Saturday, February 27, 2016

மனம் படுத்தும் பாடு (4)

மனம் படுத்தும் பாடு (4)

மனம் படுத்தும் பாடு  ( 4)


மனம் இருந்தால் மார்க்கம் உண்டு 
உலக வாழ்வில் 

ஆனால் மனம் இறந்தால்தான் மார்க்கம் 
உண்டு ஆன்மீக வாழ்வில். 

ஆம் இரண்டிற்கும் மனம்தான் காரணம் 

உலக காரியங்களில் மனதின் துணை இல்லாது 
எதுவும் செய்ய முடியாது. 

எந்த செயலை செய்ய வேண்டுமென்றாலும் மனதின் 
முழு ஒத்துழைப்பு தேவை. 

அரை குறை மனதோடு செய்யப்படும் எந்த செயலும் 
முழுமை அடையாது 

அது வெற்றியை தராது .தோல்வியையே தரும். 

மனம் மட்டும் இருந்தால் போதாது .அதோடு புத்தியும் 
இணையவேண்டும். 

ஏனென்றால் மனம் என்பது வேகமாக 
ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரம். 

அதை எப்போது இயக்கவேண்டும், 
எப்போது நிறுத்தவேண்டும் 
எப்போது வேகத்தை குறைக்கவேண்டும்,
அல்லது வேகத்தை கூட்டவேண்டும் 
என்று முடிவு செய்வது நம் புத்தி அல்லது அறிவு. 

அறிவு சரியாக இயங்கவேண்டுமேன்றால் 
அதை வளர்த்துக்கொள்ளவேண்டும். 

அறிவு வளராமல் மனம் மட்டும்
இருந்து ஒரு பயனும் இல்லை. 

அதனால்தான் நாம் இறைவனிடம்
எதையும்  கேட்பது கூடாது 
நல்ல அறிவை தருமாறு  
வேண்ட வேண்டும். 

அறிவில்லாது செய்யும் செயல்கள் 
தாறுமாறாகத் தான் போய்  
நம்மை ஆபத்தில் கொண்டு விட்டு விடும். 

அதே நேரத்தில் ஒரு செயல் தொடங்குமுன் 
அந்த செயலைப்  பற்றிய முழு 
தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். 

பிறகுதான்.  அந்த செயலில் 
நமக்கு வெற்றி கிடைக்கும். 

செயலில் வெற்றி பெற மனம் 
ஒருமைப்படவேண்டும் 

மனம் ஒருமைப்படாவிடில் கவனம் சிதறி
செயலில் குழப்பம்  ஏற்பட்டு 
தொடங்கிய செயல் பாதியிலேயே நின்றுவிடும். 

மனதை புரிந்து கொள்வோம்
வாழ்வில் வெற்றிகளை குவிப்போம். 

Friday, February 26, 2016

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்?

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட 
மாந்தரை நினைந்து  விட்டால்?இந்தியர்களைப் போல ஒரு மூடர்கள்
உலகெங்கும் கிடையாது?

எப்போதும் பிறருக்கு அடிமை சேவகம்
செய்வதிலேயே இன்பம் காணும் அற்ப கூட்டம் .

எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்காமலே அப்படியே
நம்பி அனைத்தையும் இழந்துவிட்டு புலம்பும் கூட்டம்.


சுயமாக எதைப்  பற்றியும் சிந்திக்காமல்
அப்படியே முழுவதுமாக
நம்பி மோசம் போகும் கூட்டம்.

எத்தனை முறை ஏமாந்தாலும் கொஞ்சம் கூட
விழிப்புணர்வு பெறாமல் மீண்டும் மீண்டும் ஏமாந்து தாங்கள் பாடுபட்டு சேர்த்த  சொத்துக்கள்  அனைத்தையும் இழந்து தொலைகாட்சியில்
அனுதினம் புலம்பி திரிவதில் ஆனந்தம் அடையும் கூட்டம்

அற்ப உணர்சிகளுக்கு  அடிமையாகி எதற்கெடுத்தாலும்
பொது சொத்துக்களை அழித்து
நிர்மூலமாக்கும் மூடர்கள் கூட்டம்.

