Monday, November 4, 2013

தீபாவளி பண்டிகையின் உண்மை தத்துவம்

தீபாவளி பண்டிகையின் உண்மை தத்துவம் 

கண்ணால்  காண்பதும் பொய்
உண்மையான தீபாவளி எது?

நரகாசுரன் மறைந்த தினத்தை 
மகிழ்ச்சியாக தீபாவளியாக
கொண்டாடுகிறோம் 

பட்டாசு வெடிப்பது மட்டுமா


புத்தாடை உடுத்துவது மட்டுமா?
இனிப்புகள் உண்பது மட்டுமா?


நீங்கள் வழங்கும் பரிசுகள் எல்லாம் பொய்
நீங்கள் அளிக்கும் இனிப்புகள் எல்லாம் பொய்

கண்கள் அவைகளை
காண  மட்டும்தான் செய்யும் 
ஆனால் அதற்க்கு 
அதன் சுவை தெரியாது

உண்மையில் நரன் என்றால் மனிதர்கள்தான். 
நரகம் என்றால் நாம் வாழும் பூமிதான்  

நம் மனதில் உள்ள தீய குணங்களை அழிப்பதுதான் நரகாசுரவதம்.
அதற்க்கு இறைவனாகிய  கண்ணனை நாம் சிந்திக்கவேண்டும்.
வணங்க வேண்டும். அனைவரின்  நலனை நாடி
அன்போடு வாழவேண்டும் என்பதுதான். பண்டிகையின் 
உண்மையான தத்துவம். 


ஆனால் பொய்களைப் பேசியே
போலிகளை நோக்கி ஓடியே
வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருக்கிறோம் 

உள்ளுக்குள் இருக்கும் மெய்யை
நாட மறுக்கிறது மனம்

அதை பற்றி சிந்திக்க இடமில்லை
ஏனென்றால் மனம் முழுவதும்
பொய்யும் போலியும் 
ஆக்கிரமித்துக்கொண்டு
அட்டகாசம் செய்துகொண்டிருக்கின்றன.

ஆன்மா இந்த உடலில்  வசிக்க
உள்ளத்தில் இடம் கொடுத்தான்
ஆண்டவன் 

நாமோ  அதன் மீது இந்த
உலக குப்பைகளை போட்டு மூடிவிட்டோம்.

பிறவி பிணியை தீர்க்க ராம ரசத்தை 
சுவைத்துக் குடிக்க நாவைக் கொடுத்தான்

நாமோ அந்த நாவை குடலுக்கு செல்லும்
உணவை ருசிக்கத்தான் பயன்படுத்துகிறோம்.

செவியில் செவிடாக்கும் இசையைத் தான்
கேட்கிறோமே அன்றி
நாம் வாழும் பூதலத்தை மீட்டு தந்த
பன்றி என்று பாமரர்களால் அழைக்கப்படும்
வராகப் பெருமானின் சரிதத்தை கேட்க மறுக்கிறோம்.

கண்ணனின் வடிவைக் கண்டு
காலனை வெல்லும் வழியறிவதை விட்டு
காமக் களியாட்டங்களில் மூழ்கி மீளா
நரகத்திற்கு சென்றுகொண்டிருக்கிறோம்.

உள்ளத்தில் உறையும் உத்தமனை
அறிவதற்கு மனமில்லை

ஊராரின் அந்தரங்கங்களை அறிவதற்கு
அல்லும் பகலும் அரிதான் நேரத்தை
ஆயுள் முழுவதும் வீணடிக்கிறோம்.

உண்மையாய் விளங்கும் இறைவனை
உணராது மற்றோர் முன் நல்லவர்போல்
வல்லவர்போல் நல்லவர்போல்
நடித்துக் கொண்டிருக்கிறம்.

அன்னையிடமிருந்து குழந்தையாய்
வெளிவந்தோம். அழகிய மழலையாய் 

அனைவரின்  ஆசியுடன்
அழகாய் வளந்தோம். வளர்ந்தபின்
ஆசைவயப்பட்டோம். 
அனைத்தையும் இழந்தோம்.

