Thursday, September 26, 2013

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(4)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(4)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(4)



காக்கும் தெய்வம்
ஸ்ரீமன் நாராயணன்தான்
அவனியில் அல்லல்படுவோரை காக்க
வந்த தெய்வம் இராமன் என்பதை
அறிந்தவள் கைகேயி.

அவன் அயோத்தியில் முடி சூட்டிக்கொண்டு
அமர்ந்துவிட்டால் அவதார காரியம் என்னாவது?

அவன்  வருகைக்காக வனத்தில் முனிவர்களும்,
தவசிகளும், ரிஷிகளும் ,பல இடங்களில் பக்தர்களும்
ஆவலுடன்  காத்துக் கிடக்கிறார்கள்.

மக்களை பலவிதங்களில் துன்புறுத்திக்கொண்டிருக்கும்
அசுரர் கூட்டத்தை வதைத்து மக்களைக் காப்பாற்றவேண்டும்.

தர்மத்தை சிதைத்து அதர்மவழியில் நடந்துகொண்டிருக்கும்
ஆட்சிகளை ஒழித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.
அகற்றவேண்டும்.

இதனால்தான் அவள் அவனை நாட்டை விட்டு
வெளியேற்ற முடிவெடுத்தாள்



எண்ணி துணிக கருமம் என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க
அவள் முடிவில் உறுதியாய் இருந்து அதை நிறைவேற்றினாள்

பரதனும் தன்  குழப்பத்தை விட்டுவிட்டு தந்தை
தசரதன் ஈமகிரியைகளை முடித்துவிட்டு.
மக்களுக்கு தான் அரச பதவியில் அமர விருப்பமில்லை என்பதை
மக்களுக்கு தெரிவித்து தன்  மேல் உள்ள  பழியை நீக்க
அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலானான்

அவன் கானகத்திற்கு சென்றுவிட்ட
இராமனைதேடி அவனை சந்தித்து அவனை
வற்புறுத்தி நாட்டிற்கு அழைத்துவந்து மீண்டும்
அரசனாக்க முயற்சி செய்ய முடிவு செய்தான்.

அதற்க்கு அவன் அங்கே தனியே செல்லவில்லை.

தன் தாயார்கள், மந்திரிகள், குருநாதர்கள்,
மக்கள் பிரதிநிதிகள், தன்  படைகளுடன் சென்றான்.



ஒரு அரசன் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது
அனைவரும் அறிய செய்தால்தான் பின் பிரச்சினைகள்
எதுவும் எழாது என்பதை அவன் அறிந்திருந்தான் .

தான் மட்டும் தனியாக இராமனை சந்திக்க சென்று,
இராமன் வர மறுத்திருந்தால்
அதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..

அவனை சந்தேகக்
கண்கொண்டுதான் பார்த்திருப்பார்கள்.

அதைத் தவிர்ப்பதற்காகவே அவன்
அனைவரையும் அழைத்து சென்றான்.

அனைவரின் முன்பாகவே இராமனை மீண்டும்
நாட்டிற்கு வந்து அரசை ஏற்றுக்கொள்ளுமாறு
அழைத்து தன் மீதுள்ள பழியை தீர்த்துக்கொண்டான்.
 (இன்னும் வரும்)

Pic-courtesy-google images. 

6 comments:

  1. //ஒரு அரசன் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது
    அனைவரும் அறிய செய்தால்தான் பின் பிரச்சினைகள்
    எதுவும் எழாது என்பதை அவன் அறிந்திருந்தான் .//

    அருமையான முடிவு.

    //இராமனுக்கு நிகர் இராமபிரானே !//

    ஆம் நிச்சயமாக, அண்ணா பட்டாபிராமருக்கு நிகர் பட்டாபிராமரே ! ;)

    தொடரட்டும் தங்களின் ஆன்மிகப் பதிவுகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. I fully agree with Thiru vai.Gopalakrishnan...Ohm Sri Rama..Jaya Rama...Jaya Jaya Rama...

    ReplyDelete
    Replies
    1. எல்லா புகழும் இவனை இயக்கும் இராமபிரானுக்கே

      Delete
  3. அருமை... தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete