Thursday, December 31, 2015

இசையும் நானும் (89)

இசையும் நானும் (89)

இசையும் நானும் (89)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 89  வது காணொளி

மவுதார்கன் இசை 
திருப்பாவை - மாலே மணிவண்ணா.மார்கழி நீராடுவான் 
மாலே மணிவண்ணா 
மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் 
வேண்டுவன கேட்டியேல் 
ஞாலத்தை எல்லாம் நடுங்கமுரல்வன பாலன்ன வண்ணத்துன் 
பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே 
சாலபெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே 
கோலவிளக்கே கொடிய விதானமே 
ஆலில் இலையாய்  அருளேலோ ரெம்பாவாய்  


காணொளி இணைப்பு. 
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/TsuFGZqIXQM" frameborder="0" allowfullscreen></iframe>

இசையும் நானும் (88)
இசையும் நானும் (88)

இசையும்  நானும் என்னும் தொடரில்

என்னுடையே 88 வது காணொளி

மவுதார்கன் இசை 

ஹிந்தி திரைப்பட பாடல் -"நாகின்"(1954)

மன்  போலே மேரா தன் டோலே ...பிரபலமான பாடல். புத்தாண்டு சிந்தனைகள் (2016)

புத்தாண்டு சிந்தனைகள் (2016)

புத்தாண்டு சிந்தனைகள் (2016)

வருகின்ற புத்தாண்டில் வாழ்த்துகளை
பரிமாறிக்கொள்ளுவது ஒரு புறம் இருக்கட்டும்.

சில நல்ல பழக்க வழக்கங்களை  கைகொள்ள
முயற்சி செய்வோமாக.

1)புறங் கூறுதலை அடியோடு நிறுத்த வேண்டும்

2)இன்னாத சொற்களை விடுத்து இனிய சொற்களை
பேச பழகவேண்டும்

3)பொன்னான நேரத்தை வீணடிக்கும் செயல்களை செய்யாது
பொறுப்போடு ,விருப்பு வெறுப்பின்றி செயல்பட முயற்சித்தால்
வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

4)எதையும் திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும்.

5)எந்த செயலுக்கும் பிறர் கையை எதிர்பாராது முடிந்தவரை
தானே பணிகளை செய்து முடித்தல்.

6)எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடித்தால்.

7) தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாது இருத்தல்

8)முடித்தால் பிறருக்கு உதவுதல் இல்லையெனில் தொல்லை தராது இருத்தல்.

9) கடமைகளை காலத்தே கருத்தோடு தள்ளிப் போடாமல் முடித்தல்.

10) தான் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ளுதல்

11)முயற்சியின்மைக்கு பிறரை குறை கூறுவதை தவிர்த்தல்

12)சுத்தமான ,சத்தான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளுதல்.

13) போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருத்தல்.

14) தனி மனித ஒழுக்கம், இறை பக்தி போன்றவற்றை அனுசரித்தல்.

மேற்கண்ட விஷயங்களை  கடைபிடித்தால். புத்தாண்டு ஜோதிட பலன்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை ஆண்டு முழுவதும் நல்ல பலன்களே நடக்கும். 

Wednesday, December 30, 2015

இசையும் நானும் (87)

இசையும் நானும் (87)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 87  வது காணொளி

மவுதார்கன் இசை 

திருப்பாவை - மார்கழி .திங்கள் 


மார்கழித்  திங்கள்
மதி  நிறைந்த  நன்னாளால் 
நீராடப்  போதுவீர் !
போதுமினோ,  நேரிழையீர்!
சீர்மல்கும்  ஆய்ப்பாடிச் 
செல்வச்  சிறுமீர்காள்!
கூர்வேல்  கொடும்  தொழிலன்
நந்தகோபன்  குமரன்
ஏரார்ந்த  கண்ணி 
யசோதை  இளஞ்சிங்கம்
கார்மேனி  கதிர்  மதியம்
போல்  முகத்தான்  நாராயணனே 
நமக்கே  பறை  தருவான் 
பாரோர்  புகழப்  படிந்தேலோ  எம்பாவாய்

காணொளி இணைப்பு.


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/05PySoCin5g" frameborder="0" allowfullscreen></iframe>


Tuesday, December 29, 2015

உண்மைப் பொருளாய் விளங்கிடும் தெய்வமே !

உண்மைப் பொருளாய் விளங்கிடும் தெய்வமே !

