Friday, November 8, 2013

ஆதி குருவும் ஜகத் குருவும்(2)


ஆதி குருவும் ஜகத் குருவும்(2)

ஆதி குருவும் ஜகத் குருவும் (2)

மண்டூகம் போல் தேவையே இல்லாமல் கத்தி கத்தி வாழ்ந்தது போதும்.
ஆமைபோல் எல்லாவற்றையும் உள்ளே இழுத்துக்கொண்டு வாழ்.பிறர் 
அடித்தாலும் "மேல் ஓட்டில்தான் விழும்..வலிக்காது :(எனக்கு நானே 
சொல்லிக்கொள்வது)-திரு வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி 

மண்டூகம்போல்   தேவையே
இல்லாமல் கத்தி கத்தி
பாம்பின் வாயில் தானே போய்
விழுந்து வீணே மாளவும்  வேண்டாம்ஆமைபோல் தலை மற்றும்
நாலு கால்களையும் உள்ளுக்குள்
இழுத்துக்கொண்டு விடவும் வேண்டாம்.ஓடு இருக்கிறது பாதுகாப்புக்கு என்றலும்
வில்லங்கம் பிடித்தவன் கையில் மாட்டிக் கொண்டால்
திருப்பி போட்டு அடித்து கொன்று தின்று விடுவான்.அதற்காக நம்மை இறைவன் படைத்து
இந்த உலகத்தில் நடமாட விடவில்லை

யாகாவாயினும் நா காக்க
என்றார் வள்ளுவர்.அந்த நாவைக் கொண்டு நம்மை சுற்றி
எதிரிகளை உருவாக்கி கொள்ளும்
சொற்களை சொல்லாமல்
காத்துக் கொள்ள வேண்டும்.

அந்த நாவைக் கொண்டு
இனிய சொற்களைப் பேசவேண்டும் .
அனைவரின் வாழ்விலும், மனதிலும்
இன்பத்தினை உண்டாக்க
நாவைப் பயன்படுத்தவேண்டும்

நாவை கொண்டு உடலுக்கு வலிவை தரும்
உணவை திருப்தியாக  உண்ண  வேண்டும்.

அதைக் கூட நம்மை சுற்றியுள்ள
பலவிதமான உயிரினங்களுக்கும்
அளித்துவிட்டுத்தான் உண்ண  வேண்டும்.அதுவும் எந்த உணவானாலும்
நம்மை படைத்து நமக்கு அனைத்து
சுகங்களையும் கேளாமலே அளித்த
இறைவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு
உண்ண  வேண்டும்.
நலிவைத் தரும் தரம் கெட்ட  உணவுகளை
,ருசிக்காக மட்டும் நாக்கு கேட்கிறது
என்பதற்காக தேர்ந்தெடுத்து உண்ணக்கூடாது.

முடிவாக இறைவன் கொடுத்த 
பெரும் பொக்கிஷமான நாவினைமுக்தியை தரும்
அவன் திருநாமமான ராம நாமத்தினை 
சொல்ல பழக்க வேண்டும். 
அதுதான் முக்கியம்.
இல்லாவிடில் ஆறு அங்குலமே
உள்ள நாக்கு ஆறடி உயரமுள்ள மனிதனை
ஆறடி நிலத்திற்குள் தள்ளிவிடும்

எதையுமே கைபேசி கையில் இருக்கிறதே
என்று ஆராயாமல் பேசிக்கொண்டிருந்தால்
கையில் உள்ள  காசும் போய்விடும்,
காலபோக்கில் உயிரும் போய்விடும்.

ஆமையைப் பற்றி அடுத்த பதிவில்..

8 comments:

 1. இறைவன் கொடுத்த
  பெரும் பொக்கிஷமான நாவினைமுக்தியை தரும்
  அவன் திருநாமமான ராம நாமத்தினை
  சொல்ல பழக்க வேண்டும்.
  அதுதான் முக்கியம்.

  தங்கம் உரசிய கல் பத்திரமாக பாதுகாக்கப்படுவது போல்
  இறை நாமம் உரசிய நாக்கு உள்ள ஆன்மா பத்திரமாக இருக்கும் இறைவன் அணைப்பில் ..!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் பத்திரமாக இருக்கும்.
   நம்பிக்கை வேண்டும்

   Delete
 2. //முடிவாக இறைவன் கொடுத்த பெரும் பொக்கிஷமான நாவினை முக்தியை தரும் அவன் திருநாமமான ராம நாமத்தினை சொல்ல பழக்க வேண்டும். அதுதான் முக்கியம். //

  அருமையாகச்சொல்லியுள்ளீர்கள், அண்ணா. பாராட்டுக்கள்.

