Sunday, July 31, 2016

இசையும் நானும் (123)




இசையும் நானும் (123)

இசையும் நானும் (123)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  123வது  காணொளி 



மவுத்தார்கன் இசை -தமிழ் 


Image result for vaadikkai maranthathum yeno


திரைப்படம்- கல்யாண பரிசு 

பாடல்-வாடிக்கை  மறந்ததும் ஏனோ 

Friday, July 29, 2016

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம் 



                                     ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


சத்குரு நாதன் திருப்பாதம்தன்னை
எப்போதும் தன் சிந்தையில்
நினைந்திருப்போருக்கு
வாழ்வில் சங்கடம் வருமோ அய்யா

சாத்திரங்கள் பல கற்றாலும்
தோத்திரங்கள் பல செய்தாலும்
ஆத்திரம் கொண்டோருக்கு
வாழ்வில் என்றும் அமைதி உண்டோ

கண்ணுக்கும் புலனுக்கும் புலப்படா
இறை சக்தி நம் முன் வெளிப்படுவது
சத்கு ருவின் திருவடிவமே என்பதை
உணர்ந்துகொண்டு அவன் பாதம்
சரணடைந்தவருக்கு துன்பம்ஏது !
துயரேது !

தத்துவம் தெரிந்தும் இறைவனின்
மகத்துவம் புரிந்தும் இன்னல்கள் வரும்போது
அலைபாயும்  மனதுடன் இங்குமங்கும்  ஓடி திரிந்து
பிதற்றி திரிவார் இவ்வுலகில் பலர்.

வினைதான் விதியாய் உருவெடுத்து நம்
வாழ்வில் விளையாடுகிறது என்றும் அதை
அமைதியாய் அனுபவித்து தீர்த்து
அந்த ஈசன் நினைவாகவே இருப்பர்
உண்மை அறிந்தவர்.

சஞ்சலமில்லா மனம் இல்லை
சங்கடமில்லா வாழ்வில்லை
பிணியில்லாத உடல் இல்லை
அவன் அருளின்றி இவ்வுலகம் இல்லை

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்
பற்றிடுவோம்.
மாயையை அகற்றும்
சத்குருநாதன் அமுத மொழி செவி மடுப்போம்
இன்னல் நீங்கி இன்ப வாழ்வு பெற



Thursday, July 28, 2016

சின்ன கண்ணன் அழைக்கிறேன் வாருங்கள் !

சின்ன கண்ணன் அழைக்கிறேன்  வாருங்கள் !

சின்ன கண்ணன் அழைக்கிறேன்  வாருங்கள் !

உங்கள் சிதறுண்ட இதயத்தை என்னிடம் தாருங்கள் 

உங்களை சீலமுடன் வாழ வைக்கிறேன் என்று 

உறுதி கூறுகிறேன் .



                                                          ஓவியம் -தி.ரா. பட்டாபிராமன் (1971)

Wednesday, July 27, 2016

ஆடி கிருத்திகை


ஆடி கிருத்திகை 




முருகா என்ற நாமம் தன்னை
முக்காலமும் ஓதி வந்தால்
எக்காலமும் இவ்வுலகில்
தப்பாமல் தகைமையுடன்
இன்பமாக வாழலாம்

அறவழியில் பொருளீட்டி
அற வழி சார்ந்த வாழ்வில் நின்று
அரோகரா அரோகரா என்று
அவன் பெயர் கூறுவோர்க்கு
அடைய இயலாப் பேறு என்று
ஏதும்  இல்லை என்பதை
உணர்ந்திடுவீர்.

அன்போடு அவன் நாமம்
அனுதினமும் ஓதிவந்தால்
அல்லல் தரும் அகந்தைதனை
அறவே அழித்திடுவான்



செந்தூர் கடற்கரையில் குடி கொண்ட முருகன்
துன்பக்  கடலில் வாடும் பக்தர்தனை
கரையேற செய்து வாழ்வில் இன்பம் சேர்ப்பான்


குன்று  தோறாடும் குமரனவன்
குன்றுபோல் குவிந்து நிற்கும்
நம் பொல்லாத வினைகள் தன்னை 
பொசுக்கி அழித்திடுவான்

நல்லதோர் இந்நாளில் மாலவனின்  மருகன் தன்னை
உளமார உருகி வேண்டி உன்னதமான வாழ்வு பெற்று
உலகினில் வாழ்ந்திடுவோம்.






