Friday, January 31, 2014

அகந்தை என்னும் பேய்

அகந்தை என்னும் பேய் 

இவனுள் புகுந்துகொண்டு
இவனறியாமல் எதிர்பாராமல்
தலைதூக்கி நஞ்சைக் கக்கும்
நச்சுப்பாம்பு ஒன்றுள்ளது.

நயவஞ்சகமாய் இருந்துகொண்டு
நல்லவன் போல் நடித்துக்கொண்டு
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமாய் வளர்ந்துகொண்டு
அழிக்கின்ற அரக்கன் அவன்

அன்பென்னும் இறைவனை
அடையவிடாது  செய்து நம்மை எல்லாம்
அதல பாதாளக் குழியில்
தள்ளும் அகந்தைதான் அவன்.

ஒவ்வொரு கணமும்
அவனால் படும்
இன்னலுக்கோர் அளவில்லை

மின்னல் போல் தோன்றிடுவான்.
நெடுநாள் பொன் போல் காத்து வந்த
மன அமைதியைக் நொடியில்
குலைத்திடுவான்

சிறியதோர் சொல் கிடைத்தாலும்
போதும் சீறி எழுந்திடுவான்
தீயாய் சினந்து அனைத்தையும்
அழித்திடுவான்.


நாளெல்லாம்  அரங்கா ! அரங்கா!
என்று கூறிடினும்ஒரு கணம்
மறக்கும் நேரம் அவன் விரிக்கும்
வலையில் விழுவதேனோ?

அய்யகோ அவனால் நான்
படும் துன்பம் சொல்லிலடங்கா !

அரங்கா ! இவன் மீது கருணை
காட்டிடுவாய்.இக்கணம் முதல்
என் மனதில் பல பிறவிகளாய்
குடியிருக்கும் அகந்தை பேயை
அடித்து விரட்டிடுவாய்.
 .
அழகிய சிங்கனே அருள் செய்திடுவாய்

அழகிய சிங்கனே 
அருள் செய்திடுவாய் 


அழகிய சிங்கனாய்
அழகிய தூணில் அவதரித்தாய்

அகந்தை கொண்ட
அரக்கனை   அழித்தொழித்தாய்

அடியவன் பிரகலாதனின்
அபயக் குரலுக்கு அன்று
செவி சாய்த்தாய்

இன்று சிலையாய் இருக்கும் நீ
அகந்தை கொண்டு அலையும்
எங்கள் மனதில் நிலையாய்
நின்று அதை அகற்றி
நலமுடன் வாழ
அருள் செய்திடுவாய் 

அபிராமி அந்தாதி (6)(காப்புச் செய்யுள் )

அபிராமி அந்தாதி (6)

அபிராமி அந்தாதி (6)

காப்புச் செய்யுள் 

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை 
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற 
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே- 
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு


காப்புச் செய்யுளுடன் நம்மைக் காக்கும் அபிராமி 
அன்னையைப் போற்றி பாடுவோம். 

காக்க அபிராமி இருக்கையிலே தனியாக 
கணபதியை தொழுது விட்டுதான் பாடவேண்டுமா 
என கேள்வி எழுகிறது 

அதற்கு அவர் முழு முதற்க் கடவுள் அதனால்  அவரை 
வணங்கிவிட்டுத்தான்  எந்த செயலையும் செய்ய வேண்டும். 
இல்லாவிடில் செய்யும் செயலில் தடைகள் ஏற்படும் 
அது  இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் 
விநாயகனை வணங்க வேண்டும் என்று சொல்வார்கள்
அப்படி செய்யாமையினால் பல தெய்வங்கள் 
துன்பத்திற்கு ஆளாயின என்று பல புராணங்களே பாடி
நம்மையெல்லாம் பயமுறுத்தி  வைத்திருகிறார்கள்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

தெய்வங்கள் நம்முடைய
பயங்களைப் போக்க வந்தவை 
நல்ல பயன்களை அளிக்க வந்தவை.
அலை பாயும் மனதை நிலை  நிறுத்த வந்தவை 
ஒருமையுடன் மனதை இணைக்க வந்தவை 
அதனால் எந்த செயலிலும் வெற்றியை 
அடைய வைக்கும் திண்மையை அளிக்க வந்தவை. 

வணங்கினாலும் வணங்காவிட்டாலும் 
அவன் நம்மையெல்லாம் வாழ்விக்க வந்தவன். 
அதனால் விநாயகன் பற்றிய பயம் வேண்டாம் நமக்கு 

இருந்தாலும்  யார் எந்த வேலையை தொடங்கினாலும்  
தடைகள் ஏற்படாமலிருக்க விநாயகனை வணங்கி 
தொடங்கும் வழக்கு வந்துவிட்டது.
நல்ல  வழக்கம்தான் தொடரட்டும் 

தடைகள் ஏன்  வருகின்றன ?

