கு பூஜிக்கப்பட்ட கண்ணனின்
வடிவம் கடலில் மூழ்காமல்
மிதந்து கொண்டிருந்தது.

அதை பார்த்த குருபகவானும்
வாயு பகவானும் இயற்கை எழில் சூழ்ந்த
கேரள  கடற்கரையின்
அழகைக் கண்டு அங்கு
பிரதிஷ்டை செய்தனர்.

குருவும் வாயுவும் சேர்ந்து கண்ணனை
பிரதிஷ்டை செய்தமையால் அந்த தலம்
குருவாயூர் என மருவியது.

எல்லா உயிர்க்கும் அப்பனாய்
விளங்கும் கண்ணனை
ஊர் பெயரை இணைத்து
குருவாயூரப்பன் என்று அன்போடு
பக்தர்களால் வணங்கப்படுகிறான்.

எவ்வளவோ பேர்கள் இருக்க
குருவும் வாயுவும் மட்டும் சேர்ந்து
இந்த கோயிலை உண்டாக்கவேண்டும்?

இறைவனை அறிய, அடைய
அவனை பற்றிய அறிவு,
ஞானம் வேண்டும்.

குருவின் அருளின்றி
இறைவன் அருள் கிட்டாது.

இரண்டையும் அடைய ஒரு உயிருக்கு
மனம், உடல் வேண்டும்.
அந்த இரண்டும் இயங்க வாயு
என்னும் பிராணன் வேண்டும்.

இந்த இரண்டு பேரும்  இருந்தால்தான்
நம்மை படைத்த அப்பனாகிய
கண்ணனை நாம் அறியமுடியும்.

குருவாயூர் ,குருவாயூரப்பன்  தத்துவம் இதுதான்

Saturday, November 9, 2013

கார்த்திகேய ,காங்கேய ,கௌரி தனைய !

கார்த்திகேய ,காங்கேய ,கௌரி தனைய !




பரமானந்த மூர்த்தியான
கார்த்திகேயனுக்கு நமஸ்காரம்

என்னை மகா பாபத்திலிருந்து
விடுதலை செய்வாயாக!

என் கோரிக்கைகளை ஏற்று
அருள்வாயாக !

ஆறுமுகா !
தனம், புத்திரன்,வித்யை  கொடு !

ஹே ! மகாசேனாதிபதியே !

உன் கிருபையால் சத் புத்ர  சம்பத்தும்
தனமும் அடைந்து வாழ்வேன்.

பாபநாசன் சிவன் அவர்கள் இயற்றியுள்ள
ரம்யமான கீர்த்தனை.
ஹனுமத் தோடி ராகத்தில்
அமைந்துள்ளது

உன்னி கிருஷ்ணன் அவர்களின்
குரலில் கேட்டு மகிழுங்கள்

http://www.youtube.com/watch?v=9ohR7O-PCVY

நம்மை கடைதேற்றும் எளிதான வழி.

நம்மை 
கடைதேற்றும் எளிதான வழி. 

எல்லாம் இருந்தும் ?

எல்லாம் இருந்தும்
அது இல்லையேல்
எல்லாம் வீண்

அது என்ன ?



சொல்கிறார் ஆதி சங்கரர் பகவத் பாதாள்
குருவஷ்டகம் என்ற
அற்புதமான ஸ்தோத்திரத்தில்

ஒருவனுக்கு அனைவரும் மெச்சக்கூடிய
அழகிய வடிவம் இருக்கலாம்.

ரதி போன்ற அழகிய மனைவி
வாய்த்திருக்கலாம்

உயர்ந்த கீர்த்தி ,
பெருமை கிடைத்திருக்கலாம்

இமயமலை அளவிற்கு
செல்வங்கள் குவிந்திருக்கலாம்.

இவை எல்லாம் இருந்தாலும்
மனதில் சத்குருவின் பாதாரவிந்தங்களில்
பக்தி இல்லையேல் இவையெல்லாம்
வீண்.. வீண்.. வீண். என்கிறார்

உலகத்தில் பலர் இவர்களை
போற்றி வணங்கினாலும் உலகெங்கும்
இவருக்கு மதிப்பிருந்தாலும் .
மனதில் சத்குருவின் பாதாரவிந்தங்களில்
பக்தி இல்லையேல் இவையெல்லாம்
வீண்.. வீண்.. வீண். என்கிறார்

உலகின் சக்ரவர்த்தியாக இருந்தாலும்
பலர் இவர் பாதத்தில் விழுந்து வணங்கினாலும்
மனதில் சத்குருவின் பாதாரவிந்தங்களில்
பக்தி இல்லையேல் இவையெல்லாம்
வீண்.. வீண்.. வீண். என்கிறார்

இவ்வுலகத்தில் இருக்கும் செல்வங்களும்,
மதிப்பும் நாம் தரிக்கும் இந்த உடலும்
நாம் கண்டுகொண்டிருக்கும்போதே
கண  நேரத்தில் காணாமல்
மறைந்துவிடும்

இவைகள் நிலையற்றவை.
எனவே இவைகளையே எப்போதும்
நினைத்துக்கொண்டு.
நிலையான பரமாத்மாவை மறந்துவிட்டு
மாயையில் மூழ்கி மாண்டுவிடக்கூடாது. .

எண்ணற்ற  வடிவங்களில் தோன்றும்
பரமாத்மாவின் ரூபங்கள் நம்மை
மாய வலையில் சிக்க வைத்துவிடும்.

தத்துவங்கள் நம்மைகுழப்பி
தடுமாற செய்துவிடும்.

ஆனால் என்றும் மாறாது
நம் முன்னே காட்சி தந்து
நம்மை ஆட்கொள்ளும்.
குருவின் ஸ்வரூபம் 
வணங்குவதற்கு. எளிது.
தியானிப்பதற்கு எளிது.

மும்மூர்த்திகளின்
ஒன்றான வடிவம் சத்குரு



அவர் பாதாரவிந்தங்களில் பணிந்து
அகந்தையை விட்டு ஆசா பாசங்களில்
அகப்பட்டுக்கொண்டு
வழி தவறி போகாமல்
 நம்மை காத்துக்கொள்ளவேண்டும்.

ராம நாமத்தை எப்போதும் 
உச்சரிக்க வேண்டும்.





குருவின் வடிவத்தை
தியானம் செய்ய வேண்டும்.




அதுவே நம்மை
கடைதேற்றும் எளிதான வழி.