Friday, January 12, 2018

கோதையே நீ என்றென்றும் வாழி !

கோதையே நீ என்றென்றும் வாழி !

સંબંધિત છબી

வேதம் அனைத்திற்கும் வித்தாகும்
கோதை  நமக்களித்த திருப்பாவை

அந்த திருப்பாக்களை பக்தியுடன்
அனுதினம் பணிந்தேத்துவோர்க்கு
பாதகங்கள் தீரும் ,பரமன் அருள்  கிட்டும்.

ஆறடி குழியில் அடங்குவதற்கு முன்
தந் திருவடியால் மூவடி மண் அளந்த
உத்தமனின் திருவடியை வணங்கி
உய்யும் வழியை நமக்கு காட்டி
கொடுத்தவள்   அன்னை ஆண்டாள்.

பத்து  மாதம் மீண்டும் ஒரு தாயின்
வயிற்றில் தங்கி மீண்டும் இவ்வுலகில்
பிறந்து அல்லல்படவேண்டாம்
என்பதற்காக மார்கழி மாதத்தை
பரமனை துதித்துபாடி கடைத்தேறும்
மாதமாக அறிவித்தாள்

நம்மையெல்லாம்  வாழ வைக்க வந்த 
மண்    மடந்தையின் அம்சம் கோதை  என்று
போற்றி துதிக்கிறது பக்தர் கூட்டம்

பக்தியின்  மாண்பறியாத பதர்கள்  கூட்டமோ
அவளை  யாரோ பெற்றெடுத்து
மண்ணில் வீசிய பேதை என்று பிதற்றுகிறது..
எல்லாம் அவரவர் எண்ணப்படியே.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
என்றான்  வள்ளுவன்.

நெருப்பென நின்ற நெடுமாலை
கோதை சூடி கொடுத்த மாலையை
அன்போடு ஏற்று அருள் செய்த
அரங்கனையும் அவள் அடியாளாகிய
ஆண்டாளை மட்டுமே நினைவில் வைப்போம்.
மற்ற குப்பைகளை மனதில் இருந்து நீக்குவோம்.

இரவும் பகலும் ஒளி வீசும் சூரிய நாராயணன்
அரங்கனின் ஒளி அன்னை ஆண்டாள்.

அதன் முன் சில மணி நேரங்களே வாழ்ந்து
இரவில்  மட்டும் சிறு ஒளியில் இரைதேடி 
கூற்றுவனின் வாயில் விழுந்து
காணாமல் போகும்  மின்மினி பூச்சிகள் 
என்ன செய்ய முடியும் ?

உணர்ச்சிகள் வந்த வேகத்திலேயே 
காணாமல் போகும்.

ஆனால் உணர்வுகள் அழியாது.
அது ஆலயத்தினுள்  அரங்கன் 
முன்னே எரியும் தீபம்போல் 
ஒளி வீசிக்கொண்டிருக்கும். 

સંબંધિત છબી

இதயம் என்னும் அரங்கத்தில் 
அரங்கனை வைப்போம்
அவனுடன் கலந்துவிட்ட அந்த 
கோதையையும் சேர்த்து. . 




No comments:

Post a Comment