Saturday, September 21, 2013

எப்படி சரணாகதி செய்வது?

எப்படி சரணாகதி செய்வது?

சினம் எங்கே இருக்கிறது?

சினம் மனதில்தான் இருக்கிறது.
சினம் எங்கு முதலில் தோன்றுகிறது.
எண்ணத்தில்தான் தோன்றுகிறது.
எண்ணம்தாம் உடலில் செயலாக வெளிப்படுகிறது.
சினம் தோன்றுவதற்கு அடிப்படை காரணம் என்ன?

நான் என்ற அகந்தைதான் சினத்தின் ஆணிவேர்.
ஆணிவேரை அழிக்காமல் சினத்தை அழிக்கமுடியாது

நான் என்ற அகந்தையை அழிக்காமல்
மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவது
என்பது ஒரு போலியான செயல்.

நான், எனது என்ற இரண்டு எண்ணங்கள்
நம் மனதில் இருக்கும் வரை சினத்தை
அழிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

நான் என்ற எண்ணத்தை  விடுவதற்கு
அனைவரிடமும் பணிவு வேண்டும்.

நம்மை படைத்து  நம்மை காத்து இயக்கும்
பரம்பொருளிடம் சரணாகதி செய்யவேண்டும்.

பலர் அறிய வணங்குவதாலோ,
பலர் முன்னிலையில் நான் இறைவனிடம்
அனைத்தையும் விட்டுவிட்டேன் என்று
விளம்பரப் படுத்திக் கொள்வதினாலோ பயனில்லை.

பட்டினத்தார் ஒரு கோயில் வாயிலில் உட்கார்ந்திருந்தார். அந்த வழியாக ஒரு திருடன் ஓடி வந்தான். அவனை காவலர்கள் துரத்தி வந்துகொண்டிருந்தனர். அவன் கொள்ளைஅடித்த பொருளை அங்கு தியானத்தில் அமர்ந்திருந்த பட்டினத்தாரின் காலடியில் போட்டுவிட்டு மறைந்து கொண்டான். வந்த காவலர்கள். பட்டினத்தாரை விசாரித்தனர். அவர் தியானத்தில் இருந்தமையால் பதில் ஏதும் சொல்லவில்லை. காவலர்கள்.  அரசனிடம் அவரை அழித்து சென்றனர். அரசன் அவரை கழுவிலேற்றுமாறு உத்தரவிட்டான்.

கழுவேற்றுவது என்பது ஒரு கொடிய தண்டனை. நன்றாக கூர் சீவப்பட்ட மரத்தில் எண்ணெய்  தடவி அதன் மீது குற்றவாளிகளை ஆசனவாயிலில் சொருகிவிடுவார்கள். சிறிது சிறிதாக உடலின் உள் அந்த கழுமரம் இறங்கும் அந்த கொடுமையான வழியில் குற்றவாளி துன்பப்பட்டு உயிருடனேயே பலநாள் துன்பப்பட்டு இறப்பான்

ஆனால் அந்த துன்பம் அவரை ஒன்றும் செய்யவில்லை.
அந்த உலர்ந்துபோன கழுமரம் துளிர்த்தது .எப்படி?
அரசன் வியந்து மன்னிப்பு கோரினார்.

என் செயலாவது ஒன்றும் இல்லை
என்று பட்டினத்தார். இறைவனிடம் சரணாகதி செய்ததுதான்.

சரணாகதி என்பது எந்த சூழ்நிலையிலேயும் 
இறைவன் மீதுள்ள நம்பிக்கையை இழக்காமல் இருப்பது. 

அது நம்மால் முடியுமா?

அது நிச்சயம் நம் போன்று மன உறுதியற்ற
மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை.

ஒரு தெய்வத்திடம் கோரிக்கை வைத்து நிறைவேறவில்லை என்றால் மற்றொரு தெய்வத்தை நாடுகிறோம் .

இன்னும் சிலர் மதம் மாறுகிறார்கள்.

இன்னும் சிலர் கடவுளே இல்லை என்று
நாத்திகவாதிகளாகிவிடுகிரார்கள் .
கடவுளை கண்டபடி ஏசி திரிகிறார்கள்.

இறைவனிடத்தில் நம்பிக்கை வேண்டும்.
 எந்த நிலையிலும் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும், ஏமாற்றங்கள் வந்தாலும் எல்லாம் இறைவன் கொடுத்ததே என்று அமைதியாய், பிறரை பழிக்காமல் இருந்தால் இறைவனை நிச்சயம் காணலாம்.   

3 comments:

 1. //இறைவனிடத்தில் நம்பிக்கை வேண்டும்...//

  தன்னிடத்திலே இல்லாத போது...?

  ReplyDelete
 2. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் அண்ணா !

  பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  -=-=-

  நான் இப்போது உங்களிடம் சரணாகதி அடைகிறேன்.

  எதற்கு என்றால் என் அழைப்பினை ஏற்று என் தொடரின் பகுதி-53க்கு உடனடியாக வந்து ஏதாவது ஒரு நீண்ட வியாக்யானம் செய்துவிட்டுப்போகணும். அதனால் பலரும் பயனடையக்கூடும்.

  வரவர அண்ணா கவனிப்பே இல்லை. மெயில் கொடுத்து அழைத்தாலும் வருவது இல்லை.

  டோட்டல் சரணாகதி அடைவது ஒன்றே எனக்கான ஒரே வழியாக உள்ளது.

  தயவுசெய்து உடனுக்குடன் வாங்கோ அண்ணா !

  அன்புடன் VGK

  ReplyDelete
 3. நான் என்ற அகத்தையை அழித்தால்
  வாழ்வெலாம் சுகமே
  நன்றி ஐயா

  ReplyDelete