Sunday, March 31, 2013

காஞ்சி பரமாசார்யா


காஞ்சி பரமாசார்யா
இன்று எல்லோரும்
காஞ்சி பரமாசார்யாவின்
அருமைகளையும் பெருமைகளையும்
அவரோடு அவர்களுக்குள்ள
தொடர்பு பற்றியும் எழுதுகிறார்கள்,
பேசுகிறார்கள்.

ஆனால் நான் அவர் வெகு அருகில்
வசித்தபோதும் அவரை சென்று
தரிசித்ததும்  கிடையாது.

அவர் பெருமைகளை பற்றி
ஒன்றும் அறிந்துகொண்டதும் கிடையாது.

நான் நிறைய புண்ணியம் செய்திருந்ததால்
அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையோ
என்னவோ எனக்கு தெரியாது.

ஆனால் இப்போதுதான் நாம் நல்ல
வாய்ப்பை தவறவிட்டு விட்டோமோ
என்று எண்ணத்  தோன்றுகிறது.

ஆனால் அதற்காக
நான் வருத்தப்படவில்லை.

ஏனென்றால் இதுவும் இறைவனின் சித்தம்
என்று உறுதியாக நம்புகிறவன் நான்.

இருந்தாலும் 34 வருடத்திற்கு
முன் அவரை ஓவியமாக தீட்டினேன்.

அந்த படம் இதோ.

நாமக்கல் ஆஞ்சநேயன்

நாமக்கல் ஆஞ்சநேயன்
அஞ்சனை மைந்தன்
ஐந்தெழுத்தின்
அம்சமாய் பிறந்தவன்


வாயு குமாரன்
ராம தூதன்அன்னை சீதையின்
சோகம் தீர்த்தவன்

அசுரர்களின்
கொட்டத்தை அடக்கியவன்


பக்த சிரோமணி
அபயமளிக்கும் அழகன்

அடிபணிகின்றேன்
உன் திருவடிகளை

வெற்றிலை மாலை அணிவித்து வணங்கினால்
வெற்றிகளை அளவின்றி தருபவன்

வடை மாலை சாற்றினால் வாழ்வில்
வரும் தடைகளை தகர்ப்பவன்

பக்தியுடன் வெண்ணைகாப்பு சாற்றினால்
சக்தி தந்து காப்பவன்.

இவன் கைவண்ணத்தில்.

Saturday, March 30, 2013

சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ


சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ 
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் ரெண்டும் மின்னும் கண்ணா 

முன்னால் நிற்கின்றாய் 
கண்ணால் அழைக்கின்றாய் 

காண்போரை கவரும் 
குழந்தை வடிவம் கொண்டாய் 

கள்ளன் என்று பேர்கொண்டாய்
உள்ளத்தில் கள்ளம் போக்கிடுவாய்  

உள்ளத்தை கொள்ளை கொண்டாய்
உலக வாழ்வு வெறும் மாயை
என்று உணர வைத்தாய்  

மாயவனாகிய நீ என் இதயத்தில் 
வந்தமர்ந்த பின் அந்த மாயை
என்னை என்ன செய்யும்?


இறைவனின் வடிவழகை கண்ணார,தரிசித்து பயன் பெறுக.


இறைவனின் வடிவழகை
கண்ணார,தரிசித்து  பயன் பெறுக. 


பெற்றவள் ஒருத்தி
வளர்த்தவள் ஒருத்தி 

பெற்றவளோ சிறையில் 
வளர்த்தவளோ நிறைவில் 

அவன் பெற்றோர்களுக்கு
மட்டும் பிள்ளை அல்லன்

உலகத்திற்கே 
செல்ல பிள்ளை அவன். 

அவனை கையில் 
ஏந்தி நிற்கின்றாள் யசோதை 

அவன் அழகை கண்ட 
போதையில் மயங்கி கண்களை 
மூடிக்கொண்டுவிட்டாள்.
கண்திறந்து பார்க்கும் 
கண்ணனை காணாமல் 
.

அதைபோல்தான் பலரும் கோயிலில் 
மங்கிய விளக்கொளியில் இருக்கும்
 இறைவனின் திருவுருவத்தை 
தீபம் ஏற்றும் போது கண்டு மகிழ்ந்து 
மன இருட்டை போக்கிகொள்ளாமல் 
கண்களை மூடிக்கொண்டு 
இருட்டில் மூழ்குகின்றனர் 

இனிமேலாவது கோயிலில்
தீபாராதனை நடைபெறும்போது 
கண்களை அகல விரித்து 
இறைவனின் வடிவழகை 
கண்ணார,தரிசித்து 
பயன் பெறுவாராக. 

