Tuesday, July 19, 2016

கருணை செய்வாய் அறியாமை அகன்றிடவே.


கருணை செய்வாய் 
அறியாமை அகன்றிடவே.

இறைவா உடலைத் தந்தாய்
உடலை வளர்க்க உணவைத் தந்தாய்
இதயத்தில் ஒளிந்து கொண்டிருக்கும்
உன்னை அறிய உள்ளமும் தந்தாய்

ஆனால் அந்த உள்ளம் புலன்கள் என்னும்
கள்வர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டது

உடல் என்னும் கூட்டை பராமரிப்பதிலேயே
கண்ணும் கருத்துமாய் இருக்கிறது முக்காலமும்

உடல் சுடலைக்கு சென்றுசென்றுவிடும் என்று
தெரிந்திருந்தும் கண்டும்  காணாமல் காலத்தை
ஒழித்துக்கொண்டிருக்கிறது

முன்னிருந்தோரும் பின்னே வந்தோரும்
கண் முன்னே சாதல் கண்டும் கண்ணிருந்தும்
குருடராய் மஹான்களின் உபதேசங்களை
செவி மடுக்காது அடுக்கடுக்காய் பொய்களை
பேசி உள்ளம் இரைச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது.

வயிற்றில் இரைச்சலும் மனதில் புகைச்சலும்
என்றுதான் நிற்குமோ நானறியேன்

அன்பாயிருக்கும் இறைவனை அடையும்
எளிய வழி அனைத்துயிர்களிடம் அன்பு
காட்டுவதே என்றறிந்து கொண்ட பின்னரும்
அவமே பேசி  அனைவரின் மீதும் குற்றம் கண்டு
அமைதியின்றி தவிப்பதும் அன்றாட
வாழ்வாகி விட்டது.



ஐங்கரனே ஆறுமுகனே
அரனே,அருணாசலனே,,ஆரூர் பெருமானே
அரங்கனே அலர்மேல் மங்கையே
அம்மையே ,அப்பனே ,அம்பிகையே
அடியேன் மீது கருணை செய்வாய்
அறியாமை அகன்றிடவே.

2 comments:

  1. அற்புதம்...
    கவியில் கறைந்ததை
    வேறு எப்படிச் சொல்ல முடியும்...
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      என் உள்ளத்தின் உறுத்தல் கவிதையாய் வெளிப்பட்டது.

      Delete