Sunday, January 19, 2014

சற்குருவை நாடுவோம். சத்தியத்தை அறிந்துகொள்வோம்.

சற்குருவை நாடுவோம்.
சத்தியத்தை அறிந்துகொள்வோம்.  

யார் உயர்ந்தவர் ?
இது ஒரு பொதுவான கேள்வி

உயர்ந்தவர் யார் ?
அவர்களில் பல வகைகள் உண்டு.

சிலர் உழைப்பினால் உயர்ந்தவர்கள் என்பார்கள்.
சிலர் பண்பினால் உயர்ந்தவர்கள் என்பார்கள் சிலர்.

சிலர் தானும் உயந்த நிலையை அடைந்து தன்னை  நாடி வருபவர்களையும் தன்னை போன்று உயர்ந்த நிலையை அடையவழி காட்டுபவர்கள் சிலர்

ஆனால் தன்னை போலவே அனைவரையும் அவர்களின் அறியாமையைப் போக்கி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்பவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவே.

ஆதலால் நமக்கு தெரியாதவற்றை,
அறியாதவற்றைக் கற்றுக்கொடுத்து
நம்முடைய  அறிவில் தெளிவினை ஏற்படுத்தி
 நம்முடைய அறியாமையை நீக்குபவர்கள்
அனைவரும் குருவே ஆவர்

இந்த உலக குருவால் கற்பிக்கத்தான் முடியும்.
கற்பித்ததைக் கொண்டு மாணவன்தான்
முயற்சி செய்து உண்மையை உணர வேண்டும்.
அதுகூட ஒரு நிலை வரைதான் செல்லமுடியும்.

அவன் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால்
உண்மையை உணர்ந்து அந்த நிலையிலேயே
வாழ்ந்துகொண்டிருக்கும் சற்குருவினை
தேடி கண்டுபிடித்து .அவர் பாதங்களைச் சரணடைந்து
அவர் உள்ளம் குளிர்ந்தால்தான்
அவர் நம்முடைய அறியாமையை நீக்கி
உண்மையை அடையும் வழியில்
தோன்றும் தடைகளைக் கண்டறிந்து
அவைகளை நீக்கிகொள்ளும் வழியை
நமக்குக் கற்பிப்பார்.சத்குருவின் வார்த்தையை அப்படியே
தெய்வ வாக்காகக் கொள்ளுபவன்
பயனனடைவான்.

அகந்தை கொண்டவன் சாதனையில்
எந்த முன்னேற்றமும் இருக்காது.

உண்மைதான் இறைவன் எனப்படுகிறது.
அந்த உண்மையை உணர்ந்த சத்குரு
அந்த இறைவனே ஆவார். நமக்காக
இறைவனே சற்குருவாக வடிவம்
தாங்கி வந்துள்ளான் என்பதை
ஒரு சாதகன் உணர வேண்டும்.

இறைவன் ஒளிமயமானவன்.
ஆதவனாய் நம் முன் ஒளி  வீசுகிறான்.
அனலாய் காய்கிறான் 
 நிலவாய்க் குளிர்ந்து இதம் தருகிறான்.
 இருந்தும் நாம் அவன் அருகில்
செல்ல முடியுமோ?.

இருந்தும் அவன் தன்னுடைய
சக்திகளை ஒடுக்கிக்கொண்டு
நம்முள் ஆன்மாவாய் இருந்துகொண்டு
நம்மை யெல்லாம் வாழ்வித்துக் கொண்டிருக்கிறான்
.
கண் முன் காண்கின்ற
அவனை நாம் நெருங்க முடியாது.

கண்ணுக்குத் தெரியாமல்
நமக்குள் இருக்கின்ற அவனை காணும்
வழி நமக்குத் தெரியாது
இறைவனின் விசித்திரம் பாருங்கள்

பிறகு எப்படித்தான் அவனை
நாம் தெரிந்துகொள்வது?

அதற்குத்தானே அவன் நமக்கு
மனிதப் பிறவியை அளித்திருக்கிறான்.

