Wednesday, November 25, 2015

இசையும் நானும் (78)

இசையும் நானும் (78)

இசையும் நானும் தொடரில் 78 வது காணொளி 

மவுதார்கன் இசை- 


















முருகா என்றழைக்கவா? ... முத்துக் குமரா என்றழைக்கவா?
கந்தா என்றழைக்கவா? ... கதிர்வேலா என்றழைக்கவா

எப்படி அழைப்பேன்? ... உன்னை எங்கே காண்பேன் (2)



ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா
அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா.

அருணகிரி மனம் நொந்து தவித்தபோது (2)

நீ ... அருள்கொடுத்து ஒளியாக நின்றாயப்பா (2).

உன்னை ...

(முருகா என்றழைக்கவா? ... முத்துக் குமரா என்றழைக்கவா?
கந்தா என்றழைக்கவா? ... கதிர்வேலா என்றழைக்கவா?
எப்படி அழைப்பேன்? ... உன்னை எங்கே காண்பேன்?).

நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா
நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா

அந்த ...

பாவினிலே மனமுருகி நின்றாயப்பா (2)

உலகுக்கு பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா (2).

உன்னை ...

(முருகா ...)

முருகாற்றுப்படை பாடி ... நக்கீரர் அழைக்க (2)

நீ ... முன் தோன்றி வழி அமைத்து கொடுத்தாயப்பா

கலிவெண்பா படைத்து குருபரர் நினைத்தாரப்பா

நீ கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா (2).

உன்னை ...

(முருகா ... )

நாளெல்லாம் உன்னை பாடுகின்றேன் அப்பா (2)

முருகா ... நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா

நாளெல்லாம் உன்னை பாடுகின்றேன் அப்பா
முருகா ... நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா

என் கண்கள் குளிற வந்து நின்றாடப்பா
கண்கள் குளிற வந்து நின்றாடப்பா

என் காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா (2).

உன்னை ...

(முருகா ...)

எப்படி அழைப்பேன்? உன்னை எங்கே காண்பேன்? (2)

முருகா ... !


காணொளி இணைப்பு


.<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/QnwF9RGn2xI" frameborder="0" allowfullscreen></iframe>


Tuesday, November 24, 2015

ராமா ராமா என்று நீ பாடு!


ராமா ராமா என்று நீ பாடு!





ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 


ராமா ராமா என்று நீ பாடு
ராமா ராமா என்று நீ பாடு

மனமே நீ
ராமா ராமா என்று நீ பாடு  (மனமே நீ )

உலகில் ராம பக்தியில்லாதவரை
கண்டால் விலகி ஓடு  (மனமே நீ )

இகபர சுகங்கள் அளிக்கும் இனிய நாமம்
ஆசை கொண்டலையும் மனம்தனை
அசையாதிறுத்தி  நம்மை திருத்தி
நல்வழிப்படுத்தும் நாமம்

வாதனைகளும்  சோதனைகளும்
வாழ்வில் எத்தனை வந்தாலும்
நமக்கு உற்ற  துணையாய்
வந்து காக்கும் நாமம்  (மனமே நீ )

அரிதாய் கிடைத்த மானிட பிறவிதனை
அழியும் பொருட்கள் மீது மோகம் கொண்டு
அழியாது எளிதாய் ஜபித்து உயர்வடைய
உதவுவது ராம  நாமம் (மனமே நீ )

இசையும் நானும்


இசையும் நானும் 

மவுதார்கன் இசை- ஏழுமலை வாசா என்னை ஆளும் ஸ்ரீனிவாசா 
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா 




காணொளி இணைப்பு.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/fgzuz0KxtZ0" frameborder="0" allowfullscreen></iframe>

Tuesday, November 17, 2015

சுர பூபதி! சுர பூபதி !

சுர பூபதி! சுர பூபதி !





சுர பூபதி சுர பூபதி
ஆணவ மனம் கொண்ட மனிதரையெல்லாம்
ஆட்கொண்டு தன் அடியவராக்கும் சூர  பூபதி 

உலகையெல்லாம் காக்க உமாபதி
கண்ணிலிருந்து உதித்தெழுந்த அருள் பூபதி

கந்தா கந்தா என்று பாடி ஆடி காவடி
தூக்கி வரும் அடியவரை காத்தருளும்
கணபதியின் தம்பியான கருணை பூபதி

அரோகரா அரோகரா என்று ஆடி துதிக்கும்
அன்பர்களை ஆட்கொண்டு அருளும் ஆனந்த பூபதி.

முருகா முருகா என்று முழங்கும்
மூவுலகினரையும் முன்னால் நின்று காத்து
முக்தியளிக்கும் முருக பூபதி.

கார்த்திகேயா கடம்பா என்று கைகூப்பி
வணங்கி தொழுபவர்களின் வாழ்வில்
வளம் சேர்க்கும் வள்ளி சமேத பூபதி

மயில் மீது அமர்ந்து ஒயிலாய்
காட்சி தந்து அன்பு மனங்களில்
நின்றாடும் மாலவன் மருகன் போற்றும் தேவநிதி 

Monday, November 16, 2015

இசையும் நானும் (77)


இசையும் நானும் (77)

இசையும் நானும் தொடரில் என்னுடைய 

77 வது காணொளி. 

MOUTHORGAN-TAMIL-மன  நாட்டிய மேடையில் ஆடினேன் (படம் -மீண்ட சொர்க்கம் )



Saturday, November 14, 2015

இசையும் நானும் (76)

இசையும் நானும் (76)

இசையும் நானும் தொடரில்  என்னுடைய 

76 வது காணொளி 

மவுதார்கன் இசை 

கந்த சஷ்டி ஸ்பெஷல் 

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா 

https://www.youtube.com/watch?v=_YiMnqwjF4c&feature=youtu.be

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/_YiMnqwjF4c" frameborder="0" allowfullscreen></iframe>

Wednesday, November 11, 2015

இசையும் நானும் (75)


இசையும் நானும் (75)

 இசையும் நானும் (75)

இசையும் நானும் தொடரில்
என்னுடைய  75 வது காணொளி

மவுதார்கன் இசை.

T.R.PATTAABIRAMAN-MOUTHORGAN-TAMIL SONG-

மலர்கள் நனைந்தன பனியாலே-(இதய கமலம்)-இசை கே வி மகாதேவன் -வரிகள் கவியரசு-பாடியவர்-இசை குயில்.பி. சுசீலா-

இனிமையான இதயத்தை தொடும் இசை. 

Sunday, November 8, 2015

இசையும் நானும்(72)

இசையும் நானும்(72)

இசையும் நானும்  என்னும்  தொடரில்
என்னுடைய 72 வது காணொளி.

மவுத்தார்கன் இசை - பாடல்

உன்னைக் கண்டு நான் ஆட -படம் -கல்யாண பரிசு.

அனைவருக்கும்  தீபாவளி வாழ்த்துக்கள் 

https://www.youtube.com/watch?v=3BW2-WQvkzo&feature=youtu.be
MOUTH ORGAN-HAPPY DEEPAVALI TO ALL  T PATTABIRAMAN-TAMIL SONG-UNNAIKKANDU NAAN AADA-KALYANA PARISU 

Thursday, November 5, 2015

நாடி வருவேன் அனுதினமும்...


நாடி வருவேன் அனுதினமும்...


ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


இடையர் குலத்தை
இந்திரனிடமிருந்து
காக்க கையில்
கிரி ஏந்திய  ஹரி கேசவா

இவ்வுலகில்
மானிட பிறவியெடுத்து
இந்திரிய கூட்டத்திடம் சிக்கி
அல்லல்படும் என்னைக் காக்க
என்று மனம் கனிய போகிறாய்?

அடங்காது திரியும்
மனம் என்னும் புரவியின்  பின்னே
சென்றதனால்  என்னை பற்றிக்கொண்டது
மாளாத பிறவி என்னும் கொடுமை

அதன் கடுமை தாங்காது மாறி மாறி
அடைந்தேன்  பலவித துன்பங்கள்

கண்டுகொண்டேன் பரந்தாமா !
துன்பம் துடைக்கும்  உன் பாவன நாமம்

உன்னை தேடி வரும் என்னை காக்க
நீ ஆடி வருவாயோ,இல்லை பாடி வருவாயோ
இல்லை ஓடி வருவாயோ நானறியேன்

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்
உணவளிக்கும் தாயன்பனே

திடமான பக்தியின்றி  கல்போன்ற
என் மனதில் உறைந்திருக்கும்
உயிரான எனக்கும் உன்னை அறிந்து
உய்யும் ஞானம் அளித்தருள்வாய்.

பாடி பரவுவேன் பலமுறை நாள் முழுதும்
நாடி வருவேன் அனுதினமும் என்
உள்ளத்தில் உறையும் உன்  சன்னதிக்கு
உந்தன் அருள்  கிட்டும் வரை  

உடலை விட்டு நீங்கிய உயிர்

உடலை விட்டு நீங்கிய உயிர்


ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும்

அதற்குள் நம்முள் உறையும்
இறைவனை அறிந்துகொள்ளா விடில்
உடலை விட்டு நீங்கிய உயிர்
எங்கே போய்  தங்கும் ?

உடலில் உயிரோடு இருக்கையிலே
நம் உள்ளே நம்மோடு இருக்கும்
உயிருக்குயிரான இறைவனை
உணர்ந்து கொள்ளாவிடில்
உலகில் மனிதராய் பிறவி
எடுத்ததின் பயன் ஏது ?

உண்மைதான் கடவுள் என்று
ஊரறிய முழங்குகிறார் மேடையிலே
ஆனால் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில்
ஒன்றுமாய் நடந்து கொள்கிறார்
வாழ்க்கை பாதையிலே

வேரின்றி பூமியில் நில்லாது
மரம்,செடி,கொடி தாவரங்கள்

உயிரின்றி எவ்வுயிரும் இயங்க
இயலாது இந்த நிலவுலகில்

அதுபோன்று ஒன்றோடொன்று
மோதிக்கொண்டு சிதையாமல் சுழலுகிறது
அண்டத்தில் கோள்களின் கூட்டம்

அனைத்திற்கும் ஆதார சக்தியாய்
விளங்குவது எண்ணற்ற கோடி
ஆண்டுகளுக்கு முன் அந்த ஒருவன்
போட்ட திட்டம்

எங்கும் பரந்துள்ள அந்த பரம் பொருள்
நம்முள்ளும் இருப்பதை உணர்ந்துகொள்ள
கொள்ளவேண்டும் நாட்டம்

நம் புலன்களுக்கு எட்டாத பொருளான
அந்த பொருளை முயன்று
அறிந்து கொள்ளாது போனால்
நமக்குதான் நட்டம்.



Monday, November 2, 2015

பிறந்தவன் இறப்பதும்..

பிறந்தவன் இறப்பதும்...


கசப்பான கடந்த காலம்
கசாப்புக் கடையில் கத்தியால்
துண்டுபட்டு கிடக்கும் உடல்

அழுகி  நாற்றமெடுக்கும்
அவ்வுடலை அப்புறப்படுத்துவோரே
அறிவுடையோர்

அதுபோல்தான் நம் மனமுள்ளே
இருந்துகொண்டு நமக்கு மீண்டும் மீண்டும்
துன்பம் தந்து நம்மை கொன்றழிக்கும்
கடந்த கால துன்ப நினைவுகள்

உலகெங்கும் மூடர்கள் கடந்த கால
அழிவுகளை எண்ணியே தங்கள்
நாட்களை கடத்தி நலம் தரும்
நிகழ் காலத்தை இழக்கின்றார்

அவ்வித  மூடர்களுக்கோர்
ஒரு முழுமூடர்  தலைமை பொறுப்பேற்று
உலகில் மக்கள் மனங்களில் வெறுப்பை
விதைத்து உலகின் அமைதியை
குலைக்கின்றார்

மண்ணில் விழுந்த விதைகள்
மீண்டும் உயிர் பெறும்
மீண்டும் முளைத்து தழைக்கும்

முளைக்காதவையோ மண்ணோடு கலந்து
உரமாகி மற்ற உயிர்களுக்கு உணவாகும்

பிறந்தவன் இறப்பதும்
இறந்தவன் பிறப்பதும் என்றும் மாறாத
இயற்கை விதி என்றான் கீதையிலே கண்ணன்.

விதி இவ்வாறு இருக்கையிலே
மதியில்லா மனிதர்கள் இறந்தவர்களை   எண்ணியே
வீணே அலைந்து திரிந்து மனம் வெதும்பி
மாள்கின்றார் .

என்றுதான் இந்தமனிதகுலம் திருந்துமோ
இவ்வுலகில் வாழும் காலத்தை இன்பமாக
கழிக்க கற்றுக் கொள்ளுமோ?

இரவேது பகலேது


இரவேது பகலேது

இரவேது பகலேது
ஒளி  வடிவான இறைவனை
தன்னுள்ளே கண்டவர்க்கு

இன்பமேது துன்பமேது
அனைத்தும் அவன் செயல்
என்று உணர்ந்தவர்க்கு

துக்கமேது துயரேது
நிகழ்வதனைத்தும் நிமலனின்
லீலை என அறிந்தவர்க்கு

விருப்பேது வெறுப்பேது
பொறுப்பேது பொல்லாங்கு ஏது
தன்னையே அவனிடம்
ஒப்படைத்தவர்க்கு

வாழ்வேது சாவேது
பிறப்பேது இறப்பேது
என்றும் அவன் நினைவில்
வாழ்பவர்க்கு

அன்பால் நிறைந்த இதயம்
அதில்தான் ஒளியான
இறைவன் உதயம்
இதை உணர்ந்தால் மட்டுமே
அல்லலில்லா ஆனந்த  வாழ்வு
சாத்தியம் .