Wednesday, October 17, 2018

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.


ஆங்கிலத்திலே ஒரு பழமொழி ஒன்று உண்டு.
அது" Jack of all trades but master of none" 

அதுபோல் எனக்கும் எல்லாவற்றின் மீதும் ஒரு 
ஈர்ப்பு உண்டு. 

ஆனால் ஒன்று எனக்கு பிடித்துவிட்டால் அதை 
எத்தனை ஆண்டுகளானாலும் விடாப்பிடியாய் 
முயற்சி செய்து அதை நிறைவேற்றிக்கொண்டு விடுவேன். 

அதில் ஓவியம் வரைவது எனக்கு பிடித்த ஒன்று. 
1973 ஆம் ஆண்டு என் நண்பன் ஒருவன் பென்சிலால் 
வரையப்பட்ட நாகேஷின்  முகத்தை காண்பித்தான். 
அப்படியே அது கருப்பு வெள்ளை புகைப்படம் போல் இருந்தது. 

அதை பார்த்தவுடன் நாமும் அதை முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது. 

அதனால் அவ்வப்போது பென்சிலால் படங்கள் வரைந்து அதை 
மெருகேற்றுவதில் தனி ஆனந்தம் .

இன்று பென்சிலால் முப்பரிமாண படங்களை வரைந்து  உலகெங்கும் ஓவியர்கள் கலக்குகிறார்கள். 

அதையும் ஒரு நாள் தொட்டுவிடுவேன். என்னுள்ளே இருக்கும் jack அதற்க்கு அனுமதிக்கவேண்டும். 

மயில்கள் எனக்கு மிகவும் பிடித்த பறவைகள். அதுவும் அது கூவும் அழகே அழகு. அதை அடிக்கடி கேட்டு பார்த்து ரசிப்பேன். அதன் அசைவுகள். ஆட்டம் பார்வை எல்லாமே அழகோ அழகு. 

அந்த பென்சில் ஓவியம் இதோ. 


Sunday, October 14, 2018

நானும் ஒரு ஓவியன் தான்



நானும் ஒரு ஓவியன் தான்


இந்த தலைப்பின் கீழ் 16.10 2015 ல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை வரைந்து வெளியிட்டிருந்தேன். அதற்கு  திரு ஸ்ரீராம் மட்டும் கருத்து  தெரிவித்திருந்தார். 

அதற்குப் பிறகு உடல்நிலை சரியில்லாமையால் படம் வரைவதை நிறுத்திவிட்டேன். (இப்போது மட்டும் யார் கேட்டார்கள்? என்ற கேள்வி காதில் விழுகிறது). 

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பென்சில் ஓவியம் வரைந்ததை அவருக்காக வெளியிடுகிறேன். 


Wednesday, October 3, 2018

மனிதா நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?

மனிதா நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?

மனிதா  நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?

எனக்கு இன்று உண்மை  தெரிஞ்சாகணும்.

கோயிலுக்கு இறைவனை வணங்க செல்கின்றேன்.

ஏன் அங்கு மட்டும்தான் இறைவன் உள்ளானோ ?

பலருக்கு அப்படிதான் தோன்றுகிறது. அதனால்தான் அவனை
அங்கு காண  செல்வதாக கூறுகிறார்கள்.

இறைவன் உன்னுள்ளும் உள்ளான். உன்னை சுற்றியுள்ள
அனைத்திலும் உள்ளான் என்பது தெரியுமா .

சிலருக்கு தெரியும். பலருக்கு தெரியாது.

மனிதன் ஐம்புலன்களால்தான் இந்த உலகோடு தொடர்பு  கொள்ளுகிறான்.

அவனை உணரும் வரை மனதை நாம் ஒதுக்கி  தள்ள முடியாது.

கோயிலில் சிலர் அங்கு  கிடைக்கும் பிரசாதங்களை சுவைக்க செல்வதில் தவறேதும் இல்லை.

ஆனால் அந்த ஐம்புலன்களும் தங்கள் தனிப்பட்ட சக்திகளையும் செயல்பாடுகளையும் மறந்து ஒருங்கிணைந்தால்தான் ஒன்றேயான பரம்பொருளை உணர முடியும்.

அதற்கான வழி வகைகளை ஏற்படுத்தி தரும் இடம்தான் ஆலயம் என்பதை உணர வேண்டும்.

அதை உணராது தினமும் கோயிலுக்கு சென்று வருவது. மனம் என்னும் மாடு வெறுமனே  வெளியில் சென்று புல்  மேய்ந்து வருவதற்கு (கோயில் பிரசாதம் சாப்பிட்டு வருவதற்கு) மட்டுமே சமம்.

கோயிலின் வாசலில் நாம் போட்டுக்கொண்டிருக்கும் காலணிகளை வெளியிலேயே விடுவது (நாம் உடல் மீது கொண்டுள்ள அபிமானத்தை விடுவது)நம்முடைய உயிர் அணிந்துகொண்டிருக்கும் தோலால் மூடப்பட்ட நம் உடம்பைக் குறிக்கும்.

கோயிலின் உள்ளே பலி பீடத்தின் முன்பு வணங்குவது நம்  மனதில் உள்ள   நான் மற்றும் எனது எண்ணங்களையும் மற்றும் அனைத்து  தீய எண்ணங்களையும் விட்டு விட்டு தூய தெளிவான மனதுடன்
கருவறையில் நுழைவதைக் குறிக்கும்

கருவறையில் இருளில் உள்ள இறை வடிவம் மனிதர்களின் இதயத்தில்
உள்ளே உள்ள இருளில் உள்ள இறை வடிவம் போன்றது.

தீபத்தின் ஒளியில் வடிவம் தோன்றுவதைபோல் நம் உள்ளத்திலும்
தீபத்தின் ஒளி தோன்ற வேண்டும்.

தீப  ஆரத்தி காட்டப்படும்போது அனைத்தும் மறந்து(வடிவம் மறைகிறது-நாமும் நம்மை மறக்கின்றோம்) வெறும் ஒளி மட்டுமே நம் மனதில் நிறைகிறது. அனைத்தையும் மறந்து விளக்கின் ஒளியிலே விளக்க வொணா அமைதியை அடைகின்றோம்.

இந்த நிகழ்வு நம் மனதில் நிகழும் வரை கோயிலுக்கு செல்லவேண்டும்.

நினைத்தவுடன் அந்த நிலையை நாம் அடையும் நிலை வந்துவிட்டால்  அந்த நிலையிலேயே  நாம் இருந்து நிலையான இன்பத்தை அடையலாம்.

அதை விடுத்து மற்றவைகளில் கவனம் செலுத்துவதால் பயன் ஏதும்  இல்லை.

வழிபாட்டின் தத்துவம் அறிந்து வழிபாடு செய்யாவிடில் கோயில் சிலைகளின் மேல் ஓடும் பல்லிகளுக்கும் , எலிகள் போன்ற சிறு பிராணிகளுக்கும்  ,கரப்பான் பூச்சிகளுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை.