Wednesday, April 30, 2014

அகந்தை தேவையா?

அகந்தை தேவையா?

அகந்தை தேவையா?

யாராவது வீடு முழுவதும்
கந்தைத் துணிகளை அடுக்கி வைப்பார்களா?

கந்தைத் துணிகளால்என்ன  பயன்?

அது அழுக்குகளை துடைத்து எறிய  மட்டும் பயன்படும்.
மற்றபடி அதை யாராவது அலமாரியில்
பத்திரமாக பூட்டி வைப்பார்களா?

நிச்சயம் மாட்டார்கள்

ஆனால் நாம் நல்ல புதிய உயர்ந்த துணிகளை
அலமாரியில் வைக்காமல்
காமம், குரோதம், லோபம், மதம் மாச்சர்யம்
ஆகியவற்றின் முழு உருவகமாக அகந்தையை
மனம் என்னும் வீட்டில் வைத்துக்கொண்டு
வீட்டை நாறடித்துக் கொண்டிருக்கிறோம்.

நம்மைப் பார்ப்பவர்கள் அலறி ஓடுகிறார்கள்.
 டேய் இவன் நாய் மாதிரி
குலைக்கின்றான். என்று

டேய் இவன் புலி
 கிட்டே சென்றால்
அடித்தே கொன்றுவிடுவான் என்று

டேய் இவன் சாகவாசமே வேண்டாம் ,
நன்றாக இருக்கும் நம்மையும்
இவன் கெடுத்துவிடுவான்.

இவன் பார்வையிலேயே படக்கூடாது.
இவன் பார்வை பட்ட இடத்தில புல் 
பூண்டு கூட முளைக்காது .என்றெல்லாம்
இந்த உலகில் நாம் பார்க்கிறோம்.

இந்த அகந்தை நம்முள் இருக்கும்
வரையிலும் நாமமும் நிம்மதியாக இருக்கமுடியாது நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நிம்மதியாக இருக்கமுடியாது

நாம் செய்யும் தெய்வ வழி பாடுகள் கூட
நமக்கு கைகூடாது

இப்படிப்பட்ட அகந்தை
நமக்கு தேவைதானா?

நாம் சிந்திக்கவேண்டும்.

கவைக்குதவாத எண்ணற்ற சிந்தனைகள்
 நம் மனதை ஆக்கிரமித்துக்கொண்டு நம்மை இரவும் பகலும் பாடுபடுதிக்கொண்டு நம்மை நிம்மதியில்லாமல் செய்துகொண்டிருக்கின்றன. 

ஏன் அடுத்த பிறவிக்குக் கூட தொடர்ந்து வந்து நம்மை தொல்லைபபடுத்திக் கொண்டிருக்கின்றன

நம் தலையில் மீது உட்கார்ந்துகொண்டு நம்மை மகிழ்ச்சியாக இருக்கவிடாமல் செய்யும் அகந்தையை ஒழிக்க ஒரு வழி உண்டு.

அந்த தலையை அகந்தையை அண்ட  விடாமல் செய்த
சத்குருவின் திருவடிகளில்  வைத்துவிட்டால்
தறுதலையாய் சுற்றித் திரியும் நம் மனம் தானே
அடங்கி ஒடுங்கிவிடும் அவர்  திருவடிகளில். 

தாமரை மலர் ஒன்று கண்டேன்.

தாமரை மலர் ஒன்று கண்டேன். 
                                                          ஓவியம்-தி.ஆர்.பட்டாபிராமன் 
இந்த பாடலை நித்யஸ்ரீ மகாதேவன் பாட கேட்கலாம் 

https://www.youtube.com/watch?v=-X6XvFvkugU

Tuesday, April 29, 2014

தும்பிக்கையான் புகழ் பாடு

தும்பிக்கையான் புகழ் பாடு 
ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 

தும்பிக்கையான் புகழ் பாடு
நீ தினமும் நம்பிக்கையோடு

காலையில் கண் விழிக்கும்போது
கணபதி என்பேன்

காரியங்கள் ஆற்றும்போது
கணபதி என்பேன்

கவலை மேகங்கள் சூழும்போது
கணபதி என்பேன்

ஆடம்பரமற்றவன்
அன்புள்ளம் கொண்டவன்
நினைக்கும் அடியார் உள்ளத்தில்
உடன் இருந்து அருள்பவன்

கண்ணுறங்க செல்லும்போதும்
கணபதி என்பேன்.

வித்தைகிறைவன்
சக்தியின் மைந்தன்
சங்கடங்கள் வாராது
காப்பாற்றுவான். 

Monday, April 28, 2014

பேதமில்லை இறைவனிடத்தில்

பேதமில்லை இறைவனிடத்தில்    

இறைவன்
ஆலமரம்போன்றவன்
அவன் அனைவருக்கும் புகலிடம் அளிப்பவன்

அவனுக்கு, ஜாதி, மதம், இனம், மொழி என
எந்த வேறுபாடுகளும் கிடையாது

அவனுக்கு மனிதர்கள் விலங்குகள், சிறு உயிர்கள்,
பறவைகள், உடலின்றி திரியும்  ஆவிகள்
என எந்த பாகுபாடும் கிடையாது.

ஒரு ஆலமரத்தின்  நிழலில் மனிதர்கள்,
விலங்குகள்  தங்கி இளைப்பாறுகின்றன

பொந்துகளில், பாம்பும், புழு பூச்சிகளும் ,
பறவைகளும் மற்றும் எண்ணற்ற
பிராணிகளும்  தங்குகின்றன

அவைகள் அனைத்திற்கும், இலைகளையும், காய்களையும்
கனிகளையும், குளிர்ந்த காற்றையும் மரம் வழங்குகிறது.

உயிர்களை தின்று வாழும் உயிர்களுக்கு
உயிர்களையும் இருக்கும் இடத்திலேயே
கிடைக்கும்படி செய்திருக்கிறான் இறைவன்.இவைகளை உணர்த்தும் முகத்தான்
ஈசன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து
ஞானத்தை  போதித்தான்.

எல்லா மனிதர்களும்
 இந்த உண்மையை மனதில் கொள்வோம்
அன்பான உலகைப் படைப்போம்
ஆனந்தமாக வாழ்வோம்.

பேதங்களை  விட்டொழிப்போம்
வேதம் கூறும் உண்மையை
வாழ்வில் கடைபிடிப்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.