Metal foil-Art- by T.R.Pattabiraman 

உள்ளம் என்னும் கோயிலே
ஒளியாய் மறைந்து நின்று ஒளி
வீசும் உப்பிலியப்ப பெருமானே

ஒருமையுடன் உன்னை நினைந்து
வணங்குகின்றோம் உலகத்து
உயிர்கள் யாவும் இன்புற்று வாழவே (உள்ளம்)

கருணை பொழியும்
கண்களை உடையவனே
காம க்ரோதாதிகளைக் களைந்து
இவ்வுலகில் உழலும்  காலம் முழுதும்
களிப்புடன் வாழ அருள் செய்வாய் (உள்ளம்)

உண்மைப் பொருளாய்
விளங்கிடும் தெய்வமே
பக்தி என்னும் உணர்வினால் மட்டும்
அடைய இயலும் பரந்தாமனே  (பக்தி)(உண்மை)

அன்புடனே கூடி
அகிலத்து மாந்தர்
ஆனந்தம் பெற்று
அமைதியாகவே வாழ (உண்மைப்)(உள்ளம்)

உள்ளம் என்னும் கோயிலே


உள்ளம் என்னும் 
கோயிலேஉடல் என்னும்
கூட்டில்  சிக்கிக் கொண்டேன்
உள்ளே வந்து போகும் காற்றினால்
உலகில் அங்குமிங்கும் அலைகின்றேன்

விருப்பு வெறுப்பு என்னும்
நச்சுக் காற்றால் ஒவ்வொரு கணமும்
மாறி மாறி அடைகின்றேன்
இன்பமும் துன்பமும்
இரவும்  பகலும் போல்

சோதனைகளும் வேதனைகளும்
நோய்வாய் படுவதால் வரும்
வாதனைகளும் வந்து வந்து
மனம் நொந்து சோர்ந்து போனேன்

உள்ளம் என்னும்
கோயிலே உறைகின்ற
உத்தமனே ,உலகளந்த பெருமானே

உந்தன் பாதம் பணிகின்றேன்
என் உள்ளத்தில்நிலையாய்
என்றென்றும்  வீற்றிருப்பாய்
நிம்மதியை தந்திடுவாய் .
Monday, December 28, 2015

இசையும் நானும் (86)

இசையும் நானும் (86)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 86 வது காணொளி

மவுதார்கன் இசை 

திருப்பாவை- ஒருத்தி மகனாய் பிறந்து
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/bvtjRxbGk18" frameborder="0" allowfullscreen></iframe>

இசையும் நானும் (85)

இசையும் நானும் (85)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய  85 வது காணொளி.

தமிழ் பாடல்- என்ன சொல்லி அழைத்தால்
நீ வருவாயோ. இனிதே என்தன்னை ஆட்கொள்ள.

இணைப்பு.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/-h7wDnDu-4o" frameborder="0" allowfullscreen></iframe>


Friday, December 25, 2015

இசையும் நானும் (84)

இசையும் நானும் (84)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 84 வது காணொளி

தமிழ் பாடல் -நானே இயற்றி பாடியது


காணொளி இணைப்பு
https://www.youtube.com/watch?v=oANLQN2bM9U&feature=youtu.be

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/oANLQN2bM9U" frameborder="0" allowfullscreen></iframe>

கோதையே என் அன்னையே 
நீ வாழி வாழி வாழி 


Image result for sri andalபக்தியில் தோய்ந்து
பரமனிடம் கலந்து நிற்கும் பாவையே
பெரியாழ்வார் கண்டெடுத்த கோதையே
உந்தன் பெருமை பேசுதல்  எளிதாமோ

நிலையில்லா மனம் கொண்டு
நிமலனை மறந்து நிம்மதியின்றி
தவித்த என் போன்றோருக்கு
திருமால் புகழ் பாடும்
திருப்பாவை  தந்தாய்
திருஆயர்பாடி கண்ணனை நினைந்துருகி
அவன் திருவுள்ளம் கவர்ந்தாய் (பக்தி)

மாலவன் மாதமாம் மார்கழி தன்னில்
அவன் மலர்ப்பதம் நினைந்து வணங்கி
மகிழ்ந்து உலக மாயை நீங்க வழி காட்டி
அருளிய  கோதையே என் அன்னையே
நீ வாழி வாழி வாழி 

கோதையே என் அன்னையே நீ வாழி வாழி வாழி

கோதையே என் அன்னையே 
நீ வாழி வாழி வாழி 


Image result for sri andalபக்தியில் தோய்ந்து
பரமனிடம் கலந்து நிற்கும் பாவையே
பெரியாழ்வார் கண்டெடுத்த கோதையே
உந்தன் பெருமை பேசுதல்  எளிதாமோ

நிலையில்லா மனம் கொண்டு
நிமலனை மறந்து நிம்மதியின்றி
தவித்த என் போன்றோருக்கு
திருமால் புகழ் பாடும்
திருப்பாவை  தந்தாய்
திருஆயர்பாடி கண்ணனை நினைந்துருகி
அவன் திருவுள்ளம் கவர்ந்தாய் (பக்தி)

மாலவன் மாதமாம் மார்கழி தன்னில்
அவன் மலர்ப்பதம் நினைந்து வணங்கி
மகிழ்ந்து உலக மாயை நீங்க வழி காட்டி
அருளிய  கோதையே என் அன்னையே
நீ வாழி வாழி வாழி 

Monday, December 21, 2015

இசையும் நானும் (83)

இசையும் நானும் (83)

 இசையும் நானும் (83)

இசையும் நானும்  என்னுடைய
83. வது  காணொளி

மவுதார்கன் இசை -தமிழ் திரைப்பட பாடல்

'அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா -அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா"


இனிமையான  இதயத்தை தொடும் பாடல்.