அனைத்துவிதமான் தடைகளையும் முன்னதாகவே 
அறிந்துகொள்வதற்கும், அதை நீக்கி கொள்வதற்கும் 
தேவையான அறிவை மனிதனுக்கு இறைவன் 
ஏற்கெனவே நமக்கு அளித்திருக்கிறான். 

ஆனால் எல்லா மனிதர்களும்
அந்த அறிவை வளர்த்துக்கொள்ளவில்லை.

 உதாரணத்திற்கு ஒரு வண்டியை ஓட்டுபவன் வண்டி ஓட்டுவதை மட்டும் 
அறிந்துகொண்டால் வண்டியை ஓட்ட மட்டும் முடியும்.

ஆனால் அது மட்டும் அவனுக்கு போதாது.

வண்டியை நன்றாக பராமரித்து அதை
நன்றாக இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அந்த வண்டிக்கு என நிர்ணயிக்கப்பட்ட
பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறக்கூடாது.

வண்டி ஓட்ட உரிமம் பெற்றிருக்க வேண்டும்,
சாலை விதிகளை பற்றி அறிந்திருக்க வேண்டும்

மனதில் தெளிவு இருக்க வேண்டும்.
சிறு பழுதுகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

திடீரென்று எதிர்பாராமல் 
நிகழும் பிரச்சினைகளை சமாளிக்கத்  தெரிந்திருக்க வேண்டும். 
விபத்து ஏற்ப்பட்டால் முதலுதவி செய்ய தெரிந்திருக்கவேண்டும்.

அவன் ஓட்டும் வண்டியினை பற்றிய
அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். 

வண்டியின் அடிப்படை இயக்கங்களை
பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இவ்வளவு தெரிந்திருந்தாலும் ஏதாவது ஒன்றை
பற்றிய அறிவில்லாததினால் அவன் துன்பத்திற்கும்,
தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடும்.அல்லது மற்றவர்கள் செய்யும் தவறுகளினால் அவன் துன்பத்திற்கு ஆளாகக் கூடும். 

எனவே வாழ்வில் தடைகள் ஒரு தவிர்க்க முடியாத அங்கம் என்பதை 
யாரும் மறுக்க முடியாது. 

தடைக்கற்கள்தான் வாழ்வில் உயர உதவும் படிக்கற்கள் என்று 
அனுபவசாலிகள் தெரிவிக்கிறார்கள். 

விளக்கில் உள்ள மெல்லிய உலோகத்தில் மின் சக்தி பாயும்போது அதில் ஏற்ப்படும் தடைகளை பொருத்துதான் அது அதிக ஒளி வீசுகிறது.

இஸ்திரி பெட்டியில் உள்ள உலோக சுருளில் ஏற்படும் அதை அடியில்உள்ள உலோகத் தகட்டை சூடாக்கி நமக்கு துணிகளை செம்மைப் படுத்த  உதவுகிறது.

இந்த உலகில் தடைகள்தான் நம்மை இயங்க வைக்கும் சக்தி.

தடைகளை நமக்கு சாதகமாக 
மாற்றும் வழிகளை வாழ்வில் கைக்கொளளுவோம்

 தடைகளே   நம்மை வாழ்வில்
 உயரவைக்கும் சக்தி. 

தடைகளைக் கண்டு 
அஞ்சவேண்டியதில்லை. 

தடைகளை வரவேற்போம்,
அறிவினால் தடைகளைத்  தகர்த்து 
உரம் பெறுவோம் வளம் பெறுவோம்.
அந்த சக்தியைப் போற்றுவோம்.

அந்த சக்தியைப் போற்றி அபிராமி பட்டர்
அவருக்கு ஏற்பட்ட துன்பத்திலிருந்து அவரைக் காத்துக் கொண்டார்.
நாமும் அவர் வழியினை பின்பற்றி அம்பிகையைத் துதித்து நம்முடைய துன்பங்களிலிருந்து விடுபடுவோம்.

இன்னும் வரும் 
How to meditate on GOD

How to meditate on GOD


Chant the name of GOD
But meditate on the form of GURU 

you will get realization soon. 

Swami Sachidanandha .Anandaasramam kanjankad Chanting of the 
name of GOD is very easy 

Because It requires only one thought 
(i.e) remembering his name only.

But constructing the image the GOD 
and install him in our heart is cumbersome.

It requires lot of effort.

The reason is that our mind has been
trained to worship  thousands of images of GODs 
for thousands of years. 

A laymen or a learned people 
are not aware of this.

Only a realized soul alone really 
understand this truth. 

In our tradition GURU alone and 
that too the SATGURU alone
is capable of removing our ignorance  
and also our arrogance which 

prevents us heading towards GOD
Such a SATGURU is GOD himself. 

As we see SATGURU often and prostate before him 
and hear his words. through  our senses with  full attention 

without any distraction.his form stick to our mind strongly. 
That is why it has been advised 
to meditate on the form of SATGURU 
who is the embodiment of 

several images as GODS 
we worshiped makes 

easy progress towards 
our journey of realization .
of our self.  

