Wednesday, January 22, 2014

அபிராமி அந்தாதி(4)

அபிராமி அந்தாதி(4)


அபிராமி அந்தாதியை பாராயணம் செய்யுமுன்
அதை இயற்றி நமக்களித்த அபிராமி பட்டரைப்  பற்றி
சில விவரங்களை அறிந்துகொள்வோம்

அபிராமி அந்தாதியை
இயற்றிய அபிராமி  பட்டரின்
உண்மையான பெயர் சுப்ரம்மண்யம்.

அவர் ஒரு தேவி உபாசகராய்
விளங்கியதனால்தான்
முதலும் முடிவும் அறியமுடியாத
அம்பிகையைப் பற்றி அந்தாதி
இயற்றிப் பாட  முடிந்தது.

வங்கத்தில் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சரை
அவரை சுற்றியுள்ள மக்கள் அவர் காளிமாதா  மீது கொண்ட
அபரிமிதமான பக்தியினால் எந்நேரமும் அவளை
உள்ளத்தில் கண்டு பரவச  நிலையை அடைந்து
பித்தரைப்போல் திரிந்ததை புரியாத காரணத்தினால்
அவருக்கு தொல்லைகள் தந்ததுபோல் அபிராமி பட்டரின்
 பக்தியை புரிந்து கொள்ள இயலாத அங்குள்ள
மக்கள் துன்பம் தந்தனர் என்பதே உண்மைஆனால் அதிலும் ஒரு நன்மை
இருந்துள்ளது என்பதே உண்மை.

இல்லாவிடில் அபிராமியின் மகிமை
இந்த உலகத்திற்கு தெரிய வருமா?

அம்பிகையை எப்படி துதிப்பது  என்று அறியாத
நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு  100 மாணிக்கம் போன்ற மணிகளை ஒன்றாகத் த்குத்து அன்னைக்கு அனுதிமும்
அணிவிக்கும்பாமாலை போன்ற
போன்ற அந்தாதி கிடைத்திருக்குமா?

எல்லாம் அவள் செயல்.
இந்த உலகில் எந்த செயலும் அன்னையின்
அருளின்றி நடைபெறுவதில்லை என்பதற்கு இதுவே சாட்சி.சுப்ரம்மண்யம் என்ற நாமம் கொண்டதினால்
பார்வதி பரமேஸ்வரரின் அருளால்
அன்னையை வர்ணிக்க முடிந்தது என்பதே உண்மை

மேலும் அவர் தமிழ் மொழியில்
மட்டுமல்லாமல் வடமொழியில் சிறந்த வல்லுனராக
இருந்தமையால் ஸ்ரீ சக்ரநாயகி லலிதா பரமேஸ்வரி மீது
 பாடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிழையறக் கற்றுணர்ந்தவர் என்பதை அந்தாதியை படிக்கும் மொழி வல்லுனர்கள் உணர்வர்.நமக்கு அந்த அளவு ஞானம் இல்லாமையாலும்  அதற்க்கு
நமக்கு வாய்ப்பு கிடைக்காமையாலும் நாம் அதை முழுமையாக
அனுபவிக்க முடியாது. அதற்காக நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

நீரில் ஒருவன் அறிந்து குளித்தாலும்
அறியாமல் குளித்தாலும் அவன் உடல் நீரால் நனைவது
போல் அபிராமி அந்தாதியை பொருள் உணர்ந்து படித்தாலும் சரி உணராமல் படித்தாலும் சரி அன்னையின் கருணையால் நாம் சகல சௌபாக்கியங்களும் அடைவது உறுதி.

நமக்கு தேவை அவள் திருவடிகளில் உறுதியான ,
அசைக்கமுடியாத ,பக்தி ஒன்றேஅசுரர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் அனைத்து சுகங்களையும்
துறந்து தவம் செய்கிறார்கள்
தவம் பலிக்கும்போது என்ன வரம் கேட்க வேண்டும்
என்பதை அறியாது பிறரின் மீது ஆதிக்கம் செய்து அடிமைப்படுத்தி வாழவேண்டும் என்று ஆணவத்தில் வரங்களைப்பெற்று
தீமைகள் பல செய்து பாடுபாடு பெற்ற வரம்களை இழந்து கொடுமையான மரணத்தை தழுவி நரகத்தில் வீழ்கிறார்கள்.

அதுபோல் நாம் நம் மனத்தைக் குழப்பத் தேவையில்லை.
நம்மிடம் உள்ள குறைகளை அபிராமி பட்டர் அன்னையிடம் அவரே  வெளிப்படுத்தி அதிலிருந்து விடுபட அன்னையின் அருளை நம் சார்பாக வேண்டி நம் வேலையை எளிதாக்கி விட்டார் என்றால் மிகையாகாது.

இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ என்ன தேவை
என்பதை என்பதையும் அவரே பட்டியலிடுகிறார்.

அவற்றையெல்லாம் பட்டர் இயற்றிய அபிராம அந்தாதியை பாராயணம் செய்தால் தானே வந்தமையுமென்று  அவைகளை பட்டியலிடுகிறார்.இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து முடிவில் அன்னையில் திருவடிகளை அடைந்து என்றும் நீங்காத மகிழ்ச்சியில் திளைக்கும் வழியையும் நமக்குக் காட்டுகிறார். பட்டர்.

என்னே அவர் கருணை, அதை அவர் மூலம் நிறைவேற்றி வைத்த அபிராமியின் கருணை.

நமக்கு தேவை பக்திதான்.
அதுதான் நமக்கு சக்தி தரும்
முடிவில் முக்தியையும் தரும்.

இன்னும் வரும்.1 comment:

  1. /// அபிராமி அந்தாதியை பொருள் உணர்ந்து படித்தாலும் சரி உணராமல் படித்தாலும் சரி ///

    சிறப்பு...

    அபிராமி பட்டரின் தகவல்கள் அறியாதவை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete