Tuesday, July 4, 2017

இந்த உலகில் யாருக்கும் எதற்கும் பாதுகாப்பு இல்லை

இந்த உலகில் யாருக்கும்
 எதற்கும் பாதுகாப்புக்கு
உத்தரவாதம் கிடையாது.

இந்த உலகில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட
எந்த உயிரோ அல்லது பொருட்களோ ஒரு நாள்
அழிவை சந்தித்தே தீர வேண்டும்

இந்த உண்மை புரியாமல் தனி மனிதர்களும் நாடுகளும் பாதுகாப்பு என்ற போர்வையில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை வீணடித்துக்கொண்டு இந்த உலகத்தை பிணக்காடாக மாற்றிக் கொண்டு வருகின்றனர்.

இந்த மூடர்களை யாராலும் எக்காலத்திலும் திருத்தமுடியாது. 

ஒரு உயிர்  அது தங்கியுள்ள உடலிலிருந்து
அதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை தங்கும்
அதை எந்த கொம்பனாலும் அந்த உயிரை கொல்ல  முடியாது.

உதாரணத்திற்கு கோமா நிலையில் சென்றுவிட்ட உயிர் பல ஆண்டுகளாக அசைவற்று கிடக்கிறது. எந்த மருத்துவ கொம்பனாலும் அதை செயல் பட வைக்க முடியவில்லை.

ஆனால் மருத்துவர்களால் நன்றாக இருப்பதாக உறுதி செய்யப்பட்ட உயிர்
சட்டென்றுபிரிந்துவிடுகிறது  . அதற்க்கு மருத்துவர்களால் காரணம் கூற இயலாது.

சகலவிதமான முன்னெச்சரிக்கையுடனும் 5 அடுக்கு அல்லது 6 அடுக்கு பாதுகாப்புடன் வளைய வரும் ஒரு அதிகாரம் படைத்த தலைவன் அவன் கூடவே இருக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலாளியால் கொல்லப்படுகிறான்.

ரோஜா மலருக்கு அதன் காம்பில் உள்ள
 முள்  பாதுகாப்பு அளிக்க முடியவில்லை

ஒரு ஆடு முள்ளை மட்டும்  விட்டு விட்டு லாவகமாக மலர் இலை  எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விடுகிறது.

பாலைவனத்தில் சப்பாத்தி கள்ளி முழுவதும் கூரான முட்கள் உள்ளன. ஆனால் ஒட்டகத்திடம் அவை ஒன்று செய்ய இயலாது. ஒட்டகம் முட்களோடு  சேர்த்து அவைகளை தின்றுவிடும்.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் மற்றொரு உயிருக்கு உணவாக இருக்குமாறு இறைவனால் திட்டமிடப்பட்டுள்ளது அதை யாரும் மாற்றமுடியாது.

முடிவில் எல்லாவற்றையும் மண் கபளீகரம் செய்து மீண்டும் புதிய உடல்களை உற்பத்தி செய்ய தயாராகிவிடும்.

ஒரு கூட்டில் உள்ள பறவை தான் வசிக்கும் கூடு பயனற்றதாகிவிட்டால் அங்கிருந்து பறந்து சென்று வேறு மர  பொந்தையோ அல்லது ஒரு கூட்டையோ உருவாக்கி கொள்ளுகிறதோ அது  போல்தான் மனித உயிரோ அல்லது மற்ற உயிர்களோ.செய்துகொள்ளும்.

மரணம் என்பது வாழ்வில் தினமும் உறக்கம் என்ற போர்வையில் வந்து போகும் ஒரு சப்பை  மாட்டேர் .

அதற்காக அழுது புலம்புவதும் அதற்காக கூட்டம் நடத்தி விளம்பரப்படுத்துவதும், லட்சக்கணக்கில் செலவு செய்து எழவு விழா எடுப்பதும் கேலிக்குரிய செயல்.

உறங்கும்போது நம்மை யார் பாதுகாக்கிறார்கள்?

அவர்தான் நாம்  விழித்திருக்கும்போதும் நம்மை பாதுகாக்கிறார் என்பதை புரிந்துகொண்டு  அந்த சக்திக்கு தலை வணங்க வேண்டும் 

காலம் என்ற   பாம்பு ஒரு தவளையை சிறிது சிறிதாக விழுங்கிக்கொண்டிருப்பதை அறியாமல் அந்த தவளை அதை அறியாமல் தன் எதிரே உள்ள பூச்சியை பிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

அதுபோல்தான் நம்முடைய வாழ்க்கையும். நாம் பிறந்த கணத்திலிருந்து நம் முடிவை நோக்கி  பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

பயணத்தை சக   பயணிகளுடன் இன்பமாக பயணம் செய்யலாமே?

ஆனால் அவ்வாறு நடக்க நாமும் விடுவதில்லை.மற்றவர்களும் விடுவதில்லை.

பொறாமை, சுயநலம், கருமித்தனம்,வெறுப்புஅவநம்பிக்கை ,போன்ற அயோக்கியர்களை மட்டுமே நம்பி அவர்களை நம்மோடு பயணம் செய்ய அனுமதித்து நாமும் நிம்மதியை இழந்து மற்றும் மற்றவர்களின் நிம்மதியையும் கெடுத்து நம் வாழும் காலத்தை நாசமாக்கி கொள்ளுகிறோம்.

இந்த உண்மையை புரிந்துகொண்டவனுக்கு மரண  பயம் இல்லை. 
வாழ்வில் கசப்பும் இல்லை. இவ்வுலக வாழ்வு இனிக்கும் 

1 comment:

  1. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு

    ReplyDelete