எண்ணங்களும் மனமும்
எண்ணங்களும்
மனத்தையும் பிரிக்கமுடியாது
ஏனென்றால் மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு
எண்ணங்கள் ஒருமுறை தோன்றிவிட்டால் அது அழியாது
அது செயலாக முடியும் மட்டும் அது சும்மாயிருக்காது
அது ஒரு அழியாத விதை ,அழிக்கமுடியாத விதை
மனம்தான் நமக்கும் இறைவனுக்கும் இடையில்
பாலமாகவும் தடைக்கல்லாகவும் இருக்கிறது.
ஆம் ஒன்றுதான் இரண்டாக இருக்கிறது
எப்படி பாம்பின் நஞ்சு உயிரை கொல்லுகிறதோ
அதே நஞ்சு மூலம் தயாரிக்கப்பட்ட மருந்து
அதே உயிரை காப்பாற்றுகிறது.
ஆனால் ஒரு எண்ணம் செயலாக ஆகிவிட்டபின்
அது அழியுமென்று நினைத்தால்
நாம் ஏமாந்துபோவோம்.
அது நினைவாக நம் மனதில் தங்கிவிடும்.
மனதில் கோடிக்கணக்கான எண்ணங்கள்
தோன்றிக் கொண்டே இருக்கின்றன
நம் புலன்கள் மூலம் அவைகள் உள்ளே வருவதும்
வெளியே போவதுமாக ஓய்வின்றி
செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன
எந்த செயல் நடைபெற வேண்டுமேன்றாலும்
அதற்க்கு மனதின் துணை அவசியம்
அதை நிறைவேற்ற புலன்களின் உதவி அவசியம்.
மனதில் உள்ள எண்ணங்களை நிறைவேற்ற
இந்த உடலை மனம் பயன்படுத்திகொள்ளுகிறது.
மனதில் தோன்றும் எண்ணங்களை
நல்ல எண்ணங்கள் மற்றும் தீய எண்ணங்கள்
என பாகுபாடு செய்து மனதை தன் கண்காணிப்பில்
வைக்கும் நம்முடைய அறிவு.
ஆனால் அறிவை பயன்படுத்தும்
நம்முடைய உடலில் உள்ள மூளை
செயல்தன்மை குறைந்தால் மனது
இஷ்டம்போல் தன எண்ணங்களை
செயல்படுத்தி நம்மை துன்பத்திலும்,
துயரத்திலும் ஆழ்த்திவிடும்.
எனவேதான் ஐந்து கரத்தனை வணங்கும்போது
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன்
என்று திருமூலர் வணங்குகின்றார்.
இறைவனை மனதில் வைத்து வழிபட்டால்
ஆடலாம் ,பாடலாம் ஆனால் அந்த இன்பம் நிலைக்காது.
மனதின் சக்தி தீர்ந்ததும்
மனம் வேறு ஒரு பொருளை
நாட தொடங்கிவிடும்.

அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஎண்ணங்களை எழுத்தில் வடித்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்.
ReplyDeleteவருகைக்கும் தங்கள் மேலான கருத்துக்களுக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி.
Delete