Thursday, January 31, 2013

அம்பிகையே,அலைமகளே,கலைமகளே மலைமகளே உனக்கு வந்தனங்கள் பல கோடி






அம்பிகையே,அலைமகளே,கலைமகளே
மலைமகளே உனக்கு வந்தனங்கள் பல கோடி


தங்க நிறம் கொண்டவளே
உண்மையான பக்தர்களின் இதயத்தில்
தங்க மனம் கொண்டவளே 

தரணியில் தகமையாய் அனைத்து
வளங்களையும் அளிப்பவளே

அகிலத்தின் இருள் போக்கி ஒளி தரும் 
ஆதவனின் ஒளியாய் இருப்பவளே

அனைவரின் இல்லங்களிலும் 
தீப ஒளியில் தோன்றி மங்களம் தருபவளே

உன் தரிசனத்தால் என் அக இருள் நீங்கி 
ஞானம் ஜோதியாய் பிரகாசிக்கட்டும். 

அம்பிகையே,அலைமகளே,கலைமகளே
மலைமகளே உனக்கு வந்தனங்கள் பல கோடி

Wednesday, January 30, 2013

முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.



நானும் ஒரு ஓவியன் தான் 


அம்பிகையை வரைய நினைத்தேன். வரைந்தேன் வண்ணம் தீட்டினேன் .அனைவருக்கும் அனுப்புகிறேன் அவள் ஆசிகளுடன்.  


முக்கண்ணியை தொழுவார்க்கு 
ஒரு தீங்கில்லையே.



கீழே காணும் விநாயகர் உருவம் எங்குள்ளது தெரியுமா?



கீழே காணும் விநாயகர் உருவம் எங்குள்ளது தெரியுமா?










கீழே உள்ள மனிதரின் தலையில் உள்ளது





Thursday, January 24, 2013

சங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேசஸ்தோத்ரம் (நிறைவு பகுதி)

சங்கஷ்ட நாஸன
ஸ்ரீகணேசஸ்தோத்ரம் (நிறைவு பகுதி)

  
இறைவன் நமக்கு ஐம்புலன்களை
கொடுத்திருக்கிறான்.
ஐம்புலன்களோடு மனிதனின் அறிவிற்கு
எட்டவொண்ணா செயல்பாட்டையும் சக்தியையும்
அதனுடன் நாம் கேட்காமலேயே அளித்திருக்கிறான்.

 நல்லவை தீயவை என அறிந்து தெளிந்து
செயல்பட அறிவை கொடுத்திருக்கிறான்.

இவ்வளவு இருந்தும் மனிதர்கள் இறைவன்
கொடுத்த வரங்களை முறையாக பயன்படுத்துவது கிடையாது.

பலர் அறிவை பயன்படுத்துவதே கிடையாது.
மனம் போன போக்கில் வாழ்க்கை வாழ்கிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் உழல்கிறார்கள்.
முறையாக பயன்படுத்துவோர் வசதியாக வாழ்கிறார்கள்.

இவ்வளவு இருந்தும் எல்லாம் சரியாக திட்டமிடப்பட்டும்,
முறையாக செயல்படுத்தியும் தீர்க்கமுடியாத தடைகள் வருகின்றன.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட சங்கடங்கள் வரும்போது
அவைகளிலிருந்து நாம் விடுபட நாம் இறைவனின்
கருணையைத்தான் நாட வேண்டியுள்ளது.

இந்நிலையில் இறைவனிடம்
எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்பதை
விளக்கும் தோத்திரம்தான் ஸ்ரீ கணேசரின்
சங்கடம் நீக்கும் தோத்திரம்.

பரம்பொருள் பல தெய்வங்களாக வடிவம்கொண்டு
தன் படைப்புகள் துன்பமில்லாமல் வாழ
அருள் செய்ய எண்ணம் கொண்டிருந்தாலும்.
தொடங்கும் செயல் தொய்வில்லாமல்
நடந்து நிறைவு பெற நாம் அனைவரும் நாடுவது
கணங்களுக்கெல்லாம் ஈசனாய்விளங்கும் கணபதி
என்னும் கணேச பெருமானைதான் நாடுகிறோம்.

இனி அந்த தோத்திரம் பற்றி பார்ப்போம்.

சங்கஷ்ட நாஸன
ஸ்ரீகணேச
ஸ்தோத்ரம் 




பதினெட்டுப் புராணங்கள் பற்றி மக்கள் அறிவார்கள்.  
இவை போலவே பதினெட்டு உப புராணங்களும்
எண்ணற்ற ஸ்தல புராணங்களும்  உண்டு.
இந்த ஸ்தோத்ரம் 'நாரத புராணம்' என்னும்
உபபுராணத்தில் காணப்படுவது
.  

இந்த ஸ்தோத்திரம் சங்கடங்களை நீக்க வல்லது. 
சங்கடங்களை நீக்குவதற்கென்று விநாயகமூர்த்தங்களில்  
ஒரு விசேஷ வழிபட்டு மூர்த்தி இருக்கிறார்.

 'சங்கடநாஸன கணபதி'  என்பது அவருடைய பெயர்.
 மேலே காட்சி தருபவர். 
சங்கடஹரர் என்று சொல்வார்கள். 
அவருக்கு உரிய விரதம் 'சங்கடஹர சதுர்த்தி'.
              