அனைவரும் ஒருவொருக்கொருவர்
உதவி  செய்து கொண்டு பகைமை
ஒழித்து பாங்காய் வாழ்வோம். 

கருணையே வடிவெடுத்து வந்த காஞ்சி மாமுனிவரே !

கருணையே வடிவெடுத்து வந்த 
காஞ்சி மாமுனிவரே !ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

மூவடியால் உலகை அளந்த
வாமனன் போல் தன் காலடியால்
பாரதத்தை  சுற்றிவந்து சனாதன நெறிக்கு
புத்துயிர் அளித்த மகா பெரியவா !

எந்நேரமும் அம்பிகையை நினைந்து
அவள் அருள் மழையில் மழையில்
நனைந்து அடியவர்களின்
அல்லல்களை அகற்றிய
தூயவா !

பரம்பொருள் ஒன்றென்றாய்
அதுவே பல வடிவங்களில்
பாராய்விரிந்ததென்றாய்

மதங்களிடையே ஒற்றுமை கண்டாய்
மனங்களில் வேற்றுமை நீக்கினாய்.

வேத பாடசாலைகளை நிறுவினாய்
அறிஞர்களின் மனத்தே மண்டிக்
கிடந்த பேதங்களை நீக்கினாய்
அனைவரையும் ஆனந்தத்தில்
திளைக்கச் செய்தாய்

இறைவனை அடைய உதவும்
உண்மை நெறியான உண்ணா நோன்பும்,
பேசா நோன்பும் உன் வருகையால்
உயிர் பெற்றது.


அறிவுக் கடலாய் விளங்கினாய்
அகிலம் முழுவதும் இருந்து
அறிஞர்கள் நாடி வந்தார்கள்
உன்னிடம் தெளிவு பெற
கடலைத் தேடி வரும் நதிகள் போல்.

புறத்தே உன் வடிவம் மறைந்தாலும்
அகத்தே என்றும் மறையாது
உன் ஒளி   வடிவம். சுவைக்க
சுவைக்க இனிக்கும் அமுதம் போல்
உள்ளத்தில் நிலையாய்  நின்று
இன்பம் தரும்.வரம் தரும் வரதன்

வரம் தரும் வரதன் 
கரியைக் காத்த அத்திகிரி  வரதனே
பிரமனின் வேள்வியில் தோன்றியவனே
இவ்வுலகில் இன்பமாய் வாழ
என்றும் உம்  திருவடிகளே துணை.

Sunday, April 27, 2014

ஒளியும் இருளும்.

ஒளியும் இருளும். விளக்கின் அடியில் இருள்
இருள் இருக்கிறது

அதைப் போக்க அந்த
விளக்கினால்  இயலாது

அந்த இருளைப் போக்க
மற்றொரு விளக்கு தேவைப்படும்

ஏன் பல விளக்குகள் கூட
தேவைப்படலாம்.

அதைப்போல்தான்
நமக்குள் ஆன்ம ஒளி  உள்ளது.

அதனால் அஞ்ஞானம் என்னும்
இருளில் மூழ்கியுள்ள ஜீவனின்
அறியாமையை  நேரடியாக அகற்றமுடியாது.

அந்த இருளைப்போக்க வேறொரு
விளக்கு தேவை .அந்த விளக்குதான்
சத்குரு

சத்குரு தன்னுடைய ஞான ஒளியினால்
பல பிறவிகளில் நாம் தேக்கி வைத்த
இறைவனைப் பற்றிய பல பொய்க்
கோட்பாடுகளை அகற்றி நமக்கு
உண்மையை உணர்த்தி ஞானத்தை
அளிக்கிறார்.

சூரியனை மறைத்த மேகம் விலகியவுடன்
சூரியன் பிரகாசிப்பதுபோல் நம்முடைய
ஆன்மாவை மறைத்துள்ள திரை விலகியவுடன்.
உள்ளத்தில் ஒளியுண்டாக
ஆன்ம தரிசனம் பெறுகிறோம்

எப்படி என்றால் விளக்கின் அடியில்
ஒளி  படர்ந்தவுடன்.  விளக்கின் ஒளியும்
அதனுடன் சேர்ந்துகொண்டு
அனைத்தும்ஒளிமயமாய்த்  திகழ்கிறது.

Saturday, April 26, 2014

என்னே உன் கருணை!

என்னே உன் கருணை!

நிலமகளும்   திருமகளும் ஒருங்கே
அருகில் நிற்க அழகாய் காட்சி தரும் நெடுமாலே
உனக்கு அனந்தகோடி நமஸ்காரம்.


ஓவியம்.தி.ரா.பட்டாபிராமன் 


நிலமகளே நின் தயவின்றி
இவ்வுலகில் உயிர்கள்
கால் பதிக்க இடமேது?

நாள் முழுதும் வானிலே
பறந்தாலும் பறவையினங்கள்
உன் மீது தான் உறங்கவேண்டும்

உயிர்களுக்கெல்லாம் அருள் செய்ய
தெய்வங்களும் கோயில் கொள்ள
இடமளிப்பவள் நீதான் அன்றோ !

நிலமகளே நீ இல்லையேல்
உயிர்கள் வாழ காற்றேது,
உணவேது?உறைவிடமேது

உன்னை இகழ்வாரையும்
அகழ்வாரையும் 
பொறுத்தருளும்
உன் கருணைக்கு நிகரேது?

திருமகளே உன் பரிவான
நோக்கின்றி இவ்வுலகில்
இன்பம் ஏது
இனிய வாழ்வேது?

அலைகடல்மேல்
அரிதுயில்  கொண்டவா
அடியவர்களைக் காக்கவே அர்ச்சா
மூர்த்தியாய்க்  ஆலயத்தில் நின்ற
திருக்கோலம் கொண்டவா !

ஆயிரமாயிரம் கவலைகள்
அகத்தே தோன்றிடினும்
ஆலயம் சென்று
நிலமகளும்  திருமகளும்
அருகே நிற்க உன் திவ்விய தரிசனம்
கண்டால் போதும். அனைத்தும்
அடுத்த கணமே
காணாமல் போகும். 

