Thursday, September 12, 2013

வித்தைக்கிறைவா கணநாதா!

வித்தைக்கிறைவா கணநாதா!



பதறிப் போன காரியம் 
சிதறிப் போகும்

மனதில் பதட்டம் இருந்தால்
எந்த பணியையும்
சரியாக செய்யமுடியாது.

பதட்டம் எதனால் ஏற்படுகிறது?

செய்யவேண்டிய செயலைப் பற்றிய
முழு அறிவு இல்லாமையால்
என்ன ஆகுமோ எது ஆகுமோ
என்று பணியை தொடங்கும்போதே
ஐயம் ஏற்படுவதால் அச்ச உணர்வு
அதிகரித்து செய்யவேண்டிய பணி  
தோல்வியில்  முடிகிறது

எனவே எந்த பணியை செய்ய
வேண்டியிருந்தாலும்
அது  பற்றிய முழு தகவல்களையும்
தெரிந்துகொண்டு செய்ய  தொடங்கவேண்டும் .

செய்யும்போது தடங்கல்கள் ஏற்ப்பட்டாலும்
அதை சமாளிக்கக் கூடிய வழிகளையும்
அறிந்துகொண்டிருக்கவேண்டும்
அப்படி அந்த செயல் கைகூடாவிட்டாலும்
மனம் தளராமல் தவறுகளை களைந்து
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தல் வேண்டும்.

யார் காரியாமாற்றும்போது பதறமாட்டார் ?.

பாரதியார் சொல்கிறார்
"பக்தியுடையார் காரியத்திற் பதறார்.

அவர் எப்படி காரியமாற்றுவார்?

வித்து (விதை) முளைக்குந் தன்மை போல்
மெல்ல செய்து பயனடைவார்.

எந்த செயலை செய்ய வேண்டுமென்றாலும்
மனதில் தெளிவு வேண்டும்.
மன உறுதி வேண்டும்.
மனதில் குழப்பங்கள் இருக்கக்கூடாது .

யாருக்கு மன சஞ்சலங்கள் இராது?

சக்தி தொழிலே அனைத்தும் மெனிற்
சார்ந்த நமக்கு சஞ்சலமேன்?
அனைத்தையும் பராசக்திதான் ஆற்றுகிறாள்
 நாம் அவள் கையில் வெறும் கருவிகள்
 என்று உணர்ந்து (அகந்தையின்றி )கர்வமின்றி
இருந்தால் எது நடந்தாலும் மனதில்
சஞ்சலங்கள் ஏற்ப்பட வாய்ப்பில்லை.

வித்தைகளுக்கெல்லாம் இறைவன் யார்?

வித்தைகளுக்கெல்லாம்
இறைவனான கண  நாதன் தான்.

அவனிடம் நாம் என்ன யாசிக்கவேண்டும்?

மேன்மையான தொழில்களில் மட்டும்
என்னை பணி  செய்ய அருள்வாய் .
பிறருக்கு தீமை விளைவிக்கும் செயல்களைஎன்னை
ஈடுபடாமல் என்னை தடுத்தாட்கொள்ளவேண்டும்
என்று வேண்டுகிறார் பாரதியார்.




8 comments:

  1. மேன்மையான தொழில்களில் மட்டும்
    என்னை பணி செய்ய அருள்வாய் .
    பிறருக்கு தீமை விளைவிக்கும் செயல்களைஎன்னை
    ஈடுபடாமல் என்னை தடுத்தாட்கொள்ளவேண்டும்
    என்று வேண்டுகிறார் பாரதியார்.

    வித்தைக்கிறைவா கணநாதா!
    யாங்களும் அவ்வண்ணமே வேண்டுவோம்..!

    ReplyDelete
  2. நல்ல விளக்கம் ஐயா... நன்றி...

    ReplyDelete
  3. வித்தைக்கிறைவா கணநாதா!

    அழகான அருமையான பயனுள்ள பதிவு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. //யாருக்கு?//

    இதென்ன புதுக்கேள்வி ?

    1] கணநாதருக்கு
    2] மஹாகவி பாரதிக்கு
    3] என் அண்ணாவுக்கு
    4] முதல் பின்னூட்டமிட்டுள்ள
    என் பிரத்யக்ஷ அம்பாளுக்கு

    5] பின்பாட்டுப்பாடியுள்ள
    திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு

    6] அதன் பிறகு மட்டுமே, அடியேனுக்கு அண்ணா
    கொடுக்கப்போகும் அடி மட்டுமே. ;)

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அழைக்கிறார். ஓடியாங்கோ ஓடியாங்கோ, உடனே ஓடியாங்கோ, அண்ணா.

    ReplyDelete