அதுவும் அவனே எண்ணற்ற முறை ஸ்ரீராமனாகவும்)


கண்ணனாகவும்

இந்த பூமியில் அவதரித்து அவனை
அடையும் வழியை நமக்கு வாழ்ந்து
காட்டி இருந்தும் இந்த மானிட கூட்டம்
மாயையில் மதி மயங்கிக் கிடக்கிறது.

பேசாத மவுன குருவாக தக்ஷிணாமூர்த்தியாகவும்மகா பாரதப்போரின்போது  பேசும் குருவாககீதாசார்யனாகவும்
அவதரித்து ஞானத்தை போதித்தான்

அப்படி புனிதப்படுத்திய இந்த பூமியில் .
இன்னும் பல மகான்களையும், சித்த புருஷர்களையும்,
யோகிகளையும் ஞானிகளையும் 
தொடர்ந்துஅனுப்பி வைத்துக்கொண்டே
இருக்கிறான் நம்மைப் போன்றவர்களின்
அறியாமையைப் போக்க .

அப்படிப்பட்ட புனிதமான பூமியில்
பிறப்பதற்கு நாம் எவ்வளவு
புண்ணியம் செய்திருக்கவேண்டும். ?காமத்திலும் மோகத்திலும், அறியாமையிலும்,
அசுர குணங்களிலும் உழன்று வீணே சண்டையிட்டு மடிந்து
மண்ணுக்குள் போகும் குலங்களில்பிறக்காது
மாதவனை பற்றி சிந்தித்து, வணங்கி
அவன் அடியார்களோடு கூடி
(கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-ஆண்டாள்)
மகான்களின்
உபதேசங்களை கேட்டு அதன்படி வழிநடந்து
வாழ்க்கை நடத்தி உய்ய வகை செய்யும்
உத்தமப் பிறவியை வீணடிக்கலாமோ ?

ஒளி  இருக்கும் இடத்திலும்
இருள் இருக்கத்தான் செய்யும்.
இறைவனின் படைப்பு அப்படித்தான்.
இறைவன் மட்டும்தாம் முழுவதும்
ஒலிமயமானன்வன்.
ஒளிமயமானவன்
ஒங்காரமயமானவன்

ஒளி பிழம்பாய் விளங்கும் சூரியனிலும்
இருளான பிரதேசங்கள் இருப்பதை
கண்டுபிடித்துள்ளார்கள்.ஒளியை சிந்தும் விளக்கின் அடியில்
இருள் இருக்கத்தான் செய்கிறது.
அந்த இருளைப் போக்க மற்றொரு
விளக்கு தேவைப்படுகிறது.அதுபோலத்தான் ஞான சூரியனான
குருவின் அருளால்தான் நம்முடைய
முழு அறியாமையும் விலகும்.
என்பதை உணரவேண்டும்.இருள் என்பது வேறொன்றுமில்லை.
அனைத்தையும் இறைவன் செய்துகொண்டிருக்க
அவன் படைப்பாகிய நாம்
தான்  என்ற அகந்தைகொண்டு 
அலைகின்றோமே அதுதான் இருள்.
அதுதான் அறியாமை.

அந்த அறியாமையைத்தான் நாம்
நீக்கி கொள்ள வேண்டிய அறியாமை.
மற்ற உலக அறிவெல்லாம்.
இந்த உலகத்தில் இருக்கும்வரைதான் பயன்படும்
வயிற்றை நிரப்பிக்கொள்ள மட்டும்.சற்குருவை நாடுவோம்.
சத்தியத்தை அறிந்துகொள்வோம்.  

4 comments:

 1. // அதற்குத்தானே அவன் நமக்கு மனிதப் பிறவியை அளித்திருக்கிறான். //

  இதை முதலில் உணர்ந்தாலே போதும்...! சிறப்பான விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. // புனிதமான பூமியில் பிறப்பதற்கு நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும். ?//

  ;))))) உண்மையே !

  அருமையான திருஷ்டாந்தங்களை எளிமையாகச் சொல்லும் என் அண்ணா என்றும் வாழ்க வாழ்கவே !

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே

   Delete