மனதை இறைவனை நோக்கி
திருப்புவது எப்படி. ?
அலை பாயும் மனதை நிலை நிறுத்தத்தான்
நோன்புகள் அனுசரிக்கப்படுகின்றன.
நோன்புகள் ஒவ்வொரு தெய்வத்திர்க்கும்
ஒவ்வொரு விதமாக அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மதத்தினரால் சில குறிப்பிட்ட மாதங்களில்,
காலங்களில் , நேரங்களில் சில உலகியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் அடங்காதுதிரியும்
மனதை அடக்கி இறைவனை நோக்கி திருப்பவும் உதவுகிறது.
நோன்பின் நோக்கம் புலன்களின் வழியே
வெளியே செல்லும் மனதிற்கு
சில கட்டுப்பாடுகள் விதித்து அதை
நம் வழிக்குக் கொண்டுவரும் முயற்சியே
தவிர வேறொன்றும் இல்லை.
ஆனால் அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட மனம்
கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பின்பு மீண்டும்
பழைய நிலைமையை விட மோசமான நிலைக்கு
போய்விடும் என்பதுதான் உண்மை
அதனால் மனம் என்பது என்ன
என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்
மனம் என்பது பல அடுக்குகளைக் கொண்ட
ஒரு நினைவகம்.
நாம் அனைவரும் விழித்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும்
உறக்கத்திற்கு முந்தய நிலை
அதில் மனதின் மேல் அடுக்கில் உள்ள
எண்ணங்களின் மூலம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்
அந்த நிலையில் இந்த உலகை புலன்கள் மூலம்
தொடர்பு கொண்டு நினைக்கிறோம்,
செயல்படுகிறோம். அல்லது செயல்பாடமலும் இருக்கிறோம்.
புலன்களின் மூலம் உள்ளே செல்லும்
அனைத்தும் மனதில் பதிவாகி விடும்
நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும்.
அடுத்து உறங்க சென்றவுடன்
புறவுலக இயக்கங்களும் , உடலின் இயக்கமும்
நமக்குத் தெரிவதில்லை.
மனதின் அடுத்த அடுக்கில் ஏற்கெனவே
உள்ள பல பதிவுகள் மனக்கண் முன் விரிகிறது.
அவைகளை காண்கிறோம்.
அடுத்து அதையும் தாண்டி ஆழ்ந்த உறக்கத்தில் செல்லும்போது
எந்த நினைவுகளும் இல்லை.
அப்போது மனம் இந்த மூன்று நிலைக்கும் சாட்சியாக இருந்து
கவனித்துக்கொண்டிருக்கும் ஆன்மாவில் கலந்துவிடுவதால்
நினைவுகள் இல்லை,இந்த உடலும், உலகமும் இல்லை.
அப்போது மனம் தனக்குள்ளே இருக்கும் ஆன்மாவில்
ஆனந்த நிலையில் மூழ்கியிருப்பதாக்
பகவான் ரமணர் தெரிவிக்கிறார்.
அதனால்தான் மனம் ஆன்மாவிலிருந்து
வெளியே வந்தபிறகு . உறக்கத்திற்கும் முன் இருந்த
அதே நிலைமையை நாம் மீண்டும் அடைகிறோம்
உண்மையில் ஆனந்தம்
என்பது வெளியே இல்லை.
வெளியே காணும் ஆனந்தம் மனம்
ஒவ்வொரு முறை ஆன்மாவின் உள்ளே சென்று
அனுபவிக்கும் ஆனந்தம்தான் உண்மையான ஆனந்தம்.
என்கிறார்.பகவான் ரமணர்

மனம் இப்படிதான் இன்பத்தை அனுபவிப்பதற்காக
மனம் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒவ்வொரு முறையும்
ஆன்மாவிற்குள் செல்வதும் வருவதுமாக ஓயாமல் சலித்துக்கொண்டே இருக்கிறது.
மனம் ஆனமாவிலே ஒன்றிவிட்டால்
இவ்வாறு மாறி மாறி இன்ப துன்பங்களை
அனுபவிக்க தேவையில்லை.
அதற்கு. மனதில் உள்ள எல்லா
எண்ணங்களையும் நீக்கவேண்டும்.
ஏனென்றால் எண்ணங்கள்
முழுவதும் நீங்கிவிட்டால்
மனம் என்று ஒன்றும் இல்லை
ஆன்ம ஸ்வரூபம் மட்டுமே எஞ்சி.நிற்கும்.