Freedom

Freedom

Every body wants
to be free

Everybody wants to be
from outside interference

Everybody wants to be from
inside negative emotions

Are they actually enjoy the freedom?

It is a question mark

Because nobody enjoys any freedom in this world
even though all people talk of freedom.

But nobody knows
what the real freedom means ?

Some think that there should not be any restrictions
for their activities. by  external force or internal force

But in the real life it is not so

There are thousands of restrictions imposed by the nature
and by the society on individuals obstructing their freedom
in hundreds of ways.

Emotions play a vital role in the enjoyment of freedom.
but it not lasts longer. Soon  a tragedy swallows the entire
happiness into life long sorrow in many cases

A man slave to his bad habits will never enjoy freedom
till he get out of them

A person with full of ego in the mind who always
 wants to rule over others cannot enjoy freedom
as along he sheds his ego.

A person full of fears in his mind about everything
cannot enjoy freedom even though he is
protected by armed guards

The religious heads put lot of restrictions
on their followers.

The ruling Govt. put thousands of restrictions
on everything  by way of force and lot of rules and regulations.

The parents and teachers impose
lot of regulations and restrictions on the children.


wherever we go ,to temple ,a public place
,from one place to another place ,and
from one country to another country
,lot restrictions. are imposed .

Freedom is curtailed on the basis of
poverty, race, color, religious faiths
believers, non believers. etc

It is seen from above
nobody is actually free

Under the circumstances what is the use of this human birth
which has no iota of freedom during the waking hours and
during the stay in this world?

Moreover the human birth consists of poverty,
hunger, old age,  pains, deceases, sorrows,unhappiness,
sadness and finally death.

Because of this our great saints prayed to
GOD that they don't want human birth at all

They want to be with GOD himself
to live in eternal bliss free from all troubles.
Thursday, January 30, 2014

குறை ஒன்று (ம் ) இல்லை மறை மூர்த்தி கண்ணா !(part-2)   
குறை ஒன்று (ம் ) இல்லை 
மறை மூர்த்தி கண்ணா ! (பகுதி-2)
வாழ்க்கையில் எவ்வளவோ
சோதனைகளை சந்தித்தபோதும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.பொதுவாக
தன்னுடைய பாதிப்புகளை
வெளிப்படுத்தியது மிக அரிதே
என்று மாத்ருபூமி இதழ் ஆசிரியர்
திரு. கே பி. கேசவமேனன் தெரிவிக்கிறார்.

அவர் குறை ஒன்றும் இல்லை என்ற பாடலை இயற்றியபோது என்ன  நினைத்து அதை எழுதியிருப்பார். என்று பார்க்கும்போது ,அதை எம் எஸ். சுப்புலட்சுமி அவர்களின் தெய்வீகக் குரலில் கேட்கும்போது அவர் பாடுவதற்காகவே அந்த பாடலை இயற்றி இருப்பார்  என்றே தோன்றுகிறது.

அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது பாடிய பிரார்த்தனைப் பாடல்களும், தேசிய கீதங்களும் அனைவரையும் அன்று மெய் மறக்கச் செய்தன. இன்றும் அப்படியே. கேட்பவர்களின் மனதை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பதில் யாருக்கும் மறு கருத்து  இருக்க நியாயமில்லை.

வைணவ இலக்கியங்களில் அவருக்கு உள்ள புலமை ராமாயணம், மற்றும்மகாபாரதம் என்னும்  நூலாகவெளிவந்தது

வைணவ சித்தாந்தத்தில் சரணாகதி தத்துவம் முடிவான் தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறை ஒன்றும் இல்லை என்ற பாடலில் தொகுத்து கொடுத்திருக்கிறார் என்றால் மிகையாகாது.

அனைவரும் அதைபாடி பொருள் உணர்ந்து கலங்கிய மனம் தெளிவு பெரும்  வகையில் வரிகள் அமைந்துள்ளதுதான் இன்று அனைவரும் பக்தியுடன் பாடி பரவசம் அடைவதற்கு உதவியாக உள்ளதுபண்டித நேரு ராஜாஜி அவர்களைப் பற்றி கூறுகையில் அவர் ஒளி  வீசும் தெளிவான அறிவினைக் கொண்டவர், தன்னலமற்ற  தியாகி, எந்த பிரச்சினைகளையும் தன்  கூர்ந்த அறிவினால்  ஆராய்ந்து தெளிவான விளக்கும் ஆற்றலைக் கொண்ட அவர் சுதந்திர இயக்கத்திற்கு ஒரு சொத்தாக விளங்கியவர் என்று போற்றுகிறார்.

 

மகாத்மா காந்திக்கு பல விதங்களில் நல ஆலோசனைகளை கூறியவர் ராஜாஜி என்று ஹிரேன் முகர்ஜி தெரிவிக்கிறார்.மூதறிஞர் ராஜாஜியைப் போல் வாழ்வில்
தொடர்ந்து துன்பங்களையும் சோகங்களையும் அனுபவித்தும் நிலை குலையாமல் நின்றவர்கள் வெகு சிலரே.