வெட்டி வேதாந்தம் பேசி திரிந்து உழைக்காமலேயே
உயர்ந்த நிலைக்கு சென்றுவிட குறுக்கு வழியை தேடும்
கிறுக்குக் கூட்டம்.

தன்னிடம் உள்ள விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை பயன்படுத்த தெரியாமல் பொய் விளம்பரங்களையே எப்போதும் நம்பி காசையும், உடல் நலத்தையும் தொலைத்துவிட்டு மாயும் கூட்டம்

இலவசங்களுக்காக தங்கள் உழைப்பையும், நேரத்தையும் , தன்னிடம் உள்ள சேமிப்பையும் சுயநல அரசியல் வாதிகளிடம் தானம் அளித்துவிட்டு அவர்கள் பின்னால் ஓடி திரிந்து பிச்சைஎடுக்கும் கூட்டம்.

சுயநல ஆதாயத்திற்காக  யாரை  வேண்டுமானாலும் காட்டி கொடுக்கும் கயமை குணம் நிறைந்த கூட்டம்.

தேச துரோகிகளோடு கை கோர்த்துக் கொண்டு நாட்டிற்கு எதிராக சதி செய்யும்
ஈன பிறவிகள் நிறைந்த கூட்டம்.

பொறாமை, பேராசை ,சுயநலம் என்னும் பேய்களுக்குஉள்ளத்தில்  இடம் கொடுத்து நாட்டையும் கெடுத்து தன்னையும்   அழித்துக் கொள்ளும் நாசகார கூட்டம்.

பெண்களை தெய்வங்களாக போற்றுவது போல் நடித்து அவர்களின் வாழ்வை நாசமாக்கும் நய வஞ்சக்  கூட்டம்.

நம் நாடு எத்தனையோ துறைகளில் முன்னேறி இருந்தாலும் இந்த அடிப்படை குறைகள் நீங்காவிடில் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீர் போல் வீணே.


அகிலத்தை காக்கும் அரங்கனே

அகிலத்தை காக்கும் அரங்கனே 
அகிலத்தை காக்கும் அரங்கனே
கோகுலத்தில் அழகனாய் வந்துதித்த கண்ணனே
பக்தரைக் காக்க கால் கடுக்க நடந்த ராமனே
கோயிலில் இன்றும் அழகிய வடிவாய்
காட்சி தந்தருளும் கருணை தெய்வமே
உன்னை என்றென்றும் போற்றி வழிபடும்
என் உள்ளமே .

புறத்தே கண்டு உன்னை தரிசித்த நான்
உன்னை என் அகத்தே கொண்டு எந்நேரமும்
தரிசித்து மகிழ  நினைத்தேன்  ஆனால் அந்தோ!
அங்கே காமம் முதலிய ராவணனின் கூட்டங்களும்
கம்சன் போன்ற ஆணவ பேய்களும் பொறாமை
பேராசைகள் என்னும் துச்சாதனன் கூட்டங்களும்
புகுந்துகொண்டு உன்னை என் உள்ளே
அனுமதிக்க மறுத்துவிட்டதே நான் என்ன செய்வேன்?

அவைகளை விரட்ட பல வழிகளைக் கையாண்டும்
அவைகள் இந்த உடலின் கண் உள்ள ஒன்பது
வாசல்களில் ஒரு வாசல் வழியாக  வெளியேறி
மறு வாசல்  வழியாக மீண்டும் உள்ளே புகுந்து என்னை
உபத்திரவம் செய்வதை நீ அறியாயோ?

பொறியில் சிக்கிய எலிபோல் இவன்  மனம்
படும் பாட்டை அறியாயோ?ஆமையாக அவதரித்த
அரியே தாமதம் செய்யாது அருள்  .புரிவாயேThursday, February 25, 2016

சுகங்களை ஏன் வெறுக்க வேண்டும்?

சுகங்களை  ஏன்  வெறுக்க வேண்டும்? 

