Saturday, March 9, 2013

நாம் எல்லோரும் புண்ணியம் செய்தவர்கள்
நாம் எல்லோரும் 
புண்ணியம் செய்தவர்கள்
ஆம் நாம் எல்லோரும் 
புண்ணியம் செய்தவர்கள்


ஒவ்வொரு கணம் தோறும் 
பாவங்களை செய்தாலும் நாம் 
புண்ணிய செய்தவர்கள். 

எப்படி. ?

விலங்காய்,புழு, பூச்சி,தாவரமாய், அசுரராய்
பிறவாமல் மனித பிறவி எடுத்துள்ளோமே
அதுவே முதல் புண்ணியம்

அடுத்து பரந்த இந்த உலகத்தில் 
அறிவில்லா,காட்டுமிராண்டிகள் 
கூட்டத்தில் பிறவாமல் 
ஞானம் விளைந்த,
விளைந்துகொண்டிருக்கும் 
இந்த புனித பாரத தேசத்தில் 
பிறந்துள்ளோமே
அது எவ்வளவு 
பெரிய புண்ணியம் 

அதுவும் நம்மை படைத்த 
இறைவனை உணர 
வழி காட்டும் மகான்கள் 
அவதரித்த பூமியில் 
பிறந்துள்ளோம் அது 
பெரிய புண்ணியம் இல்லையா?

மற்ற யுகங்களை விட 
மிக புனிதமான கலியுகத்தில்
பிறந்திருக்கிறோமே இதை விட
பெரிய புண்ணியம் வேறு  
என்ன இருக்க முடியும்?

எல்லோரும் கலியுகம் 
மிகவும்  மோசமானது என்று 
கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள் 
பொய்யான  தகவல்களை
 பரப்பிகொண்டிருக்கிறார்கள். 

அவர்களின் அறியாமையை 
நாம் என்னவென்று சொல்வது? 

கலியுகம் என்றால் 
களிக்கும் யுகம் என்று பொருள் 

இந்த யுகத்தில்தான் 
இந்த உலக இன்பங்களையும் 
அனுபவித்து மகிழலாம்

மகிழ்வதோடு மாறாத 
நிலையான பேரின்பமான
இறை இன்பத்தையும் 
அடைய வழி தேடலாம் 

மற்ற யுகங்களில் 
எல்லாம் இறைவனை 
அடைய வேண்டுமென்றால் 
அனைத்தையும் துறந்துவிட்டு 
கானகத்திற்கு சென்று 
பல ஆயிரம் ஆண்டுகள் 
தவம் அல்லவா இயற்றவேண்டும். 

இந்த யுகத்தில்தான் 
கணக்கற்ற மகான்கள் 
நம்மிடையே தோன்றி ,
வாழ்ந்து இறைவனை
உணர்ந்து, அந்த நிலையை 
அடைய நமக்கெல்லாம் 
வழிகாட்டி பூவுடல் மறைந்தும்
புனித ஆத்மாக்களின் மூலம் 
வழி காட்டி வருகின்றனரே. 
அப்படிப்பட்ட இந்த யுகத்தில் 
வாழ்வது புண்ணியம் இல்லையா? 

தெய்வங்கள் எல்லாம் அதனதன் 
இருப்பிடங்களை விட்டு 
இந்த புனித பூமியில் சிலைகளாக 
நிலையாய் கோயில் கொண்டு
 பக்தர்களை வரவழைத்து அவர்களுக்கு 
பொருளும் அருளும் ஒருங்கே 
அளிக்கின்றனவே அது
முந்தய யுகங்களில் உண்டா? 

எனவே புண்ணியம் செய்து பெற்ற 
இந்த புனிதமான மனித பிறவியை 
வீணடிக்கலாமோ ?

நம்முடைய நேரத்தையும்,
காசையும் உறிஞ்சி கொழுக்கும் 
காம வியாபாரிகளான 
நடிகர்கள்,நடிகைகள்.
நாத்திகர்கள், அரசியல்வாதிகள்,
சமுதாய சீர்கேடர்கள்  
போலி சாமியார்கள்,
போதை பொருட்கள்,
கவைக்குதவாத 
உலக பொருட்கள் பின்னால்
நம் மனதை அலையவிட்டு 
மோசம் போகலாமோ?

சிந்திப்பீர் சிதறிப்போன
மனதை ஒன்றாக்குவீர்

சிவராத்திரியான இன்று 
அந்த சிவனை 
சிந்தையில் வைப்பீர்

யாரையும் 
நிந்தை செய்யாதீர்

யாரிடமும் 
அகந்தை கொண்டு 
அனைத்தையும் சீரழிக்கும் 
சினத்தை அகற்றிடுவீர் 

அன்பே வடிவா
சிவனை அன்பாய்நினைந்து 
அடியார்களோடு கூடி 

சிவானுபவம் பெறுவீர்.ஓம் நம சிவாய  


(இன்னும் வரும்)

6 comments:

 1. சிறப்பான மாறுபட்ட சிந்தனை ஐயா...

  நன்றிகள் பல...

  ReplyDelete
  Replies
  1. மாற்றி பிறக்கும் வகையறிவார்க்கு
   கூற்றை உதைக்கும் குறி அதுவாமே

   என்பதுபோல் மாற்றி சிந்தித்தால்தான்
   மாற்றங்கள் விளையும்
   ஏமாற்றம் தவிர்க்கப்படும்.

   Delete
 2. கலியுக விளக்கம் அருமை பாரத சிறப்பும் விளக்கமும் அருமை
  ஓம் நமசிவாய நமஹ

  ReplyDelete
  Replies
  1. இந்த அருமையான செய்தியினை
   உங்கள் நண்பர்களுக்கும்
   இளைய தலைமுறைக்கும் கொண்டு செல்லுங்கள்
   என்று உங்களை நான் கேட்டுகொள்கிறேன்

   Delete
 3. கலியுகம் என்பதற்கான விளக்கம் கொஞ்சம் வியப்பளித்தது. நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். நமக்குக் கிடைத்திருக்கும் இந்த மானிடப்பிறவியை நாம் தான் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
  மஹா சிவராத்திரி வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துகளை
   பகிர்ந்துகொண்டமைக்கும்
   வாழ்த்துகளுக்கும் நன்றி

   Delete