Friday, April 25, 2014

கடலைக் கடக்க படகு தேவை

கடலைக் கடக்க படகு தேவை 

பிறவிக் கடலை கடக்க
உடல் என்னும் படகு தேவை.படகு நல்லபடியாக கடலைக் கடக்க வேண்டுமென்றால்
அளவுக்கு மேல் அதில் பாரத்தை ஏற்றக்கூடாது
ஏற்றினால் படகு மூழ்கிவிடும்.

நம் மனம்தான் படகில்
பயணிகள் அமரும் பகுதி

நம் மனதில் உள்ள எண்ணங்கள்தான்
அதில் ஏறி பயணிக்கும் பயணிகள்.

இறைவனை இலக்காக கொண்டு பயணம் செய்யும்போது
அதற்க்கு எதிரிடையான எண்ணம்  கொண்டவர்களை
தவிர்க்கவேண்டும்
(மனதில் இறை சிந்தனையைத்
தவிர மற்ற எண்ணங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும்.)

படகுகள் பல இடங்களுக்கு பயணிகளை கொண்டு செல்லும்
எந்த இடத்திற்கு படகு செல்கிறதோ
அந்த இடத்திற்கு செல்ல வேண்டிய
பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்ல வேண்டும்.

வேறு இடங்களுக்கு செல்லநினைப்பவர்களை.
ஏற்றி செல்லக் கூடாது .

பிறவிக் கடலை கடக்க நினைப்பவர்கள்
அதுபோன்ற சிந்தனை உடையவர்களை மட்டும்
தம் படகில் ஏற்றிக்கொள்ளவேண்டும்.
மற்றவர்களை அதில் ஏற அனுமதிக்கக்கூடாது
( நல்லதோர்  சத்சங்கத்தில் இணைந்து கொள்ள வேண்டும் )

அப்படி ஏற்றினால் படகு போய்ச்  சேர வேண்டிய இடத்தை
என்றும் சேர முடியாது

படகை ஓட்டுபவன் நல்ல திறமைசாலியாக  வழியில்
ஏற்படும் ஆபத்துகளை கண்டறிந்து பத்திரமாக
பயணிகளை கரைக்கு கொண்டு சேர்ப்பவனாக
இருக்க வேண்டும். (அதற்க்கு
 நல்ல சத்குருவின் துணையை   நாடிப் பெறவேண்டும்)எல்லா எண்ணங்களை யும் ஒதுக்கிவிட்டு
இறை நாமத்தை மட்டும் எண்ணவேண்டும்
அப்படி இருந்தால் பயணம் பாதுகாப்பாக இருக்கும்.


ஓடும் எண்ணங்களே ஒரு சொல் கேளாயோ ?

ஓடும் எண்ணங்களே

ஒரு சொல் கேளாயோ ?

வண்ணங்களைக் கண்டு
மயங்காதே

வண்டுகள் போல் தேனின் சுவைக்கு
ஆட்பட்டு  வீணே மாய்ந்து போகாதே

ஓடி ஓடி உழைத்து பொருளை
தேடி அடைந்தாலும் அது
உனதல்ல உனதல்ல

நீ உழைத்துத் தேடிய பொருளை
உழைக்க இயலாத ஜீவன்களுக்கு
வழங்கிவிடு உள்ளத்தில் இன்பம் அடைந்திடு

நீ தேடவேண்டிய பொருள்
பரம்பொருள் மட்டுமே

அதற்காக நீ இவ்வுலகெங்கும் தேடித்
திரியவேண்டாம். உன்னுள்ளேயே
பத்திரமாக இருக்கிறது உன்
வருகைக்காக வேண்டி.

வேண்டி பெறுவாய் அதை
ஒருமையான சிந்தையுடன்

புலன்களின் வழியே செல்லாதே
யார் மீதும் புறங்கூராதே

ஒன்றே மூலப்பொருள்
அதுவே அண்டம் அனைத்துமாய்
பரந்து விரிந்துள்ளது
பெயர்களும் வடிவங்களுமாய்

அதை அறிந்து இன்புறுவாய்
பெயர்களும் வடிவங்களையும்
மறந்து .

அந்த மூலம்தான் ராம நாமம்
அதைப் பற்றிக் கொள்வாய்

உன்னைப் பற்றிக்கொண்டு அல்லும் பகலும்
துன்புறுத்தும் பற்றுகள் அற்றுப் போகும்.

இன்ப துன்பம் கடந்த ஆனந்த   வாழ்வும்
நிலையான் அமைதியும் இப்பிறவியிலேயே
அடைவாய்.  

Wednesday, April 23, 2014

பிறவிப் பெருங்கடல் நீந்துவது எப்படி?

பிறவிப் பெருங்கடல் நீந்துவது எப்படி?


மனமே நீ எப்போதும் இருதயத்தில் குடி கொண்டுள்ள ஸ்ரீ ராமனை பஜனை செய்வாயாக

மனமே நீ எப்போதும்  இருதயத்தில் குடி கொண்டுள்ள ஸ்ரீ ராமனை பஜனை செய்வாயாக 


ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

கேலதி  மம    ஹ்ருதயே  
ராகம் : அடானா
29 தீரா  சங்கராபரணம்  ஜன்ய
Aa: S R2 M1 P N3 S
Av: S N3 D2 P M1 P G3 R2 S

தாளம் : ஆதி
இயற்றியவர்  : சதாசிவ  பிரம்மேந்திரர்


பல்லவி

கேலதி மம    ஹ்ருதயே  
ராமஹ  கேலதி மம    ஹ்ருதயே

அனுபல்லவி

மோஹ  மஹார்ணவ  தாரககாரி
ராக த்வேஷ முகாசுரமாரி

சரணம்   1

சாந்தி விதேக சுதா
சஹசாரி   தகராயோத்யா நகர விகாரி

சரணம்   2

பரமஹம்ச  சாம்ராஜ்யோத்தாரி
சத்யா ஞானானந்த சரீரி  (கேலதி )

சதாசிவ பிரம்மேந்திரர் இயற்றிய இந்த கிருதி
ராம நாமத்தின் மகிமையை விளக்குகிறது.

மனமே நீ எப்போதும்  இருதயத்தில் குடி கொண்டுள்ள ஸ்ரீ ராமனை பஜனை செய்வாயாக .அது மோகத்தை அழிக்கும், விருப்பு வெறுப்பு போன்ற தீய குணங்களை அழித்து சாந்தியைக் கொடுக்கும்  .சத்திய வடிவான பரம்பொருளிடம் நம்மை கொண்டு சேர்த்து பரமானந்தத்தை அளிக்கும். 

