Wednesday, June 10, 2015

இசையும் நானும் (12)

இசையும் நானும் (12)

இசையும் நானும் (12)

இசையும் நானும் (12)

மவுதார்கனில் என்னுடைய அடுத்த பாடல் 

ராமபிரான் மீது நான் இயற்றிய பாடலுக்கு 
இசை அமைத்துள்ளேன். 

அந்த பாடல் இதோ.

உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில் 
உள்ளத்தில் நினைவாய் மனமே 
அனுதினமே (உத்தமன்)

தர்மத்தை நிலைநாட்ட தரணிக்கு வந்தவன் 
தந்தை சொல் காக்கவே அரியணை விடுத்து 
ஆரண்யகம் சென்றவன்  (உத்தவன்)

காண்போர் அனைவரையும் அன்பால் தன்வசம் ஈர்த்தவன் 
கல்லாய் கிடந்த அகலிகைக்கு கருணை காட்டி உயிர் கொடுத்தவன் (அந்த உத்தமன்)

அன்னை சீதையுடன் அருள் வடிவாய் காட்சி தருபவன் 
அடியவன் அனுமனின் இதயத்தில் என்றும் உறைபவன் (அந்த உத்தமன்)

அகிலத்து மாந்தர் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் என்றும் நிலைத்திட 
இன்னலும் தீமையும் இவ்வுலகை விட்டு அகன்றிட (அந்த உத்தமன்)

வீடியோ இணைப்பு இதோ. 
https://www.youtube.com/watch?v=D5eLTTsXQ9Y&feature=youtu.be

14 comments:

 1. மிக அருமை. பெஹாக் ராகமோ? மவுத் ஆர்கன் வாசிப்பது கஷ்டம் இல்லை?

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம். கஷ்டம்தான் ஆனால் எனக்குள்5வயது முதலே ஒரு வெறி. அந்த நெருப்பு ஒளி விட 63 ஆண்டுகள் பிடித்தது. ஓராண்டாக தினமும் 3 மணி நேரம் பயிற்சி செய்கிறேன். எனக்கு இசையை பற்றி ஒன்றும் தெரியாது. இந்த வயதில் மண்டையில் ஒன்றும் ஏறவில்லை. ஆனால் அனைத்து இசையையும் ரசித்து மகிழ்வேன் .என்னுடைய மற்ற வீடியோ க்கள் கீஷ்கண்ட இணைப்பில். காணலாம் youtubepattabiraman-mouthorgan vedios.

   Delete
  2. 63 ஆண்டுகளா...? மனம் தளராத முயற்சி என்பது இது தான் ஐயா...

   மகிழ்கிறேன் உங்களின் நல்லாசியுடன்...

   Delete
 2. உங்கள் அனுமதியுடன் இந்தப் பதிவை, உங்கள் இசையை எங்கள் ப்ளாக் வெள்ளி வீடியோ பதிவாக பகிர்கிறேன். ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Great blessing of Sri Ram and Lord Rama - Music is for all
   கரும்பு தின்ன கூலி தேவையா. ?தாரளமாக. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அனைத்து இசை ரசிகர்களின் ஆசிகளை வேண்டுகிறேன்.

   Delete
 3. உங்கள் அனுமதியுடன் இந்தப் பதிவை, உங்கள் இசையை எங்கள் ப்ளாக் வெள்ளி வீடியோ பதிவாக பகிர்கிறேன். ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

  i am also singing like a jungle bird in chithrakoot vana
  in a Ragha malika
  subbu thatha
  www.menakasury.blogspot.com

  ReplyDelete
 4. அருமையான பாடல் வரிகள். மவுத் ஆர்கனில் வாசிப்பது என்பது அத்தனை எளிதல்ல. எங்கள் ப்ளாகிலிருந்து தங்களை அறிய முடிந்தது தாங்களும் ஒரு பதிவர் என்பது.

  மிக அழகாக பெஹாஹ் ராகத்தில் வாசித்திருக்கின்றீர்கள். மிகவும் ரசித்தோம்...

  கீதா

  ReplyDelete
 5. எங்களது ப்ளாக் thillaiakathuchronicles

  இதில் நாங்கள் இருவர் நண்பர்கள் எழுதி வருகின்றோம்...துளசிதரன் - பாலக்காடு

  கீதா - சென்னை...

  நீங்கள் பாட்டு கற்றுத் தருகின்றீர்களா? 63 ஆண்டுகளா பிரமிப்பாக இருக்கின்றது. எனக்கும் இசையைப் பற்றிய ஞானம் கேள்வி ஞானமே! கொஞ்சமே கொஞ்சம் ஒரு 7 வருடங்களுக்கு முன் ஜலதரங்கம் வாசிப்பதில் வல்லவராக இருந்த திருமதி சீதா துரைசாமி அவர்களிடம் கற்றேன். அவரது கணவர் இறந்தவுடன் நின்றுவிட்டது....தற்போது அவரும் மறைந்துவிட்டார். கேள்வி ஞானத்தில் ஏதோ தமிழ் கீர்த்தனைகள் பாடுவதுண்டு. மும்மூர்த்திகளின் க்ருதிகள் எல்லாம் இந்த மரமண்டையில் ஏறுவதில்லை....

  உங்களை அறிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. எனக்கு பாட்டு கற்றுத்தரும் அளவிற்கு இசை ஞானமும் கிடையாது இசையும் தெரியாது. நானே இசையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் ரசிக்கிறேன். அதனூடே நானும் கொஞ்சம் இசையைக் கற்றுக்கொள்கிறேன். இசை பெரிய சாகரம். அதை அறிந்துகொள்ள பிறவிகள் பல வேண்டும். எல்லாம் இறைவன் அளிக்கும் வரம். அடுத்து ரமா ராம என்று ஒரு பாடலை இயற்றி பாடி வெளியிட்டுள்ளேன். அது என்ன ராகத்தில் அமைந்துள்ளது என்று எனக்கு தெரிவித்தால் மிக மகிழ்வேன்.

   Delete
 6. எங்களது ப்ளாக் thillaiakathuchronicles

  இதில் நாங்கள் இருவர் நண்பர்கள் எழுதி வருகின்றோம்...துளசிதரன் - பாலக்காடு

  கீதா - சென்னை...

  நீங்கள் பாட்டு கற்றுத் தருகின்றீர்களா? 63 ஆண்டுகளா பிரமிப்பாக இருக்கின்றது. எனக்கும் இசையைப் பற்றிய ஞானம் கேள்வி ஞானமே! கொஞ்சமே கொஞ்சம் ஒரு 7 வருடங்களுக்கு முன் ஜலதரங்கம் வாசிப்பதில் வல்லவராக இருந்த திருமதி சீதா துரைசாமி அவர்களிடம் கற்றேன். அவரது கணவர் இறந்தவுடன் நின்றுவிட்டது....தற்போது அவரும் மறைந்துவிட்டார். கேள்வி ஞானத்தில் ஏதோ தமிழ் கீர்த்தனைகள் பாடுவதுண்டு. மும்மூர்த்திகளின் க்ருதிகள் எல்லாம் இந்த மரமண்டையில் ஏறுவதில்லை....

  உங்களை அறிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு துளசிதரன் அவர்களுக்கு.

   காட்டில் ஒரு குயில் இனிமையாக இசைக்கிறது. ஆனால் அது என்ன ராகத்தில் இருக்கிறது என்பதை அது அறியாது. அது இறைவன் அதற்க்கு கொடுத்த வரப்ரசாதம் அதுபோல்தான் நானும். எனக்கும் ராகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் எந்த இசையும் முறைப்படி கற்கவில்லை. ஏனென்றால் அதற்க்கான வாய்ப்பே வாழ்வில் அமையாமல் போய்விட்டது. ஆனாலும் எல்லா இசையையும் கேட்டுக்கொண்டே இருப்பேன். பாடிக்கொண்டே இருப்பேன்.

   7 ஆண்டுகளாக 9 blogs தொடங்கி என்னுடைய கருத்துகளையும் கவிதைகளையும்,வண்ண படங்களையும், புகைப்படங்களையும் கட்டுரைகளையும். 1400பதிவுகளாக வெளியிட்டுள்ளேன்.

   கடந்த ஓராண்டாக என்னுடைய சிறுவயது கனவு முயற்சியாக மவுத்தார்கனில் பயிற்சி செய்து 12 வீடியோக்களை வெளியிட்டுள்ளேன்.

   அவைகளை பட்டாபிராமன்-youtube-pattabiraaman-mouthorgan vedios பார்க்கலாம். கேட்டு மகிழுங்கள்.

   இன்னும் பல பாடல்களை பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் வெளியிட உள்ளேன்.

   தங்கள் தொடர்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தங்கள் நட்பு தொடர இறைவன் அருளட்டும்.

   Delete
 7. அருமையான பாடல் வரிகள். மவுத் ஆர்கனில் வாசிப்பது என்பது அத்தனை எளிதல்ல. எங்கள் ப்ளாகிலிருந்து தங்களை அறிய முடிந்தது தாங்களும் ஒரு பதிவர் என்பது.

  மிக அழகாக பெஹாஹ் ராகத்தில் வாசித்திருக்கின்றீர்கள். மிகவும் ரசித்தோம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தங்கள் நட்பு தொடர இறைவன் அருளட்டும். நன்றி கீதா அவர்களுக்கு.

   மவுதார்கன் வாசிப்பது கடினம்தான்.ஆனால் முயன்றால் முடியாது இவ்வுலகில் உண்டோ. பொறுமை வேண்டும். பயிற்சி வேண்டும். பல ஆண்டுகள் முயன்றால். நாம் நினைக்கும் இசையை அதில் பெறலாம்.
   இந்த உலகில் லக்ஷக்கனக்கானவர்கள் முறையாக கற்றுக்கொண்டு
   வாசிக்கிறார்கள். ஆனால் எனக்கு அதற்க்கெல்லாம் நேரமும் இல்லை.
   பயிற்சி முறைகளும் என் மண்டையில் ஏறவில்லை. எனக்கு நானே குரு. தினமும் 3 மணி நேரம் பயிற்சி செய்கிறேன். ஏதோ கொஞ்சம் கற்றுக்கொண்டதை வெளியிட்டுள்ளேன். இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. இறைவன் அதற்க்கான சக்தியையும், ஊக்கத்தையும், உடல்நலத்தையும் தரவேண்டும்.

   Delete