இணைப்பு.

Saturday, December 19, 2015

மார்கழி சிந்தனைகள்(5)

மார்கழி சிந்தனைகள்(5)

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் 
என்பார் சிலர். 

விதியை மதியால் மாற்றலாம் 
என்பார் ஒரு சிலர். 

அண்ட  சராசரங்களும் அந்த 
ஆதி சக்தியின் விதிகளுக்கு உட்பட்டுதான் 
இயங்கி வருகின்றன. 

பல கோடி  ஆண்டுகள் ஆன  போதிலும் 
அந்த விதிகள் அப்படியேதான் 
செயல்படுத்தப்பட்டு வருகின்றன 

இந்த அண்டத்தில் உள்ளவைகள் அனைத்தும் 
ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை 

ஒரு கடிகாரத்தில் துடிக்கும் சக்கரத்துடன் 
இணைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான 
சக்கரங்கள் ஒன்றோடொன்று இணைந்து 
நேரத்தை காட்டுவதுபோல்தான் நம் 
கண்முன்னே தோன்றுகின்ற காட்சிகள். 

கடிகாரத்தின் மேல் உள்ள முட்களை மட்டும்தான் 
நாம்தான் காண்கிறோம். அதன் உள்ள  இருக்கின்ற 
பகுதிகளையோ அதன் இயக்கங்களையோ, அல்லது 
அதை இயக்க செய்யும் சக்தியையோ நாம் அறியோம். 

அதுபோல்தான் இந்த உலகமும். அதன்பின் 
மாபெரும் சக்தி ஒவ்வொரு அணுவிலும் இருந்துகொண்டு 
அனைத்தையும் ஆர்பாட்டமில்லாமல் இயக்கிகொண்டிருக்கிறது. 

நாம் அந்த விதிகளை மீறும்போது தண்டிக்கப் படுகிறோம் 
அப்போதும் நம் அகந்தை எந்த பாடமும் கற்றுக்கொள்வதில்லை 
என்பதுதான் வேதனை தரும் விஷயம் 

நாம் தனி உயிரில்லை.நம் உடலுக்குள்ளேயே  கோடானகோடி 
உயிர்கள் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கின்றன .நாம் சுவாசிக்கும் 
காற்றில் கோடானுகோடி உயிர்கள் வருவதும் போவதும், மடிந்து போவதுமாய் இருக்கின்றன. 

இதைதான் பகவான் கண்ணன் பாரத போரில் அர்சுனனுக்காக 
அகண்ட தரிசனம் அளித்ததை  வியாச பகவான் நமக்கு 
சித்தரித்து காட்டியுள்ளார். 

Image result for bhagavan viswaroopa darisanam

எனவே அப்படிப்பட்ட மகா சக்திக்கு அடிபணிந்து வணங்கி  நின்றால் 
அது நமக்கு எல்லா நலன்களையும் அளித்து நம்மை வாழ வைப்பதோடு முடிவில் அது நம்மை அதனில் கரைத்துக் கொண்டுவிடும். 
                                                                                ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


சோகம் தரும் உலக பொருட்கள் மீது மோகம்   விடுத்து 
பரமானந்தம் தரும் ஜகன் மோகனனான கண்ணனில் வடிவில் நம் 
மனதை செலுத்துவோம்.

ஆயிரம் நாமங்கள் கொண்ட விஷ்ணு சகஸ்ரநாமத்தை
அனுதினமும் பாராயணம் செய்வோம். 

மாலவன் மாதமான மார்கழி மாதத்தில் அப்படிப்பட்ட பகவான் கண்ணனை நினைந்து நினைந்து அவன் அன்பில் உருகி அவனுள் ஆனந்தமாக  கரைந்துபோவோம். 

Friday, December 18, 2015

மார்கழி சிந்தனைகள் (4)

மார்கழி சிந்தனைகள் (4)

ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள்
கதிரவனின் வெப்பத்திலிருந்து
நமக்கு நிழல் தருகின்றன

அதன் இலைகளோ உயிர்கள்  வெளிவிடும்
நச்சுக் காற்றை உட்கொண்டு நம்மை வாழ
வைக்கும் பிராண வாயுவை நமக்கு
தருகின்றன

தாவரங்களின் அனைத்து  பகுதிகளும்
இந்த உலகில் அனைத்து உயிர்களும்
இன்பமாக வாழ தங்களின் வாழ்நாள்
முழுவதையும் அர்ப்பணிக்கின்றன.

