Tuesday, September 24, 2013

சிந்தனைக்கு சில கருத்துக்கள்

சிந்தனைக்கு சில கருத்துக்கள் 






இறைவன்
சன்னதியில் நிற்கும்போது
எதையும் யோசிக்காதீர்கள்
அவனை மட்டும் நேசியுங்கள்
கற்பூர ஜோதி காட்டும்போது
கண்களை மூடிக்கொள்ளாதீர்கள்

நமக்கு காணும் ஒளி  தந்த
இறைவனின் வடிவத்தையும்
அவனைக் காட்டும் ஒளியையும்
கண்ணார தரிசித்து மகிழுங்கள்.

இதயம் என்பது எப்போதும்
இயங்கிகொண்டிருக்கும் சக்தி உறையும் இடம்

அதை நம்மை இயங்கவிடாமல் முடக்கி போடும்
கவலைகள், அவநம்பிக்கை, போன்ற
தீய சக்திகள் தங்க இடம் அளிக்காதீர்கள்.

உடலில் உயிர் தங்க வெப்பம் தேவை
அது இருக்க வேண்டிய இடத்தில
இருக்க வேண்டிய அளவு இருக்கவேண்டும்.
அது குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ
உடலை உயிர் உடலை விட்டு பிரிந்துவிடும்.

மரணம் ஒரு மனிதனை
உடனே கொன்றுவிடும்
ஆனால் பயமும் கவலையும் மனிதர்களை
சிறிது சிறிதாகக் கொல்லும் கொடிய நோய்

தீ அனைத்தையும் எரித்து சாம்பலாகிவிடுவதுபோல்
பொறாமை  என்னும் தீ மனிதர்களின்மனத்தில்
பற்றிவிட்டால்  அது சிறிது சிறிதாக அவன்
வாழ்வையும் அவனை சுற்றியுள்ளவர்களின்
வாழ்வையும் ஒரு சேர அழித்துவிடும்.

இந்த உடல் பிறவிக்கடலை கடக்க
இறைவன் வழங்கிய அதி அற்புதமான சக்தி
 மற்றும் வசதிகளுடன் கூடியது.
அதை ஓட்டுபவனாக
அவனே அதனுள் இருக்கிறான்.

அவன் துணையை  நாடாமல் ,
அவன் கூறும் வழிகாட்டுதலைப் புறக்கணிப்பவர்கள்
வழி தவறி குழியில் விழுவதை யாரும் தடுக்கமுடியாது. 

5 comments:

  1. ஆமாம்..உள்ளே இருக்கும் வழிகாட்டியின் பேச்சை கேட்காமல் நாம் இஷ்டத்துக்கு வாழ்க்கை என்ற வண்டியை ஒட்டிவிட்டு,எங்காவது மூட்டி மோதி நிற்கும்போது,வழிகாட்டியின் மீது பழி போடுவது நம் சுபாவம்..அற்புதமாக சொன்னீர்கள்..நமஸ்காரம்..நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பழி போடும் சாக்கிலேயாவது
      அவனை நினைத்தால் சரி.

      Delete
  2. தீயும் பொறாமையும் ஒன்று தான் என்பதை சொன்னவிதம் அருமை ஐயா...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

    ReplyDelete
  3. //மரணம் ஒரு மனிதனை
    உடனே கொன்றுவிடும்
    ஆனால் பயமும் கவலையும் மனிதர்களை
    சிறிது சிறிதாகக் கொல்லும் கொடிய நோய்//

    அருமையான பகிர்வு. பெருமாள் படம் ஜோர். பாராட்டுக்கள். நன்றிகள்.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அழைக்கிறார். உடனே வாங்கோ. இரண்டு பகுதிகளுக்கும் மறக்காமல் கருத்துச்சொல்லுங்கோ, அண்ணா.

    அன்புடன் கோபு

    ReplyDelete