கோயிலில் தரிசித்த திருவுருவத்தை
மனதில் நிறுத்தி நம் இதயத்தில் 
நிலையாக கொண்டு
இன்புற வேண்டும் 


Friday, March 29, 2013

அகந்தையை அழிப்பாய் அகிலாண்டேஸ்வரியேஅகந்தையை அழிப்பாய் 
அகிலாண்டேஸ்வரியே 

அசுரர்களை அழித்து 
அகிலத்தை காத்தருளும் 
அன்னை அகிலாண்டேஸ்வரியே 

என் உள்ளத்தில் 
மறைந்துகொண்டு 
உன்னை நினக்கவிடாமல்
செய்யும் அகந்தையை 
மட்டும் நீ அழிக்க 
மறுப்பதேனோ?

Wednesday, March 27, 2013

What is the purpose of Life(Part-3)


What is the purpose of Life(Part-3)A single person with a strong mind 
full of hatred
is the root cause for  the wars 
and consequent
destruction of life and property of
millions all over the world  

in the past
and present and 
in future also.


Unless and until each person is free
from this hatred towards
humanity the war of destructions
will never come to an end.

We have come to this world to live peacefully,
happily but most of the people wished to
live in hell only thinking that hell is heaven.
In their mind.

Let us all pray together

GOD to change this attitude of mankind.
To love others is to love GOD

To see GOD only in places of worship and
in images  is foolish and ignorance

To see GOD in everything and behind
every actions and love every creature
which works for the welfare of mankind
has only to be learned in life.

And not but to amass wealth
at the cost of health is not the way of life

A fish out of water will die so also
if the GOD stop our breath we
can't do anything.


Keep this in mind and start
a purposefull life
from this moment itself
because the next moment
is not in our hands.

What is the purpose of life-Part(2)

What is the purpose of life-Part(2)


Life is to give only and not to take
because nothing will come with us
when we leave this body.The joy of giving to the have-nots by word
and deed is more enjoyable
than receiving from others.It has to be experienced only by doing it.


Serving others for fame will one day
or other land us in shame


Serving others is natural for human beings
but the most of the mankind
has forgotten this trait.But the plants and animals follow this rule
of GOD and lives happily together
till their stay in this world..


When crores of birds, creatures ,plants live
and grow peacefully
adjusting with each other man is not
able to live together because
of his ego and jealousy resulting
in hatred and fight them themselves
and get destroyed.This world is a beautiful and happiest place
created by GOD among all
the crores of planets by him.GODS have come down to earth and live
here and teach the mankind about this truth .But the mankind is becoming man eaters
day by day  and making this heaven of earth
into a hell of suffering.


Wearing of Golden ring or diamond ring
won't teach you the purpose of
life but the SUUFER-RING GIVEN BY GOD
alone will teach you the purpose of life and
make your mind turn towards the creator.The man who is having anything
more than his requirement is a thief. Only 


He will be stripped of his excess
possessions sooner or later by the
messengers of GOD by way of loss,theft etcOnce an evil thought enters the mind of a man
the countdown for his
downfall starts from that moment.And most of the people are not taking treatment
for the rootcause of the disease
but  take  treatment for the disease only
which never get cured till the end.


It is as cutting the branches of  a
poisonous tree without cutting its
roots and destroying it.A good thought is like a fragrance
It will make the thinker happy and
also the people come in contact with the person
like a flower spreads
its fragrance which gives joy
 to all irrespective of their
religion,caste or creed or
race.and even insects.

What is the purpose of life ?(Part-1)


What is the purpose of life ?(Part-1)

Life is not for learning 
for earning only

we must also to learn to forget  the harms
done by others to us and
the good things done by us to others
and also everything we havelearnt in the end

Life is not for lust.It is for love and
that too not with  lifeless things

Love should be unconditional,
pure,unbiased
true,without expectation
alone will bring peace
Other forms of love
will contaminate  us and
kill us in the end


Life must be run with intelligence
 but if it has got the guidance of intutution
the life will be peaceful and happy

Life full of selfish motive will make us
isolated surrounded by
enemies in this world

The sole purpose of life is not for entertainment only
The ultimate goal of life is enlightenment of the soul

Life full of sacrifices is the easiest way to reach GOD
The trees give away everything with it for the benefit of all
A cow gives away its milk for the benefit of humanity


But selfish humans take away all the milk without
even giving milk to the calf. They even torture them 
and  kill the cows to satisfy their taste mercilessly

We came to this world as an ignorant fool  
having learnt so many things we become arrogant
and go against all good norms   and started
thinking that people around us  all are
fools.and writing our destiny
of downfall in the end

Friday, March 15, 2013

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும்(9)

யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும்(9)

 
அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(8)


18.3.2013 அன்றுநடைபெறஉள்ள
ஸ்ரீ. அகஸ்தியர்  விழா

சக்தி அருட்கூடத்தில்
அகத்திய பெருமான்
நித்திய வாசம் புரிகிறார்

அங்கு அவர் உண்மை 
சாதகர்களுக்கு யோகத்தை 
அருளும் வகையில் 
யோக அகஸ்தியராகவும் 
அருள் பாலிக்கிறார். 

அவரை நம்பிக்கையுடன்,
உள்ளத்தில் பக்தியுடன் 
அன்போடு வணங்குவோருக்கு 
ஞானம்  சித்திக்கும் என்பது சத்தியம்.

அவரின் அற்புத வடிவத்தை
கண்டு தரிசிக்க புண்ணியம் 
செய்திருக்கவேண்டும் .

இவ்வுலகில் 
கோடிக்கணக்கான 
மனிதர்கள் இருக்கிறார்கள். 

ஞானத்தை தேடுபவர்கள் 
வெகு சொற்பமே. 

அதிலும் ஞான மார்கத்தில் 
ஏற்படும் தடைகளை எதிர்கொண்டு 
அதை போக்க தக்க குருவை அடைந்து 
அவர் வழிகாட்டுதலை ஏற்பவர் 
அதிலும் மிக குறைவு. 

அதிலும் தன்னுடைய 
இலக்கை அடைய உண்டாகும்
இடர்களை கண்டு அஞ்சி
பாதியிலேயே விட்டுவிட்டு 
ஓடிவிடுபவர்கள் அநேகம் .

புண்ணியம்  செய்யாதவர்கள் 
அவரை தரிசிக்க இயலாது 

18.3.2013 அன்று
ஸ்ரீ. அகஸ்தியர்  விழா .
நடைபெறுகிறது 


இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும்( 8)

யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும்( 8)

 
அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(7)


வேதங்கள்  முதலும்  முடிவுமில்லா  
அந்த  இறைவனால்  வெளியிடப்பட்டது  

அதை  முழுவதும்  அறிந்தவரில்லை 
அறியவும்  முடியாது

ஒரு  முனிவர்  பல  ஆயிரம்  ஆண்டுகள்
தேவேந்திரனிடம்  தன்  ஆயுளை  நீட்டித்துகொண்டு 
வேதங்கள்  பயில  ஆரம்பித்தார் . 

ஒரு  கால  கட்டத்தில்  அவர்  தேவேந்திரனிடத்தில்  
தான்  எவ்வளவு  தூரம்  வேதத்தை  கற்றிருக்கிறேன் 
என்று  வினவ அவன்  நீர்  இன்னும் 
தொடக்க  நிலையிலேதான்   இருக்கிறீர்கள் 
என்று  சொன்னானான் . 

அதற்க்கு  பிறகு  அவர்  அந்த  வேலையை  
விட்டுவிட்டு இறைவனை நோக்கி தவம்
 இயற்ற தொடங்கியதாக ஒரு கதை உண்டு,

கலியுகத்தில் மனிதாகளின் 
ஆயுள் குறைவு என்பதாலும் ,
வேதத்தை கற்பவர்களின் எண்ணிக்கை 
மிகவும் குறைந்துவிடும் என்பதாலும் 
வேதம் நான்காக பிரிக்கப்பட்டது. 

வேதத்தில் சொல்லப்படாத 
பொருள் இல்லை.
சரி இருக்கட்டும்.
வேதத்தின் சாரம் என்ன ?

இவ்வுலகத்து உயிரினங்கள் 
அனைத்தும் இன்பமாக வாழவேண்டும்.
 அதற்க்கு என்ன செய்யவேண்டும். 
துன்பங்கள் வந்தால் எவ்விடம் 
போக்கிகொள்ளவேண்டும் என்ற 
பல விதிமுறைகள அதில் 
தெளிவாகவகுக்கப்பட்டுள்ளன 

அவற்றை எல்லாம் தெரிந்து தெளிந்து
 வாழ்வில் பயன்படுத்திக்கொள்ள
 பல ஆண்டுகள் பயிற்சி.தேவை.
அது எல்லோராலும் முடியாது. 

ஏனென்றால் இன்றைய வாழ்க்கைமுறை 
அதற்கெல்லாம் இடமளிக்காது.

வேதம் கூறும் சாரம் என்ன தெரியுமா?

சத்தியத்தை கடைபிடி.
தர்ம வழியில் வாழ்க்கை நடத்து. 
அவ்வாறு நடந்தாயெனில் 
அந்த தர்மமே உன்னை 
காப்பாற்றும்.என்பதுதான் 

அதைதான் திருவள்ளுவரும் 
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும் 
அறத்தால் வருவதே இன்பம் 
என்று எழுதி வைத்தார். 

அந்த கொள்கையை தன் 
வாழ்வில் கடைபிடித்தவர் 
அகத்திய பெருமான். 

அதனால்தான் அகத்தியர் யார் 
என்று உமையவள் கேட்டதற்கு 
அகத்தியமே சத்தியம் 
சத்தியமே அகத்தியம் 
என்றார். சிவபெருமான் 

அந்த அகத்திய  பெருமானின் விழா
சக்தி அருட்கூடத்தில் 18.3.2013 
அன்று விமரிசையாக நடக்கிறது. 

வாய்ப்புடையவர்கள் 
கலந்துகொண்டு அருள் பெறுங்கள். 

இன்னும் வரும்) 
இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/

Wednesday, March 13, 2013

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (7)

யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும் (7)

 
அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(6)

அருள் வனம் என 
பெயர் வரக்காரணம் என்ன?

துவக்கத்தில் சக்தி அருட் கூடம் 
என அழைக்கப்பட்டது

நாளைடைவில் அந்த இடத்தில தெய்வங்களும் 
ஜீவ ஒளிகளும்,யோகிகளும்,முனிவர்களும்,
சஞ்சாரம் செய்து அங்கு வருபவர்களின் 
குறைகளை தீர்த்து வைப்பதால் 
அருட் கூடம் அருள் வனம் ஆகி விட்டது. 

இங்கு வருபவர்களிடம் 
எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை

வசுதைவ குடும்பகம்  அதாவது 
இந்த உலகத்து மாந்தரெல்லாம் ஒரே ,குடும்பம் 
காண்பதனைத்தும் அமிர்த மயம் என்ற 
உயரிய தத்துவத்தின் அடிப்படையில் 
இங்கு நடைமுறைபடுத்தப்படுவது 
உலகில் எங்கும் காணாத ஒரு சிறப்பு.  

நறுமணம் மிகுந்த வண்ண மலர்களால் 
தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதை 
கண்டு வணங்குவது கண் கொள்ளா காட்சி 

இன்னும் வரும்) 
இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (6)

யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும் (6)


அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(5)புறத்தில் ஒளியாய் விளங்கும் சூரியநாராயணனே
அகத்தில்  ஆன்ம ஒளியாய் பிரகாசிப்பவனே  
நோய் நொடியற்ற வாழ்வும் ஒளி பொருந்திய பார்வையும் 
பகைவரில்லா வாழ்க்கையும் 
தந்தருள்வாயே 

முக்காலமும் உணர்ந்த சித்தாதி முனியோரும் 
தவயோகிகளும் மகரிஷிகளும் தப்பாது 
அனுதினமும் வழங்கும் ஆசியினை 
அருல்வனத்தில் வந்தமைந்து செவிமடுப்பார்தம்
வாழ்வில் எக்காலும் இன்பமே 
இன்பமே இன்பமே என்றுணர். 

அல்லவை  தேய்ந்து 
வாழ்வில் ஆனந்தம் பெருக 
'நற்பவீ  ' நற்பவீ  என்ற மந்திரத்தை 
உச்சரித்து நலம் பெறுவீர். 
இன்னும் வரும்) 
இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/

Tuesday, March 12, 2013

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (5)

யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும் (5)


அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(3)

வாக்கு தரும் ,நல் வாழ்வு தரும் 
தாழ்வு அகலும் உள்ளத்தில் 
உவகை பொங்கும் ஏகதந்தனே
என் வினைகளை களைவாய் 
ஆனந்த விநாயகா !அடிபணிந்தேன் உன்னை 
அனவரதமும் காப்பாய் என்னை  

ஓம் நற்பவீ மூர்த்தயே நமோ நமஹ சத்தியத்தின் வடிவமாம் அகத்தியனே 
ஒவ்வொரு கணமும் அருட்சேய்களை காத்து 
நல்வழி காட்டும் சிவமே உன் அடியொற்றி
அடி  பணிந்தோரை காக்கும் லோபாமுத்திரை அன்னையே 
எந்நாளும் மறவேன் உன் திருவடிகளை 
பக்த சிரோன்மணியாம் பிரஹலாதனை 
கொடுமை செய்து அழிக்க நினைத்த 
இரணியந்தன்னை நரசிங்கவடிவம் தாங்கி
அழித்த சத்வமூர்த்தியாம் நாரணனும் 
சம்ஹாரமூர்த்தியாம் சங்கரனும் இணைந்து 
சரபமூர்த்தியாய் காட்சி தரும் இறைவா 
பக்தியோடு உன் பாதம் பணிகின்றோம் 
உன் திருவடிகளே எங்களுக்கு காப்பு. அருள்மாரி பொழிகின்ற கருமாரி அன்னையே
அருள்மாமணியின் அருள்வாக்கில் நடமிடும் நாமகளே
அச்சம் தவிர்த்து அமைதி  தந்து ஆனந்த வாழ்வு 
தரும் ஆதி சக்தியே அடைக்கலம் அடைந்தேன் 
உன் திருவடிகளை என்னை ஆதரித்தருள்வாயே 

(இன்னும் வரும்) 
இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/