சங்கடஹர சதுர்த்தியன்று இந்த தோத்திரத்தைப் 
படித்து வழிபடலாம்.     
              
அழகிய சிறிய சம்ஸ்கிருத தோத்திரம். 
சுலபமாக  மனனம் செய்யலாம்.

இதனை காலை, மதியம், மாலை 
ஆகிய மூன்று வேளைகளிலும்
படித்தால் சங்கடங்களும் விக்கினங்களும் நீங்கி 
அவரவர் கோரிய  பலனைப் பெறலாம் 
என்று அந்த புராணம் கூறுகிறது.
              
இதனை அதற்குரிய ராகத்தில் 
மெதுவாகப் பாடினால் மனமும்
உருகி லயிக்கும். அற்புதமாக இருக்கும்.

சங்கடஹர சதுர்த்தியன்று விசேஷ வழிபாடுகளை
நடத்தும்போது அனைவரும் இந்த தோத்திரத்தை பாடி வழிபடலாம் 

இந்த தோத்திரத்தில் சங்கடநாசனருக்கு உரிய
விசேஷமான பன்னிரண்டு நாமங்கள் இருக்கின்றன.

இதைப் படித்தால் இடையூறுகள் தடங்கல்கள் முதலிய பயங்கள்
நீங்கும். எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும்.


படிப்பவர்களுக்குப் படிப்பும், தனம் வேண்டுபவர்களுக்கு  தனமும்,
மக்கள் செல்வம் வேண்டுபவர்களுக்கு மக்களும், மோட்சம்
வேண்டுபவர்களுக்கு உரிய கதியும் கிட்டும்.


 தோத்திரத்தின் ஆரம்பத்திலேயே போட்டிருக்கிறது, பார்த்தீர்களா -
"ஆயுர் காமார்த்த ஸித்தயே". அதை மனதில் இருத்திக்கொண்டு
ஸ்ரீ சங்கடநாஸன கணபதியிடம் உங்களின்  சங்கடத்தைத் தெளிவாக
எடுத்துரைத்து அதை நீக்குமாறு  சங்கல்பத்தைச் செய்து படியுங்கள்.
கடைசி வரியில்  'நாத்ர ஸம்ஸய' என்று காணப்படுகிறது அல்லவா?
சந்தேகமே படக்கூடாது. முழுநம்பிக்கையோடு வேண்டுதல்  செய்து
படிக்கவேண்டும்.


நாரத உவாச -
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யம் ஆயு:காமார்த்த ஸித்தயே


தீர்க்காயுள் ரோகமில்லாத வாழ்க்கை, செல்வம், சுகம் இவைகளை
விரும்புபவர் கௌரியின் புத்திரனைவேண்டி இந்த ஸ்லோகத்தைச்
சொல்லி நமஸ்கரிக்கவேண்டும்.


ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்வீதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்
வளைந்த துதிக்கையை உடையவரே! 
ஒற்றைத் தந்தம் கொண்டவரே!
லேசாகச்சிவந்த விழிகளால் பக்தர்களை அனுக்ரஹிப்பவரே! 
யானை முகத்தவரே!

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டமம்

சரிந்த தொந்தி உடையவரே! மதஜாலப் பெருக்கை உடையவரே!
விக்னேஸ்வரரே! கருஞ்சிவப்பு நிறமுடையவரே!


நவமம் பாலசந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் ச த்வாதஸம் து கஜாநநம்


நெற்றியில் இளம்பிறை சந்திரனை தரித்தவரே  !  
கணங்களின் தலைவரே!
விநாயகரே! யானை முகத்தவரே!

த்வாதஸைதாநி நாமாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ந ச விக்நபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ


இந்தப் பன்னீரண்டு பெயர்களையும் மூன்று வேளைகளிலும்
படிப்பவர்கட்கு இடையூறு நீங்கி எடுத்த காரியம் வெற்றி அடைகிறது
.

வித்யார்த்தி லபதே வித்யாம் தநார்த்தீ லபதே தநம்
புத்ரார்த்தி லபதே புத்ராந் மோக்ஷார்த்தீ லபதே கதிம்

    
கல்வியை விரும்புபவருக்குக் கல்வியையும், செல்வத்தை
வேண்டுவோருக்கு செல்வமும், மக்கட் பேற்றை விரும்புபவர்க்கு
குழந்தைச் செல்வத்தையும், மோட்சத்தைக் கோருகிறவருக்கு
மோட்சமும் கிடைக்கிறது.

ஜபேத் கணபதிஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸை; பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:மொ


இந்தக் கணபதி ஸ்தோத்திரத்தை பயபக்தியுடன் விடாமல் ஆறு
மாதங்கள்  சொல்பவர்க்கு நினைத்த காரியம் ஈடேறும்.படிப்பவர்களுக்கு
அட்டமா சித்தியும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.


அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வா ய:ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:


எட்டு கணேச பக்தர்களுக்கு  இந்த ஸ்லோகத்தை எழுதிக் (கற்றுக்
கொடுப்பவருக்கு) எல்லாக் கலைகளும் விநாயகர் அருளால் சுலபமாக
வரும் என்று நாரத மகரிஷி ஆசீர்வதித்தார்.