ஆனால் மனிதர்கள் மட்டும் தங்களிடம்
உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழும்
எண்ணத்தை வளர்த்துக் கொள்வது
கிடையாது.

மாறாக எல்லாம் தனக்குத்தான் என்று
இறுமாப்பு கொண்டு கஞ்சனாய்
திகழ்ந்து ,காசேதான் கடவுள் என்று
அலைகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மூலகாரணன் அந்த
உலகளந்த உத்தமன் தான் என்பதை
வசதியாக மறந்து அவனை வாழ்த்தி
வணங்காது அவன் தரும் அனைத்து
சுகங்களையும் பெற்றுக்கொண்டு
நன்றி மறந்து அவன் மீது
வசை பாடுவதிலேயே குறிக்கோளாக
இருக்கின்றனர்.

அதன் விளைவுதான் அகந்தை கொண்டு
அடாவடித்தனம் செய்த மக்களுக்கும்
இறைவன் கொடுத்த தண்டனை.

ஆனாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றனர். நடந்து முடிந்த
நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்று
பட்டி மன்றம் நடத்தி ஒருவர் மீது
ஒருவர் வசை பாடிக்கொண்டிருக்கின்றனர்.

வசை பாடுவதை விட்டு விட்டு ஆண்டாள்
அருளிய திருப்பாவை பாடல்களை பக்தியுடன்
இசைத்தால் போதும் போனதனைதும் கிடைக்கும்.
பொங்கும் மங்கள வாழ்வும் மலரும். 

இசையும் நானும் (82)

இசையும் நானும் (82)

இசையும் நானும் (82)

இசையும் நானும்  தொடரில் 
என்னுடைய 82 வது காணொளி 

மவுதார்கன் இசை "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே "

காணொளி இணைப்பு.

Thursday, December 17, 2015

மார்கழி சிந்தனைகள்(3)

மார்கழி சிந்தனைகள்(3)

ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் முழுவதையும்
இறை சிந்தனைக்காக ஒதுக்கி பிறவிக் கடலிலிருந்து
நம்மையெல்லாம் மீட்க வழி வகுத்த பெருமை
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரையே சேரும் .என்னே அவள் கருணை !

பூமியில் நம்மை பிறக்க வைத்து
நம்மை அன்போடு அரவணைத்து காக்கும்
அன்னை பூமியின் அவதாரமல்லவோ அவள்.!

ஆசையினால் வரும் துன்பங்களை
அறிந்தும் அதை உணராது
ஆசை வயப்பட்டு பூஜைகள் செய்யும்
மனிதர்காள்!

நம்மை ஆட்டுவிக்கும்
ஆடல்வல்லானையும்
நம்முள் ஆன்ம ஒளியாய் உறைந்து,நிறைந்து
நம்மை காக்கும் ஆன்ம ராமனை
ஆலயம் சென்று அவன் வடிவை
வணங்கி இவ்வுலகிலேயே இன்பம் அடைந்து
அந்த நினைவிலேயே வாழ்ந்து முடிவில்
நிலையான அவன் பதத்தை அடைய  வேண்டும்
என்று ஒவ்வொரு பாசுரத்திலும் அழகாக
நமக்கு காட்டிக் கொடுக்கும் அந்த
அன்பு தெய்வத்திற்கு நாம் என்ன கைம்மாறு
செய்யப்போகிறோம் ?

வருத்தம் போக்கும் வழி கிடைத்தபின்
விழிகளை அகல விரித்துக் கொண்டு
அந்த வழியில் சென்று நல்ல கதியை
அடைய நாம் முயலாவிட்டால் நாம்
அறிதற்கரிய அரியின் திருவடிகளை
சிந்திக்காது போனால் நமக்குதான் இழப்பு.

மற்ற பிழைப்பால் பாடுபட்டு சேர்த்த செல்வம்
அனைத்தும் நம் கண்முன்னே வெள்ளம்
அடித்துக்கொண்டு போனதை கண்டபின்னும்
திருந்தாது போனால் மனித பிறவி 
அடைந்து என்ன பயன் ?


மார்கழி சிந்தனைகள் (2)

மார்கழி சிந்தனைகள் (2)

மார்கழி மாதம் பிறந்துவிட்டது 

மார்கழி மாதம் ஒவ்வொரு ஆண்டும்

மாலவன் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது 


உலகத்தில் பிறவி எடுப்பது எதற்காக?அதுவும் மானிட பிறவி எடுப்பது எதற்காக ?


வாழ்வதற்காகத்தான் பிறவி எடுக்கிறோம். 


           ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

அதுவும் வாழ்வாங்கு வாழ்பவர்கள்தான் 

அந்த வாய்ப்பை பயன்படுத்தி வானமும் 

பூமியை அளந்த பெருமானையும் அவன் 

இதயத்தில் உறையும் அழியா செல்வம் 

தரும் ஆனந்தவல்லியையும் தரிசித்து 

ஆனந்தம் அடைகிறார்கள். 

மற்றவர் அனைவரும் ஊனை வளர்ப்பதிலும் 
உடன் வாராத உடைமைகளைச் சேர்ப்பதிலேயும் 
குறிக்கோளின்றி உலகத்தை சுற்றுவதிலேயும் 
உறக்கத்திலும், மயக்கத்திலும், திளைத்து 
நோயுற்று  கவலைகளுக்கு ஆட்பட்டு வீணே 
மடிகின்றனர். 

அலைகின்ற மனதை அலைமேல் துயிலும் 
அரங்கனின் திருவடிகளில் நிலை நிறுத்த
அதிகாலையில் எழுவோம். அவன் தாள் 
பணிவோம் 

அன்னவயல் புதுவை  
ஆண்டாளின் பாசுரங்களை 
அடியார்கள் குழாத்துடன் 
கூடி பாடி மகிழ்வோம்.  

Wednesday, December 16, 2015

மார்கழி சிந்தனைகள்.(1)

மார்கழி சிந்தனைகள்.(1)மார்கழி திங்கள் என்றால்
மாரி காலம் முடிந்து மங்கல
நிகழ்வுகள் இனி தொடர இருக்கும்
காலம் என்றும் அதன் விளைவால்
மதியிலே ஒளியும் அதன் பாதிப்பாக
உள்ளத்திலே உற்சாகமும் வாழ்விலே
வசந்தம் பிறக்கும் என்பது பொருள்

வறண்டு போன பூமி திரண்டு வந்த
மழை மேகங்களால் நிறைந்து வழிகிறது
நீர் நிலைகள் நிரம்பி தளும்புகின்றன

பூமி  தாய் இவ்வுலக உயிர்கள் வாழ
தந்த தாவரங்கள் தன்னிடம்
உள்ளதனைத்தையும் அனைவருக்கும்
அள்ளித் தர காத்திருக்கின்றன

நாமும் அனைத்தையும் நமக்கே என்று
சுயநலம் கொண்டு வைத்துக் கொள்ளாமல்
மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து இன்பம்
அடையும் பண்பை அடைய
முயற்சி செய்வோமாக.

எங்கும் குளிர்ச்சி .பூத்து குலுங்கும்
மலர்களால் உள்ளத்தில் தோன்றுகிறது
மகிழ்ச்சி அதனால் அனைவரின்
முகத்தில் தோன்றுவது மலர்ச்சி

இவைகளுக்கெல்லாம் காரணமான
அந்த மாலவனை ,  மலர் வண்ணனை
மாமுகில் வண்ணனை மலரிட்டு
பூசித்து ,இனிய அமுது படையலிட்டு
வணங்கி அனைவருடனும் பகிர்ந்து
உண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமோ !
என்பதை நமக்கு உணர்த்தத்தான்
பூமித்தாய் தானே ஆண்டாளாக
அவதரித்தாள் .போலும்!பாடினால் அவனை எளிதில் பெறலாமே !
என்று வேதங்களின் சாரத்தை நமக்கு
தந்தருளிய கோதையின் திருவடிகளை
வணங்கி அவள் நமக்களித்த
அமுத பாடல்களை பாடி மகிழ்வோம் 

Monday, December 14, 2015

குருவாயுரப்பனே நமோ நமோ !

குருவாயுரப்பனே நமோ நமோ !


குருவாயுரப்பனே நமோ நமோ
குழந்தை வடிவில் காட்சி தரும்
தெய்வமே நமோ நமோ (குருவாயுரப்பனே)குவலயத்தைக்  காக்கவே
கோகுலத்தில் அவதரித்தாய்
ஏதுமறியாஆயர் சிறுவர்களிடம்
இணையில்லா லீலைகள் புரிந்தாய்

அன்னை யசோதையின் அன்பில் கரைந்தாய்
கள்ளமில்லா கோபியருடன் களிநடனம்
புரிந்து மகிழ்ந்தாய்.  (குருவாயுரப்பனே)

அகந்தை கொண்டு அதர்ம நெறியில்
நின்ற  கூட்டத்தை அழித்தாய்
அவனியில் மாந்தர்களின் அறியாமை
அகல  கீதையளித்து அருள் செய்தாய்  (குருவாயுரப்பனே)

எண்ண எண்ண  இனிக்கும் உந்தன்  நாமம்
இக பர சுகங்களை அளிக்கும் நாமம்
இன்னலை போக்கி இன்பம் அருளும்  நாமம்
இறுதியில் முக்தி அளிக்கும் உந்தன்
நாமம்  (குருவாயுரப்பனே)

இசையும் (நானும் 81)

இசையும் (நானும் 81)

இசையும் நானும்  என்னுடைய 

81  வது காணொளி 

மவுதார்கன் இசை 

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா -
சித்தமெல்லாம் எனக்கு சிவா மயமே 
உன்னை சேவித்த கரங்களுக்கு  இல்லை பயமே 

 காணொளி இணைப்பு 

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jvbzUc4_3_Y" frameborder="0" allowfullscreen></iframe>

Sunday, December 13, 2015

ஆதி விநாயகர்

ஆதி விநாயகர் 


விநாயகர் என்றாலே அனைவருக்கும்
நினைவில் நிற்பது ஆனைமுகம்தான்.

ஆனால் ஆதியில் விநாயகருக்கு மனித முகம்தான்
இருந்தது. (கீழே காணும் வடிவம்)இது குறித்த கூடுதல் விவரங்கள் கீழ்கண்ட வலைப்பதிவில்
தெரிந்துகொள்ளலாம்.

http://santhipriyaspages.blogspot.in/2015/12/thila-tharpan-boomi-e.html

இசையும் நானும் (80)

இசையும் நானும் (80)

இசையும் நானும்  தொடரில்
என்னுடைய 80 வது காணொளி

மவுதார்கன் இசை

பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா (கே . பி.சுந்தராம்பாள்)

இணைப்பு:

<iframe width="854" height="480" src="https://www.youtube.com/embed/3js2yqdky00" frameborder="0" allowfullscreen></iframe>


Thursday, December 10, 2015

சித்தமெல்லாம் எனக்கு ராம மயமே

சித்தமெல்லாம் எனக்கு ராம மயமேசித்தமெல்லாம் எனக்கு ராம மயமே
உன்னை நினைக்க நினைக்க
உள்ளத்தில் தோன்றுவது உந்தன்
அருள்வடிவமே   ராமா  (சித்தமெல்லாம்)

அடியவர்களை காக்க நீ அயோத்திக்கு
அரசனாய் தான்  வந்தாய் ஆனால்
அவர் படும் துன்பத்தை நீக்க
அரியணையை துறந்து ஆரண்யம்
புகுந்தாய்  இராமா (சித்தமெல்லாம்)

அல்லல் தரும் அசுரக் கூட்டங்கள் வாழும்
கானகத்தில் அகிலம் வாழ அருந்தவம்
இயற்றிய தவசிகளைக் காக்கவே அவர்
குடில் சென்றாய் .வழியில் கண்ட
அனைவரிடமும் அன்பால் உறவு கொண்டு
அவர்களை ஆட்கொண்டருளினாய்  ராமா (சித்தமெல்லாம்)

அன்பால் உன்னை அழைக்கின்றேன் உன்
அருளை நாடி அனுதினமும்  துதிக்கின்றேன்
அடியவன் அன்பன் அனுமனின் பக்தியை
எனக்கும் தரவேண்டுமென்று வேண்டுகின்றேன் ராமா (சித்தமெல்லாம்)

Tuesday, December 8, 2015

புறப்படுவீர் புதியதோர் எதிர்காலம் படைக்க


புறப்படுவீர் புதியதோர் 
எதிர்காலம் படைக்க 


புலம்பியது போதும்
புறப்படுவீர் புதியதோர்
எதிர்காலம் படைக்க

எங்கிருந்தோ வந்தார்கள்
ஏதும் எதிர்பாராது உணவளித்தார்கள்
தேங்கும்  நீர் வெள்ளத்தில் நீந்தி வந்து
நன்றிகள் கோடி அந்த நல்லுள்ளங்களுக்கு

அப்படிப்பட்ட நல்லதோர் பண்பினை
நம்மிடையே வளர்த்திடுவோம்
அதனால் நாம் அனைவரும்
நிச்சயம் நலம் பெறுவோம்.

இயற்கை தன்  கடமையை
செய்து முடித்து சென்று விட்டது
இனி நாம்தாம் அவரவருக்கு உள்ள
கடமையை தொடர வேண்டும்.

உடைமைகள் போனால்  போகட்டும்
மீண்டும் உழைத்தால் அவைகளை
அடைந்துவிடலாம்

இந்த இக்கட்டில்
நம் உயிர் போகாமல் காப்பாற்றிய
இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

இரவு பகல் பாராது பாதிக்கப்பட்டவர்களுக்காக
உழைத்த/உழைத்துக்கொண்டிருக்கும்
முகவரி தெரியாத அந்த
பல்லாயிரக்கணக்கான மனிதர்களின்
தொண்டை போற்றுவோம். அவர்களும்
அவர் குடும்பத்தினரும் நலமுடன் வாழ
பிராத்தனை செய்வோம்.

அனைவரும் இணைந்து உழைப்போம்
சுயநலமில்லாது வளமான
எதிர்காலத்தை  நோக்கி.நம்பிக்கையுடன். 

