Friday, January 31, 2014

அபிராமி அந்தாதி (6)(காப்புச் செய்யுள் )

அபிராமி அந்தாதி (6)

அபிராமி அந்தாதி (6)

காப்புச் செய்யுள் 

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை 
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற 
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே- 
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு


காப்புச் செய்யுளுடன் நம்மைக் காக்கும் அபிராமி 
அன்னையைப் போற்றி பாடுவோம். 

காக்க அபிராமி இருக்கையிலே தனியாக 
கணபதியை தொழுது விட்டுதான் பாடவேண்டுமா 
என கேள்வி எழுகிறது 

அதற்கு அவர் முழு முதற்க் கடவுள் அதனால்  அவரை 
வணங்கிவிட்டுத்தான்  எந்த செயலையும் செய்ய வேண்டும். 
இல்லாவிடில் செய்யும் செயலில் தடைகள் ஏற்படும் 
அது  இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் 
விநாயகனை வணங்க வேண்டும் என்று சொல்வார்கள்
அப்படி செய்யாமையினால் பல தெய்வங்கள் 
துன்பத்திற்கு ஆளாயின என்று பல புராணங்களே பாடி
நம்மையெல்லாம் பயமுறுத்தி  வைத்திருகிறார்கள்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

தெய்வங்கள் நம்முடைய
பயங்களைப் போக்க வந்தவை 
நல்ல பயன்களை அளிக்க வந்தவை.
அலை பாயும் மனதை நிலை  நிறுத்த வந்தவை 
ஒருமையுடன் மனதை இணைக்க வந்தவை 
அதனால் எந்த செயலிலும் வெற்றியை 
அடைய வைக்கும் திண்மையை அளிக்க வந்தவை. 

வணங்கினாலும் வணங்காவிட்டாலும் 
அவன் நம்மையெல்லாம் வாழ்விக்க வந்தவன். 
அதனால் விநாயகன் பற்றிய பயம் வேண்டாம் நமக்கு 

இருந்தாலும்  யார் எந்த வேலையை தொடங்கினாலும்  
தடைகள் ஏற்படாமலிருக்க விநாயகனை வணங்கி 
தொடங்கும் வழக்கு வந்துவிட்டது.
நல்ல  வழக்கம்தான் தொடரட்டும் 

தடைகள் ஏன்  வருகின்றன ?

அனைத்துவிதமான் தடைகளையும் முன்னதாகவே 
அறிந்துகொள்வதற்கும், அதை நீக்கி கொள்வதற்கும் 
தேவையான அறிவை மனிதனுக்கு இறைவன் 
ஏற்கெனவே நமக்கு அளித்திருக்கிறான். 

ஆனால் எல்லா மனிதர்களும்
அந்த அறிவை வளர்த்துக்கொள்ளவில்லை.

 உதாரணத்திற்கு ஒரு வண்டியை ஓட்டுபவன் வண்டி ஓட்டுவதை மட்டும் 
அறிந்துகொண்டால் வண்டியை ஓட்ட மட்டும் முடியும்.

ஆனால் அது மட்டும் அவனுக்கு போதாது.

வண்டியை நன்றாக பராமரித்து அதை
நன்றாக இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அந்த வண்டிக்கு என நிர்ணயிக்கப்பட்ட
பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறக்கூடாது.

வண்டி ஓட்ட உரிமம் பெற்றிருக்க வேண்டும்,
சாலை விதிகளை பற்றி அறிந்திருக்க வேண்டும்

மனதில் தெளிவு இருக்க வேண்டும்.
சிறு பழுதுகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

திடீரென்று எதிர்பாராமல் 
நிகழும் பிரச்சினைகளை சமாளிக்கத்  தெரிந்திருக்க வேண்டும். 
விபத்து ஏற்ப்பட்டால் முதலுதவி செய்ய தெரிந்திருக்கவேண்டும்.

அவன் ஓட்டும் வண்டியினை பற்றிய
அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். 

வண்டியின் அடிப்படை இயக்கங்களை
பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இவ்வளவு தெரிந்திருந்தாலும் ஏதாவது ஒன்றை
பற்றிய அறிவில்லாததினால் அவன் துன்பத்திற்கும்,
தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடும்.அல்லது மற்றவர்கள் செய்யும் தவறுகளினால் அவன் துன்பத்திற்கு ஆளாகக் கூடும். 

எனவே வாழ்வில் தடைகள் ஒரு தவிர்க்க முடியாத அங்கம் என்பதை 
யாரும் மறுக்க முடியாது. 

தடைக்கற்கள்தான் வாழ்வில் உயர உதவும் படிக்கற்கள் என்று 
அனுபவசாலிகள் தெரிவிக்கிறார்கள். 

விளக்கில் உள்ள மெல்லிய உலோகத்தில் மின் சக்தி பாயும்போது அதில் ஏற்ப்படும் தடைகளை பொருத்துதான் அது அதிக ஒளி வீசுகிறது.

இஸ்திரி பெட்டியில் உள்ள உலோக சுருளில் ஏற்படும் அதை அடியில்உள்ள உலோகத் தகட்டை சூடாக்கி நமக்கு துணிகளை செம்மைப் படுத்த  உதவுகிறது.

இந்த உலகில் தடைகள்தான் நம்மை இயங்க வைக்கும் சக்தி.

தடைகளை நமக்கு சாதகமாக 
மாற்றும் வழிகளை வாழ்வில் கைக்கொளளுவோம்

 தடைகளே   நம்மை வாழ்வில்
 உயரவைக்கும் சக்தி. 

தடைகளைக் கண்டு 
அஞ்சவேண்டியதில்லை. 

தடைகளை வரவேற்போம்,
அறிவினால் தடைகளைத்  தகர்த்து 
உரம் பெறுவோம் வளம் பெறுவோம்.
அந்த சக்தியைப் போற்றுவோம்.

அந்த சக்தியைப் போற்றி அபிராமி பட்டர்
அவருக்கு ஏற்பட்ட துன்பத்திலிருந்து அவரைக் காத்துக் கொண்டார்.
நாமும் அவர் வழியினை பின்பற்றி அம்பிகையைத் துதித்து நம்முடைய துன்பங்களிலிருந்து விடுபடுவோம்.

இன்னும் வரும் 
1 comment:

  1. நல்லதொரு உதாரணத்தோடு விளக்கம் மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete