Monday, January 27, 2014

அபாயம் நீக்கும் உபாயம் எது?

அபாயம் நீக்கும் உபாயம் எது?

ஊனினை உருக்கி
உள்ளொளி பெருக்கி என்பார்கள்

நம் ஊனினை பெருக்க வைக்கிறோம்
வரைமுறை இல்லாமல்.

அதனால் அது நோயுற்று
அதை பராமரிக்கவே
நம் ஆயுள் போய்விடுகிறது,

நம்மால் உள்ளே
செல்லவே முடியவில்லை.

உள்ளே சென்றால் அல்லவோ
அங்குள்ள குப்பைகளைக் கண்டறிந்து
அவைகளை சுத்தம் செய்ய முடியும்.

எல்லாவற்றிற்கும் மூல காரணம் 
நம்முடைய நாக்குதான். 

அது எல்லாவற்றையும் தனக்கு தேவைப்பட்டாலும் சரி தேவைப்படாவிட்டாலும் சரி நாக்கு ,நாக்கு (எனக்கு எனக்கு ) என்று
சொல்லிக்கொண்டிருக்கிறது.

உபநிஷதங்களில் போற்றப்படும் வாக்கு என்ற ஓளியை இறைவன் அதற்கு அளித்திருந்தும் அது அதன் மகிமையை உணராமல் அதை தவறாக பயன்படுத்துகிறது. .


அதை நாம் நம் உடலின் 
வாட்ச் மேனாகப் போட்டதுதான் 
தப்பாகிப் போய்விட்டது, 

அதுதான் நமக்கு வேண்டாதவைகளை
உள்ளே அனுப்பிக்கொண்டு நமக்கு
சொல்லொணா துன்பங்களைக்
கொடுத்துகொண்டிருக்கிரது.

பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசி
மற்றவர்களிடம் வெறுப்பையும்
விரோதத்தையும் சம்பாதித்துக்  கொடுக்கிறது.

அதனால்தான் நாம் பலவிதமான
தொல்லைகளுக்கு ஆளாகிறோம்.

அது மனம் சொல்லும் பேச்சைத்தான்
கேட்கிறதே ஒழிய நம் அறிவு சொல்லும்
அறிவுரையைக் கேட்பதில்லை.

இத்தனைக்கும் அதை மிகவும்
பாதுகாப்பாக 32 ஆயுதம் தாங்கிய
காவலாளியை போட்டு அடக்கி வைத்தாலும்
அது எப்படியோ நாம் ஏமாந்த சமயம்
பார்த்து அதன் வேலையை செய்துவிட்டு
 உள்ளே போய்விடுகிறது.

அது செய்த வேலையின் பாதிப்பு
எந்த அளவிற்கு செல்லும் என்று
யாரும் அறியமுடியாது.

சில நேரங்களில் நம்
உயிரையே கூட கொன்றுவிடும்.

அதனால்தான் யாகாவா ராயினும்
 நா காக்க என்றார் திருவள்ளுவர். எனவே நாவிடமிருந்து நம்மைக் 
காத்துக்கொள்ள வேண்டுமென்றால் 
இந்த அண்ட சாராசரங்களைஎல்லாம் 
படைத்து காத்து ரட்சிக்கும் 
ராம நாமத்தை சொல்ல பழக்க வேண்டும் 


ஓவியம். தி ரா.பட்டாபிராமன் 


ஓவியம். தி ரா.பட்டாபிராமன் 


தன்  மூச்சுக்காற்றில் விஷத்தை வைத்திருக்கும் 
ஆதி சேஷன் மீது படுத்திருக்கும் ஆதிமூலமான
நாராயணனை அந்த கொடிய நஞ்சு 
ஒன்றும் செய்யாததைப் போல் 
நம்முடைய நாவும் நமக்கு தீமை செய்யாமல் 
இருக்கவேண்டுமென்றால் 
அவன் நாமத்தை சொல்வதை தவிர 
வேறு எந்த உபாயமும் நம்முடைய 
அபாயத்தை நீக்காது என்பதை
பக்தர்கள் உணரவேண்டும். 

5 comments:

 1. உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...?
  கத்தி...

  இல்ல

  கோடாரி...

  இல்ல

  ஈட்டி

  ம்ஹூம்...

  கடப்பாரை

  இல்லை...

  அதுவுமில்லையா...?

  அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ...?

  அது ஆயுதம் இல்லையே...

  அட தெரிய மாட்டேங்குதே... நீயே சொல்லப்பா...

  உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...?
  நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
  நாக்கு தான் அது...!
  ஆஹா ஆஹா
  நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது...!

  படம் : சக்கரவர்த்தி திருமகள்

  ReplyDelete
 2. நா நயம் பழகி விட்டால் நன்மை. ஓவியங்கள் உங்கள் சொந்தக் கைவண்ணமா?

  ReplyDelete
  Replies
  1. ஆம் இந்த ஆம் ஆத்மியின் கைவண்ணம்தான்
   நன்றாக உள்ளதா?

   Delete