Thursday, April 10, 2014

அறுபதிலும் உண்டு ஆனந்தமான வாழ்க்கை

அறுபதிலும் உண்டு ஆனந்தமான  
வாழ்க்கை 




இதுவரை உங்கள் குழந்தைகளுக்காக,  வாழ்ந்த நீங்கள் 60 வயதிலிருந்து உங்களுக்காக வாழத் தொடங்குங்கள். 

இதுவரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில்
புறங் கூறாமல் வாழ்ந்திருந்தால்
உங்கள் மனமும் உடலும்
உரமாக இருக்கும்.

உங்களுக்கு எதிரிகளை விட நண்பர்களே
அதிகமாக இருப்பார்கள்.

அப்படி இல்லையா?

இனிமேலாவது புறங் கூறுவதை 
விட்டுவிடுங்கள். உங்களை விரும்பாவிட்டாலும்
யாரும் வெறுக்க மாட்டார்கள்.

பொதுவாக 50 வயதைக் கடக்கும்போதுதான்
 பலருக்கு வாழ்க்கை கசக்கத் தொடங்குகிறது.

அவர்கள் உடல்நலத்தைஉதாசீனம் செய்ததின் 
விளைவுகளை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். 

தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல்
குழந்தைகளின் மீது அளவற்ற பாசம் காட்டியதால்
மோசம் போனதை உணரத் தொடங்குகிறார்கள்.

மற்றவர்கள் தங்களை மதிக்காமல் போவதும்,
பல விஷயங்களில் ஒதுக்கப்படுவதும்
மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

அவர்களின் அனுபவம் வாய்ந்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக
ஒரு தாழ்வு மனப்பான்மை அவர்கள் மனதில்
வேர் விடத் தொடங்கி விடுகிறது.

நாளடைவில் அது மரமாக வளர்ந்து
அவர்களின் மன நிம்மதியைக் குறைத்துவிடுகிறது.

ஆனால் உண்மையில்
அவ்வாறு எதுவும் இல்லை.

வாழ்க்கையில் ஒவ்வொரு  கால கட்டத்திலும்
ஒரு பொறுப்பு மனிதனுக்கு ஏற்ப்படுகிறது.
அதை செவ்வனே செய்து வந்தால். போதும்.

ஒரு  கால கட்டத்தில் அந்த பொறுப்புக்களை
 மற்றவர்களிடம்விட்டுவிட கற்றுக்கொள்ளவேண்டும்.

அதற்கு குழந்தைகளை சிறு வயதிலிருந்தே
பழக்கப்படுத்தப்படவேண்டும்

பெற்றோர்கள் ஒழுக்கமாக,
ஒழுங்காக வாழவேண்டும்.

அவர்களின் குழந்தைகளையும்
அது போல் வளர்க்க வேண்டும்.

குடும்பம் அன்பால் கட்டப்பட்ட
கோட்டையாக  இருக்க வேண்டும்

அது அகந்தையாலும் அடிமைத்தனத்தாலும் 
கட்டப்பட்டால் விரிசல் விழுந்து சரிந்துவிடும். 

அவர்களை தறுதலைகளாக வளர்த்துவிட்டால்
அவர்கள் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

 மாறாக அவர்களை சேர்த்து பராமரிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு  வந்துவிடும்.

மேலும் அவர்களால் அவர்களுக்கும் நிம்மதியில்லை.
அவர்களை அதுபோல் வளர்த்த பெற்றோர்களுக்கும் நிம்மதியில்லை.

ஆனால் எப்படி இருந்தாலும்
எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவத்தை
மனதில் வளர்த்துக்கொண்டால்.
வாழ்க்கை முதுமையில் இனிக்கும்.
(இன்னும் வரும்) 

2 comments:

  1. காலத்தே விழித்துக் கொள்ள வேண்டும். இளமையின் குணா நலம் முதுமையின் மன நலம்!

    ReplyDelete
  2. ஏதேனும் பிடித்த ஒன்றில் ஆர்வத்துடன் லயித்து விட்டால் என்றும் ஆனந்தம் தான் ஐயா...

    ReplyDelete