Monday, December 7, 2015

குற்றம் சொல்லிக் கொண்டே போனால்?

வாரிக் கொட்டியது வான்மழை !

வாரிக் கொட்டியது வான்மழை !

வாரிக் கொட்டியது  வான் மழை !
ஆம் வாரிக் கொட்டியது வான்மழை !

ஆனால் அதை அணை கட்டி
தேக்கி வைக்க அணைகளும் இல்லை
ஏரிகள் இல்லை ,குளங்கள் இல்லை
குட்டைகள்  இல்லை

மாறாக வீடுகளில் நீர் புகுந்து
அனைத்தையும் இழந்துவிட்டோம்
என்று ஒப்பாரி வைக்குது மக்கள் கூட்டம்.

அண்டை மாநிலங்களுடன் நீர் தகராறு
நீதிமன்றங்களில் ஆண்டாண்டுகாலமாக
தொடரும் வழக்குகள் அற்ப அளவில்
நீர் பெற. போராடும் கையாலாகாத
சுயநல பேய்களாய் ஆளும் வர்கங்கள்.

ஆனால் இன்று அடுத்த தலைமுறைக்கும்
உணவு பஞ்சமின்றி வாழ ,குடிநீருக்கு
பஞ்சமின்றி வாழ இயற்கை அளித்த
கொடையினை வீணே கடலில்
கலக்கவிட்டுவிட்டு தெரு தெருவாக
பிச்சைஎடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட
மக்கள்-திட்டமிடாத ஆளும் வர்க்கம்
இந்த அவல நிலைக்கு யார் காரணம்?

வீடும் நாடும் சேற்றினால்  நிறைந்து  கிடக்க
வீதிகள் முழுவதும் வீட்டு  பொருட்கள்
சிதறிக்  கிடக்க அடுத்த வேளைக்கு  சோறின்றி
அலையும் நேரத்திலும் கூட ஒருவர் மீது
ஒருவர் குறை கூறி சேற்றை வாரி
இறைக்கின்றார் .அந்தோ பரிதாபம் !
இவர்களை யார் திருத்துவது. ?

எதற்கெடுத்தாலும் இவர்களை நெறிப்படுத்த
காவல்துறைதான் வரவேண்டும் என்ற
உன்னத நெறியை கடைபிடிக்கும் இவர்களை
யார் மாற்றுவது?

உதவிகள் மலைபோல் குவிகின்றன
உலகெங்கிலுமிருந்து அனுதினமும்

ஆனால் அவைகளை முறையாக
தேவைப்படுவோருக்கு சென்று சேர்க்க
அமைப்பு இல்லை .

ஆர்பாட்டம் செய்து
விளம்பரம் தேடும் மனிதர்களால்
உதவிகள் விழலுக்கு இரைத்த நீர்போல்
வீணாகிவிடுமோ என்ற அச்சம் உதவி
செய்பவர்களுக்கு.

கிடைக்கும் உதவிகளை அமைதியாக
அனைவரும் பகிர்ந்துகொண்டு
பயன்படுத்திக்கொண்டு சிக்கலிலிருந்து
முன்னேற வழி தேடாது அனைவர் மீதும்
குற்றம் சொல்லிக் கொண்டே போனால்
இவர்களுக்கு எந்நாளும் விடிவுகாலம்
என்பது கேள்விக்குறியே.

போனது போகட்டும். இனி வருங்காலம் நலமாக திகழட்டும்


போனது போகட்டும். இனி வருங்காலம் 
நலமாக திகழட்டும் 

வெள்ளம் வந்தது
 பாடுபட்டு சேர்த்து வைத்து
வீ ட்டை நிறைத்த பொருளனைத்தும்
வெல்லம் போல்  கரைந்து காணாமல் போனது.

போன பொருளனைத்தும் மீண்டும்
பெற வழியுண்டு

ஆனால் உடலை
விட்டு உயிர் போனால் மீண்டும்
பெற வழியில்லை என்பதை உணர்ந்தோர்
அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு
வீதிக்கு வந்தனர்.

வெள்ளம் சில நாளில் வடிந்துவிடும் 
ஆனால் உள்ளத்தில் கள்ளம் இருந்தால் 
என்றும் வாழ்வில்லை  வளமில்லை 

நல்ல உள்ளம் கொண்டோரே பாசத்துடன் 
நாதியற்றவர்களை ஆதரித்து பசியாற்றினார்

உள்நோக்கம் கொண்டாரோ ஊருக்காக
உள்ளம் உருகுவதுபோல் நடிக்கின்றார்.

பொருட்கள் அத்தனையும் சாக்கடையில்
இருக்க வீடில்லை குடிக்க நீரில்லை
முகவரியில்லை என்ற நிலை
வந்தபின்னும் இருப்பதை மற்றவரோடு
பகிர்ந்து உண்ணும் பக்குவம் வரவில்லை

ஒழுங்கில்லை எதற்கெடுத்தாலும்
மற்றவரை குறை கூறும் தீய பண்பு
மாறவில்லை.சட்டத்தை மதித்து
வாழும் முறையை கற்கவில்லை.