Saturday, April 19, 2014

மோகம்தான் சோகத்தைத் தருகிறது.

மோகம்தான் சோகத்தைத் தருகிறது. 

மோகத்தை விட்டுவிட்டால் சோகம் இல்லை
எப்போதும் சுகம்தான்.

மனதில் தோன்றும் எண்ணங்களே
மோகத்திர்க்குக்  காரணம்

எண்ணங்கள்தான் மனம் தங்கியுள்ள உடலை
எல்லாவற்றிற்கும் பயன்படுத்திக் கொள்ளுகிறது.

அதற்கு பிராணன் துணை செய்கிறது

பிராணனை கட்டுப்படுத்தினால்
மனத்தைக் கட்டுப்படுத்தலாம்

மனத்தைக் கட்டுபடுத்தினால்
பிராணனைக் கட்டுப்படுத்தி
மனதை உயர்ந்த நோக்கமான
பிரம்மனை உணரும் மார்க்கத்திற்கு
கொண்டு செல்லலாம்.

இந்த உடல் வெறும் ஜடம்.
பிராணன்தான் அதை இங்கும்
அங்கும் கொண்டு செல்லுகிறது.
இயங்க வைக்கிறது.

ஆனால் எல்லோரும் நான் காசி போனேன் ,ராமேஸ்வரம்போனேன்
கங்கையில் குளித்தேன்  என்று அவர்கள் போவதாக நினைத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்

ஆன்மாவாகிய நாம் நாம் எங்கும்
போவதுமில்லை வருவதுமில்லை.

புற உலகில்   சூரியன் உதித்தவுடன்
அவரவர் தங்களுடைய கடமைகளைச் செய்யத் துவங்குகிறார்கள்
சூரியன் யாரையும் எதையும் செய்யச் சொல்வதில்லை

அதுபோல்தான் நமக்குள் இருக்கும் ஆன்ம  சூரியனின் ஒளியால் நாம் இயங்குகிறோம். 


இந்த உடல்  பயனற்றுப்போனால் மனத்தால்
அந்த உடலை ஒன்றும் செய்ய இயலாது.
அது அப்படியே மண்ணில் விழுந்துவிடும்.

மனம் வேறு உடலை தேடி சென்று அடைந்து
அதன் வேலைகளை தொடரும்.

இப்படியே இதற்கு முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கும்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் மனதில் உள்ள எண்ணங்களை விசாரித்து அறிந்து அவைகள் யாருக்கு உண்டாயின ?உடலுக்கா அல்லது உடலின் உள்ளே உள்ள நம்மை இயங்க வைக்கும் ஆன்ம ஸ்வரூபத்திர்க்கா  என்று ஒவ்வொரு எண்ணம் தோன்றும்போது விசாரித்து வந்தால் ஒவ்வொரு எண்ணமும்  மறைந்துவிடும்.


எண்ணமில்லா நிலையை அடைந்துவிட்டால்.
இன்ப துன்பங்கள்  இல்லை

விளைவுகளை உண்டாக்கும்
வினைகளும் இல்லை.

உடல் மட்டும் கருவிபோல் செயல்படும்.
உள்ளிருக்கும் ஆன்ம ஸ்வரூபத்தின்
வழிகாட்டலோடு.

ஆனந்தம் மட்டும் நிலையாய்  நிலைத்திருக்கும்.
எந்த பாதிப்பும் இல்லாமல்.

இந்த நிலையை அடையமுடியும்
என்னால் முடியாது என்று நமக்கு நாமே
முட்டுக்கட்டை போட்டுக்கொள்ளுவது முட்டாள்தனமே  

Friday, April 18, 2014

கிருஷ்ணா நீ பேகனே பாரோ!

கிருஷ்ணா நீ பேகனே பாரோ!ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 
கவலைகளை
உன்னிடத்தில் தந்தேன் கண்ணா !

கருணையோடு அருள் செய்ய
வருவாய் கண்ணா! 

இறைவா நீ இல்லாத இடம் எது?

இறைவா நீ இல்லாத இடம் எது?

ஆம் நீ இல்லாத இடமே இல்லை.

ஆனால் அதை எனக்குதான்
உணர முடியவில்லை

நீ எப்போதும் உன்னை வெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறாய்,
நான் இங்கே இருக்கிறேன், இதிலே இருக்கிறேன்  என்று

நான்தான் அறிவில்லாமல் உன்னைத்
தவிர அனைத்தையும் அறிந்து கொள்கிறேன்.

கண்ணெதிரே நீ காட்சி கொடுத்தாலும்.
அதை கண்டு கொள்வது கிடையாது.

எதைத் தட்டினாலும் அதிலிருந்து
ஒலியாய் வெளிப்படுகிறாய்

எதை எதனுடன் உரசினாலும்
அதிலிருந்து வெப்பமாய், ஒளியாய் வெளிப்படுகிறாய்.

எல்லாவற்றிலும் நீராய் நிறைந்திருக்கின்றாய்

எல்லாவிடத்திலும் ஆகாசமாய் பரவியிருக்கிறாய்.

அதில்தான் அனைத்தும் வெளிப்படுகின்றன,
வளர்கின்றன. ஒருநாள் அதிலேயே மறைந்துவிடுகின்றன.

புலன்களுக்கு தெரிவதைத்தான் நான் காண்கின்றேன்.

புலன்களுக்குப் பின்னால்  நீ தான் இருந்து
அனைத்தையும் காண்கின்றாய், இயக்குகின்றாய்.
இருந்தும் அதை அறிய இயலாது என் அகந்தை தடுக்கிறது.
என் கவனத்தை  திசை மாற்றுகிறது.

என்னுள்ளே இருக்கும் உன்னை விடுத்து
மண்ணையும், பெண்ணையும், பொன்னையும்
நாடிதான் மனம் செல்கிறது. பிறந்தது முதல் மரணம் வரை.

வடிவத்தைத்தான் நான் காண்கின்றேன் ,
அதன் பெயரைத்தான் அறிகின்றேன்.
அதன் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும்
உன்னை என்றுதான் அறிவேனோ.?


அனைத்தும் ராம நாமத்தில் அடக்கம் என்பதை
 உணர்ந்தே அல்லும் பகலும் அதையே சொல்கின்றேன்.

அருகிலேயே அகத்தின் உறையும் உன்னை என்று உணர்வேனோ?


Wednesday, April 16, 2014

அம்பிகையே! அம்பிகையே !

அம்பிகையே! அம்பிகையே ! 
அன்பின் உருவமே
அம்பிகையே !

ஆற்றலின் பிறப்பிடமே
அம்பிகையே !
உந்தன் மலர்ப்பாதம் பணிகின்றேன்.

அலைகடலெனப் பெருகி வரும்
ஆசைகள் என்னை ஆட்டி வைத்தன
அனு  தினமும் என்னை

அவைகளெல்லாம்
காணாமல்  போயின
என் மனம் உன் திருவடியில்
லயித்த பின்னே

மாயையிலே மூழ்கிய என்னை
மனம் கனிந்து மீட்ட அம்பிகையே !

மாளாப்  பிறப்பறுப்பவளே
மகேஸ்வரியே !

திருவெண்காட்டில்
உறையும் பிரமராம்பிகையே
என்றும் என் உள்ளத்தை
விட்டு அகலாமல் நிலையாய்
நின்றருள் செய்வாயே.  

Monday, April 14, 2014

சத்குருவின் பாதங்கள்தான் நம்மை காக்கும்

சத்குருவின் பாதங்கள்தான் 
நம்மை காக்கும் 
சத்குருவின் பாதங்கள்தான் நம்மை
அனைத்து இன்னல்களிடமிருந்து காக்கும்.

சத்குரு யார்?

சத்  என்றால் உண்மை.
உண்மை  என்றால் பிரம்மம்.
அதை உள்ளபடி உணர்ந்தவர்.
மரண பயத்தை வென்றவர்.
எந்த நிலையிலும்
தன் அமைதியை இழக்காதவர்.

சீலம் உடையவர்.
குறை காணாதவர்.
எதற்கும் அஞ்சாதவர். அபயம் அளிப்பவர்.
ஆபத்துக் காலத்தில் அஞ்சி  ஓடாதவர்.

அன்புடையவர். ஆசைகளற்றவ்ர்
நன்மைகளை அளிப்பவர்.
தீமைகளை அகற்றுபவர். என்று
சொல்லிக்கொண்டே போகலாம்.
அவர்தான்  சத்குரு. .

மற்றவர்களெல்லாம்
வெறும் சத்தை  குரு

எவர் முன்பு ஒருவன் மனதில் ஐயங்களே
எழவில்லையோ அல்லது அவன் மனதில்
உள்ள கேள்விகளை அவன் கேட்காமலேயே
அனைத்திற்கும் பதில் கிடைத்துவிடுகிறதோ
அவர்தான்சத்குரு.

எவரை நினைக்கயிலேயே மனதில்
ஒரு இனம் புரியாத ஆனந்தம்
ஏற்படுகிறதோ அவர்தான் சத்குரு.

அப்படிப்பட்ட குரு ஒருவனுக்கு கிடைத்துவிட்டால்
அவன் எதற்கும், எங்கும், எதையும் நாடி
ஓடவேண்டியதில்லை.
அவனுடைய தேடல் முடிந்துபோயிற்று.

காமத்தை தெய்வங்களாலும்
வெல்ல முடியாது

சிவனை காமத்தில் ஆழ்த்த நினைத்த மன்மதனை சிவன் தன் நெற்றிக்கண்ணால் எரித்து    சாம்பலாக்கிவிட்டார்.

பரந்தாமன் மோகினி வேஷம் போட்டுக்கொண்டு வந்தபோது சிவபெருமானே உலகிலேயே பேரழகியான் பார்வதி தேவி அருகில் இருந்தும் காமத்தை அடக்கமுடியாமல் மோகினி மீது மோகம் கொண்டான்( நாரயணீயம்)

சூர்ப்பனகை  ராம லட்ச்மணர்கள்  மீது மோகம் கொண்டதை  தடுக்க இயலாமல் அவளை பங்கம் செய்து அனுப்பிவிட்டனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்த விஸ்வாமித்திரர்.
மேனகையின் அழகின் முன் தோற்றுப்போனார்.

சிவபெருமானையே தரிசித்து வரம்
பெற்ற பராக்ரமசாலியான  இராவணனே
சீதையின் அழகில் மயங்கி அழிந்து போனான்.

பகவான் ராமக்ருஷ்ண பரமஹம்சர்
தன்னை சோதிக்க அனுப்பப்பட்ட அழகிய விலை மாதர்களை
காளியின் திருவடிகளை நினைத்த அடுத்த கணமே உடல் விரைத்துப்போனார். அதைக் கண்ட  மாத்திரத்தில் அவர்கள் அலண்டு ஓடிவிட்டார்கள்.

காமம் எப்போது ஒழியும்?

காண்பதனைத்தும் பிரம்மம் என்ற நிலையை
அடைந்தால்தான் ஒழியும்.

புலன்களை வென்றால்தான்
காமம் தொலையும்.

தான் ஆண் அல்லது பெண் என்ற தேகாமிமானம்
தொலைந்தால்தான் காமம் அகலும்.

பெண் மீது கொண்ட மோகத்தினால்
நாரதரே பல துன்பத்திற்கு உள்ளானார்

எந்நேரமும் பகவானைப் பற்றியே சிந்தித்துக்கொண்டே
இருப்பவர்களைக் கூட ஒரு கணம் மாயை மயக்கி
பள்ளத்தில் தள்ளிவிடும்.

காமத்தை ஒழிக்க ஒரே வழி மனமே
இல்லாமல் செய்ய வேண்டும்.
மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கும்.
அதை தொடர்ந்து எல்லாம் இருக்கும்.

அதற்க்கு ஒரே வழி சத்குருவின பாதங்களை
சரணடைவதுதான். 

அகந்தை கொண்டு 
நம்மாலே எல்லாம் சாத்தியம்
என்று எண்ணினால் என்றும் வெற்றி காண்பது அரிது. 

Sunday, April 13, 2014

சித்திரை பிறந்தது


சித்திரை பிறந்தது 

சித்திரை பிறந்தது
"ஜய  ஜய" என்ற வெற்றி முழக்கத்துடன்


நம்மை சிறுமைப்படுத்தி, அடிமைப்படுத்தி
நம்மை சுரண்டிய வந்தேறிகள் நம் மீது
சுமத்தி சென்ற "சனவரி " புத்தாண்டை கொண்டாடுகிறோம்.
இன்னும் அடிமைகளாக

நல்லவற்றை போதிக்கும் ,நம் கலாசாரத்தை 
பறை சாற்றும் ,நலமாக வாழ வழி வகை சொல்லும்
தமிழ் புத்தாண்டை கொண்டாட  மறுக்கும்
சில புரட்டர்களின் செயலை புறந்தள்ளுவோம்.


