உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில்
உள்ளத்தில் நினைவாய் மனமே
( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)
உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில்
உள்ளத்தில் நினைவாய் மனமே
அனுதினமே (உத்தமன்)
தர்மத்தை நிலைநாட்ட தரணிக்கு வந்தவன்
தந்தை சொல் காக்கவே அரியணை விடுத்து
ஆரண்யகம் சென்றவன் (அந்த உத்தமன் )
காண்போர் அனைவரையும் அன்பால்
தன்வசம் ஈர்த்தவன் (2)
கல்லாய்கிடந்த அகலிகைக்கு
கருணை காட்டி உயிர் கொடுத்தவன் (அந்த)
அனைவரின் நலம் நாடி வேள்விகள் செய்த
தவசிகளை அரக்கர்களிடமிருந்து காத்தவன்
பெருமை வாய்ந்த சூரிய குலத்தில்
அடியவர்களை காக்க உதித்தவன் (அந்த)
( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)
அன்னை சீதையுடன்
அருள் வடிவாய் காட்சி தருபவன்
"ராமா" ராமா" என்று பாடி பரவிய பக்தர் தமை
பரிவோடு கண்ணிமைபோல் காப்பவன் (அந்த)
( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)
அனைவரின் நலம் நாடும்
அனுமனின் இதயத்தில் உறைபவன்
அபயம் என்றுவருவோரை
அரவணைத்து அருள்பவன் (அந்த)
( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)
அகிலத்து மாந்தர் வாழ்வில் அமைதியும்
ஆனந்தமும் என்றும் நிலைத்திட
பிறருக்கு இன்னல் இழைக்கும் மனிதர்
திருந்தி வாழ்ந்திட அருள் செய்யும் (அந்த)