அன்பில்லை  பண்பில்லை 
அகப்பட்டுக்கொண்டோம்
ஆசைகள் என்னும் மாய வலையில்

வலையில் மாட்டிக்கொண்ட நாம்
இன்று இணையம் என்னும் வலையில்
இணைத்துக்கொண்டோம் 
பிணைக்கைதிகளாய் 
ஆகிவிட்டோம்

விடுபட இயலும் வழியறியாது
திகைத்து நிற்கின்றோம் 

மேஜையில் நம் எதிரில் நின்று 
நம்மை மாயையில் ஆழ்த்திய அந்த அரக்கன் 
இன்று நம் கையிலேயே ஒட்டிகொண்டான்

அல்லும் பகலும் நம்மை 
அவன் அடிமையாக்கி கொண்டான்.
நம்மை படைத்த இறைவனையே 
மறக்கச் செய்தான்.   

அன்னையில் வயிற்றிலிருந்து 
அழகியமழலையாய் வெளிவந்தோம் 
ஆனால் அழுகும் சடலமாக அல்லவா 
பூமித்தாயின் வயிற்றுக்குள் செல்கின்றோம் ? 

அழகிய இந்த அவனிக்கு வந்தபோது 
நாம் அழுவதை கண்டு ரசித்தனர் 
நம்ம சுற்றிநின்ற  உறவுகள்.
ஆனால் இந்த உலகத்தை விட்டு போகும்போது 
அழுது புலம்புகின்றன அதே உறவுகள்.  இறைவா உன் நாமம் ஒன்றே கதி
என்று இருந்தால் போதும்
இன்றே நம்மை விடுவிப்பான் இந்த 
மாய வலையிலிருந்து 
இம்மையிலும் மறுமையிலும்
நம்மோடு இருந்து நம்மை காக்கும்
கண்ணன்.என்னும் தெய்வம் 

3 comments:

 1. அருமை. அனைத்துமே அருமை. ஒவ்வொன்றாக வருகிறேன்.

  அதற்குள் நீங்க ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளை தரிஸிக்கப்போங்கோ. நல்லதா நாலு வார்த்தை எழுதுங்கோ. இன்று 2 பதிவுகள் உங்களுக்காகவே வெளியிடப்பட்டுள்ளன.

  >>>>>

  ReplyDelete
 2. //நம் மனதில் உள்ள தீய குணங்களை அழிப்பதுதான் நரகாசுரவதம்.
  அதற்கு இறைவனாகிய கண்ணனை நாம் சிந்திக்கவேண்டும். வணங்க வேண்டும். அனைவரின் நலனை நாடி அன்போடு வாழவேண்டும் என்பதுதான். பண்டிகையின் உண்மையான தத்துவம். //

  வெகு அழகாகச் சொல்லி விட்டீர்கள், அண்ணா.

  >>>>>

  ReplyDelete
 3. //அன்பில்லை பண்பில்லை, அகப்பட்டுக்கொண்டோம், ஆசைகள் என்னும் மாய வலையில். வலையில் மாட்டிக்கொண்ட நாம் இன்று இணையம் என்னும் வலையில் இணைத்துக்கொண்டோம்.
  பிணைக்கைதிகளாய் ஆகிவிட்டோம்.//

  கரெக்டூஊஊஊஊஊ !;)

  //விடுபட இயலும் வழியறியாது திகைத்து நிற்கின்றோம் //

  அதே... அதே !

  //மேஜையில் நம் எதிரில் நின்று நம்மை மாயையில் ஆழ்த்திய அந்த அரக்கன் இன்று நம் கையிலேயே ஒட்டிகொண்டான்//

  ஆம். அவன் பெயர் மெளஸ் .... மிகவும் மெளஸானவனாக உள்ளான்.

  //அல்லும் பகலும் நம்மை அவன் அடிமையாக்கி கொண்டான். நம்மைப் படைத்த இறைவனையே மறக்கச் செய்தான். //

  அடடா, என்ன கஷ்டம் பாருங்கோ.

  கலி முற்றியதால் வந்ததே இந்த கணனியோ ! இருக்கலாம், இருக்கலாம்.

  இனி இதைத்தொடக்கூடாது என நானும் பலதடவை நினைத்தது உண்டு. கடைசியில் பிரஸவ / ஸ்மசான வைராக்யமாகவே போய் விடுகிறது. இனி இன்று இத்தோடு சரி ! இதன் பக்கமே வரக்கூடாது என நினைத்து இதோ கிளம்பிட்டேன். Bye Bye !!

  ReplyDelete