இதி நாரத புராணே ஸங்கஷ்டநாஸன 
ஸ்ரீ கணேச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்



நன்றி 
தகவலும் படமும் 
வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி
http://www.visvacomplex.com/main.html



சங்கடங்களை அழிக்கும் ஸ்ரீ கணேசர்(பகுதி-2)


சங்கடங்களை அழிக்கும் 
ஸ்ரீ கணேசர்(பகுதி-2)



























ஒருவன் எந்த செயலை செய்ய முற்படும்போதும்
தடைகள் ஏற்படுவது இயற்கை 

தடைகளுக்கான காரணங்களை கண்டுபிடித்து 
தொடர்ந்து அந்த செயலை முடிக்க நடவடிக்கை 
மேற்கொள்ளுபவனே அறிவாளி. 

அவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

பொறுமையில்லாதவனும் விடாமுயற்சி 
இல்லாதவனும் தடையை கண்டு சோர்ந்து 
போய் உட்கார்ந்துவிடுகிறான். 

சிலர் தடைகள் ஏற்பட்டுவிட்டதே என்று
எல்லோரிடமும் புலம்பி திரிகின்றனர். 

இந்த உலகில் தடைக்கு காரணம் அவர்கள்தான் 
என்பதை உணராது பிறர் மீது குற்றம் சுமத்தி 
வீட்டையே ரணகளம் ஆக்குகின்றனர்.

இன்னும் சிலரோ மனம் உடைந்து 
தன் உயிரையே மாய்த்துக்கொள்ளுகின்றனர்.  

இப்படியாக செயலில் தடை ஏற்படுவதை 
அவரவர் மன பக்குவத்திற்கு ஏற்ப அணுகுகின்றனர்.

மின்னோட்டத்தில் தடை ஏற்படுவதால்தான் 
மின் விளக்கு ஒளிர்கின்றது. 
அதில் ஏற்படும் தடையின் அளவை பொறுத்து 
அதன் ஒளி குறையவோ கூடவோ செய்கிறது. 

சாதாரண இரும்பு தகடு சாணைகல்லில் 
உரசும் தடையை பொறுத்து கூர்மை பெறுகிறது.

ஓடும் நதியில் தடைகள் அணைகள் மூலம் 
ஏற்படுதுவதால்தான் நீர் தேங்குகிறது.
பயிர் வளமும் நில வளமும் மேம்பாடு அடைகிறது.

தடைகளை நமக்கு பயனுள்ளதாக 
மாற்றிகொள்வது எப்படி என்று சிந்திக்கவேண்டும்.

அறிவுள்ள மனிதன் தடைகற்களை 
தன் வெற்றி படிக்கட்டாக மாற்றி கொள்கிறான். 

அறிவற்றவனோ அந்த தடைகற்களை 
தனக்கு அளிக்கப்பட்ட சமாதி கற்களாக கருதிகொள்கிறான்

அறிவுள்ளவன் ஒரு செயல் தடைப்பட்டவுடன் 
தடை எதனால் வந்தது, தன் முயற்சியில் 
அல்லது திட்டமிடுதலில் ஏதாவது குறைபாடா 
என்று யோசிக்கிறான். 
விடை காண்கிறான்.

அறிவற்றவனோ எதை பற்றியும் 
யோசிப்பது கிடையாது. 

அவனுக்கு தெரிந்ததெல்லாம் 
அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு 
வேறு ஒரு செயலை செய்ய ஓடிவிடுவதுதான்.

அங்கும் அவன் வெற்றி காண்பதில்லை. 
அவன் வாழ்வில் தோல்விகள்தான் நிறைந்திருக்கும். 
அவன் எப்போதும் விதியையும்
 பிறர் மீது பழியையும் சுமத்தி கொண்டு இருப்பான். 

எனவே தடைகள் என்பது பலவிதமான 
வாய்ப்புக்களை நமக்கு அள்ளித்தரும் சுரங்கம். 
சிறிது பொறுமையாக சிந்தித்தால் 
நம் வாழ்க்கை எங்கோ கண்காணாத
உயரத்திற்கு நம்மை கொண்டு சென்றுவிடும்.

மனம்கலங்கினால். அது நம்மை 
குழப்ப சேற்றில் தள்ளி நம்மை துன்பத்தில் 
ஆழ்த்திவிடும் என்பதை உணரவேண்டும்.

பலமுறை தோல்விகளை சந்தித்தவன்தான் 
நிரந்தர வெற்றியாளன் ஆகிறான்.

தோல்வியே சந்திக்காதவன் காற்றடித்தால்
கவிழ்ந்து நீரில் மூழ்கிபோய்விடும் 
காகித கப்பல் போன்றவன்.    
(இன்னும் வரும்)
.

Wednesday, January 23, 2013

சங்கடங்களை அழிக்கும் ஸ்ரீ கணேசர் தோத்திரம் (பகுதி-1)


சங்கடங்களை அழிக்கும் 
ஸ்ரீ கணேசர் தோத்திரம் (பகுதி-1)



 

























நாம் வாழும் இந்த உலகத்தில் 
எந்த செயல் செய்யவேண்டுமென்றாலும் 
அதற்க்கு ஒரு எதிர் சக்தி இருக்கவேண்டும். 

இல்லாவிடில் செயல் அல்லது வினை நிகழாது.

தீக்குச்சியை ஒரு சொரசொரப்பான பகுதியின் 
மேல் உரசினால்தான் தீ வரும். 

பாலை கடைந்தால்தான் வெண்ணை வரும். 

நேர்மறை மின்சாரமும் எதிர்மறை மின்சாரமும் 
ஒரு கருவியில் செலுத்தினால்தான் கருவி இயங்கும்.

இவ்வாறு இறைவன் ஒவ்வொரு செயலுக்கும் 
ஒரு எதிர் விளைவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
என்னே அவன் மகிமை. !

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மின் காந்த சக்தி உள்ளது 
அதனால்தான் அண்டங்களில் கோடிகணக்கான கோள்கள்
ஒன்றைஒன்று மோதிக்கொள்ளாமல் 
அதனதன் பாதையில் நெடுங்காலமாய் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

மனிதர்களுக்கு மனம் என்ற ஒரு அதிசயிக்கும் 
சக்தியை இறைவன் அழித்திருக்கின்றான். 
அதனால்தான் சிலர் மீது நாம் அன்பு கொள்கிறோம், 
சிலரை வெறுக்கிறோம். 
சிலரிடமொன்றும் ஈடுபாடு கொள்வதில்லை. 
சிலரிடம் மோதுகிறோம். 
சிலரிடம் வாதிடுகிறோம்.

இப்படியாக எத்தனையோ
வினோதங்கள் இறைவன் படைப்பிலே. 

சங்கடங்கள் வாழ்க்கையில் இல்லை 
என்றால் வாழ்வே இல்லை
உரசல்கள் இல்லையென்றால் 
இன்பங்களும் இல்லை 
துன்பங்களும் இல்லை 
முன்னேற்றமும் இல்லை 

இறைவன் ஏற்படுத்திய 
இந்த ஏற்பாடு வியந்து ரசிக்கத்தக்கது. 

ஆனால் இந்த தத்துவத்தை
மனிதர்கள் புரிந்துகொள்ளாமல்
வாழ்வில் சங்கடங்கள் என்னும் தடைகள் 
ஏற்பட்டால் கலங்கி தவிக்கின்றனர்

அதை புரிந்து கொள்ளாது அதை போக்க 
பல வழிகளை நாடுகின்றனர். பல
முறைகளை அனுசரிக்கின்றனர்.
இதனால் பலர் பிழைக்கிறார்கள் 
பலர் இருப்பதையும் இழக்கிறார்கள்  .

போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலையில்
வேக தடைகள் இல்லையென்றால் 
என்ன ஆகும்.?

விபத்துக்கள் மக்கள் உயிரை குடிக்கும். 
அப்படியும் அதை மீறுபவர்கள்
எமனுலகிர்க்கு இவ்வுலகில் அவர்கள்
காலம் முடியுமுன்பே விருந்தாளிகளாக 
சென்று விடுகிறார்கள். 

(இன்னும் வரும்)

Sunday, January 20, 2013

எல்லாம் ஒருவனே (குருவாயுரப்பன் சுப்ரபாதம்)


ஹே குருவாயூரப்பா!
பக்தர்கள்

உன்னை கேரளத்தில்
வாதபுராதிநாதன்
என்று அழைக்கிறார்கள்






















ஆந்திர தேசத்தில் வெங்கடேசன்
என்று அழைக்கிறார்கள்




















திராவிட நாட்டில் குணசீலன்
என்று அழைக்கிறார்கள்.



































எல்லாம் ஒருவனே
(குருவாயுரப்பன் சுப்ரபாதம்)

மேற்க்கண்ட ச்லோகத்திர்க்காக முதலில் வெங்கேடேச பெருமானையும், அடுத்து குருவாயுரப்பனையும் வரைந்தேன். குணசீலபெருமானை வரைய பல ஆண்டுகளாக முயற்சி செய்து தற்போது வரைந்து முடித்துவிட்டேன், அந்த படம்தான் மேலே வெளியிட்டுள்ளேன். என் வேண்டுதலை பூர்த்தி செய்த குருவாயூரப்பனுக்கு அனந்தகோடி நமஸ்காரம். 

Friday, January 18, 2013

இறைவா உன்னை எல்லோரும் தேடுகிறார்கள்


இறைவா உன்னை 
எல்லோரும் தேடுகிறார்கள்





















நீ எங்கேயோ இருப்பதைப்போல

நீ கண்ணுக்கு தெரியாமல்
மறைந்துகொண்டதைபோல

நீ காணாமல் போய்விட்டதைப்போல

உண்மையில் நீ எதிரிலேயே இருக்கின்றாய்
உன்னை எதற்கு தேடவேண்டும்?

நீ கண்ணுக்கு தெரியாமல் மறைந்தால் அல்லவோ
உன்னை தேடுவதற்கு

நீ ஏற்கெனவே கண்ணெதிரில் இருந்து
தற்போது காணாமல் போய்விட்டால்
அல்லவோ உன்னை தேடுவதற்கு.