ஆன்மீகத்தில் ஈடுபடுவோர் சுகங்களை

ஒதுக்கி தள்ள வேண்டும் என்றும்

அப்போதுதான் ஆன்மீகத்தில்

முன்னேற்ற அடைய முடியும்

என்று ஒரு கூட்டம் தவறாக பிரசாரம்  செய்து

மனிதர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி

அவைகளை எதற்கும் உதவாத பயனற்ற வாழ்க்கைக்கு

தள்ளுகின்றன


பல மதங்களில் மிக கடுமையான கட்டுப்பாடுகள்

விதித்து மனிதர்களை சக மக்களிடமிருந்து  பிரித்து

தனிமை சிறையில் தள்ளி ஒரு கற்பனையான

இன்பத்தை நோக்கி வாழ்நாள் முழுவதும்

ஏக்கத்தில் வாழுமாறு செய்து மன நோயாளிகளை

உருவாக்குகிறார்கள்.


எதுவுமே இயல்பாக இருக்க வேண்டும்
அளவோடு இருக்க வேண்டும்.


கற்பனையான  கட்டுப்பாடுகள் அடக்கிவைக்கப்பட்ட
காற்றழுத்தம் போன்றது.


வாய்ப்பு கிடைக்கும் போது 
அது தடைகளை உடைத்தெறிந்து
வெளியேறிவிடும்.

அதனால்தான் மக்களை ஏமாற்றி போலி வாழ்க்கை
வாழும் மத தலைவர்கள்
தங்கள் ஆசைகளை அடக்க இயலாமல்
தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.


அவர்கள் செயல் உலகியல் வாழ்க்கை
வாழும் சாதாரண கொடியவர்களை
விட மோசமாக உள்ளது.

இவ்வுலகில் இன்பமும் துன்பமும்
கலந்ததுதான் வாழ்க்கை

இரண்டையும் அதனதன் போக்கில்
அனுபவித்து அதன் நிலையாமையை
அனுபவத்தில் உணர்ந்து அடங்கினால்
ஆன்மீகம்  தானாகவே சித்திக்கும்

போலியாக தனக்குதானே கட்டுப்பாடுகள்
விதித்துக்கொண்டு தன்னையும் வருத்திக்கொண்டு தன்னை சார்ந்தவர்களையும் வருத்திக்கொண்டு
ஆன்மிகம் பயில்வது மூடத்தனம் 

Wednesday, February 24, 2016

இசையும் நானும் (112)

இசையும் நானும் (112)

இசையும் நானும் (112)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  112வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 

காலத்தால் அழியாது நிலைத்து  நிற்கும் 
கருத்துள்ள  பாடல்.   எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

சிவாஜி-சாவித்ரி -அருமையான நடிப்பு 

Image result for pasamalar

தமிழ் பாடல்- மலர்ந்தும் மலராத பாதி மலர்போல 

படம் :பாச மலர்    -பாடல் -கண்ணதாசன் 

Image result for pasamalar

இசை-விஸ்வநாதன்-ராமமுர்த்தி   தி எம் சௌந்தர்ராஜன் -பி சுசீலா அவர்களின் அற்புத குரலில் 

https://www.youtube.com/watch?v=fKzAbdNxb2k&feature=youtu.be


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/fKzAbdNxb2k" frameborder="0" allowfullscreen></iframe>

அடிமைத்தனத்தின் ஆணிவேர் எது?

அடிமைத்தனத்தின் ஆணிவேர் எது?

அடிமைத்தனத்தின் ஆணிவேர் எது?

அடிமைத்தனத்தின்
ஆணிவேர் சுயநலம்தான்

அடிமைத்தனம் எங்குள்ளது?

அது எல்லா இடத்திலும் கடவுளைப் போல்
நீக்கமற நிறைந்துள்ளது

மக்கள் ஒரு அடிமைத்தனத்திலிருந்து மீண்டு
மற்றொரு அடிமைத்தனத்தில் தானே வலிய
சென்று சிக்கிகொள்வதை வாடிக்கையாகக்
கொண்டுள்ளனர்.

இன்று அடிமைத்தனம்
இல்லாத இனமும் இல்லை

துறையும் இல்லை.

அது வெவ்வேறு முகமூடிகளில்  மனித குலத்திற்குள்

நீக்கமற கலந்து விட்டது.

அதை இனம் பிரித்து பார்ப்பது மிக கடினம்.

தனி மனித அடிமைத்தனம்
தொடங்கி கூட்டம் கூட்டமாக

ஒரு மனிதருக்கு அடிமையாய் தன் தலையில்

வழுக்கை விழுந்த பின்னரும் வாழ்க்கையை

அர்ப்பணிப்பது அனைவரின் தலையாய கடமைகளில்

ஒன்றாகிவிட்டது.


பொது வாழ்க்கையில் அனைவரும் ஏதாவதொரு அரசியல் கட்சிக்கோ,நடிகருக்கோ, இயக்கத்திற்கோ, மதத்திற்கோ அல்லது பணம், புகழ் சம்பாதிற்பதர்க்கோ அல்லது ஏதாவது ஒரு சில அற்ப பலன்களுக்காக /ஆதாயத்திற்காக அடிமைகளாக இருக்கிறார்கள்.

தனி மனித வாழ்க்கையில் போதை,மது, உணவு, ஒழுக்கமற்ற செயல்கள். தொலைகாட்சி போன்ற பல விஷயங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.

இவைகள் அனைத்தும் அவர்களை மீள முடியாத சிக்கலில்  தள்ளி அவர்கள் வாழ்க்கையை எதையும்  சிந்திக்க விட முடியாதபடி செய்து அவர்கள் வாழ்க்கையை நரகமாக்குகின்றன.

ஒவ்வொரு கூட்டமும் அவர்களுக்கு எதிராக செயல்படும் கூட்டத்தை அடக்கி ஒடுக்கி அழிக்க முற்படுவதால் உலகில் என்றும் அமைதி நிலவுவதில்லை.

இது உலகம் தோன்றிய காலம் தொடங்கி இந்நிலை நீடித்து வருகிறது.

எதிர்காலத்திலும் அப்படிதான் இருக்கும்.

அலைகடலில் அலைகள் என்றும் ஓயப்போவதில்லை.

அழிந்துபோகும் அற்ப சுயநல பிண்டங்கலான மனிதர்களுக்கு அடிமையாக
வாழ்நாள் முழுவதும் இருப்பதிலிருந்து நாம் கடைதேறவேண்டுமானால் ஒரு கால கட்டத்தில் வெளி வந்துதான் ஆகவேண்டும்

நம்மையெல்லாம் காப்பாற்ற அலைகடலில் அரி துயில் கொண்டுள்ள

அரங்கனை சரணடைந்து அவன் பாதம் பணிந்தேத்தினால்

அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடலாம்

Tuesday, February 23, 2016

யார் வேண்டுமானாலும் உபதேசம் செய்யலாமா ?

யார் வேண்டுமானாலும் உபதேசம் செய்யலாமா ?

யார் வேண்டுமானாலும்
உபதேசம் செய்யலாமா ?

கூடாது.

ஆனால் இன்று எல்லோரும் தங்களிடம்

உள்ள டப்பாவில் அங்கு இங்கு கேட்ட

படித்த தகவல்களை தங்கள் மனம் போனபடி

திரித்து பொய்களை உண்மைபோல்

அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


அவர்களை நாடி குறுக்கு வழியில் தங்கள்

ஆசைகளை ஆன்மிகம் மூலம் நிறைவேற்றிக்கொள்ளலாம்

என்று பல லட்சம் மக்கள் நாடி ,தாடி வளர்த்துக்கொண்டு

கொட்டைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு

அவரவர் கடமைகளை செய்யாமல் சேவை என்ற பெயரில்

வாழ்வை வீணாக்கி கொண்டிருக்கிறார்கள்.


எந்த வேலையை செய்ய வேண்டுமென்றாலும் அதற்கு உரிய

அனுமதி பெற்றிருக்கவேண்டும்.


அனுமதி இல்லாமல் செய்யப்படும் அனைத்து  செயல்களும்

செயல்களும் அனர்த்தத்தில்தான்  போய் முடியும் என்பதை

நாம் கண்கூடாக தினமும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்


உதாரணத்திற்கு ஒரு போர் வீரன் கையில் ஆபத்தான துப்பாக்கி

இருக்கிறது .விசையை தட்டி விட்டால் பல நூறு குண்டுகளை

வெளியே தள்ளிவிடும். பல பேரைக் கொன்றுவிடும்


அதை எங்கு, யார் மீது , எப்போது ,எவ்வளவு  நேரம் ,எதுவரை

பயன்படுத்தவேண்டும் என்பதற்கு அவன் உரிய அதிகாரிகளிடம்

உத்திரவு பெற்ற பிறகுதான் செய்ய வேண்டும்.


