Monday, October 31, 2011

உப்பில்லாமல் உணவு


உப்பில்லாமல் உணவு
அனைத்து உணவு பொருட்களிலும் உலோகங்கள் உப்பு வடிவாக உள்ளன
அவைகள் நம் உடலுக்கு தேவையான சக்தியும் பாதுகாப்பும் அளிக்கின்றன
இந்நிலையில் நாம் உண்ணும் உணவில் கூடுதலாக உப்பு சேர்த்துக்கொள்வது
நமக்கு உடல்நலத்திற்கு உகந்தது அல்ல .உப்பு அதிக அளவில் சேர்ந்தால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதால் உடல் எடை கூடுகிறது..அதனால்தான் இறைவனே உப்பில்லாமல் உணவு உன்ன வேண்டும் என்று உப்பிலியாப்பனாக அவதாரம் செய்தானோ என்னவோ!

முருகா ,ஆறுமுகா,வடிவேலா,வள்ளி மணாளா ,ஷண்முகா
என்று எப்பெயரிட்டு உன்னை அழைத்தாலும் அக்கணமே உள்ளத்தில் தோன்றி
அருள் செய்பவனே என் உள்ளத்தில் காமம்,குரோதம்,லோபம்,மோஹம்,மதம்,மாச்சர்யம்
ஆகிய ஆறு பகைவர்கள் இருந்துகொண்டு உன்னை நினைக்கவிடாமல் செய்கின்றனரே அவர்களை சம்ஹாரம் செய்து எங்களை காப்பாயாக.

Tuesday, October 18, 2011


ராமாயணத்தில் ஸ்ரீராமனும் சுக்ரீவனும் நட்பு கொள்ளும் காட்சி பெருமாள் கோயில் தேரில் மர சிற்பமாக செய்து பொருத்தப்பட்டுள்ளது பல ஆண்டுகளுக்கு முன் ஹிந்து நாளிதழில் வந்த அந்த படத்தின் பென்சில் ஓவியம் பார்வைக்கு.பாத்திரங்களின் முக பாவங்கள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது

Monday, October 17, 2011


ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலப்பதுதான் முக்தி என்று சொல்லப்படுகிறது
ராதையை ஜீவாத்மாகவும் கண்ணனை பரமாத்மாகவும் கருதி வழிபடுவது பக்தியின் ஒரு நிலை அந்த நிலையை கண் முன்னே கொண்டு வரும் ஒரு புராதன ஓவியம்

Sunday, October 9, 2011


ஒரு ராம பக்தனின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும்?
96 கோடி முறை ராம நாமத்தை ஜபம் செய்து அவன் தரிசம் பெற்ற தியாகராஜா ஸ்வாமிகள் கூறுகிறார்.
ஒரு விஷயத்திலும் பற்றில்லாமல் ஜீவன் முக்தனாக
விளங்கி ஆனந்தமடைபவன்
தான் ஜப தபங்கள் செய்வதாக பெருமை கொள்ளமாட்டான்
கபடம் நிறைந்த உள்ளத்துடன் பேசமாட்டான்
தனக்கு நிகராக ஒருவரும் இருக்கக்கூடாது என்று ஊரூராக விளம்பரம் செய்துகொண்டு திரியமாட்டான்
ஆசை நிறைந்த மனதுடன் மனைவி மக்கள் மீது சதா மோகம் கொள்ளமாட்டான்
இல்லற வாழ்வில் கிடைக்கும் இன்பங்களே சதமென்று எண்ணமாட்டான்
சிவன் விஷ்ணு என்ற வித்தியாசம் பாராட்ட மாட்டான்
உலகில் தான் ஒருவனே பரிசுத்தமானவன் என்றெண்ணி பொய்கள் பல பேசி வயிறு வளர்க்கமாட்டான்
அனுமனால் தாங்கப்படும் ராமனின் திருவடிகளை என்றும் மறக்கமாட்டான்
ராஜச மற்றும் தாமச குணங்கள் அவனுக்கு இருக்காது
தனக்கு லாபம் ஒன்றும் கிடைக்கவில்லை என்று எண்ணி புலம்பமாட்டான்
ராஜயோக மார்க்கத்தையும் பகவானின் சித்தம் தன்னிடம் வர வழி தேடுவதையே முழு நோக்கமாக கொண்டிருப்பான்
பிறைசூடிய பெருமானின் தோழனாகிய ஹரியை ஒரு பொழுதும் மறக்கமாட்டன்

மேற்கண்ட காரணத்தினால்தான் இவ்வுலகில் ராம பக்தர்கள் விரல் விட்டு என்னும் அளவில் உள்ளனர்.இருந்தும் தற்காலத்திலும் ராம பக்தி செய்து நமக்கு வழி காட்டிய மகா ஞானிகளும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் யோகி ராம்சுரத்குமார்.


ராமபிரானின் பெருமையை தியாகராஜர் பலவாறு போற்றுகின்றார் ஒரு பாடலில்.
என்றும் அழியாத உருவததாய்.
மகிமையின் உறைவிடமான உன்னிடம் யாருடைய திறமை என்ன செய்யமுடியும்?
சத்தியமான உன் ஆணைகளை மீற யாருக்கு சாமர்த்தியம் உள்ளது?
(உன் ஆணையை மீற முடியாமல்) சூரியன் இரவு பகலாக மகாமேரு பர்வதத்தை சுற்றவில்லையா?
ஆதிசேஷன் மிகுந்த பாரமுள்ள இப்பூமியை சுமக்கவில்லையா?
காசிபதியாகிய சிவன் காசியில் மரணமடையும் மாந்தரின் செவிகளில் உனது
பெயராகிய தாரக மந்திரத்தை உபதேசிக்கவில்லையா?
(ஆகவே உன் கட்டளையை மீற யாருக்கு திறமை உள்ளது?)
எனவே இக்கணம் முதலே ராம நாம ஜபம் செய்யுங்கள்


ராம நாமத்தை எப்போதும் துதிப்பவர்களுக்கு மற்ற பக்தி சாதனங்கள் தேவையில்லை என்று தியாகராஜ ஸ்வாமிகள் பாடுகின்றார்.

மனம் தன்வயப்பட்ட ஞானிக்கு மந்திர தந்திரங்கள் எதற்கு?
இவ்வுடல் ஆத்மாவல்ல(தானல்ல)என்று நினைப்பவனுக்கு தவம் செய்ய வேண்டிய அவசியம் ஏது?
அனைத்தும் நீயே என்று எண்ணுபவனுக்கு (சன்யாசம் முதலிய)ஆசிரம வேறுபாடுகள் ஏது?
(உலகம்) கண்கட்டு ,மாயை என்று துணிந்தவனுக்கு பெண்டிர்(பொருள்)முதலியவற்றின் மீது மோகம் ஏது?
பிறந்தது முதல் கெட்ட விஷயங்களை நாடாமலிருப்பவனுக்கு,இறந்த கால எதிர்கால சிந்தனை எதற்கு?
ராஜாதிராஜனே! நிர்விகாரனே!இணையற்றவனே!மதிவதனனே!

ராம பக்தி பண்ணுவோம் திட சித்தத்துடன்

Saturday, October 8, 2011


Rama means rightiousness.
Rama means truth
Rama means embodiment of compassion
Rama means dispeller of ignorance
Rama nama is nectar
layman cannot understand his actions
It requires great knowledge and humility and love towards all creations around him
Only a few in this world understood him.
One is Lord Shiva.
He who has taught the sacred Rama Nama to Goddess Parvathi.
This truth was revealed by Bhishma to this world at the end of Kurushetra War.
Mahatma Gandhi has realised the importance of RAMA Nama and made everybody to chant RAMA NAMA.during freedom struggle.
Glory to Lord Rama