இந்த கணத்திலிருந்து
சில விதிகள் செய்வோம்
அதை எந்நாளும் காப்போம்.

சித்திரை முதல் நம்மை
அழிக்கும் எதிர்மறை
சிந்தனைகளுக்கு
மனதில் இடம் கொடோம்

வேத மறைகள் கூறும்
சத்தியத்தை கடைபிடிப்போம்
தர்ம வழியில் செல்வோம்.

சித்திரை திங்கள் முதல்
மதியை மயக்கும் கள்
போன்றவற்றை ஐம்புலன்களாலும்
வெறுத்து ஒதுக்குவோம்.

விதியை நினைத்து நொந்து போகாமல்
மதியை இறைவனிடம் செலுத்தி
அவனருளால் அனைத்து இடர்களையும்
வென்று வெற்றி வாகை சூடுவோம்.

பொறுமைக்கு இடம் கொடுப்போம்
பொறாமைக்கு இடம் கொடோம்.

பொய்களைப் பேசி,புளுகுகளை அவிழ்த்து விட்டு
நம் பொன்னான நேரத்தையும்,
நம் பொருளையும்  நம் கண் முன்னேயே
கொள்ளையடிக்கும் சின்ன திரை
கயவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்போம்.

வாழ்வில் முத்திரை பதிக்க
தினமும் நித்திரையை குறைப்போம்.

அன்பே வடிவான் இறைவனை
உணர்ந்துகொள்ள அனைவரின் மீதும்
அன்பு காட்டுவோம்.ஆனந்தமாய் வாழ்வோம்.

கோடை அனல் வறண்ட ஏரி  குளங்களை
ஆழப்படுத்தி மாரியில் நீர் சேமிக்கவே,

ஆற்றில் பெருகி வரும் வெள்ளம்
அழுக்கடைந்த ஆறுகளை  சுத்தப்படுத்தவே

இன்பமும் துன்பமும் வாழ்வில் வருவது
உள்ளத்தை உறுதிப்படுத்தவே

இறைநாமத்தை சொல்லுவது
இதயத்தில் உறையும் இறைவனை
உணர்ந்துகொள்ளவே ,

நல்லதே  நினைப்போம்.
நல்லதே நடக்கும் 

Friday, April 11, 2014

அரியும் சிவமும் ஒண்ணு

அரியும்  சிவமும் ஒண்ணு 

 
கிருஷ்ணா நீ ஆநிரைகளை மேய்த்தவன்
அதனால் கோபாலன் என்று அன்போடு
பூஜிக்கப்படுகிறாய்ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 

பரமசிவனோ பசுக்களின் (ஆன்மாக்களின்)
தலைவன் அதனால் பசுபதி
என்று போற்றபடுகிறான்
மலைகளின் சிகரமாய் விளங்கும்
வேங்கடத்தில்  நித்திய வாசம்
செய்துகொண்டு யுகம் யுகமாக
நம்மையெல்லாம் காக்கும் வே ங்கடாசலபதியொ
(அனைவரையும் காப்பவன்) கோவிந்தன்
என்று துதிக்க்ப்படுகிறான்.
அரியும்  சிவமும் ஒன்று
அறியாதவன் வாயில் மண்ணு
என்பார்  நடுநிலையாளர்.

அறியப்படவேண்டிய சிவம் (தெய்வம்)
ஒன்றென்பார் ஒரு சிலர்
இரண்டும் ஒன்றென்று நீ காட்சி தந்தாய்
பண்டரிபுரத்தில் நரஹரி பக்தனுக்குஒளியும் ஒலியும் ஒன்றில் ஒன்று
ஒலி  ஒளியாகும்  ஒளி  ஒலியாகும்
சங்கரனும் நாரணனும் ஒருவரே என்றறிவோம் 

சண்டை சச்சரவு தவிர்த்து சத்தியமாய்
விளங்கும் இறைவனை உணர்ந்து
மன சாந்தி பெறுவோம் 

அறுபதிலும் உண்டு ஆனந்தமான வாழ்க்கை (2)

அறுபதிலும் உண்டு ஆனந்தமான  
வாழ்க்கை (2)

60 வயதாகிவிட்டால் மனதில்
சில முடிவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.முதலாவதாக  எனக்கு வயதாகிவிட்டது ,
இனி தன்னால் எதுவும் செய்ய முடியாது,
சுறுசுறுப்பாக இயங்க முடியாது போன்ற 
தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட வேண்டும்.

வயதாவது என்பது மூன்று வகைப்படும்

முதலாவது உங்களுடைய பிறந்த தேதியை
வைத்து கணக்கிடப்படும் வயது

இரண்டாவது நம்முடைய உடல் நலத்தை
வைத்து முடிவு செய்யப்படுவது

பிறந்த தேதியை நாம் மாற்றமுடியாது.
மாற்றமுடியாத அதைப் பற்றி
கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

ஆனால் நம்முடைய உடல் நலத்தை
நன்றாக பேணி வந்தால் வயதாகிவிட்ட விஷயம்
ஒரு பொருட்டல்ல. அது நம் கையில்தான் இருக்கிறது.

நம் கடமைகளை ஒழுங்காக செய்திருந்தோமானால் 
முதுமையைப் போல் இனிமையான பருவம் கிடையாது.
நிறைய ஓய்வு  நேரம் கிடைக்கும்

நம் வாழ்வில் பல காரணங்களினால்
நிறை வேற்றமுடியாத நம்முடைய
பல ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்
கல்வியை தொடரலாம்,
கலைகளை கற்றுக்கொள்ளலாம்.,
இனிய இசையை ரசிக்கலாம்
தியானம் செய்யலாம்.
சுற்றுப் பயணம் செய்யலாம்.
அனுபவங்கள் எழுத்தில் வடிக்கலாம்.

ஆன்மீக விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.
இதற்க்கு அளவே கிடையாது.

குழந்தைகளுடன் கொஞ்சி மகிழலாம்வாழ்க்கையை வெறுமனே
தொலைகாட்சி பார்ப்பதிலும், வயிறு முட்டத்  தின்பதிலும்,
தூங்கி கழிப்பதிலும் ஈடுபட்டால் உடல் பெருத்து, நோய்களில் கூடாரமாகிவிடும்.

அதை தவிர்க்க  ஒரு ஒழுங்கு
முறையை கையாளவேண்டும்.

உணவும் தூக்கம், நடைபழக்கம், வீண் வாக்குவாதங்களில்  ஈடுபடுவதைதவிர்த்தல்.,
தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ளுதல்,
அனைவருக்கும், கௌரவம் பார்க்காது உதவுதல்,
பொறுமையை கடைபிடித்தல், இனிமையாக பேசுதல்
கோபத்தை கூடியமட்டும் கட்டுப்படுத்துதல்.
கையில் கொஞ்சம் காசு சேமித்து வைத்தல்
போன்று சில வழிமுறைகளைக் கடைபிடித்தால்.
முதுமை இனிமையாகப் போகும்.
(இன்னும் வரும்) 

அன்பே சிவம்

அன்பே சிவம் 
எல்லோரும் இன்புற்றிருக்க 
நினைப்பதுவேயன்றி 
வேறொன்றறியேன் பராபரமே. !

Thursday, April 10, 2014

எது எதுவரை வரும் ?
எது எதுவரை வரும்?
வாழ்க்கையின் உண்மை அறிவோம் 
ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். 

வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை. 

ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழ...ைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது 

கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது. 

அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது. 

அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான். 

உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள். 

1. நான்காவது மனைவி நம்முடைய உடல் அழகு . அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. 

2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது. 

3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள். 

4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம். 

எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்
வாழ்க்கையின் உண்மை அறிவோம்
ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.
வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழ...ைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது
கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.
அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.
உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி நம்முடைய உடல் அழகு . அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது.
2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்

அறுபதிலும் உண்டு ஆனந்தமான வாழ்க்கை

அறுபதிலும் உண்டு ஆனந்தமான  
வாழ்க்கை 
இதுவரை உங்கள் குழந்தைகளுக்காக,  வாழ்ந்த நீங்கள் 60 வயதிலிருந்து உங்களுக்காக வாழத் தொடங்குங்கள். 

இதுவரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில்
புறங் கூறாமல் வாழ்ந்திருந்தால்
உங்கள் மனமும் உடலும்
உரமாக இருக்கும்.

உங்களுக்கு எதிரிகளை விட நண்பர்களே
அதிகமாக இருப்பார்கள்.

அப்படி இல்லையா?

இனிமேலாவது புறங் கூறுவதை 
விட்டுவிடுங்கள். உங்களை விரும்பாவிட்டாலும்
யாரும் வெறுக்க மாட்டார்கள்.

பொதுவாக 50 வயதைக் கடக்கும்போதுதான்
 பலருக்கு வாழ்க்கை கசக்கத் தொடங்குகிறது.

அவர்கள் உடல்நலத்தைஉதாசீனம் செய்ததின் 
விளைவுகளை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். 

தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல்
குழந்தைகளின் மீது அளவற்ற பாசம் காட்டியதால்
மோசம் போனதை உணரத் தொடங்குகிறார்கள்.

மற்றவர்கள் தங்களை மதிக்காமல் போவதும்,
பல விஷயங்களில் ஒதுக்கப்படுவதும்
மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

அவர்களின் அனுபவம் வாய்ந்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக
ஒரு தாழ்வு மனப்பான்மை அவர்கள் மனதில்
வேர் விடத் தொடங்கி விடுகிறது.

நாளடைவில் அது மரமாக வளர்ந்து
அவர்களின் மன நிம்மதியைக் குறைத்துவிடுகிறது.

ஆனால் உண்மையில்
அவ்வாறு எதுவும் இல்லை.

வாழ்க்கையில் ஒவ்வொரு  கால கட்டத்திலும்
ஒரு பொறுப்பு மனிதனுக்கு ஏற்ப்படுகிறது.
அதை செவ்வனே செய்து வந்தால். போதும்.

ஒரு  கால கட்டத்தில் அந்த பொறுப்புக்களை
 மற்றவர்களிடம்விட்டுவிட கற்றுக்கொள்ளவேண்டும்.

அதற்கு குழந்தைகளை சிறு வயதிலிருந்தே
பழக்கப்படுத்தப்படவேண்டும்

பெற்றோர்கள் ஒழுக்கமாக,
ஒழுங்காக வாழவேண்டும்.

அவர்களின் குழந்தைகளையும்
அது போல் வளர்க்க வேண்டும்.

குடும்பம் அன்பால் கட்டப்பட்ட
கோட்டையாக  இருக்க வேண்டும்

அது அகந்தையாலும் அடிமைத்தனத்தாலும் 
கட்டப்பட்டால் விரிசல் விழுந்து சரிந்துவிடும். 

அவர்களை தறுதலைகளாக வளர்த்துவிட்டால்
அவர்கள் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

 மாறாக அவர்களை சேர்த்து பராமரிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு  வந்துவிடும்.

மேலும் அவர்களால் அவர்களுக்கும் நிம்மதியில்லை.
அவர்களை அதுபோல் வளர்த்த பெற்றோர்களுக்கும் நிம்மதியில்லை.

ஆனால் எப்படி இருந்தாலும்
எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவத்தை
மனதில் வளர்த்துக்கொண்டால்.
வாழ்க்கை முதுமையில் இனிக்கும்.
(இன்னும் வரும்) 

Wednesday, April 9, 2014

முதலில் கொடுக்கக் கற்றுக்கொள் !

முதலில் கொடுக்கக் 
கற்றுக்கொள் !

இறைவன் நீ கருவில்
உருவான உடனேயே
உனக்கு அடுத்தடுத்து என்ன தேவையோ
அதைக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றான்.

முதலில் நீ இந்த உலகில் பிறவி
எடுத்திட தந்தையைக் கொடுத்தான்
அவன் கொடுத்த கருவை சுமக்க
ஒரு தாயைக் கொடுத்தான்.

அவளோ தான் உண்ணுவது அனைத்தையும்
உனக்காக கொடுத்து உன் உடலை  வளர்த்தாள்

நீ இந்த உலகத்தில் வெளிவந்ததும் உன் பசியாற
அவள் அன்பையும் பாசத்தையும்
கலந்து பாலைக் கொடுத்தாள்

நீ  உலகத்தில் இன்பமாக வாழ கோடிக்கணக்கான
மனிதர்களும் உயிரினங்களும், தாவரங்களும், பஞ்ச பூதங்களும்
உனக்கு தேவையான வற்றை வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றன

ஆனால் நீ என்ன செய்தாய் ?

எல்லாம் உனக்கு ,தனக்கு தனக்கு என்று அனைத்தையும் 
சுருட்டப் பார்க்கின்றாய். 

கொடுக்க கொடுக்கத்தான் இன்பம் 
என்பதைமறந்து போனாய்.

எடுக்க எடுக்க எல்லாம் வற்றி காலியாகத்தான்  போகும் 
என்பதை மறந்துவிட்டாய்.

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல்
மனம் புழுங்கிச் சாகின்றாய்
இந்த நிலை உனக்கு தேவையா?

தாவரங்கள் இந்த உலகில் பிறந்ததுமுதல் தன்னிடம் உள்ள அனைத்தையும்  பிறருக்காகவே வழங்கி தங்கள் வாழ்க்கையை 
பயனுற வாழ்கின்றன இறைவன் அதற்கு வேண்டிய அனைத்தையும் அவைகள் இருக்கும் இடத்திலேயே வழங்குகிறான். 

மனிதா நீ மட்டும் ஏன் பேய் போல் அங்குமிங்கும் அலைகின்றாய்

உதவுவதற்கு அங்கும் இங்கும் 
சுற்றி திரிய வேண்டாம். இருக்கும் இடத்திலிருந்தே 
மற்றவர்களுக்கு உதவலாம். உதவுவதற்கு அன்பு நிறைந்த மனம் இருந்தால் போதும். 

அதற்க்கு அன்பே உருவாய் விளங்கும் இறைவனான ராம நாமத்தை
உச்சரித்து வந்தால் ;போதும் மனதில் உள்ள அத்தனை அழுக்குகளும் விலகிவிடும். 

அகந்தை கொண்டு அலையாதீர் அடிபட்டுச் சாகாதீர் !

அகந்தை கொண்டு அலையாதீர் 
அடிபட்டுச் சாகாதீர் !

எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்
அதாவது தலையே முதன்மையானது

தலையில்லாதவற்றை
முண்டம் என்று கூறுவர்

இந்த உடலோ அல்லது இந்த உலகமோ
இயங்க ஒரு தலை(மை) வேண்டும்.

இந்த அண்ட  சராசரங்களையும்
இறைவன்தான் நெறி பிறழாமல்
ஆட்டிவைக்கின்றான்.

அவன் ஆணைக்கு கட்டுப்பட்டு
பஞ்ச  பூதங்களும்
செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன

அவன் ஆணைக்கு கட்டுப்பட்டு
இயங்கவேண்டியவர்கள்தான் நம்
போன்ற மனிதர்களும். 

உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களுக்கும்
இந்த விதிபொருந்தும்.

ஒரு சாதாரண ஆணிக்கும் தலை இருக்கிறது.
அது ஒரு மரத்திற்குள் இறங்குவதர்க்கோ அல்லது ஒரு சுவற்றில் இறங்குவதர்க்கோ  சுத்தியால் பலமுறை அடி வாங்குகிறது.

அதுபோல்தான் மனிதர்களும் தலைக்கனம் பிடித்து அலைந்தால் இறைவனிடம் இழப்புகள், தீராத நோய்கள், ஏமாற்றம், மரணம் என பலவிதமான  அடிகளை தொடர்ந்து வாங்கிக் கொண்டேதான் இருக்கவேண்டும்.

கோள்களே சூரியனை சுற்றி
ஒளியையும் சக்தியையும் பெறுகின்றன.

அதுபோல்தான் சக்தியூட்டப்பட்ட ஆலயங்களில் உறையும் இறை மூர்த்தங்களை சுற்றி வந்தால் நம் துன்பங்கள் 
விலகும், மனம் அமைதி பெறும் வினைகள் அகலும்.

ஆலயங்களில் இறைவனைத் தவிர   இதர சிந்தனைகளை விடுத்து 
நம் மனதை ஒருமுனைப்படுத்திவணங்கவேண்டும். 

அப்போதுதான் ஆலயம் செல்வதின்   நோக்கம் நிறைவேறும். .
.
இந்த உண்மையை உணர்ந்த ஞானிகள் 
அகந்தையை விடுத்து இறைவனின் 
விளையாட்டை ரசித்து இன்புறுகிறார்கள். 

அகந்தையை அவர்கள் விட்டுவிட்டதால்
அவர்களுக்கு எந்த பொருளின் மீது மோகமும் இல்லை
அதனால் விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை.
அவர்கள் உள்ளம் தெளிவாக இருக்கிறது
மனதில் எந்த அசுத்தமும் இல்லை.

சுத்தமான நீர் நிலையில் உள்ள அனைத்தும்
தெளிவாக தெரிவதுபோல் முக்காலமும்
உணர்ந்தவர்களாக தன்னை அண்டி வருபவர்களின்
துன்பத்தை இறைவனின் அருள் கொண்டு
அறிந்து அதை போக்குகிறார்கள்.

அகந்தை கொண்டவர்களின் மனது காம குரோதம், சுயநலம் இவற்றால் கலங்கி குழம்பி போய்  உள்ளதால்  அவர்களால் எந்த தெளிவான் முடிவும் எடுக்க முடியாது .

அவர்களும் துன்பப்பட்டு பிறருக்கும் துன்பத்தை தருகிறார்கள்.

அவர்களால்தான் இந்த உலகம் இன்று கொடும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறது.

எனவே தலைக்கனம்  இல்லாமல் இருப்போம்.

தலைவனான இறைவனின் ஆணைக்குட்பட்டு இயங்குவோம்.
நாமும் இன்பமாக இருப்போம்.

நம்மை சுற்றியுள்ள இந்த உலக உயிர்களுக்கும் இனபமாய் இருக்க உதவுவோம்ராம நாமத்தை எப்போதும் சிந்தையில் வைப்போம்
சிரமமின்றி இவ்வுலக வாழ்வை சிறப்பாக வாழ்வோம்