Sunday, April 6, 2014

இறைவன் வகுத்த விதியை மாற்ற?

இறைவன் வகுத்த விதியை மாற்றவோ 

அல்லது சிதைக்கவோ யாராலும் இயலாது.


பிறவிலேயே உயர்ந்த ,விலை மதிக்க முடியாத, 
மீண்டும் கிடைக்காத ஒரு வரப்ரசாதம் மனிதபிறவிதான் 



இந்த உலகம் இறைவன் வகுத்து அளித்த விதிகளின்படி இயங்கி கொண்டிருக்கிறது. அந்த விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் நாமும் இயங்கிகொண்டிருக்கிறோம்.

அந்த இறைவன் வகுத்த விதியை மாற்றவோ அல்லது சிதைக்கவோ யாராலும் இயலாது.

 மனிதர்கள் பூகம்பத்தை பற்றியோ, சுனாமியை பற்றியோ எவ்வளவு ஆராய்ச்சி செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. பூகம்பம் மற்றும் சுனாமி, புயல், வெள்ளம்.  வரும்போதுவரும் அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு போகும்.


இந்த உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு போர்கள்   நடந்துகொண்டிருக்கின்றன.கோடிக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மாண்டு போயிருக்கிறார்கள்.



மனிதனின் உழைப்பால் கட்டப்பட்ட மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும், கோயில்களும், மண்ணோடு மண்ணாக போயிருக்கின்றன. ஆனால் அவைகள் மீண்டும் மீண்டும் இந்த உலகில் இறைவனால் உண்டாக்கப்பட்டுகொண்டிருக்கின்றன.



அண்டத்தில் கோடிக்கணக்கான கோள்கள் சுற்றுகின்றன. நம்மால் காணமுடியாத தொலைவில் அவைகள் வெடித்து சிதறிக்கோண்டிருக்கின்றன.



தாயின் கருப்பைக்குள் சிசுவை பனிக்குடத்தில் வைத்து காப்பாற்றுவதுபோலிந்த உலகத்தை. காற்றுமண்டலம்,மற்றும் கடல் நீரை கொண்டும். எங்கோ உள்ள சூரியனிடமிருந்து கிரணங்களை அனுப்பி வெப்பத்தையும், ஒளியையும் தந்து நம்மை இறைவன் காத்துகொண்டிருக்கின்றான்.

அதே நேரத்தில் அவன் ஒவ்வொரு உயிரின் இதயத்தில் ஆன்ம ஒளியாக இருந்துகொண்டு. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் நம் உடலுக்கு அளித்து நம்மை இயங்க செய்கின்றான்.

அப்படிப்பட்ட இறைவனை நாம் எந்த கொள்கைக்குள்ளும் எந்த வடிவதிர்க்குள்ளும் அடைக்க இயலாது.

அவனை ,அந்த உயிர்கள்பால் அன்புள்ளம் கொண்டவனை, நாம் கேட்காமலேயே நமக்கு அனைத்தையும் தந்து நம்மை வழிநடத்தும் அந்த தயாபரனை,. நாம் மனதினால் நினைத்து,நினைந்து அன்போடு,நன்றியோடு வணங்கினால் நமக்காக அருள் செய்ய நம் இதயத்தில் அவன் காத்துகொண்டிருக்கிறான்.

தேவை அன்பு ஒருதான். வேறு எதுவும் நம்மிடம் அவன் கேட்பதில்லை. கலப்படமற்ற அன்பு. தூய அன்பு.பரிசுத்தமான அன்பு. எதிர்பார்ப்பிலா அன்பு. அதுதான் அவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றான்.

அதை அவனிடம் கொடுப்பதற்கு
 நாம் நம் அகந்தையை விட்டொழிக்கவேண்டும்.
அகந்தையை விட்டுவிடுங்கள்.
 நம்முள் இருக்கும் அதே இறைவன்தான்
எல்லா உயிரிலும் இருக்கின்றான்

அனைவரின்மீதும் அன்பை பொழியுங்கள்.
அன்பைபொழிய முடியாவிட்டால்
அங்கிருந்து அகன்றுவிடுங்கள்

பிறர்மீது குறை காணாதீர்கள்.
ஏனென்றால் நம்மிடம் உள்ள குறைகள்தான்
பிறர் மீது தெரிகிறது நாம் பார்க்கும் முக கண்ணாடியில் நம் முகம் தெரிவதுபோல். இந்த உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.

நாம் குறை காணும் மனிதர்களிடமும்நல்ல குணங்கள் இருக்கும் .
அதை பெரிதுபடுதுங்கள்.. அவர்கள் உங்கள் நண்பராகிவிடுவார்

இந்த உலகத்தில் தீயவைகள் இருக்கத்தான் செய்யும்,
தீயவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
அவர்களை முடிந்தால் திருத்துங்கள்.
ஆனால் அதற்க்கு முன் நீங்கள் உங்களிடம்
 உள்ள தீயவற்றை விலக்கிய பின்புதான்
அதை செய்ய வேண்டும்.
அதற்க்கு உங்களிடம் பொறுமை இருக்க வேண்டும்.
 நம்பிக்கை இருக்கவேண்டும்
இல்லையென்றால் மெளனமாக இருந்துவிடுங்கள்.
 காலம் அதைபார்த்துக்கொள்ளும்

எனவே எந்த மதத்தை சார்ந்தவராயினும் இறைவன் ஒன்றே.
அவரவர் அவனை அவரவர்க்கு
பிடித்த முறையில் அவனை நாடுகிறார்கள்.
சிலர் ஆர்வ மேலீட்டால் மற்றவர்களை சாடுகிறார்கள்.

எது எப்படியாயினும் நீங்கள் உங்கள்கொள்கையில்
முழு நம்பிக்கையுடன் இருங்கள்.
உங்கள் வாழ்வு சிறக்கும்.
உங்களை சுற்றியுள்ள இந்த உலகமும் செழிக்கும்.

பிறவிலேயே உயர்ந்த ,விலை மதிக்க முடியாத,
மீண்டும் கிடைக்காத ஒரு வரப்ரசாதம் மனிதபிறவிதான்

தேவர்களும்,தெய்வங்களுக்கும் கூட கிடைக்காது
இந்தவரப்ரசாதமாக கிடைத்த அபூர்வ
பொக்கிஷத்தை நாம் வீணாக இழந்துவிடக்கூடாது

.நாம் இறைவனின் கருவிகளாக நம்மை எண்ணிக்கொண்டு
எந்நேரமும்அவன் நினைவோடு.
 நம்முடைய கடமைகளை ஆற்றவும்
அனைவரிடமும் அன்போடு பழகவும்
 நமக்கு இறைவன் தரும் எந்த சோதனையையும்
அவன் அருட்ப்ரசாதமாக ஏற்றுக்கொள்ளவும்
நம்மை பழக்கிகொள்ளவேண்டும்.

2 comments:

  1. // நம்மிடம் உள்ள குறைகள்தான் பிறர் மீது தெரிகிறது // இதை தெரிந்து கொண்டாலே முக்கால்வாசி பிரச்சனை நீங்கி விடும்...

    ReplyDelete
  2. விதியை மாற்ற முடியுமா? முடியும். விதியம் மாற்ற முடியும் என்று விதியிருந்தால் மாற்ற முடியும்!!!

    //பிறர்மீது குறை காணாதீர்கள்.
    ஏனென்றால் நம்மிடம் உள்ள குறைகள்தான்//

    "சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா" - கவிஞர்

    ReplyDelete