நான் கண்ணை மூடிக்கொண்டால்
இருட்டாக தெரிகிறாய்

கண்ணை திறந்து பார்த்தாலோ
ஒளியாக தெரிகிறாய்

நீதானே அனைத்துமாக இருக்கிறாய்

அந்த ஒளியில் தோன்றும் அனைத்துமே
உன் வடிவங்கள்தாமே

உறங்க சென்றால் கனவுகளிலும்
 நீதான் தோற்றமளிக்கிறாய்

என்னுள்ளிருந்தும் மற்ற உயிர்களிலுள்ளும்
வாசம் செய்துகொண்டு இயங்க செய்கிறாய்

நீ ஒன்றாகவும் இருக்கிறாய்
பலவாகவும் இருக்கிறாய்

ஒளியாகவும் இருக்கிறாய்
ஒலியாகவும் இருக்கிறாய்

என்னை விட்டு பிரியாமல் என்னோடு இருக்கின்ற
உன்னை நான் எதற்க்காக தேடவேண்டும்.

நீ இருப்பதை உணர்ந்துகொண்டாலே போதும்

உன் லீலைகளை ரசித்தபடி வாழுவதை விட்டு
கணத்திற்கு கணம் மாறும் மனம் போகும்
பாதையெல்லாம் சென்று
துன்பப் படுவது அறியாமையன்றோ?



எண்ணங்களும் மனமும்


எண்ணங்களும் மனமும்

எண்ணங்களும்
மனத்தையும் பிரிக்கமுடியாது

ஏனென்றால் மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு

எண்ணங்கள் ஒருமுறை தோன்றிவிட்டால் அது அழியாது

அது செயலாக முடியும் மட்டும் அது சும்மாயிருக்காது

அது ஒரு அழியாத விதை ,அழிக்கமுடியாத விதை

மனம்தான் நமக்கும் இறைவனுக்கும் இடையில்
பாலமாகவும் தடைக்கல்லாகவும் இருக்கிறது.

ஆம் ஒன்றுதான் இரண்டாக இருக்கிறது

எப்படி பாம்பின் நஞ்சு உயிரை கொல்லுகிறதோ
அதே நஞ்சு மூலம் தயாரிக்கப்பட்ட மருந்து
அதே உயிரை காப்பாற்றுகிறது.

ஆனால் ஒரு எண்ணம் செயலாக ஆகிவிட்டபின்
அது அழியுமென்று நினைத்தால்
நாம் ஏமாந்துபோவோம்.
அது நினைவாக நம் மனதில் தங்கிவிடும்.

மனதில் கோடிக்கணக்கான எண்ணங்கள்
தோன்றிக் கொண்டே இருக்கின்றன

நம் புலன்கள் மூலம் அவைகள் உள்ளே வருவதும்
வெளியே போவதுமாக ஓய்வின்றி
செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன

எந்த செயல் நடைபெற வேண்டுமேன்றாலும்
அதற்க்கு மனதின் துணை அவசியம்

அதை நிறைவேற்ற புலன்களின் உதவி அவசியம்.
மனதில் உள்ள எண்ணங்களை நிறைவேற்ற
இந்த உடலை மனம் பயன்படுத்திகொள்ளுகிறது.

மனதில் தோன்றும் எண்ணங்களை
நல்ல எண்ணங்கள் மற்றும் தீய எண்ணங்கள்
என பாகுபாடு செய்து மனதை தன் கண்காணிப்பில்
வைக்கும் நம்முடைய அறிவு.

ஆனால் அறிவை பயன்படுத்தும்
நம்முடைய உடலில் உள்ள மூளை
செயல்தன்மை குறைந்தால் மனது
இஷ்டம்போல் தன எண்ணங்களை
செயல்படுத்தி நம்மை துன்பத்திலும்,
துயரத்திலும் ஆழ்த்திவிடும்.

எனவேதான் ஐந்து கரத்தனை வணங்கும்போது
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன்
என்று திருமூலர் வணங்குகின்றார்.

இறைவனை மனதில் வைத்து வழிபட்டால்
ஆடலாம் ,பாடலாம் ஆனால் அந்த இன்பம் நிலைக்காது.

மனதின் சக்தி தீர்ந்ததும்
மனம் வேறு ஒரு பொருளை
நாட தொடங்கிவிடும்.






Wednesday, January 16, 2013

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்


நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்






இறைவன் உள்ளும் இருக்கிறான்
புறத்தேயும் இருக்கின்றான்
எல்லாமாகவும் இருக்கின்றான்.

அவனை விட்டு பிரிந்து வந்தோம் இவ்வுலகிற்கு 
ஆசைவயப்பட்டோம் அவனை மறந்தோம்.
அனுதினமும் சொல்லொணா துன்பங்களையும்
 நிலைக்காத இன்பங்களையும் 
அனுபவித்துகொண்டிருக்கிறோம் 

ஆனால் அவன் நம்மை மறக்கவில்லை
நம்முள்ளே நம்முடைய இதயத்தின் உள்ளே 
இருந்துகொண்டு நம்மை ஆட்டுவிக்கின்றான் 
நாம் ஆடுகிறோம். 

