Tuesday, October 16, 2012

Saturday, October 13, 2012

கல்லுக்குள்ளும் இருக்கிறான் இறைவன்


கல்லுக்குள்ளும் 
இருக்கிறான் இறைவன். 

இறை சக்தி இல்லாத
இடமே இல்லை
அது எல்லா இடத்திலும்
பொருட்களிலும் நீக்கமற
நிறைந்து பரவியிருப்பதால்
அதை பரம்பொருள் என்று அழைக்கிறோம்.

அந்த பரம்பொருளிடமிருந்துதான்
அனைத்து உலகங்களும்
அதில் உள்ள பொருட்களும்
உயிரினங்களும் வந்தன.

முடிவில் அவை அனைத்தும்
அந்த பரம்பொருளிலேயே
அயிக்கியமாகிவிடும்
பிரளய காலத்தின் போது

ஜடபொருள்களாகட்டும் அல்லது
உயிரினங்கலாகட்டும் அவைகளை
இயங்க வைப்பதும் இயங்காமல்
இருக்க வைப்பதும் அவன் செயல்தான்.
இந்த சராசரத்தில் அனைத்தும்
அணுக்களின் சேர்க்கையால் உண்டாகியவையே


அவ்வப்போது அந்த அணுக்களின் எண்ணிக்கை
கூடும் போதோ அல்லது குறையும்போதோ
அது புதிய புதிய வடிவங்களை
தோற்றுவித்துக்கொண்டிருக்கும்.ஒவ்வொரு அணுவிலும்
அந்த பரம்பொருள் ஆத்மாவாக உள்ளது.
எனவே இந்த பிரபஞ்சத்தில்
 உயிரில்லாத பொருள் என்று எதுவுமே கிடையாது
ஏனென்றால் ஒவ்வொரு அணுவிலும்
இறைவன் இருக்கின்றான்.

நாம் எப்போதும் வடிவங்களையே
காண்கின்ற காரணத்தால் அந்த வடிவத்திற்குள்
 இருக்கும் இறைவனை நாம் அறிவதில்லை.

இறைவன் எல்லா பொருட்களிலும்
நிறைந்திருந்தாலும் அதை அறிய
சரியான அணுகுமுறை தேவை.
இல்லாவிடில் நம் எதிரே அவன்
இருந்தாலும் நம்மால் அவனை அறியமுடியாது.

எப்படி காற்றில் பலவிதமான வாயுக்கள்
கலந்திருப்பினும் நம்மால் அதற்குரிய
கருவிகளின் துணையின்றி
அறியமுடியாதோ
அதுபோல்தான் இறை சக்தியும்..

பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட
கோயில்களில் உள்ள சிலைகளை மக்கள்
கல்லாகத்தான் பார்கின்றனர்.

ஆனால் அதற்குள் இறைவன்
மோன நிலையில் இருப்பதை
முயன்றால் அறியலாம்.

அதை விளக்கும் இரண்டு படங்களை
உங்களுக்காக கீழ தருகிறேன். கண்டு மகிழுங்கள்
.
முதல் படம்-சிலையாய் தோற்றமளிக்கும் படம் 

மற்ற 2 படங்கள்-மோனநிலையை
காட்டும் அதே சிலைகள்.  

Sunday, October 7, 2012

ஆமையும் நாமும்

ஆமையும் நாமும் 

ஒரு ஆமை தண்ணீரில்லா காட்டில்
சுற்றி திரிந்து கொண்டிருந்தது

காட்டிற்கு வேட்டையாட வந்தவர்களின்
கண்ணில் அது பட்டுவிட்டது.

தண்ணீரை தேடி அந்த ஆமை
அலைந்துகொண்டிருந்தது

ஆமையை பிடித்து சென்றவர்கள்
அதை ஒரு பெரிய பாத்திரத்தில்
நிறைய நீரை விட்டு அதில்
அதை போட்டார்கள்.

நீரில் விடப்பட்ட ஆமை தண்ணீரில்
சுற்றி சுற்றி ஆனந்தமாக வந்தது

பாத்திரத்தை தூக்கி அடுப்பின் மீது வைத்து
அதன் கீழே தீயை மூட்டினார்கள்.
சிறிது நேரம் கழித்து தண்ணீர் சூடாகி
கொதிக்க துவங்கியதும் அதில் போடப்பட்ட
ஆமை துடித்தது.
முடிவில் இறந்தது.
வேட்டையாடியவர்களின்
வயிற்ருக்குள் சென்றது செத்த
 பிணமாகி அவர்களின் உணவாக

இந்த கதை சொல்லும் பாடம் என்ன?

ஆமை என்பது நம் உயிர் தங்கியுள்ள இந்த உடல்
ஆமைக்கு ஒரு தலையும் நான்கு கால்களும்
இருப்பதுபோல் நமக்கும் ஐம்புலன்கள் இருக்கின்றன
ஐம்புலன்களின் மூலமாகத்தான் நாம்
இந்த உலகோடு தொடர்பு கொண்டு
இன்பங்களை அனுபவிக்கின்றோம்

அதே போல் துன்பங்களையும்
அனுபவிக்கின்றோம்.
இன்பங்களை
அனுபவிக்கும்போது மகிழ்கின்றோம்
துன்பங்களை
அனுபவிக்கும்போது வருத்தப்படுகின்றோம்.