  அதுமட்டுமல்ல அண்ணா; நான் HIGHLIGHT செய்து சொல்ல வந்த பகுதியையே, அம்பாள் அவர்களாலும் தங்கம் உரசியக்கல்லுடன் ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது, தங்கம் போல ஜொலித்து மேலும் அழகோ அழகாக அமைந்துள்ளது. ;)

  ReplyDelete
  Replies
  1. It seem both are in same wavelength .Good

   Delete
 3. காட்டியுள்ள படங்களில் முந்திரி போட்ட சர்க்கரைப்பொங்கல் மட்டுமே சூப்பராக இருப்பினும், அக்கம் பக்கத்துப்படங்களால், என்னால் அதனை ரஸிக்கவோ, ருசிக்கவே, சகிக்கவோ முடியவில்லை. ;(((((

  ReplyDelete
  Replies
  1. பார்ப்பதற்கே அசிங்கமே என்கிறீர்
   அதை உண்டால் ?

   உலகில் சிங்கங்களும் உண்டு
   அசிங்கங்களும் உண்டு.

   நாம்தான் சிங்கப்பிரானை நாட வேண்டும்
   சிந்தனையை அவன் திருவடியில் செலுத்தவேண்டும்.
   சிதறிக் கிடக்கும் மனதை அவன் நாமத்தை
   சொல்லி சொல்லி ஒன்று சேர்க்கவேண்டும்

   அதற்காகத்தான் விரும்பாத ஒன்றை ஆனால்
   கோடிக்கணக்கான மக்கள் விரும்பும் ஒன்றை
   பதிவில் போட்டேன்.

   அன்னம்போல் பாலை மட்டும்
   பருகி மற்றதை விட்டுவிடுங்கள்.

   Delete
  2. //பார்ப்பதற்கே அசிங்கமே என்கிறீர்//

   தங்களுக்கு என்னைப்பற்றி முழுமையாகத்தெரியாது அண்ணா. இதில் நான் ஒரு விசித்திரப்பிறவி. பிறகு நேரம் கிடைக்கும் போது மெயில் மூலம் ஒருசில சம்பவங்களைச் சொல்கிறேன். இதையெல்லாம் பார்த்தாலோ - SMELL வந்தாலோ ... எனக்கு உடனே வாந்தியே வந்துவிடும். அவ்வளவு ஒரு வெறுப்புடையவன் .... நான்.

   மற்ற விஷயங்களான குடி / குட்டி / தம் அடித்தல் / கஞ்சா போன்ற போதைப்பொருட்களில் ஈடுபாடு கொண்ட நம்மவர்களைக்கூட நான் சகித்துக்கொள்வேன். மன்னிப்பேன். திருத்த முயற்சிப்பேன்.

   ஆனால் இதுவிஷயத்தில் எனக்கு ருத்ர கோபம் வரும். நானே நரசிம்ஹ அவதாரம் எடுத்து விடுவேன்.

   Delete
  3. புலால் உண்பவர்கள்
   அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவார்கள்.
   அதிலிருந்து விடுபடுவது அரிது.

   சைவம் உண்பவர்களுக்கு
   அது வெறுப்பாக தோன்றுகிறது

   எல்லாம் பழக்க
   வழக்க தோஷம்தான்.

   அவர்கள் பிராணிகளை
   உணவாக பார்க்கிறார்கள்.

   நாம் உயிராக பார்க்கிறோம்.
   அவ்வளவுதான்

   பார்க்கும் நோக்கம் மாறினால்
   எல்லாம் மாறிவிடும்.

   அதற்காக அவர்களை
   நாம் வெறுக்க வேண்டிய
   அவசியமில்லை.

   நரசிம்ம அவதாரம் இது போன்ற
   அற்ப காரணங்களுக்காக
   நாராயணன் எடுக்கமாட்டான்.

   தன பக்தனை யாராவது துன்புறுத்தினால்தான்
   எடுப்பான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

   அதுவும் துன்புற்ற போதும்
   அவனை அழைக்காமல் அவன்
   நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பவனையே
   அவன் காப்பாற்றுவான்.

   அதனால்தான் நல்ல சத்சங்கம் வேண்டும்
   என்று ஆதிசங்கரர் சொல்லுகிறார்.

   Delete