Thursday, September 19, 2013

கூற்றுவன் யார்?

கூற்றுவன் யார்?

கூற்றுவன் என்றால் யார்
என்று பாமர மக்களுக்கு தெரியாது.



ஓரளவிற்கு தமிழ் கற்றவர்கள்
கூற்றுவன் என்றால் யமன் என்று சொல்லுவார்கள்.

சீர்காழி பாடிய நாள்" என் செய்யும் என்ற" பாடலை கேட்டவர்கள் " கொடும்கூற்று என் செய்யும் என்ற" வரிகளை கேட்டிருப்பார்கள்.

அந்த பாடலில் குமரேசனின் இரு பாதங்களை என்றும் நினைவில் கொள்பவர்களை கூற்று ஒன்றும் செய்யாது என்று வரும்.



அது சரி கூற்று என்றால் உண்மை என்று பொருள்.

உண்மைதான் கடவுள்.
பொய் என்பது அவன் விரிக்கும் மாயை.
ஆசைகளில்  மூழ்கிய மனம்  தானே
வலியச் சென்று விழும் வலை. தான் மாயை

மாயை என்றால் என்ன?

இலாத ஒரு பொருளை இருப்பதாக நினைத்துக்கொண்டு
அதிலேயே மூழ்கிவிடுவதுதான் மாயை. எப்படி?

பசியோடு இருப்பவன் நன்றாக அறுசுவை
உணவை உண்பதாக பகற்கனவு காண்பது  போலத்தான்.

கனவிலே தூங்கிவிடுவதும் உண்டு.
அதுதான் சிலருக்கு உறக்கத்திலேயே மரணம்.
அவர்கள் மரணமடைந்து அவர்கள்
உடல் மண்ணுக்கு போய்  விட்டபின்பும்
தூக்கம் கலையாத உயிர்கள் உண்டு.
 உறக்கம் கலைந்ததும் தான் தங்கியிருந்த
உடல் இல்லாது ஆவியாய் அலைவதும் உண்டு.

நாம் இந்த உலகத்திற்கும் வந்த நோக்கம் என்ன?

மீண்டும் இந்த உடல் என்னும் கூட்டிற்குள் அகப்படாமல் தப்புவதற்கான வழி வகைகளை மேற்கொள்ளுவதற்காக தான் இறைவன் நமக்கு இந்த உடலை அளிக்கிறான்.

கடலை கடக்க படகு உதவுவதுபோல் பிறவிப் பெருங்கடலை கடக்க இந்த உடலையும் கிடைத்தர்க்கரிதான  இந்த மனித பிறவியையும் இறைவன் தன் பெருங்கருணையினால் நமக்கு அளிக்கிறான்.

படகு பத்திரமாக கரைசேர வழி காட்ட
அவன் நம் இதயத்துள்ளே வாசம் செய்கிறான்.

அனால் நம் இறுதிவரை அவன் உள்ளே
இருப்பதை அறிவதுமில்லை.

அறிந்து தெளிவதுமில்லை.

மாறாக அவனை மறுப்பதற்கான
,மறப்பதற்கான முயற்சிகளை இடைவிடாது செய்துகொண்டு
முடிவில் மறலியின் வாய்க்குள்  போய்  விழுந்து அல்லபடுகிறோம்.



மாயை நீங்க மாயவனை சரணடைவோம்.



மகாதேவனின் தாள்களை பற்றிடுவோம்,
மாலின்     மருகனின் புகழ் பாடுவோம்.

அவ்வாறு செய்தால் முற்றிய  பழம்
 மரத்திலிருந்து தானாகவே விழுவதுபோல்
நம்முடைய ஆன்மா இந்த உடலிருந்து
எந்த துன்பமின்றி இறைவனின் அடி
சேர்ந்து மாறா இன்பம் பெரும்.   

7 comments:

  1. ஆகா... விளக்கம் மிகவும் அருமை... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. கடலை கடக்க படகு உதவுவதுபோல் பிறவிப் பெருங்கடலை கடக்க இந்த உடலையும் கிடைத்தர்க்கரிதான இந்த மனித பிறவியையும் இறைவன் தன் பெருங்கருணையினால் நமக்கு அளிக்கிறான்.

    கருணைக்காட்சியினை அளித்த
    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. //மகாதேவனின் தாள்களை பற்றிடுவோம், மாலின் மருகனின் புகழ் பாடுவோம்.

    அவ்வாறு செய்தால் முற்றிய பழம் மரத்திலிருந்து தானாகவே விழுவதுபோல் நம்முடைய ஆன்மா இந்த உடலிருந்து எந்த துன்பமின்றி இறைவனின் அடி சேர்ந்து மாறா இன்பம் பெரும்.//

    தங்களின் கூற்று உண்மை. கூற்றுவன் என்னைக் கூட்டிச்செல்லும் முன் அண்ணா சொல்படி நடக்க முயல்வேனாக்கும்.

    கனிந்த பழமாகி தானாகவே கடவுளை அடைய வழி சொன்னீர்கள். மிக்க நன்றி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. கூற்று என்றாலே அது முழு உண்மை என நான் கருதவில்லை. கூற்று என்றால் உரைத்தல் என்பது மட்டே, அது பொய் கூற்றாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றே கருதுகின்றேன். கூற்றை உறைத்து கூட்டி செல்பவன் கூற்றுவன் என பொருள் கொள்ள எண்ணுகிறேன். அடியேனை மன்னிக்கவும, தவறிருப்பின்.

    ReplyDelete