இன்று ஒரு சிறிய ஏமாற்றத்தைக் கூட தாங்கும் மன உறுதி இல்லாமல் தற்கொலைக்கு முயலும் கோழைகள் அவரின் வாழ்க்கை  வரலாற்றைப் படித்தால் நிச்சயம் மன உறுதி பெறுவது திண்ணம்.

அவருடைய வாழ்க்கை முழுவதும்,துன்பங்களும் துயரங்களும் நிரம்பியது. இருந்தும் அவர் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நாட்டின் விடுதலைக்காக  அர்ப்பணித்துக்கொண்டார் என்றால் அவருடைய மன உறுதியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்ன அவர் வாழ்வில் நடந்தது ?

(இன்னும் வரும்)

படங்கள்-நன்றி-கூகிள்

Wednesday, January 29, 2014

குறை ஒன்று (ம் ) இல்லை மறை மூர்த்தி கண்ணா !குறை ஒன்று (ம் ) இல்லை 
மறை மூர்த்தி கண்ணா !

இந்த பாடலை
பாடாதவர்கள் இல்லை
கேளாதவர்கள். இல்லை

இதை பாடுபவர்கள் அனைவரும்
இறைவனை நோக்கி மனதில் குறை ஒன்று இல்லை 
ஏராளமாக இருகின்றன என்று வெளியில் சொல்லாமல் 
குறை இன்றும் இல்லை என்று பாடுவதுதான் உண்மை.

நீங்கள் அவர்கள் பாடுவதைப் பார்த்தாலே குரலில் வந்து போகும்  ஏற்ற இறக்கங்கள் அதை காட்டிக் கொடுத்துவிடும்.அது சரி இந்த பாடலை முதலில் பாடி
இசைஉலக ரசிகர்களுக்கு  அறிமுகம் செய்து வைத்தவர் யார் என்று அனைவர்க்கும் தெரியும். சொல்லவேண்டியதில்லை.இந்த பாடலை இயற்றியவர்
மூதறிஞர் ராஜாஜி என்றழைக்கப்படும் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி என்ற
உண்மை பல பேருக்கு தெரியாது.

அவர் எந்த சூழ்நிலையில் இந்த பாடலை இயற்றினார்
என்பதை அறிந்துகொண்டால். நன்றாக இருக்கும்

வாழ்வில் எவ்வளவோ இன்பங்கள் இருந்தும் அதன் ஊடே வந்து தன் சுவடுகளை ஆழமாகப் பதித்து விட்டு போகும் ஏதாவது ஒரு சில துன்பங்களின் நினைவில் சிக்கி தவிக்கும் மனிதர்களுக்கு
இந்த பாடல் உண்மையிலேயே ஒரு ஆறுதல் நிச்சயம் தரும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் நாள்
அவருடைய நினைவு நாள் வருகிறது.

ஞானக் கருத்துகளை தன்னகத்தே
கொண்ட பாடல் இயற்றபட்டதர்க்கு மூல காரணம்
மூதறிஞரின் வாழ்வில் சந்தித்த சோதனைகளும்
வேதனைகளும் ஏற்படுத்திய முதிர்ச்சியின்
விளைவாகத்தான் இந்த பாடல் தோன்றியதாக
கோபால் காந்தி தெரிவிக்கிறார்.

இன்னும் வரும் 

தெய்வங்களும் பெண்களும்

தெய்வங்களும் பெண்களும் 

நம்முடைய மத சம்பிரதாயங்களில்
கடவுளுக்கு மனைவிகளும்,
குழந்தைகளும்
சகோதரி, மாமன் , மருகன் போன்ற உறவுகள்
உண்டு. என்பதை அனைவரும் அறிவோம்.நாமெல்லாம் பெண்களால்
இன்பமும் துன்பமும் அடைவதைப்போல்
நம்மால் வணங்கப்படும் தெய்வங்களும்
அனுபவிப்பதைப்  பார்த்து
ஆறுதல் அடைபவர்களும் உண்டு.

அதே நேரத்தில் சில உண்மைகளை நமக்கு
உணர்த்துவதற்காகவும், நமக்கு அருள் செய்வதற்காகவும்
தெய்வங்கள் அவ்வாறு நடந்துகொள்கின்றன  என்று அதற்க்குபகவானின் லீலைகள் என்று ரசித்து மகிழ்வதும்  உண்டு.எது எப்படி இருந்தாலும் பல ஆயிரம் ஆண்டுகளாக
இந்த லீலைகளை பக்தர்கள் மகிழ்ச்சியோடு
அனுபவித்து வருகிறார்கள். அந்த லீலைகளுக்கு
அவரவர்க்கு தோன்றிய வகையில் விளக்கங்களை
ஆன்மீகத்தில்புகுத்தி ஆனந்தம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகத்தை ஆட்டிப் படைப்பது மூன்று குணங்களே
அவை சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று என்று பொதுவாக
ஓரளவிற்கு ஆன்மீகத்தில் தொடர்புஉள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும்.