ஆனால் நாம் நம் மனதில்
நினைக்கின்றோம் நாமே ஆட்டம் போடுவதாக 
அகந்தை தலை தூக்க தலைவிரித்தாடுகிறோம். 

அவனும்தான் ஆடுகிறான் சிற்றம்பலத்திலும் 
பேரம்பலத்திலும் களிகூத்து இவ்வுலகம் உய்ய 
ஆடி ஓய்ந்த பின் தான் நமக்கு புரிகிறது 
நாம் ஆடவில்லை நம்மை ஒருவன் ஆட்டி வைக்கின்றான் என்று.

யார் அவன் என்று தேடுகிறோம் இவ்வுலகில் 
இவன் அவனாக இருப்பானோ அல்லது 
இவனில் அவன் இருப்பானோ அல்லது இந்த இடத்தில், 
இந்த வடிவத்தில் இருப்பானோ என்று

ஆனால் அனைவரும் அவனை எந்நேரமும் தேடுவதில்லை 
சில நேரம் தேடிவிட்டு அவரவர் வேலையை பார்க்க போய்விடுகின்றனர்.

சிலர் விடுவதில்லை .தேடிய பொருட்களில் அவன் வெளிப்படவில்லை 
இனி அவனை நம்முள்ளே தேடுவோம் என்று புறத்தை மறந்து அகத்தில் 
அவனை தேடுகிறார்கள். 

அகத்திலோ ஆயிரமாயிரம் எதிரிகள் 
அவனை தேட விடாமல் அவனை திசை திருப்புகிறார்கள்

இருந்தும் சிலர் விடாமுயற்சி செய்து பார்க்கிறார்கள். 
முடிவில் உள்ளிருக்கும் அவன் அருளின்றி அவனை 
காண முடியாது என்று உணருகிறார்கள். 

அனைத்தையும் துறந்து அவன் பாதங்களே கதி என்று 
சரணாகதி செய்தவுடன் அவன் காட்சி தருகிறான். 
தன் உண்மை வடிவை காட்டுகிறான். 
இதுவரை காணாத ஆனந்தத்தை அளிக்கிறான். 

பக்தன் பாடுகிறான் ஆடுகிறான். அவனைப்போலவே. ஆனந்த கூத்தாடுகிறான். 

சிலர் இறைவா இந்த ஆனந்தத்தோடு நான் உன்னிடம் வந்துவிடுகிறேன் என்கிறார்கள். அவனை அவன் அவனோடு சேர்த்துக் கொள்ளுகிறான் 

சிலரோ இறைவா என்னைப்போல் ஏராளமான் 
பக்தர்கள் உன்னை தேடிகொண்டிருக்கிரார்கள் 
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிறார்கள். 
அவர்களுக்கு நான் உதவ வேண்டும் என்கிறார்கள்
சரி என்கின்றான் இறைவன். 

அது போன்ற கருணையுள்ளம் கொண்ட புனிதர்களால்தான்
இன்று இறைஞானம் நமக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது. 

அதற்க்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம்.



Friday, January 11, 2013

ஹனுமான் ஜெயந்தி


























ஹனுமான் ஜெயந்தி

தன்னை வழிபடுவோர்க்கு
புத்தியில் பலமும் 
அகலா வீரமும்
பயமில்லா வாழ்வும்
வாக்கு வன்மையும் 
அருள்பவன் 
அஞ்சனை மைந்தன்

வெள்ளை உள்ளம் கொண்டு 
வெண்ணை சாற்றி பூஜித்தால் 
எண்ணும் எண்ணமெல்லாம் 
நிறைவேற்றி வைப்பான் 

வாழ்வில் இனி வெற்றி இல்லையோ  
என்று ஏங்கி தவிப்போருக்கு 
தனக்கு வெற்றி தரும் வெற்றிலை 
மாலை அணிவித்து பூஜித்தால் 
வெற்றி மகுடம் சூட்டிடுவான் 

வடை மாலை அணிவித்து 
அவனை வழிபாடு செய்தால் 
வாழ்வில் வரும் 
தடைகளைனைத்தையும் 
தகர்த்திடுவான் 

ராம நாமம் கொண்டு அவனை
வழிபட்டால் அவர்கள் உள்ளத்திலேயே 
தங்கி அருள் செய்திடுவான் .

ஜெய் மாருதி  

வஞ்சமில்லா சுற்றமும் பஞ்சமில்லா வாழ்வும்




காரிருளில் மின்னல் கீற்றுபோல் 
கம்பத்தில் அவதரித்தானை

பிரஹலாதனை முன்னிட்டு
வையத்தில் அரக்கனை அழித்து
அவனியிலுள்ளோர் கடும் துயர் களைந்தானை 

அங்கு மிங்குமிலாது எங்கும் நிறைந்தானை 

அபயம் என்று வந்தவர்க்கு தன்னையே
தந்து அருள் செய்த ராமபிரானை

பவசாகரம் கடக்கும் உபாயம் காட்டும்
சாத்திரம் தந்த கண்ணனை  

அவதாரம் பல எடுத்து அவனியில் 
அடியார்களின் துயர் தீர்த்த அரங்கனை

இலக்குமியோடு உறையும் அழகிய சிங்கனை 


காலையில் கண நேரமாவது 
நெஞ்சத்தில் சிந்தை செய்வோர்

வஞ்சமில்லா சுற்றமும் 
பஞ்சமில்லா வாழ்வும் 
வாழும் காலமல்லாம் பெற்று 
மகிழ்ந்து வாழ்வார் இவ்வுலகில்

Saturday, January 5, 2013

Dont.worry we are all ready to help you


சமாஸ்ரயணத்திர்க்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம்? (Part-2)




சமாஸ்ரயணத்திர்க்கும் 
திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம்?