புலன்களை கட்டுபடுத்திக் கொண்டால்
துன்பங்களில் சிக்காது மகிழ்ச்சியாய் வாழலாம்.

புலன்கள் வழி சென்றால் துன்பத்தில்
சிக்கி மரணமடைவது நிச்சயம் என்பதைத்தான்
இந்த ஆமையின் கதை நமக்கு காட்டுகிறது.   

Friday, October 5, 2012

தலைவன் என்பவன் யார்?

தலைவன் என்பவன் யார்?

யாரை நாம் தலைவனாக
ஏற்றுக்கொள்ள வேண்டும்?

இக்காலத்தில் உள்ளதுபோல்
ஆமாம் சாமிகளை சேர்த்துக்கொண்டு
பிறருக்கு தொல்லை கொடுத்துகொண்டிருக்கும்
எண்ணற்ற மனிதர்கள்தான் தலைவனா?

இந்த உலகில் எல்லோரும்
தலைவனாகிவிடமுடியாது
தலைவனாக திகழ்பவனுக்கு
பிறரை வழி நடத்தி செல்லும்
திறமைகள்  இருக்கவேண்டும்

நல்ல பண்புகள் இருக்கவேண்டும்.
அப்போதுதான் அவனை
பின்பற்றி செல்பவர்களும்
இந்த உலகும் நன்மை அடையும்.

தீய பண்புகள் உடைய தலைவர்கள்
திறமை உடையவர்களாக இருப்பினும்
நல்ல பண்புகள் இல்லாவிட்டால் அவர்களை
பின்பற்றி செல்பவர்களும்
இந்த உலகும் மிகுந்த துன்பத்திற்கு
ஆளாவது தவிர்க்கமுடியாதது.

இதே நிலைமைதான் கணக்கற்ற தெய்வங்களுக்கும்
அந்த தெய்வங்களை ஏற்று வழிபடும் பக்தர்களுக்கும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில சக்திகள் உண்டு.
ஒரு சில தெய்வங்களுக்கு பல சக்திகள் உண்டு.
ஆனால்  எப்படியும் ஒவ்வொரு தெய்வத்திற்கும்
ஒரு சில,ஏன் பல குறைகள் இருக்கும்.
அதன் சக்திகள் ஒரு வரையறைக்குட்பட்டுதான் அது இயங்கமுடியும்.
அதனால்தான் எண்ணற்ற தெய்வங்கள் இன்று வழிபடப்படுகின்றன.

புராணங்களிலே படித்திருக்கலாம்
ஒருவன் சக்திகளை பெற்று பிறர் மீது ஆதிக்கம்
செலுத்துவதற்காக தவம் செய்து,வரம் பெற்று,
பிறரை துன்புறுத்தி  இறுதியில் வரம் கொடுத்த
தெய்வத்தை விட ஒரு உயர்ந்த சக்தி பெற்ற
மற்றொரு தெய்வத்தால் மாண்டு போவதை பார்க்க முடிகிறது.

எனவேதான் நம் முன்னோர்கள் பலகாலம்
தவமிருந்து ஆராய்சிகள் செய்து.
எந்த சக்தியாலும் தோற்கக்கடிக்கப்படாத தெய்வம் எது
என்று கண்டிபிடித்து உணர்ந்து அதை தெளிவாக்கி உள்ளனர்.

 உணர்ந்தவர்கள் கீழ்நிலை சக்திகளை நாடுவதை விடுத்து.
எல்லா சக்திகளும்,கொண்ட தன்னை எந்த சூழ்நிலையிலும்
காப்பாற்றக்கூடிய  தெய்வங்களை தங்கள் தலைவனாக
ஏற்றுக்கொண்டு. நாடி தவம் செய்து உயர்ந்த நிலையை
அடைந்து மாறா இன்பத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர்.  

ஒரு தலைவனுக்குரிய தகுதிகள் என்ன
என்பதை கம்பர் வர்ணிக்கின்றார்.

உலகம் அனைத்தையும் தன்னிலிருந்து
உருவாக்குபவனும்,அதை நிலை பெற செய்பவனும்,
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவைகளை நீக்குவதும்
நீக்கியவற்றை  காணாமல் செய்து தன்னுள்ளே இழுத்துக்கொள்பவனும் போன்ற கணக்கற்ற செயல்களை விளையாட்டாக செய்யும் தகுதி எவன் உடையவனோ அவன்தான் தலைவன்
அப்படிபட்டவனைத்தான்
 நாங்கள் சரணடைவோம்  என்று பாடியுள்ளார்.

அப்படிப்பட்ட தெய்வம் யார்?
வேறு யாருமில்லை ஸ்ரீ ராமன்தான்
ஸ்ரீ ராமநாமத்தை பாடுவோம்
உயர்வு பெறுவோம். உய்வடைவோம்.