தெய்வங்களும் இதற்க்கு விதி விலக்கல்ல .
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இந்த மூவருமே இந்த மூன்று குணத்தின் வடிவங்கலாகதான் புராணங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள்.

தெய்வங்களாகிய அவர்களையே
அந்த குணங்கள் ஆட்டி படைக்கும் போது உணர்ச்சிகளுக்கு
அடிமையாகிய நம்மை அந்தமூன்று குணங்கள்
ஆட்டிப் படைப்பதில் ஒன்றும் வியப்பில்லை.

பெண்களால் மனிதன் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல .
அவள் தாயாகி இருந்துகொண்டு பாசம் காட்டி
 படுத்தும் பாடு  ஒரு பக்கம்

பருவ வயதில் தன் கவர்ச்சியைக் காட்டி
கண்களால்  காம வலையை வீசி காதலில்
டிக்க வைத்து அவனை பித்தனாக்கி
சில நேரங்களில் மிருகமாக்கிவிடுகிறது.இன்னும் வரும்

யாராவது விளக்கம் தர இயலுமா?

யாராவது விளக்கம் 
தர இயலுமா? 


Disciples  are not following 
the ideals of their masters

They become only idolaters
says Sarvapalli Radhakirishnnan

பகவான் ரமணர் மனதில் உள்ள
எண்ணங்களை அழித்துவிட்டால்
மனம் என்று என்று ஒன்று இருக்காது.
ஆத்மாதான் எஞ்சி நிற்கும் என்கிறார்.
அப்படியே ஆன்மாவில்
இருந்துவிட முடியாதா?

மீண்டும் பூஜை, வழிபாடு,பிராத்தனைகள் ,
கர்மாக்கள்,
பரம் அபரம் என்று செய்துகொண்டு
மீண்டும் சிவலோகம், கோலோகம்,
வைகுண்டம் என்று போய்க்கொண்டுதான்
இருக்க வேண்டுமா?


மனதை காலி செய்வதே
பெரும் வேலை
அதற்கே  பல்லாயிரம் ஆண்டுகள்
ஆகி விடுகிறது என்கிறார்கள்.

பிறகு மீண்டும் இறைவனைப் பற்றி யாரோ பாடிய /இயற்றிய
வர்ணனைகளை படித்து பாடி  மீண்டும்
எதற்கு மனதை நிரப்ப வேண்டும். ?

ஆன்மாவில் மனம் லயித்திருக்கும்போது
எந்த எண்ணங்களோ, இந்த உலகமோ,
 உடலோ எதைப் பற்றியும் சிந்தனை
இல்லாமல் நிம்மதியாக இருக்கிறதே?

அப்படியே விட்டுவிடக்கூடாதா?

ரமணர் அடைந்த அந்த நிலையை அடைந்தவர்கள்
யாராவது இருந்தால் விளக்கம் தர வேண்டுகிறேன்


Tuesday, January 28, 2014

DECIDE YOURSELF


DECIDE YOURSELF 

I am the mind 
I am the body 
are only illusions 

I am the self 
I am the atma 
are only available solutions.
Says Bagavaan Ramana The state before going to
sleep is a long dream of
names and forms 

The state before the
deep sleep seeing names and forms
is a short dream 

During the deep sleep 
there is no knowledge of
mind and body and no dreams 
and screams of fear and  anxiety 

when a river merge with the 
ocean it loose its name 
so also when the mind merge with
the atman loose everything in it.

when the mind completely dissolved
the atman shines in its full glory 
as a sun free of clouds shines in the sky 

when the mind forgets the 
atman all the thoughts of I and body 
the world of names and form appear 
in our consciousness 

when the mind thinks about the self alone 
forgetting everything constantly 
the thought of the body and world 
which gives us untold suffering 
disappears. 

oh seeker.!
why not you make sincere efforts to retain the 
small amount of bliss enjoyed during deep sleep 
daily permanently in your heart?

oh seeker !
Decide yourself which do you prefer?

To remain with the mind and suffers 
for millions of years or
 to remain permanently  in the self 
enjoying eternal bliss? 

Decide yourself. 

ROOT CAUSE OF SUFFERINGS

ROOT CAUSE OF SUFFERINGS 

The  root cause of all our  sufferings
is due to I and MINE 

The "I" ness makes you think
that you are superior
to everybody.

This thought makes you to
 behave arrogant towards others

This behaviour creates
lot of enemies. for the person
who is affected by this
dreadful decease

Even though this quality brings
some amount of success in the
initial stage but it brings
their downfall soon.

The next quality is "MINE" ness

It is also a landmine
which will explode one day
and brings disaster

If you want to live with harmony
with other beings. and also
with peace of mind the
above two qualities should be
given a send offThe both are called "EGO" which
actually exists in the mind only.

A small baby  has no ego

He/she  is always happy.
both inside its heart which
expressed in it face.It is playful and bring joy to
everybody who comes in
contact with he/she.

We must understand this and
enjoy the life

We must not
allow our mind to
entertain EGO which is the
root cause for all our sufferings

Monday, January 27, 2014

அண்ணாமலை ஸ்வாமிகள்


அண்ணாமலை ஸ்வாமிகள் 
காந்தத்துடன் தொடர்புடைய
இரும்பும்காந்தமாகிவிடும்

என்பதுபோல் பகவான் ரமணருடன் இருந்து
அவரின் கருணைக்கு இலக்காகி
உண்மையை உணர்ந்த பெரியவர்களில்
ஒருவர். அண்ணாமலை சுவாமி

அவரை பேட்டி கண்ட வெளிநாட்டு பக்தரின்
காணொளி கண்டேன்.

மிக எளிதாக பகவானின் போதனையை
விளக்கியிருக்கும் பாங்கு என்னை கவர்ந்தது.

எப்படி என்றால் தொடர்ந்து நான் ஆன்மா என்றும்
காண்பதனைத்தும் ஆன்மாவின் விரிவாக்கமே என்று
 மனதை மறந்து நினைத்தால் போதும்
என்று விளக்கியுள்ளது. அருமை.

அனைவரும் கண்டு பயனடைய வேண்டும்
என்ற நோக்கில் இந்த பதிவுடன்
இணைத்துள்ளேன். கண்டு
பயனடைய  வேண்டுகிறேன்

https://www.youtube.com/watch?v=nqwebTmlocw

அபாயம் நீக்கும் உபாயம் எது?

அபாயம் நீக்கும் உபாயம் எது?

ஊனினை உருக்கி
உள்ளொளி பெருக்கி என்பார்கள்

நம் ஊனினை பெருக்க வைக்கிறோம்
வரைமுறை இல்லாமல்.

அதனால் அது நோயுற்று
அதை பராமரிக்கவே
நம் ஆயுள் போய்விடுகிறது,

நம்மால் உள்ளே
செல்லவே முடியவில்லை.

உள்ளே சென்றால் அல்லவோ
அங்குள்ள குப்பைகளைக் கண்டறிந்து
அவைகளை சுத்தம் செய்ய முடியும்.

எல்லாவற்றிற்கும் மூல காரணம் 
நம்முடைய நாக்குதான். 

அது எல்லாவற்றையும் தனக்கு தேவைப்பட்டாலும் சரி தேவைப்படாவிட்டாலும் சரி நாக்கு ,நாக்கு (எனக்கு எனக்கு ) என்று
சொல்லிக்கொண்டிருக்கிறது.

உபநிஷதங்களில் போற்றப்படும் வாக்கு என்ற ஓளியை இறைவன் அதற்கு அளித்திருந்தும் அது அதன் மகிமையை உணராமல் அதை தவறாக பயன்படுத்துகிறது. .


அதை நாம் நம் உடலின் 
வாட்ச் மேனாகப் போட்டதுதான் 
தப்பாகிப் போய்விட்டது, 

அதுதான் நமக்கு வேண்டாதவைகளை
உள்ளே அனுப்பிக்கொண்டு நமக்கு
சொல்லொணா துன்பங்களைக்
கொடுத்துகொண்டிருக்கிரது.

பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசி
மற்றவர்களிடம் வெறுப்பையும்
விரோதத்தையும் சம்பாதித்துக்  கொடுக்கிறது.

அதனால்தான் நாம் பலவிதமான
தொல்லைகளுக்கு ஆளாகிறோம்.

அது மனம் சொல்லும் பேச்சைத்தான்
கேட்கிறதே ஒழிய நம் அறிவு சொல்லும்
அறிவுரையைக் கேட்பதில்லை.

இத்தனைக்கும் அதை மிகவும்
பாதுகாப்பாக 32 ஆயுதம் தாங்கிய
காவலாளியை போட்டு அடக்கி வைத்தாலும்
அது எப்படியோ நாம் ஏமாந்த சமயம்
பார்த்து அதன் வேலையை செய்துவிட்டு
 உள்ளே போய்விடுகிறது.

அது செய்த வேலையின் பாதிப்பு
எந்த அளவிற்கு செல்லும் என்று
யாரும் அறியமுடியாது.

சில நேரங்களில் நம்
உயிரையே கூட கொன்றுவிடும்.