அப்படி செய்தால் அவன் செயல் தண்டனைக்கு உள்ளாகாது.


அதை தவறாக பயன்படுத்தினால் தண்டனைக்கு உள்ளாவான்.


அதுபோல்தான் உபதேசங்களும் உபதேசம் பெற்றவர்களால் தகுதியுடைய

நபர்களுக்கு உள்ளிருக்கும் இறைவனின் அனுமதி பெற்றே

வழங்கப்படவேண்டும்.


இல்லாவிடில் ராவணன்களும் துரியோதனன்களும், துச்சாதனன்களும் கம்சன்களும், , இரண்யகசிபுகளும், சூரபத்மன்களும், பச்மாசுரனும், பகாசுரனும் போன்ற அசுரர்கள்தான் உருவாகி மக்களுக்கு
இன்னலை விளைவித்துக்கொண்டிருப்பார்கள்.ஆகையால் உபதேசம் அளிப்போரும் உபதேசம் பெற நினைப்போரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இல்லையேல் இருவரும் இன்னலுக்கு ஆளாவார்கள்

அவர்களால் நாம் வாழும் மனித சமுதாயமும். தொடர்ந்து துன்பங்களை சந்தித்துதான் ஆகவேண்டும்.Monday, February 22, 2016

வடிவமற்ற பரம்பொருளே !

வடிவமற்ற பரம்பொருளே !

வடிவமற்ற பரம்பொருளே
வடிவங்கள் பல கொண்டாய்
புலன்களின் மூலமாய் இவ்வுலகைக்
காணும் ஒன்றும் புரியா எம்போன்றோருக்கு
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

வடிவங்களாய் கண்ணுக்கு
விருந்தளித்தாலும் புலனுறங்கும்
வேளையில் மறைந்திடுவாய்

புலனுறங்கும் வேளையிலும் கனவுலகிலும்
காட்சியும் தருவாய் உன் வடிவையே எண்ணி
மகிழும் பக்தருக்கு.

தோன்றி மறையும்  உன் வடிவங்கள்
யாவினுள்ளும் தோன்றாது நின்று
அருள் செய்யும் பரம்பொருளே  !
உன்னை நாடாது ஒரு செயலும்
இவ்வுலகில் நடைபெறுமோ?

ஆட்டுவிப்பதும், அடைக்கலம் தருவதும்
அவன்  செயலென்று உணராது அகந்தை
கொண்டு அலையும் மனமே !

நீ  அவன் பாதமே கதியென்று
சரணடைந்திடுவாய் !

தடையிலா  ஆனந்தம் பெற்று
இவ்வுலகில் என்றும் இன்பமாய்
வாழ்ந்திடவே.

இசையும் நானும் (111)

இசையும் நானும் (111)

இசையும் நானும் (111)

இசையும் நானும் (111)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  111வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 

காலத்தால் அழியாது நிலைத்து  நிற்கும் 
கருத்துள்ள  பாடல்.   எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

தேவிகாவின்  அருமையான நடிப்பு 

Image result for anandha jothi film


தமிழ் பாடல்-  நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா 

Image result for anandha jothi film

படம் : ஆனந்த ஜோதி   -பாடல் -கண்ணதாசன் 

இசை-விஸ்வநாதன்-ராமமுர்த்தி   -பி சுசீலா அவர்களின் அற்புத குரலில் 

https://www.youtube.com/watch?v=noU4dyAoq40&feature=youtu.be

Sunday, February 21, 2016

இதயத்தில் இறைவனுக்கு....

இதயத்தில் இறைவனுக்கு....

இதயத்தில் இறைவனுக்கு
இடம் கொடுத்தேன்
அவனை நினைக்கும் போதெல்லாம்
தேனாய் இனிக்கின்றான்ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


என் நாவிற்கு அவன் நாமம் சொல்ல
பழக்கி விட்டேன். அடடா !
அவன் நாமம் உரைக்க உரைக்க
உள்ளத்தில் ஓர் உற்சாகம் பிறக்குதடா !

