அகத்தியரின் பெருமைகள்
அகத்தியரை பற்றி ஓரளவிற்கு அறிந்தவர்கள்
அவரின் பல அதிசய செயல்களை
பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள்
அவைகளில் ஒன்று அவர்
ஏழு கடல் நீரையும் குடித்தது தான்?
அவர் எப்படி குடித்தார்,
அவ்வளவு கடல்நீரும் அவர் சிறிய
வயிற்ருக்குள் அடங்குமா என்ற
கேள்விகளுக்கு அப்புறம் போவோம்
அவர் எதற்க்காக அந்த கடல்
நீர் முழுவதையும் குடித்தார் என்பதை பார்ப்போம்.
இந்த உலகத்தை இறைவன் படைக்கின்றபோதே
நேர்மறை சக்திகளையும் எதிர்மறை சக்திகளையும்
சேர்ந்தே இறைவன் படைத்துள்ளான்
ஏனெறால் இரண்டு சக்திகளும்
ஒன்றுக்கொண்டு ஆகர்ஷிக்கும்போதுதான்
இயக்கம் நடைபெறுகிறது.
இல்லாவிடில் இந்த உலகம் அப்படியே
இயங்காமல் நின்றுகொண்டிருக்கும்.
ஒவ்வொரு காலகட்டத்தில் எதிர்மறை சக்திகள்
அதிகமாகும்போது நேர்மறைசக்திகள்
பலம் குறைந்து போய்விடும்.
அப்போதெல்லாம் இறைவனோ அல்லது
அவன் அருள் பெற்ற இறை சக்திகளோ,
அவன் தூதுவர்களான யோகிகளோ,
ஜீவன் முக்தர்களோ,ரிஷிகளோ
இந்த உலகத்தில் தவத்தின் மூலம்
சேர்த்துவைத்த தங்கள் சக்திகளை பயன்படுத்தி
அவைகளை சமன் செய்வது
தொன்றுதொட்டு நடந்து வரும் செயல்.
அதுபோல்தான் நேர்மறை சக்திகளான தேவர்களை
விருதாசுரன் என்ற அரக்கன் மிகுந்ததுன்பதை விளைவித்துக்கொண்டிருந்தான்.
அரக்கர்கள் தங்களை காத்துக்கொள்ள
தவம் செய்து பலவிதமான வரங்களை
பெற்றுக்கொண்டுள்ளதால் நேர்மையான முறையில்
போரிட்டு அவர்களை அழிக்க முடியாது.
அதனால் தேவர்களின் தலைவனான தேவேந்திரன்
அந்த அசுரனை கபடமான முறையில் தாக்கி
அவனை கொன்று விட்டான்.
ஆனால் அவனுடைய தளபதிகள்
தேவேந்திரனை ஏமாற்றிவிட்டு தப்பிவிட்டனர்
உடனே தேவேந்திரன் அக்னி பகவானையும்,
வாயு பகவானையும் அந்த இரண்டு அசுரர்களை
தேடி சென்று அழிக்குமாறு கேட்டுக்கொண்டான்.
ஆனால் அந்த இரு அசுரர்களோ சமுத்திரத்தின்
ஆழத்தில் சென்று மறைந்து கொண்டு விட்டனர்.
அந்த அசுரர்கள் சூரியன் அஸ்தமனம்
ஆன பிறகு சமுத்திரத்தை விட்டுவெளியே வந்து,
முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் ,
மற்ற உலக மக்களுக்கும் தொடர்ந்து
துன்பங்களை இழைக்க தொடங்கினர்.
இந்நிலையில் அனைவரும் காக்கும்
கடவுளான விஷ்ணு பகவானுடன்
சென்று முறையிட்டனர்.
அதற்கு அவர் கூறிய உபாயம்
கடலை நீரில்லாமல் வற்ற செய்து
அந்த அசுரர்களை அழிப்பதுதான் என்று கூறினார்
அந்த செயலை செய்யக்கூடிய தகுதி படைத்தவர்
அகத்தியர் ஒருவர்தான் என்று விஷ்ணு பகவான் கூறினார்
உடனே தேவர்கள் அகத்திய பெருமானை அணுகினர். வேண்டினர்.
அவர் உடனே கடல் நீர் முழுவதையும் குடித்துவிட்டார்.
கடலும் வற்றியது. காலகேயர்கள் என்ற
அந்த அரக்கர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த உலகத்தில் முக்கால் பகுதி கடல்நீரால் ஆனது.
கடல்நீரிருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது,
வளர்கிறது,உயிரினம் பல்கி பெறுகின்றன.
கடல் வற்றியதால் உலகில்
பெரும் பஞ்சம் ஏற்ப்பட்டது
மீண்டும் தேவர்கள் விஷ்ணு பகவானை
தஞ்சம் புகுந்தனர். அப்போது அவர் சொன்னார்
கவலைப்படாதீர்கள்,
பகீரதன் என்ற அரசன் ஒருவன் சொர்கத்திலிருந்து
இந்த பூவுலகிற்கு கங்கை நீரை கொண்டு வந்து
கடல்கள் முழுவதையும் விரைவில்
நிரப்பிவிடுவான் என்று.
பகீரதன்,யார் அவன் எவ்வாறு கங்கையை
கொண்டு வந்து கடல்களை நிரப்பினான்
என்பது ஒரு பெரிய கதை
அதை பின்னர் பார்ப்போம்.
அகத்திய பெருமானின் லீலைகள்
வார்த்தைகளில் அடங்காதது.
இன்றும் நாம் வசிக்கும் இந்த பூமியை
இறைவனின் ஆணைப்படி
நிர்வகித்துக்கொண்டிருக்கிறார் என்பது சத்தியம்.
நன்றிகட்டுரை-மூலம் Sri P.R. Ramachander
அம்ரிதவர்ஷினி-மின் இதழ்-அக்டோபர்.2012