சமாஸ்ரயணத்தில் தீயினால் மெய்யான இறைவன் 
குடியிருக்கும் பொய்யான உடலின் மீது 
சங்கு மற்றும் சக்கரம் இலச்சினைகள் இடப்படுகிறது 

அப்போது தீயின் சூட்டினால் 
தோளின் மீது தீக்காயம் ஏற்ப்படுகிறது. 
ஆனால் அந்த காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும். 
அதன் மேலே உள்ள காயமும் உலர்ந்து உதிர்ந்துவிடும். 
இலச்சினைகள் மட்டும் பளிச்சென்று வெண்மையாக பளிச்சிடும்.
அதைதான் தீயினால் சுட்ட புண் உள்ளாறும் 
என்று திருவள்ளுவர் குறிப்பிட்டார். 

அதே சமயம் வலது காதில் ஸ்ரீமன்நாராயணனின் 
எட்டெழுத்து மந்திரம் காதில் குருவினால் ஓதப்படும். 

அந்த மந்திரத்தை கவனத்துடன், 
பக்தியுடன். கேட்டுக்கொள்ளவேண்டும். 
அவ்வாறு ஓதப்பட்ட மந்திரத்தை தினமும் 
தவறாது பக்தி பாவத்துடன் உச்சரிக்கவேண்டும் 
.எதுவரை என்றால் நம்முடைய உயிர் 
இந்த உடலை விட்டு பிரியும்வரை. 
இறைவன் நமக்கு காட்சிதரும் வரை, 

உலகில் நம்மை ஒருவர் தன நாவினால் 
நம் மனம் காயப்படும்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் 
அது என்றும் மனதை விட்டு அகலாமல் 
வடுவை ஏற்படுத்திவிடும். 
அது என்றும் நம் மனதை விட்டு நீங்காமல் 
நம்மை தொல்லைபடுத்திகொண்டிருக்கும். 

ஆனால் குரு நமக்கு மந்திர உபதேசம் செய்துவிட்டால் 
அது வடுவைப்போல் நம் மனதில் ரீங்காரம்
 செய்துகொண்டிருக்கும். 
அது ஆறாது. 

எப்போது அது ஆறும்?

அந்த ஆரா அமுதனை நம் உள்ளத்தில் 
காணும்போதுதான் அந்த வடு ஆறும். 
இதைதான் திருவள்ளுவர் 
ஆறாது நாவினால் சுட்ட வடு.
என்று. குறிப்பிட்டுள்ளார். 

உலக நிகழ்வில் வாக்கினால் 
சுட்ட வடுக்கள் ஆறிவிடும் 
ஒருவரை ஒருவர் மன்னித்து விட்டால், 
அல்லது மறந்துவிட்டு மீண்டும் உறவு கொண்டால். 

ஆனால் குருவின் மந்திர உபதேசம் 
அந்த மந்திரத்திர்க்கான தேவதையை 
நாம் காணும் வரை ஆறாது என்பதே அதன் உள்ளர்த்தம்

இதோ அந்த குறள்
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது
நாவினால் சுட்ட வடு. 

பின் குறிப்பு.

மந்திர உபதேசம் செய்பவர் அந்த மந்திரத்தை 
சித்தி பெற்றவராக இருக்கவேண்டும்.
மந்திரத்தை பெறுபவரும் அதற்குரிய நம்பிக்கையும் 
வைராக்கியத்தையும் உடையவராக இருக்கவேண்டும்.
இல்லாவிட்டால் மந்திரத்தில் மாவடு காய்க்காது. 

Friday, January 4, 2013

சமாஸ்ரயணமும் திருக்குறளும்.


சமாஸ்ரயணமும் திருக்குறளும்.

சமாஸ்ரயணம் என்றால் என்ன? 

ஸ்ரீமன் நாராயணனை வழிபடு தெய்வமாக
கொண்ட வைணவர்கள் அவனை 
உரிய முறையில் 
வழிபட தகுதி பெறுவதற்கும் 
அவனின் மந்திரமான எட்டெழுத்து மந்திரத்தை 
உரிய குருவினிடம் செவி மூலம் உபதேசம் 
பெற்று உச்சரித்து உய்வடைவதர்க்கும் 
அனுசரிக்கபட்டுவரும் ஒரு சடங்கு

அந்த சடங்கினை வைணவ மடாதிபதிகள் 
நேரடியாக செய்து வைப்பார்.

செய்துகொள்ளுபவருக்கு
இருக்க வேண்டிய தகுதி

குருவினிடம் மதிப்பும் மரியாதையும் மற்றும்
சில கொள்கைகைகளையும், சில உணவு,மற்றும் 
வாக்கு கட்டுப்பாடுகளையும் அனுசரிக்க 
தயாரான மன நிலையும், 
ஸ்ரீமன் நாராயணன் மீது
பக்தியும் இருக்க வேண்டும்

அவ்வாறு இருப்பவர்கள்
இந்த சடங்கை செய்துகொள்ளலாம் .

அவர்களுக்கு இந்த சடங்கை
செய்துகொள்ளுபவர்கள்
விஷ்ணு பக்தர்கள் ,தன்னை 
அவனுக்கு அடிமையாக்கியவர்கள்
என்பதை உணர்ந்துகொள்ளும்பொருட்டும் , 
பிறர் தெரிந்துகொள்ளும் பொருட்டும்
ஸ்ரீமன் நாராயணன் திருக்கைகளில் 
தவழும் சங்கு சக்கரத்தின் வெள்ளியினால் 
ஆன சக்கரம் மற்றும் சங்கினாலான 
இலச்சினைகள் தீயில் சுடப்பட்டு 
வலது மற்றும் இடது தோள்களில் 
வைக்கப்படும்

பிறகு. எட்டெழுத்து மந்திரம் 
வலது செவியில் குருவினால் ஓதப்படும். 
அதை தினமும் சந்தியாவந்தனம் போன்ற
தினசரி கடமைகளை செய்யும் போது 
ஜபம் செய்ய வேண்டும். 

இவ்வாறு தினமும் தவறாது 
நம்பிக்கையுடன் செய்து வந்தால் 
இவர்களின் வாழ்வே தவமாக மாறிவிடும்.
மனம் எப்போதும் ஆனந்தத்தில் மிதக்கும்.
உள்ளத்தில் அன்பு பிறகும். 
அமைதி நிலைக்கும். 

காலதூதர்கள் இவர்களில் தோள்களில்
விஷ்ணு பகவானின் இலசினைகளை 
கண்டவுடன் இவர்களுக்கு 
எந்த தீங்கும் செய்யமாட்டார்கள்.
என்பது சத்தியம்.

தினமும் இறைவனின் பெயரை 
உச்சரித்துகொண்டிருப்பதால் 
இவர்களுக்கு வேறெந்த
முயற்சிகளும் தேவையில்லை 
இறைவனை நாடி இவர்கள் எங்கும் 
அலைய வேண்டியதில்லை. 
ஏனென்றால் இறைவன் இவர்கள் 
உள்ளத்திலே காட்சி தந்துவிடுவான். 

ஆனால் அதற்குரிய கடமைகளை 
சித்த சுத்தியுடன் அனுசரிக்கவேண்டும்.
போலி வேஷம் போடுவதால் 
எந்த பயனும் இல்லை
.
அது சரி திருக்குறளுக்கும்
சமாஸ்ரயணத்திற்க்கும் .
என்ன சம்பந்தம் ?
பார்க்கலாம் 























இன்னும் வரும்.

Wednesday, January 2, 2013

ஏழுமலையானை நினைக்க நினைக்க வாழ்வில் ஏற்றம்தான் எப்போதும்



ஏழுமலையானை நினைக்க நினைக்க 
வாழ்வில் ஏற்றம்தான் எப்போதும் 





ஏழுமலையானை எண்ணி துதிப்பவர்களுக்கு
எண்ணிய எண்ணம் எல்லாம் நிறைவேறும்
அனுதினமும் ஏழுமலையானை எண்ணி
துதிப்பவர்களுக்கு எண்ணிய எண்ணம்
எல்லாம் நிறைவேறும்

திருப்பதி சென்று திரும்பி வந்தால்
உன் விருப்பம் நிறைவேறும்

ஏழுமலை இருக்க நமக்கென மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் நமக்கேது தொல்லை

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா


வேங்கடத்தில நிற்ப்பவன்
வந்து பணிவோரின்
வெந்துயர்களை களைபவன்

வரம்பின்றி  வரங்களை தருபவன்
அவன் கோயிலை வலம் வருவோரின்
வாழ்வை வளம் பெற செய்பவன்.


அவனை நினைக்க நினைக்க நெஞ்சம்
அவனிடம் தஞ்சம் புகுந்திடும்
வாழ்வில் பஞ்சம் நீங்கிடும்


கவலைகளை மனதில் சுமந்துகொண்டு
கால் கடுக்க நடந்து சென்றாலும்
அவனை கண்ட மறுகணம் அனைத்தும்
மாயமாகிபோகும் அந்த
மாயவனில் அருட்பார்வையில்




உண்டியலில் காசை போட வைப்பான்
நம் உள் மனதில் மனதில் உள்ள
மாசையும் நீக்கிடுவான்.












இப்படியாக நம்மையெல்லாம்
காத்து ,ரட்சிக்கும்
கருணை தெய்வம் பாலாஜி

அவனை வரைந்தேன் .
அனைவருக்கும் கொடுத்தேன்.
வணங்கி வாழ்வில் வளம் பெற.

இதோ வலையுலக நண்பர்களுக்கு
வாழ்வில் அனைத்து இன்பங்களும்
பெற்று மகிழ அந்த படம் இதோ.