எண்ணமெல்லாம் அவன் நினைவாய்
ஆகிவிட்டேன் .அதனால் என் வாழ்வு
வண்ண மயமாய் ஆகிவிட்டது
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

வேறு சிந்தனையற்று என்னை எப்போதும்
நினைப்பவர்தமக்கு நல்  வாழ்வை அமைத்து தருவது
என் கடமையன்றோ என்றல்லவோ
அவன் உறுதியளித்தான் கீதை தன்னில்

இவ்வுலகோருக்கு வாழ்க்கைப்படேன்
என்று உளமார நம்பிய கோதை என்னும்
பேதைதன்னை ஆட்கொண்டு அருளிய
சொன்ன வண்ணம் செய்தபெருமான்
அல்லவோ அந்த ஸ்ரீ ரங்கன்.

                                                 ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


ரங்கனுக்கு சேவை செய்த எதி ராமானுஜன்
ராமனுக்கே தன்னை அர்ப்பணித்த அனுமந்தன்
கண்ணனையே எந்நேரமும் எண்ணி தன்
இனிய கானத்தால் அவனோடு கலந்து விட்ட மீரா

எளிமையான  வாழ்வு ஏகாந்தமான ராம பஜனை
வாழ்வில் சோகங்கள் அண்டாது காக்கும் ராம நாமம்
ஆசைகள் என்னும் பேய்கள் நம்மிடம் வாலாட்டாது
காக்கும் அனுமனின் திருநாமம் .
     

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்

அறிந்து கொள்வீர் மானிடரே அழியும் உடலில்
பிறந்த நாம் அழியா நிலை பெற அவன் மீது
கொண்ட பக்திதான் அனைத்தையும் தரும்
என்பதை உணர்ந்து கொள்வீர்.

வெற்றி பெற என்ன வழி?(2)

வெற்றி பெற என்ன வழி?(2)

வெற்றி பெற என்ன வழி ?

வெற்றி பெற ஏராளமான வழிகள் உள்ளன


எத்தனையோ வழிகள் இருந்தும் தன்

அறிவை பயன்படுத்தாதவன் தோல்வியைத்தான்

சந்திக்கவேண்டும்


அடுத்து வெற்றி பெற எளிதான வழி

அடுத்தடுத்து தோல்விகளை சந்திப்பதுதான்


பல பேர் நல்ல திறமை இருந்தும் ,வாய்ப்புக்கள்

இருந்தும் தான் தோற்றுவிடுவோமோ என்ற

பயத்திலேயே வெற்றி வாய்ப்பை தவறவிட்டு விடுகிறார்கள்.


முதல் முயற்சியிலேயே கிடைக்கும் வெற்றி

நிலையில்லாதது. அது முற்றாத கதிரைப் போன்றது

அது வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும்.


தோல்விகளைக் கண்டு எவன் துவண்டு போகாமல்

தொடர்ந்து முயற்சி செய்கிறானோ அவனே நிரந்தரமான

வெற்றியை பெறுகிறான்.


எவன் ஒருவன் தோல்விகளைக் கண்டு மனம் தளராமல்

தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்து

அவைகளை களைந்து மீண்டும் முழு முயற்சியுடன்

செயலில் மீண்டும் மீண்டும் இறங்குகிரானோ அவன்

வெற்றி பெறுவது உறுதி.


இன்றைய  கல்வி முறையில் இந்தம் அம்சம் எந்த நிலையிலும் 

மாணவர்களுக்கு பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று 

போதிக்கப்படுவதில்லை 


அதனால்தான் அவர்கள் அற்ப காரணங்களுக்காக தங்கள் 

விலை மதிப்பில்லா உயிரை மாய்த்துக் கொள்ளுகிறார்கள். 


இன்றைய அரசியல் உலகில் பிணங்களை வைத்து அரசியல் 

செய்வதும் பிரச்சினைகளை மன உறுதியுடன்  எதிர்த்து 

போராடி முயற்சி செய்யாது கோழைகள் போல் தற்கொலை 

செய்துகொள்பவர்களை மாவீரர்களாக சித்தரித்து அரசியல் 

ஆதாயம் தேடும் தலைவர்கள் பெருகி விட்டார்கள். 

இந்த போக்கு மிகவும் கவலைக்குரிய விஷயம் 

Saturday, February 20, 2016

இசையும் நானும் (110)

இசையும் நானும் (110)


இசையும் நானும் (110)

இசையும் நானும் (110)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  110வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 

காலத்தால் அழியாது நிலைத்து  நிற்கும் 
கருத்துள்ள  பாடல்.   எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

ஜெய் சங்கரின் முதல் படம் 

Image result for iravum pagalum film

தமிழ் பாடல்-  இரவு வரும் பகலும் வரும் 
உலகம் ஒன்றுதான் .......

படம் : இரவும் பகலும்  -பாடல் -ஆலங்குடி சோமு சோமு 

இசை-டி .பாப்பா  -பாடியவர் -டி  எம்.சௌந்தர்ராஜன் 


Friday, February 19, 2016

If you allow one ant.....

If you allow one ant.....

Image result for cancer cell images

one type of cancer cell image-google

Our mind is like a lake with pure
and crystal clear water when we
come out of the womb in this 
world. 

But we make it filthy and make it
unfit for anything at the time of going to tomb 

At one stage we loose our mental 
power and  unable to voice 
against this worst situation and 
become a dumb onlooker .

One desire brings countless desires
to make us confused and agitated 
and rob our mental peace and stability 

Our mind is like a sweet candy full of
sweet memories and abode of peace.

Desires are like ants. If we have no control 
over the gates of our mind consisting of various senses
the ant will enter  our mind . 

It won't come alone .It will bring thousands of ants .
and eat away the entire candy in no time. 

If we allow one desire ,it will breed countless desires 
and grow like cancer cells and in the course of time 
our mind will loose its happiness and mental stability
and kills us little by little. and make us brittle even
during a small failures in our life. 

Hence we must be doubly careful about ants
which enter our mind in the guise of desires which
destroy our real identity of our self. 

Thursday, February 18, 2016

LIFE IS A BLESSING

LIFE IS A BLESSING 

Life is a blessing.

yes Life is  a blessing

For whom and How?

If you look into the word"Blessing"

You can find an answer.

Blessing contain two words.

One is BLESS and another is SING


To avail the full potential of these two words you

must be impartial and un biassed


otherwise it won't work for you.


You bless everybody whoever come before you

with full hearted love irrespective of their religion, race or colour.


You bless all whoever wants to come up in life.

It gives happiness to both the person who bless  and the blessed.

If you bless with love
GOD will you bless with everything.


Finding fault with everything will corrupt your mind and
makes your life into a veritable hell

Find the remedy for the fault wherever you notice.

Your heart knows that GOD has never blow up your faults unless you expose others
embrassing and exploiting their predicament

Our ears are to  hear music ,that too good music,

Hear melodious music whenever time permits
without disturbing others.

If you are not able to sing ,never worry.
hear good music again and again.

If you are spiritual minded hear lot of devotional music.

It will calm your turbulent mind and make it a abode of peace.

If you try to follow this your life
will be full of life brimming  with happiness


வெற்றி பெற என்ன வழி?(1)

வெற்றி பெற என்ன வழி?(1)

வெற்றி பெற என்ன வழி ?

இந்த கேள்வி சோம்பேறிகளின் மனதைத்

தவிர அனைத்து மனிதர்களின் மனதில் எழும்

ஒரு அடிப்படை கேள்வி.

கேள்விக்கான விடைகளை பலர் புத்தகங்களிலே

தேடுகிறார்கள்.

ஒரு சிலரோ அவர்கள் வாழும் இந்த உலகத்தில்

தேடுகிறார்கள்.

புத்தகத்தில் தேடுபவர்கள் பொதுவாக  வாழ்வில்

வெற்றி பெறுவதில்லை.