அதனால்தான் யாகாவா ராயினும்
 நா காக்க என்றார் திருவள்ளுவர். எனவே நாவிடமிருந்து நம்மைக் 
காத்துக்கொள்ள வேண்டுமென்றால் 
இந்த அண்ட சாராசரங்களைஎல்லாம் 
படைத்து காத்து ரட்சிக்கும் 
ராம நாமத்தை சொல்ல பழக்க வேண்டும் 


ஓவியம். தி ரா.பட்டாபிராமன் 


ஓவியம். தி ரா.பட்டாபிராமன் 


தன்  மூச்சுக்காற்றில் விஷத்தை வைத்திருக்கும் 
ஆதி சேஷன் மீது படுத்திருக்கும் ஆதிமூலமான
நாராயணனை அந்த கொடிய நஞ்சு 
ஒன்றும் செய்யாததைப் போல் 
நம்முடைய நாவும் நமக்கு தீமை செய்யாமல் 
இருக்கவேண்டுமென்றால் 
அவன் நாமத்தை சொல்வதை தவிர 
வேறு எந்த உபாயமும் நம்முடைய 
அபாயத்தை நீக்காது என்பதை
பக்தர்கள் உணரவேண்டும். 

Sunday, January 26, 2014

அடங்காத மனம் அடங்கும் அனுமனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டால்.

அடங்காத மனம் அடங்கும் அனுமனின் 
திருவடிகளைப்  பற்றிக்கொண்டால்.   ராமேஸ்வரத்தில் சிவ பூஜை செய்வதற்காக ஸ்ரீராமனுக்காக கொண்டு சென்ற லிங்கம் கீழே வைத்தவுடன் நகர மறுத்ததால் சிவலிங்கத்தை தன வாலில் கட்டி இழுக்கும் அனுமான். -ராமகிரி -ஆந்திரமாநிலம் 


விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும்
பொதுவான கடமைகள் உண்டு.

அது  என்ன என்று இவன்
சொல்லித் தெரிய வேண்டியதில்லை
அது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால் கடமையை செய்ய காசு கேட்கும்
பிறவிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மனிதர்களுக்கு என
பல கட்டாயக் கடமைகளை
சாத்திரங்கள் விதித்திருக்கின்றன

அவைகளை அவன் கட்டாயமாக
நிறைவேற்றித் தான் தீரவேண்டும்.

அவ்வாறு அவன் செய்ய
 கடமைப்பட்டிருக்கிறான்

அவைகளை அவன் நிறைவேற்றாவிடில்
துன்பத்திற்கு ஆளாவது தவிர்க்கமுடியாது.

அவைகள் என்ன என்பதை
சாத்திரங்களைப் படித்து தெரிந்துகொள்ளவேண்டும்
 அல்லது அது பற்றி அறிந்த பெரியவர்களிடம்
சென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏன் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்றால்
நாம் இந்த உலகத்தில் வாழ பல சக்திகளை
இறைவன் படைத்துள்ளான்.

அவைகள் நம்மிடம் எதையும்
எதிர்பாராமல் நமக்கு
உதவிக்கொண்டிருக்கின்றன.

அதைத் தவிர இந்த உலகில் உள்ள
ஜீவன்களும், தாவரங்களும், உயிரினங்களும் சில தன்னலமற்ற
மனிதர்களும்,சாத்திரங்களின் பொருளுணர்ந்து  மற்ற உயிரினங்கள் வாழ
அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை தவறாமல் செய்துகொண்டிருக்கின்றன.

உதாரணத்திர்க்கு மண்புழு எல்லாவற்றையும்
உரமாக மாற்றி பயிர்கள் செழித்து வளர உதவி செய்கிறது
அது நம்மிடம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. அதை துண்டாக வெட்டிப் பொட்டாலுல் அது தன கடமையை செய்கிறது. . விவசாயி உணவுப் பொருட்களை தனக்காக உற்பத்தி செய்வதில்லை. மற்றவ்ர்களுக்காகவும்தான் உற்பத்தி செய்கின்றான்.
அதில் எவ்வளவு நஷ்டம் வந்தாலும், துன்பம் வந்தாலும்
அவன் அதை செய்து கொண்டிருக்கிறான்.

ஒரு மரம் தன்னிடம் உள்ள அனைத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்துவிடுகிறது. முடிவில் தன்னையே கொடுத்துவிடுகிறது.
மீண்டும் விதையாகி முளைத்து தொடர்ந்து தன் பணியை செய்ய தொடங்குகிறது.

இப்படித்தான் மனிதர்களை தவிர உலகில் மற்ற உயிரினங்கள் அனைத்தும் தியாகம் செய்வதையே தங்கள் வாழ்வின் குறிகோளாகக் கொண்டு வாழ்கின்றன.

ஆனால் நன்றி கெட்ட மனிதன் எதையும் மதிப்பத்ல்லை .பிறருக்கு உதவி செய்யாமல் இருந்தல்லும் பரவாயில்லை. துன்பம் இழைப்பதை தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.

அகந்தை கொண்டு தானும் துன்புற்று பிறரையும் துன்பத்தில் ஆழ்த்தி பிறவிதோறும் துன்பத்தில் மூழ்கி மோசம் போய்க்கொண்டிருக்கிறான்.