என்பதை அழகாக தெளிவாக
விளக்கியுள்ளார் பகவான்.ரமணர்
அதற்கு. நான் யார்?
இந்த உடலா மனமா இன்னும் அதைத் தவிர வேறு
என்னவெல்லாம் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ
என்று நமக்குள்ளே தோன்றும் ஒவ்வொரு எண்ணங்களையும்
விசாரித்து தெளிய வேண்டும்.
கீழே உள்ள இணைப்பில் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.e-bookspdf.org/download/naan-yaar.html
பகவானின் அருளுரைகள் பார்ப்பதற்கு எளிதாக உள்ளது ஆனால்
அதை முறையாக புரிந்துகொண்டு செயல்படுத்துவதில்
எவ்வளவு கடினம் என்பதை நடை முறையில் காண்கின்றோம்.
லட்சக்கணக்கான சாதகர்கள்
கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள் உலகெங்கிலும்.
அனைத்தையும் துறந்து பல மகான்களும்
முனிவர்களும் தவத்தில் பல ஆண்டுகள் ஈடுபட்டும் வெற்றி காண இயலாமல் தவிக்கிறார்கள். அவர்களில் வெற்றி பெறுவோர். கோடியில் ஒருவரே.
நாமும் முயற்சி செய்வோம்,
பகவான் ரமணரின் சிந்தனைகளை அனுதினமும் சிந்தித்து
அவைகளில் உள்ள தத்துவத்தை புரிந்து கொண்டு
தன்னை உணர்ந்த மகான்களின் திருவடிகளில் அடி பணிந்து
அவர்கள் காட்டும் நெறி நின்றால் நாமும் அத்தகையதொரு
உயர்ந்த நிலை அடைவது சாத்தியமே.
அதற்கு, அகந்தையற்ற மனமும்,
அன்பும், பணிவும், நம்பிக்கையும்
விடாமுயற்சியும் தேவை.
அதை நாம் வளர்த்துகொள்ளவேண்டும்.

அருமையான விளக்கங்கள் ஐயா... இணைப்பிலும் பார்க்கிறேன்...
ReplyDeleteஞாபகம் வந்த ஒரு பாடல் :
அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்...
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்...
பெரியவன் சிறியவன்...
நல்லவன் கெட்டவன்...
உள்ளவன் போனவன்...
உலகிலே பார்க்கிறோம்...
எண்ணமே சுமைகளாய்...
இதயமே பாரமாய்...
எண்ணமே சுமைகளாய்...
இதயமே பாரமாய்...
தவறுகள் செய்தவன் எவனுமே
தவிக்கிறான் அழுகிறான்...
தவறுகள்
Deleteசெய்வது தவறல்ல
அது மனித இயல்பு
செய்த தவறுகளிலிருந்து
பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல்
மீண்டும் மீண்டும் தவறுகள்
செய்வதுதான் தவறு.
பாவங்களைப்பற்றியே சிந்தித்து
மனதை வருத்திக் கொள்ளாமல்
மீண்டும்பாவங்களைச்
செய்யாமல் இருக்க
முயற்சி செய்ய வேண்டும்.
அதற்க்கு மனதில் ஏற்கெனவே பதிவாகி
உள்ள பாவ எண்ணங்களை அகற்றவேண்டும்.
அதற்க்கு துணை போகும் சூழ்நிலைகளிலிருந்து
நாம் விலகி நிற்க வேண்டும்.
அதை செய்யாவிடில் நம் மீண்டும்
தவறுகளைச் செய்வது தவிர்க்க முடியாது
நல்ல சத்சங்கத்தில் இணையவேண்டும்
அப்போதுதான் விடிவு காலம் கிடைக்கும்.
//உண்மையில் ஆனந்தம் என்பது வெளியே இல்லை. //
ReplyDeleteஆனந்தம் [ஆனந்தவல்லி] எப்போதும் வெளியிலே இல்லை. என் மனதினில் இருக்கிறாள். ஆனந்தம்.... ஆனந்தம்.... ஆனந்தமே ! ;)
என் வீட்டருகேயுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனை மட்டுமே சொன்னேன்.
நான் நீங்கள் சொல்வதை அப்படியே நம்புகிறேன்.
Deleteநான் எதுவும் கேட்கவில்லையே?
குற்றமுள்ள நெஞ்சு குறுகுருக்குதோ?