Tuesday, July 31, 2012

இறைவனை காண வேண்டும்

மனம் செத்துப்போக வேண்டும்
எதற்கு?

இறைவனை காண வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு.

மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு

எண்ணம் என்பது மனிதன் எங்கு சென்றாலும் கூடவே வரும்

அதை தடுக்க வேண்டும்
எப்படி தடுப்பது ?

பேச்சுக்கும் செயலுக்கும் மாறுபாடு இருக்கக்கூடாது

பாவங்களுக்கு காரணமான மனதின் எண்ணங்களுக்கு தடை விதிக்க வேண்டும்

ஏன் ? உள்ளத்தில் உருவாகும் எண்ணத்தால் அழிவு உண்டாகிறது
கடலின் அலைகள் போல வரும் என்ன அலைகள் மனிதனுக்கு துன்பங்களை தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்கின்றன

 இதை கீதையில் இரண்டாவது அத்தியாயம் 22வது சுலோகத்தில் விளக்கப்பட்டுள்ளது
எண்ணங்களின் பதிவு
அதனால் வரும் விளைவு
விளைவால் வரும் துன்பம்
துன்பம் தரும் பரிசு புத்தி பேதலிப்பு
அதன் தொடர்ச்சி புத்தி நாசம்
புத்தி நாசத்தால் அழிவு

மனம் இருக்கும் வரை அதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கும்
எண்ணம் ஓடிகொண்டிருக்கும் வரை இறைவனை காண முடியாது

பகவான் ரமணரும் இதைதான் வலியுறுத்தி கூறுகிறார்
ஆத்மாவாகிய இறைவனை உன்னுள்ளே தேடு
அவனை புத்தகங்களிலோ,
மனிதர்களிடமோ அல்லது வெளியிலோ தேடாதீர்கள் என்று.

முயற்சி செய்தவர்கள் வெற்றி பெற்றார்கள்
செய்யாதவர்கள் முட்டி மோதி கொண்டு
காலத்தை வீணாக்கி காலனிடம் போய்  சேர்கிறார்கள்   

Monday, July 30, 2012


நரகலோகம்.

நரகம்

நரகம் என்று தனியாக ஒரு உலகம் உண்டா?

புராணங்களில் பிறரை கொடுமை செய்பவர்கள்,
பாவங்கள் செய்பவர்கள் இந்த உலகத்திலிருந்து
இறந்த பின் நரக லோகத்திற்கு செய்த
பாவங்களுக்கான தண்டனைகளை
அனுபவிக்க அனுப்ப படுவார்கள் என்று சொல்லபட்டிருக்கிறது
 .
ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

தவறு செய்வவர்களுக்கு இவ்வுலகத்திலேயே அபராதமோ,
சிறைதண்டனையோ,தூக்கு தண்டனையோ வழங்கபட்டுவிடுகிறது.

உடல் ரீதியாக தவறு செய்பவன் தீரா நோயினால் அவதிபடுகிறான்.

மனரீதியாக தவறு செய்தவன் மன நோயாளியாக திரிகிறான் 
.
தவறான வழியில் சேர்த்த செல்வம் திருடர்களால்
கொள்ளை அடிக்கபடுகிறது,அல்லது அரசால் கையகப்படுத்தப்படுகிறது 
அல்லது அந்த செல்வத்தை எவனாவது ஏமாற்றி ஏப்பம் விட்டுவிடுகிறான்
.
எனவே அனைத்து தவறுகளுக்கும் இங்கேயே தண்டனை கிடைத்துவிடுகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க நரக லோகம் என்று
தனியாக இருக்க வாய்ப்பில்லை.

நர என்றால் மனிதர்கள் என்று பொருள்.

அகம் என்றால் வீடு அல்லது உலகம் என்று பொருள்
எனவே நரகலோகம் என்பது நாம் வசிக்கும் பூமிதான்
என்று பொருள் கொள்வதே சரியானது

எனவே யாரும் பாவம் செய்யாதீர்கள். 
அனைத்தையும் இறைவன் நமக்குள் இருந்து கண்காணித்து  கொண்டு 
இருக்கிறான் 

எண்ணம் நேர்மையாக இருந்தால் 
செயலும் நேர்மையாக இருக்கும் 
வாழ்க்கையும் இனிமையாக இருக்கும் 

நீங்கள் பிறருக்கு தீங்கு நினைக்காமல்
உங்களுக்கு தீங்கு நிச்சயம் நேராது 
இது சத்தியம்.
.