ஏனென்றால் அது இறந்த கால மனிதர்களின்

வாழ்க்கை சரித குறிப்புகளே

அவைகளில் ஒரு சில நமக்கு பயன்படுபவையாக
இருக்கலாம் ஆனால் நிகழ்காலத்திற்கு அவை
பொருத்தமற்றவையாக இருக்கக்கூடும்

வாழ்க்கையில் வெற்றி பெற முதலில்
அடிப்படை தேவை ஒரு இலக்கு

இலக்கு இல்லாதவன் வாழ்க்கையில் செய்யப்படும்

அனைத்து முயற்சிகளும் வீணாகத்தான் போகும்.


அது இலக்கில்லாமல் எய்யப்படும் 
அம்பைப் போன்றது.

ஒன்று அது வீணாய்ப் போகும்.
இல்லையேல் யாரையாவது தாக்கி
கொன்று எய்தவனை தொல்லைக்கு ஆக்கி
அவன் வாழ்க்கையையே நாசம் செய்துவிடும்.

ஒருவன் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பெற்றவனாக
எக்காலமும் ஆகமுடியாது.

அது தெய்வங்களுக்கு  கூட சாத்தியமில்லாத ஒன்று.

அவைகளே தங்கள் தொழில்களை
ஆக்கல், காத்தல், அழித்தல்,மறைத்தல்
முடிவில் அருளுதல் என்று பிரித்து
தனித்  தனியாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

உலகில் ஒரு பெரிய தீய சக்தி உருவாகும்போது அதை அழிக்க
அவைகள் பல தெய்வங்களின் சக்திகளை கூட  ஒன்று சேர்த்துக் கொள்கின்றன 

எனவே வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால்
அவரவரின் தற்போதைய அறிவிற்கும் சக்திக்கும்
தகுதிக்கும். தகுந்தவாறு ஒரு இலக்கை முதலில்
தேர்ந்தெடுக்க வேண்டும்.
இசையும் நானும் (109)

இசையும் நானும் (109)

இசையும் நானும் (109)

இசையும் நானும் (109)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  109வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 

காலத்தால் அழியாது நிலைத்து  நிற்கும் 
கருத்துள்ள  பாடல். 


தமிழ் பாடல்- கால மகள் கண் திறப்பாள் சின்னையா 

நாம் கண் கலங்கி கவலைப்பட்டு என்னையா ..


படம் :ஆனந்த ஜோதி -பாடல் -கண்ணதாசன் -

இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி -பாடியவர் -பி சுசீலா

Monday, February 15, 2016

இசையும் நானும் (108)இசையும் நானும் (108)

இசையும் நானும் (108)
இசையும் நானும் (108)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  108வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 


MOUTHORGAN-TAMIL-FILM-படம் -மங்கையர் திலகம் -நீல வண்ண கண்ணா வாடா-ஆர்.பாலசரஸ்வதி -இனிமையான பாடல்-LYRICS-MARUTHAKASI-

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/7EALfNg_IRA" frameborder="0" allowfullscreen></iframe>


https://www.youtube.com/watch?v=7EALfNg_IRA&feature=youtu.be

Saturday, February 13, 2016

இன்று ரத சப்தமி

இன்று ரத சப்தமி 
                                         வண்ண ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன் 

புற உலகில் அனுதினமும்
இருள் போக்கி
ஒளி  தந்து இவ்வுலகில் 
வாழும் அனைத்து
உயிர்களுக்கும்
வாழ்வு தந்து

ஒவ்வொரு ஜீவனுக்கும் 
தந்தையாய்  விளங்கி
கண்கண்ட தெய்வமாய் விளங்கி
நம்மை காக்கும் சூரிய பகவானுக்கு
நன்றி சொல்வோம்

நம்முள்ளே ஆன்ம  ஒளியாய்
இருந்துகொண்டு
தன்னை நாடி துதிப்பவர்கெல்லாம்
வெற்றியும் ஆனந்தமும் தரும்
மங்கலரூபனை நன்றியுடன்
இந்நாளில் நினைந்து நினைந்து
போற்றி மகிழ்வோம். 

இசையும் நானும் (107)

இசையும் நானும் (107)

இசையும் நானும் (107)
இசையும் நானும் (107)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  107வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 

ஸ்ரீ  வள்ளி தேவசேனாபதே -பாபநாசம் சிவன் -

மிகவும் பிரபலமான பாடல் 

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/CpvV3m2Iioc" frameborder="0" allowfullscreen></iframe>