இசையும் நானும் (122)



இசையும் நானும் (122)

இசையும் நானும் (122)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  122வது  காணொளி 



மவுத்தார்கன் இசை -மலையாளம் 

Image result for chandra kalabam-lyrics



மருத்துவ காரணங்களினால் தடைபட்டு  மூன்று மாத இடைவெளிக்குப் பின் என் இசைப் பயணம் தொடங்குகிறது.

இம்முறை மலையாளம் திரைப்பட பாடல் -மிகவும் பிரபலமான பாடல். 
முயற்சி செய்துள்ளேன். 

chandra kalabham chaartthi urangum theeram

chandra kalabham chaartthi urangum theeram

indradhanussin thooval kozhiyum theeram

ee manohara theeratthu tharumo

iniyoru janmam koodi,

enikk iniyoru janmam koodi


ee varnna surabhiyaam bhoomiyil allaathe

kaamuka hrdayangal undoo

sandhyakal undo chandrikayundo

gandharvva geetham undo

vasundhare vasundhare

kothi theerum vare ivide premicch

maricchavar undo



ee nithya harithayaam bhoomiyil allaathe

maanasa sarassukal undo

swapnangal unto pushpangal undo

swargga maraalangal undo

vasundhare vasundhare

mathiyaakum vare ivite jeevicch

maricchavar undo


Monday, July 25, 2016

ஈஸ்வரனின் சரணார விந்தங்களை பற்றியவர்க்கு !

ஈஸ்வரனின் 
சரணார விந்தங்களை பற்றியவர்க்கு !




ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

உருத்திரனை உள்ளத்தில் அனுதினமும்
துதித்து வந்தால் தரித்திரம் நீங்கும்

அன்பின் வடிவாய் விளங்கும் ஈசன்
அபார கருணை மிக்கவன் கூட

தட்சனின் சாபத்தால் கலைகள் குன்றி
ஒளியிழந்து நின்ற சந்திரன் அபயம்
வேண்டி சிவனின் பாதம் பற்றினான்

காலில் விழுந்த அவனை தன்
தலையில் சூடிக்கொண்டான்
கருணையே வடிவெடுத்த ஈஸ்வரன்
சந்திரா சேகரன் என்றும் தன்னை
அழைத்துக்கொண்டான்

ஆத்தி மலர்கள் சூடிய அந்த தேவனை
ஏத்தி ஏத்தி கொண்டாடுவோம்
என்கிறாள்  அவ்வை பிராட்டி

அம்பிகை தன்னை சந்திர  சகோதரி
என்று பெருமைப்படுகிறாள்
தன்  சிரசிலும் பிறை சந்திரனை
தரித்துக்கொண்டாள்

விநாயகனோ பிறை சந்திரனை தன்
சிரசில் சூடிக்கொண்டு (பாலா)பால  சந்திரன்
என்று அவன் நாமம் கொண்டான்

ஸ்ரீ ராமனோ தன்னை
ஸ்ரீ ராமசந்திரன் என்று அழைத்துக்கொண்டு
மகிழ்கின்றான் .

எல்லாம் சந்திரன் ஈஸ்வரனின்
சரணார விந்தங்களை பற்றியதனால்
பெற்ற  பேறு  என்பதை உணர்வீர்

 உலகோரே உண்டு களிக்க மட்டும்
இந்த உடலும் உள்ளமும் இல்லை
உலகை ஆளும் ஈசன் நம்முள் இருப்பதை
உணர்ந்துகொண்டு அவனை துதித்து
ஆனந்த வாழ்வு பெறவும் கூட
என்பதை உணர்வீர்




அழகிய சிங்கன் அவன்

அழகிய சிங்கன் அவன் 




தூணில் உதித்தவன்
நம்பும் பக்தருக்கு
என்றும் துணையாய் நிற்பவன்

போகமும் யோகமும்
வாழ்வில் அருள்பவன்

பக்தனுக்கு  பலமாய் இருப்பவன்
அல்லாதாரின் அகந்தையை
அழித்து ஆட்கொள்ளுபவன்

துயரைத் துடைப்பதில்
நாளை என்றிராதவன்

அழகிய சிங்கன் அவன்
அடியவர்களை அணைத்துக்
காக்கும் அரங்கன்

அலைமகளுடன் அருட்காட்சி தரும்
ஆனந்த  திருவடிவம்
அகத்தில் அவனை கொண்டால்
ஜகத்தில் புகழோடு வாழலாம் 

Sunday, July 24, 2016

முருகா என்றதும் உருகாதா மனம்

முருகா என்றதும் உருகாதா மனம்

முருகா என்றதும் உருகாதா மனம் 


ஓவியம்-தி.ரா. பட்டாபிராமன் 

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

குறை கேளாயோ
குறை தீராயோ
மாமகள் வள்ளியின் மணவாளா
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

மறையே  புகழும் மாலவன் மருகா
மாயை அகல ஒரு வழிதான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

ஜன்ம பாப வினை தீரவே பாரினில்
சிவ பாதாம்புஜம் உன்னை தேடி நின்றோம்
குணசீலா ஏ சிவபாலா
சர்வமும் நீயே சிவசக்தி பாலா

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

தி  எம்  சவுந்தர்ராஜனின் குரலில் ஒலித்த இந்த பாடலை
இவன் மவுத்தார்கனின் இசையில் கேட்டு மகிழுங்கள்.

www.youtube.com/watch?v=D-FlnxzDwCQ

Saturday, July 23, 2016

நீல மயில் மீது ஏறி ஞாலம் வலம் வந்தவனே!

நீல மயில் மீது ஏறி ஞாலம் வலம் வந்தவனே!


நீல மயில் மீது ஏறி ஞாலம்
வலம் வந்த  முருகா
நீ எனக்கருள வேண்டும்.


காலில்  அடிபட்டு காலாண்டு
படுக்கையில் வீழ்ந்து கிடந்த என்னை
மீண்டும் காலூன்ற  வைத்து
நடமாட வைத்தவன் நீயன்றோ!

பக்தர்களைக் கண்ணிமை போல்
காத்திடும் உந்தன் கருணைக்கு
எல்லை உண்டோ!

ஞானம் தனை நாடி
தேடி ஓடியோடிகளைத்துப்
போன எனக்கு காலம்
தாழ்த்தாது அறியாமை
அகற்றி ஆனந்தம்
அருளல்  வேண்டும்.


என்ன தவம் செய்தனை ?

என்ன தவம் செய்தனை ?

என்ன தவம் செய்தனை ,யசோதா !

எங்கும் நிறை பர ப்ரம்மம் உன்னை

"அம்மா" என்றழைக்க

என்ன தவம் செய்தேன் நான்

அந்த காட்சியை ஓவியமாக தீட்ட ?




ஓவியம். தி. ரா. பட்டாபிராமன் 

நானும் ஒரு ஓவியன்தான்

நானும் ஒரு ஓவியன்தான் 

அகந்தையின் உருவம்
அரக்கனின் வடிவம்

நம்பிக்கையின் உருவம்
பக்தனின் வடிவம்.

தானே அனைத்தும் என்றான்  தந்தை
அவன் உள்ளம் முழுவதும் அகந்தை

அந்தஇறைவன்  தான் அனைத்தும் என்றான்
அவன் பெற்ற மகன்

என்னே விந்தை. !

கொல்லவும்  துணிந்தான்
மகனை பெற்ற  தந்தை

மகனோ மாலவனை
மனதில் துதித்தான்

மதிகேடனை மர தூணில் இருந்து
வெளிப்பட்டு மாளச்  செய்தான்

அந்த மன்னவனின்  ஓவியத்தை
இவன் வரைந்தான் அனைவருக்காகவும்.



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

Thursday, July 21, 2016

உறங்கி மாளவா பிறவி எடுத்தோம் ?

 உறங்கி  மாளவா பிறவி எடுத்தோம் ?

ஆம் .நாம் அனைவரும் உறக்கத்தில்தான்
எப்போதும் இருக்கிறோம்.
 இப்போதும் இருக்கிறோம்.

என்னப்பா புதுக் குழப்பம்
என்று நினைக்கலாம்

ஆனால் உண்மை அதுதான் .

நான் விழித்திருந்தால்தானே வலையில்
 பதிவை எழுத முடியும், நீங்கள் படிக்க முடியும்
என்ற கேள்வி எழலாம்.

ஆனால் உண்மையில் எல்லாம்
நம் மனதிற்குள் நடக்கும்
நாடகம் .

எல்லாம் உறக்கத்திற்குள்தான்
அனைத்தும் நிகழ்கின்றன
என்பது யாருக்கும் புரிவதில்லை.

மனம் உறங்கும்போது
ஒன்றும் தெரிவதில்லை.

உறக்கத்தில் கனவுகள் வரும்போது
இவ்வுலக நினைவோ, உடல், மற்றும்
 புலன்களின் நினைவோ இல்லை.

உறக்கத்திலிருந்து விழிக்கும்போது கனவுகளை பற்றிய

நினைவுகள் இல்லை

உறக்கத்தினிடையே ஏற்படும் விழிப்பும்
கனவு நிலையை சார்ந்ததுதான்
என்பதை நம்மால் அறிய முடியவில்லை.

அதனால்தான் பாரதி  வாழ்க்கை
என்பதோர் பெருங்கனவு, அதில் கலகம்
செய்யும் மானிடப் பூச்சிகள் என்றான்.

ஆதி சங்கரர் இவ்வுலகம்
ஒரு மாயை  என்கிறார்

உண்மையில் விழித்திருப்பது என்பது
நாம் சுய நினைவுடன் உறக்கம், கனவு  ,
உறக்கத்தினிடையே ஏற்படும் விழிப்பு நிலை,
இந்த மூன்று நிலைகளையும்
சாட்சியாக இருந்து பார்ப்பதுதான்.

அதுதான் உண்மையான விழிப்பு.

அந்நிலையை அடைந்தவர்கள் பல மஹான்கள்
அதில் ரமண மகரிஷியும் ஒருவர்.

நாமும் அந்நிலையை அடைய வேண்டாமோ ?

நம்முள்ளே அனைத்திற்கும் சாட்சியாக இருக்கும்
அந்த சாட்சி போல் நாமும் இந்த உலக வாழ்க்கையை அணுக  கற்றுக்கொண்டால் மட்டுமே
அந்த உயர்ந்த நிலை சாத்தியம்


Wednesday, July 20, 2016

அடுத்த நிலைக்கு முன்னேற.

அடுத்த நிலைக்கு முன்னேற. 

நாய்க்கிருக்கும் அறிவு!
தெருவில் ஒரு நாய்
சிவனே என்று படுத்துக் கிடக்கிறது.

பாவம்.இரவெல்லாம் அது இருக்கும் தெருவிற்கு
உள்ளே நுழையும் வேறு தெரு நாய்களை
குலைத்துத் ,கத்தி, துரத்தி அடித்து
ஓய்ந்து போய் நடுத் தெருவில்
இரண்டு கால்களை நீட்டிக் கொண்டு
தன்  தலையை அதன் மேல் வைத்துக் கொண்டு
கண் மூட தொடங்கிய நேரம்.
பொழுது விடிந்துவிட்டது.

இருந்தும்  தன்  அருகே நடந்து போவோரை
மெதுவாக கண்ணைத் திறந்து யார் என்று
பார்த்துவிட்டு கண்களை மூடி மூடி
திறந்து கொண்டிருந்தது.

பால் பைகள் போடுபவன், செய்தித்தாள் போடுபவன்
காலை நடை பயில்பவர்கள் இவர்களை தான் மோப்ப சக்தியால்
அடையாளம் கண்டு கொண்டு சும்மா இருக்கும் ,

இந்நிலையில் வேறு தெருவில் இருக்கும் ஒருவன்
அதன் அருகில் வந்தவுடன் அடையாளம் கண்டுகொண்டு
கத்த நினைத்தது. ஆனால் அதனால் முடியவில்லை.

வந்தவன் சும்மா இருக்காமல் அதன் மீது ஒரு கல்லை
விட்டெறிந்தான் .உடனே அந்த நாய் தான் மீது
விழுந்த கல்லைத்தானே
தாக்கியிருக்கவேண்டும் .

ஆனால் அது தன்னை தாக்கியவனைத்தான் துரத்தி கடிக்க
ஓடியது.

ஆனால் மனிதர்கள் ஆறறிவிருந்தும் அவ்வாறு செய்வதில்லை.

நடக்கும்போது காலில் கல் தடுக்கி விழுந்தால்
கல் மீதுதான் குற்றம் சொல்லி புலம்புகிறார்கள்.

தான் மீது எய்யப்பட்ட  அம்பைக் குறை சொல்லுகிறார்கள்.
எய்தவனை கண்டு கொள்வதில்லை.

கொலை செய்தவன் மாட்டிக் கொள்கிறான் .
அவனை கொலை செய்ய ஏவி விட்டவன் அகப்படுவதும் இல்லை
தண்டனைக்கு ஆளாவதும் இல்லை.

அதுபோல் எல்லா செயல்களுக்கும் காரணம் நம் மனம்தான்.
அதில் உள்ள எண்ணங்கள்தான் காரணம்.
இந்த உலகம் செயல்களை மட்டுமே பார்க்கிறது.
ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது.

உள்ளத்தில் தோன்றிய எண்ணம்
அப்படியே அழியாமல் இருக்கிறது.
இப்படி கோடி க்கணக்கான எண்ணங்கள்
நம் மனதில் இருந்துகொண்டு நம்மை ஆட்டிப் படைக்கின்றன.

அவைகளை வெளியேற்றவும் வழி தெரியவில்லை.
அவைகளை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
கனவு, உறக்கம், விழிப்பு என்ற மூன்று நிலைகளிலும் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டு நம் நிம்மதியை குலைத்துக்கொண்டிருக்கின்றன,

அடிப்படையை ஆராய்வோம்.
தீய எண்ணங்களை அழிக்க நினைப்பதை விட்டுவிட்டு
நல்ல எண்ணங்களால்  மனதை நிறைப்போம்.
காலப்போக்கில் தீய எண்ணங்கள் வெளியேறிவிடும்
மனமும் சுத்தமாகிவிடும்.
அடுத்த நிலைக்கு முன்னேற. 

ஜென்மம் கடைத்தேற


ஜென்மம் கடைத்தேற 

எல்லாமே கற்கள்தான்

இறைவன் பார்வையில்


 எல்லாமே கற்கள்தான்

ஆனால் நம் ஒவ்வொருவரின் பார்வையில்

ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு நாமகரணம்

சூட்டிவிட்டோம்.

ஆபரணத்தில் பதித்து அழகு பார்க்க

பல நிறங்களில் பல பெயர்களில்

எண்ணிலடங்கா  கற்கள். அதற்கு
விலை மதிப்பும் அதிகம் .சிலவற்றிற்கு
விலை நிர்ணயம் செய்யவும் இயலாமை.

இறைவன் சிலை செய்ய ஒரு வகை கல்

அந்த சிலையை பிரதிஷ்டை செய்ய கோயில் கட்ட

ஒரு வகையான கல்

இதைத் தவிர தானாகவே  உருவாகி

பூஜை பெட்டியில் வந்தமரும் சாளக்ராம கல்  வேறு

சாலையிலே தூரத்தை காட்டும்மைல்  கற்கள்

கோயிலை சுற்றியும் சந்தி  கற்கள்

நிலங்களை பிரித்து காட்டும் நிலை அளவைக் கற்கள்

இப்படியே கற்களை வகைப்படுத்தி போய்க்கொண்டிருக்கிறோம்

நம்மை சுற்றிலும் கற்களை எழுப்பி  நம்மை

மண்ணுக்குள் மூடும் வரை.


இக்கணத்திலிருந்தாவது விழித்துக் கொள்ளுவோம்.



உள்ளத்தில் நிறைப்போம்

மண்ணை உண்ட  மாயவனை,

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவனை

காலமெல்லாம் நம்மை காக்கும்  கண்ணனை

ஜென்மம் கடைத்தேற




Tuesday, July 19, 2016

கருணை செய்வாய் அறியாமை அகன்றிடவே.


கருணை செய்வாய் 
அறியாமை அகன்றிடவே.

இறைவா உடலைத் தந்தாய்
உடலை வளர்க்க உணவைத் தந்தாய்
இதயத்தில் ஒளிந்து கொண்டிருக்கும்
உன்னை அறிய உள்ளமும் தந்தாய்

ஆனால் அந்த உள்ளம் புலன்கள் என்னும்
கள்வர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டது

உடல் என்னும் கூட்டை பராமரிப்பதிலேயே
கண்ணும் கருத்துமாய் இருக்கிறது முக்காலமும்

உடல் சுடலைக்கு சென்றுசென்றுவிடும் என்று
தெரிந்திருந்தும் கண்டும்  காணாமல் காலத்தை
ஒழித்துக்கொண்டிருக்கிறது

முன்னிருந்தோரும் பின்னே வந்தோரும்
கண் முன்னே சாதல் கண்டும் கண்ணிருந்தும்
குருடராய் மஹான்களின் உபதேசங்களை
செவி மடுக்காது அடுக்கடுக்காய் பொய்களை
பேசி உள்ளம் இரைச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது.

வயிற்றில் இரைச்சலும் மனதில் புகைச்சலும்
என்றுதான் நிற்குமோ நானறியேன்

அன்பாயிருக்கும் இறைவனை அடையும்
எளிய வழி அனைத்துயிர்களிடம் அன்பு
காட்டுவதே என்றறிந்து கொண்ட பின்னரும்
அவமே பேசி  அனைவரின் மீதும் குற்றம் கண்டு
அமைதியின்றி தவிப்பதும் அன்றாட
வாழ்வாகி விட்டது.



ஐங்கரனே ஆறுமுகனே
அரனே,அருணாசலனே,,ஆரூர் பெருமானே
அரங்கனே அலர்மேல் மங்கையே
அம்மையே ,அப்பனே ,அம்பிகையே
அடியேன் மீது கருணை செய்வாய்
அறியாமை அகன்றிடவே.

Monday, July 18, 2016

குரு பூர்ணிமா

குரு பூர்ணிமா

குருநாதனுக்கு வணக்கம்
எங்களின் அறியாமையை போக்கி
நிலைத்த ஆனந்தம் தரும்
குருநாதனுக்கு வணக்கம்.

ஒளியாய் இருக்கும் இறைவன்
உருவாய் வடிவெடுத்து நம்
மன இருளை போக்க வந்தான்
குரு வடிவமாய்

குமரனே குருபரனே
குவலயத்தை காக்க வந்த தாயாபரனே
தந்தைக்கு உபதேசம் செய்த ஞான பண்டிதனே
என் போன்ற தறுதலைக்கும் தயை புரிவாய்

கல்லாத எளியோரின் உள்ளம்தான் உன் ஆலயம்
கற்றோரின் உள்ளத்தில் மற்றோர் கொட்டிய
குப்பைகள் குவிந்து கிடைக்கும் சாக்கடை

அகந்தையை  விட்டுவிட்டு உன் பாதம்
பற்றிவிட்டேன்
உன்னை சொல்லாத நாளில்லை
சுடர்மிகு வடிவேலா
அன்போடு வேண்டுகின்றேன்
அருள் கூர்ந்து ஞானம் அருள்வாயே






Sunday, July 17, 2016

சத்சங்கமும் ஜீவன் முக்தியும்

சத்சங்கமும் ஜீவன் முக்தியும் 





சத்சங்கத்தில் ஒரு ஜீவன்
தன்னை இணைத்துக்கொண்டால்
அது முக்தியை அடைவது திண்ணம்
என்கிறார் ஆதி சங்கரர். என்பதை
அனைவரும் அறிவர்.

ஸத்  என்றால் உண்மை
உண்மைதான் இறைவன்
பொய்  என்பதுதான் மாயை
அறியாமை எனப்படுகிறது

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய் என்ற
வாக்கியத்தை அனைவரும்
கேட்டிருக்கிறோம்

அந்த உண்மைப் பொருள் நமக்குள்ளே இருக்கிறது
அதை நமக்குள்ளே சென்றுதான் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்  என்று பகவான் ரமணர் கூறுகிறார்.

ஆனால் அதை நாம் வெளியில்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.
அதே சமயம்  உள்ளே இருக்கின்ற அந்த உண்மைப் பொருள் நம் முன்னே வெட்ட வெளியாகவும் நம் முன் பரந்து  கிடக்கின்றது
என்னே விசித்திரம் . அதுதான் உண்மை.

ஆனால் ஒவ்வொருவரும் உலகியல்
நோக்கில் ஒவ்வொருவிதமாக
பொருள் கொண்டு உண்மையை
அறியாமல் அலைகின்றோம்

அந்த உண்மைப் பொருளை உணர்ந்தவர்கள்
மிகவும் அரிதே . அவர்களை நாம்தான் தேடி
பிடித்து நம் அறியாமையை போக்கிக் கொள்ள  வேண்டும்

அதற்கு வாய்ப்பில்லை எனில் அப்படிப்பட்ட மஹான்களின்
உபதேசங்களையும் ,வாழ்க்கை சரிதங்களையும் திரும்ப திரும்ப படித்து
பிறர் சொல்ல கேட்டு நம் மனதை அவர்கள்பால்  செலுத்த முயற்சி செய்ய வேண்டும்

அவ்வாறு முயற்சி செய்தால் மஹான்களின் ஆசிகள்
நம்மை தேடி வரும் அல்லது நம்மை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.