இதுவும் கடந்துபோகும் .பொறுமையாய் 
சிந்தித்து கடுமையாய் உழைத்தால் 
முன்பிருந்த நிலையை விட வாழ்வில் 
முன்னேற்றம் காண வழியுண்டு.  இசையும் நானும் (79)

இசையும் நானும் (79)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 79 வது காணொளி

மவுதார்கன் இசை- தமிழ் பாடல்.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
என்ற TMS ன்  பாடல்

காணொளி இணைப்பு.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/u78DYsVcrU8" frameborder="0" allowfullscreen></iframe>
https://youtu.be/u78DYsVcrU8

Saturday, December 5, 2015

தவறு செய்தால் தண்டனை உறுதி

தவறு செய்தால் தண்டனை உறுதி

தவறு செய்தால் தண்டனை உறுதி 

ஆம் தவறு செய்தால்
தண்டனை உறுதி

வடிநீர் கால்வாய்களில்
நாள்தோறும் குப்பைகளை கொட்டினோம்.
நீர் செல்லும் வழிகளை அடைத்தோம்.

அதனால் வேறு வழியின்றி
கால்வாய்களில் செல்லும் நீர்
வீதிக்கு வந்தது .அப்படியே நம்
வீட்டிற்குள்ளும் புகுந்தது

வீட்டை நரகமாக்கி நாறடித்தது
இனி அவ்வாறு செய்யமாட்டோம் என்று
உறுதி எடுத்துக்கொள்வோமா ?

பயிர் நிலங்கள் நம்மை வாழ  வைக்கும்
உயிர் நிலங்கள் அதில் வீட்டைக்
கட்டினோம் அந்தோ ! இன்று நீர்
சூழ்ந்து கூழ் கூட கிடைக்காமல்
கதறுகின்றோம் -அரசைக் குறை
கூறி  என்ன பயன்?

ஏரி ,குளம், குட்டை எல்லாம்
காணாமல் போயிற்று -பெய்யும் மழை நீர்
தங்க இடம் இல்லாமல் போயிற்று

ஆற்று படுகையிலே வில்லாக்கள்
கட்டினோம். இன்று அனைத்தையும்
இழந்து ஒன்றும் இல்லாமல் தவிக்கின்றோம்.

இனியாவது மனிதர்கள் தாங்கள்
செய்யும் தவறுகளை திருத்தி கொள்ளவேண்டும்

இல்லை யெனில் நாமிருக்க மாட்டோம்
இவ்வுலகில் இவைகளைக் காண. 

மழையும் மக்களும்

மழையும் மக்களும்

மழையும் மக்களும் 

மழை இறைவன் அளிக்கும் கொடை
அது இடைவிடாது பெய்யும்
அடைமழை ஆனாலும் சரி
கோடையிலே வரும் குளிர்விக்கும்
தூரலானாலும்   சரி.

இறைவன் அளிக்கும் கொடையை
பெற்றுக்கொள்ள நம்மிடம்
பாத்திரம் இருக்கவேண்டும்
ஆனால் பாத்திரம் நம்மிடம் இல்லை
மாறாக ஆத்திரம்தான் வருகிறது

Image result for chennai floods update

வட்டியும் முதலுமாக கிடைத்த
விண் நீரை  பயன்படுத்த வழியை
தேடாது மண் மீது வீணாக கடலில்
ஓடவிட்டுவிட்டு ஒருவர் மீது ஒருவர்
சேற்றை வாரி இறைத்துக்கொண்டு
அழுது புலம்புகின்றனர் ஒவ்வொருவரும்

Image result for chennai floods update

ஓடையிலே வீட்டை கட்டினால்
கோடையிலே வேண்டுமானாலும்
இன்பத்தை தரலாம் ஆனால்
வெள்ளம்   வந்தால் அனைத்தையும் இழந்து
நடைபாதைக்குதான் தான்
போக வேண்டும் என்பதை அறிந்தும்
அசட்டையாய் இருந்தனர்  இந்த மக்கள்

Image result for chennai floods update

ஏரியிலே கட்டிய வீடு ஒருநாள்
நீரில் மூழ்கி விடும் என்பதை எடுத்து
காட்டியதுதான் இவ்வாண்டு
பெய்த பெருமழை .

இறைவனை இகழ்வதை விடுத்து
இயற்கையை பழிப்பதை விடுத்து
இயற்கையுடன் இணைந்து வாழ
கற்றுக்கொள்ள வேண்டும் இந்த
மனித சமுதாயம்

இனியும் திருந்தாவிடில்
வருந்துவதை தவிர வேறு வழியில்லை