Tuesday, April 29, 2014

தும்பிக்கையான் புகழ் பாடு

தும்பிக்கையான் புகழ் பாடு 




ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 

தும்பிக்கையான் புகழ் பாடு
நீ தினமும் நம்பிக்கையோடு

காலையில் கண் விழிக்கும்போது
கணபதி என்பேன்

காரியங்கள் ஆற்றும்போது
கணபதி என்பேன்

கவலை மேகங்கள் சூழும்போது
கணபதி என்பேன்

ஆடம்பரமற்றவன்
அன்புள்ளம் கொண்டவன்
நினைக்கும் அடியார் உள்ளத்தில்
உடன் இருந்து அருள்பவன்

கண்ணுறங்க செல்லும்போதும்
கணபதி என்பேன்.

வித்தைகிறைவன்
சக்தியின் மைந்தன்
சங்கடங்கள் வாராது
காப்பாற்றுவான். 

3 comments:

  1. தும்பிக்கையான் என்றும் சிறப்பை தான் தருவார்....

    ReplyDelete
  2. விக்னங்கள் தீர்க்கும் விக்ன விநாயகர். ஓவியம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. விநாயகனின் அருள் அனைவருக்கும்
      கிடைக்க வேண்டிய தருணம் இது

      அதனால்தான் இன்றே வரைந்து
      வெளியிட்டேன்

      ஆனால் அவர் அருளை பெறும் பாக்கியம்
      உங்கள் இருவருக்கு மட்டும்தான் உள்ளது போலும். !

      Delete