இசையும் நானும் (161)Film அமர தீபம் -தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
Female :
தேன் உண்ணும் வண்டு
தேன் உண்ணும் வண்டு
மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடி யே நீ சொல்லுவாய் ஓ.ஓ.ஓ
பூங்கொடி யே நீ சொல்லுவாய்
Male :
வீணை இன்ப நாதம்
எழுந்திடும் வினோதம்
விரலாடும் விதம் போலவே
காற்றினிலே ..தென்றல் காற்றினிலே
காற்றினிலே .சலசலக்கும் பூங்கொடி யே கேளாய்
புதுமை இதில்தான் என்னவோ..ஓ.ஓ.ஓ.
புதுமை இதில்தான் என்னவோ
Male :
மீன் நிலவும் வானில்
வெண்மதியைக் கண்டு
வெண் அலைகள் ஆடுவதேன் ஆனந்தம் கொண்டு
மென் காற்றே நீ சொல்லுவாய் ஓ.ஓ.ஓ.
மென் காற்றே நீ சொல்லுவாய்
Female :
கான மயில் நின்று வான் முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே
கலை இதுவே ..வாழ்வின் கலை இதுவே
கலை இதுவே. கலக்கல் என்னும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் என் வாழ்விலே..ஓ.ஓ.ஓ.
காணாததும் என் வாழ்விலே
Both :
கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதல் இன்பம் அறியாமல் வாழ்வதும் எனோ..
கலை மதியே நீ சொல்லுவாய்..ஓ.ஓ.ஓ.
கலை மதியே நீ சொல்லுவாய்..ஓ.ஓ.ஓ.
<div style="position:relative;height:0;padding-bottom:75.0%"><iframe src="https://www.youtube.com/embed/nsgLNEh6p7U?ecver=2" width="480" height="360" frameborder="0" style="position:absolute;width:100%;height:100%;left:0" allowfullscreen></iframe></div>