Friday, September 6, 2013

மூலாதார மூர்த்தி

மூலாதார  மூர்த்தி 





மூலம் என்றால் வழி
என்றொரு பொருளுண்டு

அனைத்திற்கும்
மூலப் பொருளொன்று உண்டு

அதிலிருந்துதான்
அனைத்தும் தோன்றும்

அதன் துணை கொண்டே
வளரும் வாழும்,மறையும்
அதிலே அயிக்கியமாகிவிடும்

அதனால் அது எங்கும் இருக்கும்
எதிலும் இருக்கும்
எதுவாகவும் மாறும்
எப்போது வேண்டுமானாலும்
தோன்றும் மறையும்.

அந்த மூலப் பொருளின்  ஒரு வடிவம்தான்
மூல கணபதி என்று அனைவரும்
போற்றிக் கொண்டாடும்
விநாயக பெருமான்

வணங்குபவர்
வினைகளை தீர்ப்பவன்

நல்ல வினைகளை ஆற்ற
எப்போதும்    துணை நிற்பவன்

நம்பியவர்களுக்கு
நல்வழி காட்டுபவன்

நல்லவர்கள் போற்றும் தூயவன்
நடுநிலையானவன்

குழந்தை போல்
கள்ளம் கபடமற்றிருபவன்

குணக்குன்று .
குமரனின் தனயன்
சக்தியின் புதல்வன்
சம்பு குமாரன்

அவன் அகிலத்திற்கு தன்னை
அறிமுகப்படுத்திக்கொண்ட அவதார திருநாளை
அன்புடன், பக்தியுடன் கொண்டாடுவோம் .

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
பாதகம் நினையா மனம்
அருளவேண்டுமேன்று வேண்டி
மோதகங்கள் படைத்தது
இன்புறுவோமாக

8 comments:

  1. /// நடுநிலையானவன்; குழந்தை போல்
    கள்ளம் கபடமற்றிருபவன்... ///

    தலைப்பும் அருமை ஐயா...

    ReplyDelete
  2. மூலாதார மூர்த்திக்கும், அதை எமக்கு எடுத்துச்சொன்ன பட்டாபிராம மூர்த்திக்கும் என் அன்பான நமஸ்காரங்கள்.

    அருமையான பகிர்வு அண்ணா.

    படத்தேர்வும் புதுமையாக அழகாக உள்ளது அண்ணா. பாராட்டுக்கள்.
    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பதிவில் உள்ள படம் metal foil ல் அடியேனால்வரையப்பட்டு engrave
      செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது என்பதை தங்கள் சமூகம் தெரிவித்துக்கொள்கிறேன்.

      Delete
    2. //Pattabi RamanSeptember 9, 2013 at 9:53 PM

      பதிவில் உள்ள படம் metal foil ல் அடியேனால்வரையப்பட்டு engrave
      செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது என்பதை தங்கள் சமூகம் தெரிவித்துக்கொள்கிறேன்.//

      ஆஹா, அப்படியா? என்னால் நம்பவே முடியவில்லை. உங்களிடம் தான் எத்தனை எத்தனைத் திறமைகள்.

      கைகளைக்கொடுங்கோ, கண்களில் ஒத்திக்கொள்ளணும் போல உள்ளது.

      ”அவளா சொன்னாள் ???????
      இருக்காது .......
      அப்படி எதுவும் நடக்காது .......
      நம்ப முடியவில்லை இல்லை இல்லை இல்லை”

      என்ற பாட்டுதான் ஞாபகம் வருகிறது ! ;)

      Delete
    3. இவனை நம்பியவர்கள் வீண் போனதில்லை
      நம்பாதவர்கள் வீணானதும் இல்லை
      அவன்தான் இவன்

      Delete
  3. அன்புள்ள அண்ணா,

    என் தொடரின் பகுதி-45ல் உட்பகுதி-1 மற்றும் 6க்கு மட்டும் வருகை தந்து கருத்தளித்து மகிழ்வித்துள்ளீர்கள் அதற்கு என் நன்றிகள் அண்ணா.

    பகுதி-2 முதல் பகுதி-5 வரை வருகை தந்து ஒரு சிறிய பஞ்சாதியாவது சொல்லி ஆசீர்வதித்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கும் எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்குமே அண்ணா; ப்ளீஸ் வாங்கோ.

    45/2/6 ஆ .... ரம்பம்

    http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

    45/3/6 மிகவும் முக்கியம்

    http://gopu1949.blogspot.in/2013/09/45-3-6.html

    45/4/6 அவசியம்

    http://gopu1949.blogspot.in/2013/09/45-4-6.html

    45/5/6 அதிசயம்

    http://gopu1949.blogspot.in/2013/09/45-5-6.html

    வாங்கோண்ணா, அட வாங்கோண்ணா !

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. கேட்டதும் கொடுப்பவனே கண்ணா ..... கண்ணா !

      கீதையின் நாயகனே ..... கண்ணா .... கண்ணா !!

      கேட்டதும் பின்னூட்டம் தந்திடும் அண்ணா ..... அண்ணா !

      வாழ்க வாழ்கவே !!

      Delete
  4. குழந்தை போல்
    கள்ளம் கபடமற்றிருபவன்
    அருமை நன்றி ஐயா

    ReplyDelete