Wednesday, July 18, 2018

இசையும் நானும் (317)-HINDI Movie/album:MERA NAAM JOKER (1970) பாடல்:: "Jane Kahan Gaye Wo Din"


இசையும் நானும் (317)-HINDI Movie/album:MERA NAAM JOKER  (1970)

பாடல்:: "Jane Kahan Gaye Wo Din"


MOUTHORGAN VEDIO-317


Movie/album: 

MERA NAAM JOKER-(1970)

Singer: Mukesh 
Song Lyricist:Hasrat Jaipuri
Music Composer: Shankar-Jaikishan 

जाने कहाँ गए वो दिन, कहते थे तेरी राह में
नज़रों को हम बिछाएंगे
चाहे कहीं भी तुम रहो, चाहेंगे तुमको उम्र भर
तुमको ना भूल पाएंगे
जाने कहाँ गए वो दिन ...

मेरे कदम जहाँ पड़े, सजदे किये थे यार ने - २
मुझको रुला रुला दिया, जाती हुई बहार ने
जाने कहाँ गए वो दिन ...

अपनी नज़र में आज कल, दिन भी अंधेरी रात है - २
साया ही अपने साथ था, साया ही अपने साथ है
जाने कहाँ गए वो दिन ...

Tuesday, July 17, 2018

பெரியவர்கள் மதித்தல்- தாய்லாந்து

பெரியவர்கள் மதித்தல்- தாய்லாந்து .
கண்டிப்பாக காண வேண்டும் அனைவரும்.

https://www.facebook.com/narasimhan.kp/videos/1783139948388608/

நம் நாட்டில் ஒழுக்கமும் இல்லை ஒழுங்கும் இல்லை.


நம் நாட்டில் ஒழுக்கமும் இல்லை

ஒழுங்கும் இல்லை. 


உரிமைக்காக போராடும்
கூட்டம் ஒருபுறம்.

தங்களின் உரிமைகளை 
இழந்து வாய் பேசாமல் 
மௌனியாக கூனி குறுகி 
கருகிப் போகும் 
களங்கமில்லா 
வாயில்லா பூச்சிகள் ஒருபுறம். 

எதையும் ஆராயாமல் அப்படியே 
நம்பி ஏமாறுவோர் கோடி கோடி 

நம்பிக்கை மோசம் செய்பவர்கள் 
நன்றாகத்தான் வாழ்கிறார்கள் 
இந்த பூமியிலே. 

உழைப்பவர்களை 
சுரண்டி பிழைப்பவரும் 
அவர்களை அண்டி  பிழைப்பவரும் 
பெருகிவிட்டார்கள் இந்நாட்டினிலே. 

உண்மையை 
வெளியே சொன்னால் 
உயிர் போகும் .

மேடைகளில் பெண்மையை போற்றும்
வேடதாரிகள் உண்டு  இந்நாட்டினிலே 

அதே வேடதாரிகள் 
அவர்களை கவர்ச்சியாய் காட்டி 
காசு பார்க்கும் கயவர்களும் 
நம்மிடையே உண்டு. 

நம் நாட்டில் ஒழுக்கமும் இல்லை

ஒழுங்கும் இல்லை


புராணங்களில் கடவுள்கள் 
அவதாரம் எடுத்து வருவார்கள் 
அனைத்தையும் சீர் செய்ய. 

இப்போது யார் வருவார்கள்?
கண்ணுக்கு தெரியாத கடவுளே !
உடனே புறப்பட்டு வா 

உள்ளத்தில் கள்ளம் வைத்திருக்கும் 
அனைவரையும் கண்டுபிடித்து அழிக்க.
 
இனியும் காத்திருக்க 
பொறுமையில்லை. 

Monday, July 9, 2018

கண்ணாடியும் உலகமும் நாமும்


கண்ணாடியும் உலகமும் நாமும் 

கண்ணாடியும் உலகமும் நாமும் .
எல்லாம் நாம் யார் என்பதை நமக்கு
காட்டும் கருவிகள்.

கண்ணாடி முன் நாம் நின்றால்
அதில் நம் முன் பகுதியை காணலாம்.

நம் முழு தோற்றத்தையும் காண
நம்மை சுற்றிலும் கண்ணாடிகளை
அமைத்தால் ஓரளவு காணலாம்.

நமக்கு தேவைப்பட்ட மாற்றங்களை நாம்
செய்துகொள்ளலாம்.

உதாரணத்திற்கு தலை முடி கலைந்திருந்தால்
அதை சரி செய்து கொள்ளலாம்.

கண்ணாடி நம்மை பற்றி காட்டும் குறைகளுக்காக
நாம் அதன் மீது சினம் கொள்வதில்லை.
மனம் வருந்துவதில்லை

நம்மை சரி செய்துகொள்ள
முயற்சி செய்கிறோம்.

நம் மனம் எப்படி இருக்கிறது 
அதில் என்ன இருக்கிறது என்பதைக் 
காட்டும் கண்ணாடி நம்மை சுற்றியுள்ள 
உலகில் நம் முன் தோன்றும் மனிதர்கள் மட்டும்தான். 

அவர்கள்தான் நாம் உலகில் நடந்துகொள்ளும்
விதத்தை கூர்ந்து கவனித்து நம் மீது
விமரிசனங்கள் செய்கிறார்கள்.

நம் குறைகளைக் காட்டும் கண்ணாடி மீது சினம், வெறுப்பு
கொள்ளாத நாம் நம் அகத்தை காட்டும் மனிதர்கள் மீது
மட்டும் பகை காட்டுகிறோம்.

நாம் அறியாத நம் அகத்தை நமக்கு
புரிய வைக்கும் மனிதர்களை நாம்
ஏன்  வெறுக்க வேண்டும் ?

குறைகள்  களையப்பட்டால் அது
நமக்கு நன்மைதானே

சிலர் நம்மிடம் குறைகளையே கண்டு நம்மை
எப்போதும் கடுப்பேற்றிக்கொண்டு இருப்பார்கள்.
அது அவர்களின் குற்ற மனப்பான்மை.

 தங்கள் குறைகளை மறைக்க அவர்கள் செய்யும் தந்திரம் அது.
அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சிலர்  பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை மட்டும்
வெளிப்படுத்துவார்கள்.
அவர்களிடம் நாம் பழகினால்
அந்த நல்லகுணம் நமக்கும் வரும்.

சிலர் குறையே சொல்லமாட்டார்கள்
நிறையையும் சொல்லமாட்டார்கள்.

இந்த உலகத்தில் குறைகள் இருக்கத்தான் செய்யும். 
அது என்றும் நிறையாது.

ஆனால் நம் மனதில் குறைகளைகாண்பதை
குறைத்துக்கொண்டு நிறைவைக் காணும்
பாங்கினை வளர்த்துக்கொண்டால்
நம்வாழ்க்கை இன்ப பூஞ்சோலையாக திகழும்

Wednesday, July 4, 2018

இசையும் நானும் (313)-திரைப்படம்-தாய் உள்ளம் -1952 பாடல்::கொஞ்சும் புறாவே


இசையும் நானும் (313)-திரைப்படம்-தாய் உள்ளம்   -1952

பாடல்::கொஞ்சும் புறாவே


MOUTHORGAN VEDIO(313)

Movieதாய் உள்ளம் Musicநாகையா -எ.ராமராவ் 
Year1952Lyricsகனகசுரபி 
Singersஎம்.எல்.வசந்தகுமாரி 

mmm
oh oh la la oh oh
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜெகம் எங்கணும்
உறவாடிடும்
ஜாலமிதேனோ (கொஞ்சும்)
பொங்கும் நிலாவே
மங்கையைப் போலே (பொங்கும்)
புரளும் கடல்
உனைக் கண்டதும்
பூரிப்பதேனோ (கொஞ்சும்)

வெண்  தாமரையே
செங்கதிரோனின் 
கண் வீச்சிலே
விண் நோக்கி நீ
சிரிப்பதும் ஏனோ (கொஞ்சும்)

mmm
சோலை குயிலே
ஜோடி கண்டாலே
பண்ணோடு பாடல்  பாடுவதேனோ (பண்ணோடு)
மனம் செய்யும் சூதோ
மாரனின்  தூதோ
மாயமிதேதோ

oh oh la la oh oh(கொஞ்சும்)