இந்நிலை மாற வேண்டும்.
சாத்திரங்களின் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதன் உண்மைப் பொருளை. உணராது. அதைபழிப்பதும் இழித்துரைப்பதும் சிலருக்கு வாடிக்கை யாகிவிட்டது. அந்த போக்கினால்தான் இன்று அனைத்த் தர்மங்களும் அழிந்துவிட்டன. சுற்று சூழல் மோசமாகிவிட்டது. எந்த வகையில் அவனுக்கு நன்மை பயக்காது.

நல்லதோர் சத்சங்கத்தில்
இணைய வேண்டும்.

இணைய தளத்தில் நல்ல
விஷயங்களை நாடவேண்டும்

நாடிகளை தளர்ந்து போகச் செய்து
நம்மை நாசமாக்கி நரகத்தில் தள்ளும்
விஷயங்களை தேடி ஓடக்கூடாது.

அலையும் மனதை அடக்க வேண்டும்.
அதற்க்கு அரங்கனின் திருவடிகளை பற்றவேண்டும்.

குரங்குபோல் மரத்திற்கு மரம் தாவக்க்கூடாது.
அனுமனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டால்
அடங்காத மனமும் அடங்கும்.
அவன் தெய்வம் ராமனின்
திருவடிகளில் ஒடுங்கும்.

அடங்காத மனம் அடங்கும் அனுமனின் திருவடிகளைப்  பற்றிக்கொண்டால்.  

கடவுள் எங்கிருக்கிறார்?

கடவுள் எங்கிருக்கிறார்?

கடவுள் எல்லா
இடத்திலும் நிறைந்திருக்கிறார்அப்படி இருந்தும் அவரை நாம் ஏன்
காண முடியவில்லை ?

சிவவாக்கியர் நாதன்
நம் உள்ளிருககிறார்  என்கிறார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் இறைவன்
 மாசற்றார் மனதில் உள்ளான் என்று சொல்கிறார்,

விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லா
உயிரின் உள்ளும் வாசுதேவனாக
இறைவன் இருக்கிறான்.என்று சொல்லுகிறது

பிரகலாதன் தூணிலும் இருக்கிறான்,
துரும்பிலும் இருக்கிறான், உன்னிலும் இருக்கிறான்,
என்னிலிலும் இருக்கிறான். ஒவ்வொரு
அணுவிலும் இருக்கிறான் என்கிறான்.எல்லா இடத்திலும்இறைவன்
நிறைந்து  இருப்பதால் எங்கும்
அவனை தேடி அலையவேண்டியதில்லை

அதுவும் நமக்குள்ளே அவன்
இருப்பதால் வெளியே கூட அவனை
தேடி அலைய வேண்டியதில்லை

அப்படி இருக்க அவன்
எளிதில் அகப்படுவதில்லை.

எளிதில் என்ன ?
என்ன முயற்சி செய்தாலும்
அகப்படுவதேயில்லை.

எல்லாவற்றிற்கும் முதல் காரணம்
இறைவன் எப்படி இருப்பான் என்று
 யாருக்கும் தெரியாது.

கண்டவர்கள் உண்மையை
தெளிவாக சொல்லவில்லை.

அப்படி சொன்னவர்களும் அவரவர்
புரிந்துகொண்ட வகையில்
எழுதிவிட்டுப் போய்விட்டார்கள்.

நாம் நம்முடைய முயற்சியில்
வெற்றி அடையாமைக்கு காரணம்
அவநம்பிக்கை தான் காரணம்.

அவநம்பிக்கைக்கு காரணம்
நாம் நம்முடைய  பொருளை
திருடிய திருடனை
வழிகாட்டியாகக் கொண்டு
அவன் பின்னால் போய்க்
கொண்டிருப்பதனால்தான் .

எப்படி நமக்கு திருட்டுக்
கொடுத்த பொருள் கிடைக்கும்?
என்றும் கிடைக்காது.

அந்த திருடன்
வேறு யாருமல்ல
நம்முடைய மனம்தான்.

அவன்தான் நமக்கு போகாத ஊருக்கு
வழிகாட்டிக்கொண்டு நம்மை குழப்பிக்
கொண்டிருப்பதால்தான். நாம்
தெளிவில்லாமல் இருக்கிறோம்.

எனவே முதலின் நாம் செய்ய வேண்டியது
அந்த திருடனின் பேச்சைக் கேட்கக்கூடாது.

அவனை முதலில்
விரட்டி அடிக்க வேண்டும்.

எப்படி ?
அவன் காட்டும்
வழியில் போகக்கூடாது.பகவான் ரமணர் அறிவுறுத்தியுள்ளபடி
நம் மனதில் தோன்றும் ஒவ்வொரு
எண்ணங்களையும் விசாரித்து தெளியவேண்டும்.

தினமும் இந்த
விசாரணை நடைபெறவேண்டும்.

மனதில் உள்ள எண்ணங்கள் அழிந்தால் தான்
ஆன்மாவை மறைத்திருக்கும்  திரை விலகும்
நிலவை மறைத்த மேகம் அகன்றதும்
நிலவு ஒளி வீசுவதுபோல்
ஆன்ம ஒளி வீசும்.