சமாஸ்ரயணத்திர்க்கும்
திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம்?
சமாஸ்ரயணத்தில் தீயினால் மெய்யான இறைவன்
குடியிருக்கும் பொய்யான உடலின் மீது
சங்கு மற்றும் சக்கரம் இலச்சினைகள் இடப்படுகிறது
அப்போது தீயின் சூட்டினால்
தோளின் மீது தீக்காயம் ஏற்ப்படுகிறது.
ஆனால் அந்த காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும்.
அதன் மேலே உள்ள காயமும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.
இலச்சினைகள் மட்டும் பளிச்சென்று வெண்மையாக பளிச்சிடும்.
அதைதான் தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
என்று திருவள்ளுவர் குறிப்பிட்டார்.
அதே சமயம் வலது காதில் ஸ்ரீமன்நாராயணனின்
எட்டெழுத்து மந்திரம் காதில் குருவினால் ஓதப்படும்.
அந்த மந்திரத்தை கவனத்துடன்,
பக்தியுடன். கேட்டுக்கொள்ளவேண்டும்.
அவ்வாறு ஓதப்பட்ட மந்திரத்தை தினமும்
தவறாது பக்தி பாவத்துடன் உச்சரிக்கவேண்டும்
.எதுவரை என்றால் நம்முடைய உயிர்
இந்த உடலை விட்டு பிரியும்வரை.
இறைவன் நமக்கு காட்சிதரும் வரை,
உலகில் நம்மை ஒருவர் தன நாவினால்
நம் மனம் காயப்படும்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டால்
அது என்றும் மனதை விட்டு அகலாமல்
வடுவை ஏற்படுத்திவிடும்.
அது என்றும் நம் மனதை விட்டு நீங்காமல்
நம்மை தொல்லைபடுத்திகொண்டிருக்கும்.
ஆனால் குரு நமக்கு மந்திர உபதேசம் செய்துவிட்டால்
அது வடுவைப்போல் நம் மனதில் ரீங்காரம்
செய்துகொண்டிருக்கும்.
அது ஆறாது.
எப்போது அது ஆறும்?
அந்த ஆரா அமுதனை நம் உள்ளத்தில்
காணும்போதுதான் அந்த வடு ஆறும்.
இதைதான் திருவள்ளுவர்
ஆறாது நாவினால் சுட்ட வடு.
என்று. குறிப்பிட்டுள்ளார்.
உலக நிகழ்வில் வாக்கினால்
சுட்ட வடுக்கள் ஆறிவிடும்
ஒருவரை ஒருவர் மன்னித்து விட்டால்,
அல்லது மறந்துவிட்டு மீண்டும் உறவு கொண்டால்.
ஆனால் குருவின் மந்திர உபதேசம்
அந்த மந்திரத்திர்க்கான தேவதையை
நாம் காணும் வரை ஆறாது என்பதே அதன் உள்ளர்த்தம்
இதோ அந்த குறள்
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது
நாவினால் சுட்ட வடு.
பின் குறிப்பு.
மந்திர உபதேசம் செய்பவர் அந்த மந்திரத்தை
சித்தி பெற்றவராக இருக்கவேண்டும்.
மந்திரத்தை பெறுபவரும் அதற்குரிய நம்பிக்கையும்
வைராக்கியத்தையும் உடையவராக இருக்கவேண்டும்.
இல்லாவிட்டால் மந்திரத்தில் மாவடு காய்க்காது.
சமாஸ்ரயணம் பெற்ற நிகழ்வு
ReplyDeleteமனதில் மலர்ந்து மண்ம் பரப்பியது ..
அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
வருகைக்கும் தங்கள் மேலான கருத்துக்களுக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி.
Delete